விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருத்துகள்[தொகு]

  • இம்முயற்சியை நான் வரவேற்கின்றேன். இதில் பங்குகொள்வோர் தமிழ்ப்பண்டிதர்களாக இருக்க வேண்டியதில்லை, இதில் யாரும் பங்குகொள்ளலாம், ஆனால் போதிய அளவு தமிழ் மொழியறிவும், தமிழ் மொழி இயல்பும் அறிந்திருப்பது பயனுடையதாக இருக்கும். பல நிலைகளில் கட்டுரையாக்கம் செய்தும் அனுபவம் இருந்தால் சொல்லாட்சிகள், பயன்பாடுகள் (இது கணினி, அறிவிப்பு சார்ந்ததாகவே இருக்க நேரிட்டாலும்) பற்றிய ஒரு பொது அறிவு இருக்கும்.
  • இவ் இடைமுக மொழிபெயர்ப்புகள் பல இடங்களிலும் பயன்படக்கூடும் என்பதால் எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் கூடியமட்டிலும் இல்லாமல் இருப்பது நல்லது. (எ.கா "பகுப்புப் பக்கத்தைப் பார்" என்பது சரி, ஆனால் பகுப்புப் பக்கத்தை பார்க்கவும் என்பது தவறு. "பார்க்கவும்" என்று வரவேண்டும் என்று விரும்பினால் பகுப்புப் பக்கத்தைப் பார்க்கவும் என்று இருக்க வேண்டும்; இப்படியான் பிழைகள் தவிர்க்ககூடியன)
  • இடைமுக மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட நேர்ந்தால், அமைதியாய், நல்லிணக்க முடிவு காணும் முகமாக, அறிவு அடிப்படையிலும், அறமான முறையிலும், நடுநிலையுடனும் திறந்த மனத்துடனும் அணுகி முடிவுகள் எட்ட வேண்டும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் 2003-4 இல் இருந்து மிகப்பலர் திறந்த மனத்துடன் உரையாடி வந்திருக்கின்றனர். இவ்வகையான கருத்தாடல் உரையாடலுக்கு மிக நல்ல எடுத்துக்காட்டு என்று நான் கருதுகின்றேன். பல நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், பல துறையைச் சேர்ந்த அறிவுக்கட்டுரைகளைக் கூட்டுழைப்பின் பயனாய் இப்படி உருவாக்கி 1-1.5 கோடி சொற்களை கொண்ட இக்கலைக்களஞ்சியத்தை உருவாக்கியது தமிழில் ஒரு புது வரலாறு. இதில் பின் பற்றிய முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

--செல்வா 23:27, 22 பெப்ரவரி 2012 (UTC)

// இதில் பங்குகொள்வோர் தமிழ்ப்பண்டிதர்களாக இருக்க வேண்டியதில்லை, இதில் யாரும் பங்குகொள்ளலாம்// +1
//ஆனால் போதிய அளவு தமிழ் மொழியறிவும், தமிழ் மொழி இயல்பும் அறிந்திருப்பது பயனுடையதாக இருக்கும். பல நிலைகளில் கட்டுரையாக்கம் செய்தும் அனுபவம் இருந்தால் சொல்லாட்சிகள், பயன்பாடுகள் (இது கணினி, அறிவிப்பு சார்ந்ததாகவே இருக்க நேரிட்டாலும்) பற்றிய ஒரு பொது அறிவு இருக்கும்//

போதிய அளவு தமிழ் மொழியறிவு என்பது நபருக்கு நபர் மாறும் என்பதால், அதனை அளவுகோலாக வைப்பது சிக்கலான ஒன்று. இங்கு நாம் புதிய மொழிபெயர்ப்பில் ஈடுபடப்போவதில்லை. இருக்கும் மொழிபெயர்ப்பை ஒப்பீடு தான் செய்யப்போகிறோம். அதற்கு தமிழ் இடைமுகங்களை பயன்படுத்திய அனுபவம் போதுமானது. எழுத்துப்பிழை அச்சத்துடன் எழுதுபவர்கள், புதிதாக மொழிபெயர்ப்பதை / எழுத்துப்பிழை திருத்துவதைத்(ஒப்பீடு செய்வதை) தவிர்க்கலாம். இதனைத் தாண்டியும் ஒருவர் மொழிபெயர்ப்பில் உதவ இயலும்.சந்தேகம் இருப்பின் பிறரைக் கேட்டறியலாம்.(அவ்வாறே நான் இதுவரை பங்களித்ததுண்டு)

//இவ் இடைமுக மொழிபெயர்ப்புகள் பல இடங்களிலும் பயன்படக்கூடும் என்பதால் எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் கூடியமட்டிலும் இல்லாமல் இருப்பது நல்லது//

+1 இலக்கண விதிகளின்படி செல்வது பொரும்பான இடங்களில் நல்லது. பார், பார்க்க, பார்க்கவும், இது போன்ற ஒரே சொல்லின் வேவ்வேறு வடிவங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாமா? இதனைக் எப்படி கையாள்வது?

//இடைமுக மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட நேர்ந்தால், அமைதியாய், நல்லிணக்க முடிவு காணும் முகமாக, அறிவு அடிப்படையிலும், அறமான முறையிலும், நடுநிலையுடனும் திறந்த மனத்துடனும் அணுகி முடிவுகள் எட்ட வேண்டும்//

இது அனைவருக்கும் பொருந்தும். ஒருவர் மாற்றுக்கருத்து தெரிவித்தால், இது தேவையா, (சபையில் பேசக்கூடிய சொற்களைப் பயன்ப்டுத்தும் பொழுது) இந்த சொற்கள் தேவையா என்றெல்லாம் கூறுவதையும் தவிர்க்கலாம். அப்பொழுது தான் அது திறந்த மனத்துடனுன் செய்யக் கூடிய வாதம். ஸ்ரீகாந்த் 08:11, 23 பெப்ரவரி 2012 (UTC)

செல்வா, Translatewikiயும் ஒரு விக்கியே. எனவே, ஒவ்வொரு திங்களும் மொழிபெயர்ப்புகள் இற்றையாகும் முன்னர், கடந்த வார மாற்றங்களைக் கண்காணித்துத் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். எனவே, பங்களிப்பாளர்கள் தங்களின் மொழித் திறன் குறித்த தயக்கமன்றி பங்களிப்பதே நன்று.

சிறீக்காந்த், விக்கிமீடியா திட்டங்களில் சில அடிப்படைக் கொள்கைகள், கூட்டுறவுச் செயற்பாடுகளை வலியுறுத்துகிறோம். இயன்ற வரை நல்ல தமிழ் என்ற கொள்கையும் உண்டு. ஆனால், மீடியாவிக்கி மொழிபெயர்ப்பும், Translatewikiயும் விக்கிமீடியா திட்டங்களுக்கு வெளியே செயற்படுவதால் இத்தகைய நோக்கங்களை வலியுறுத்த முடியாது. எனவே, மொழிபெயர்ப்பில் மாற்றுக் கருத்துகள் வந்தால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறை குறித்தும் யோசிக்க வேண்டும். அனைத்துத் திறமூல திட்டங்களுக்கும் நடுவார்ந்த மொழிபெயர்ப்பு அணுகுமுறை இருந்தாலும், நிறுவும் ஒவ்வொரு தளத்திலும் அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பை மாற்றிக் கொள்ளும் உரிமையும் வசதியும் கூட உண்டு. எனவே, மாற்றுக் கருத்து இருந்தாலும் கண்டிப்பாக Translatewikiயில் தான் பேசித் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. இது குறித்த ஐயப்பாட்டைத் தான் செல்வாவும் முன்வைத்துள்ளார்.

மற்றபடி, தாங்கள் எடுத்துள்ள இம்முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழ் விக்கிப்பீடியாவில் இதனைச் செயற்படுத்தி விட்டு மற்ற உறவுத் திட்டங்களுக்கும் பரிந்துரைக்கலாம். Translatewikiயில் கொஞ்சம் இயங்கிப் பார்த்து விட்டுத் தேவைப்படும் மாற்றங்கள், கையேடுகள் குறித்து எழுதுகிறேன். நன்றி--இரவி 11:25, 23 பெப்ரவரி 2012 (UTC)

//இது அனைவருக்கும் பொருந்தும். ஒருவர் மாற்றுக்கருத்து தெரிவித்தால், இது தேவையா, (சபையில் பேசக்கூடிய சொற்களைப் பயன்ப்டுத்தும் பொழுது) இந்த சொற்கள் தேவையா என்றெல்லாம் கூறுவதையும் தவிர்க்கலாம். அப்பொழுது தான் அது திறந்த மனத்துடனுன் செய்யக் கூடிய வாதம்// ஆமாம், கட்டாயம் அனைவருக்கும் பொருந்தும் என்னும் பொருளிலேதான் கூறினேன். மாற்றுக் கருத்து தெரிவித்தால் (தக்க முறையில்), அதற்கு மறுப்பு இருந்தால் அதனையும் கருத்து அடிப்படையிலே பதிவிடலாம்தானே. அருள்கூர்ந்து எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் இட்டுப் பேச வேண்டாமே! இங்குத் தேவையானவற்றை இங்குப் பேசுவோம். நீங்கள் முன்னர் கூறிய ஒன்றிற்கு மறுப்புத் தெரிவித்ததால் நீங்கள் இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன். வங்காளத் தேச அறமன்ற நடுவர்கள் எடுத்த முடிவை "பாசிசம், கோமாளித்தனத்தின் உச்சம்" என்றெல்லாம் பொது மன்றாகிய இங்கு இடுவதில் மறுப்பு இருந்தால் கூறுவது முறைதானே. அதுவும் பல கருத்துகளை முன் வைத்தே கூறினேன். ஏன் இப்படிக் கோவம் ஐயா உங்களுக்கு? ஒரு மணித்துளி எண்ணிப்பாருங்களேன், உங்களுக்குக் எதைப்பற்றியும் தனிக்கருத்துகள் கொள்ள "உரிமை" உண்டு, நான் மறுக்கவில்லை (அது உங்கள் உகப்பு, உங்கள் அறிவுடைமை), ஆனால் பொது மன்றில் மதிப்பிற்குரிய அறமன்ற நடுவர்களைக் கடுமையாகச் சாட (பாசிசம், கோமாளித்தனத்தின் உச்சம்) உங்களுக்கு ஏதும் உரிமை இல்லை ஐயா, அது அழகும் ஆகாது. அத்தீர்ப்பில் என்ன குறைகள் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள், உங்கள் மறுப்புகள் யாவை என்று நீங்கள் சுருக்கமாகவேனும் சுட்டிவிட்டு, எனக்கு இது ஏற்புடையதாக இல்லை என்று கூறுங்கள் அது வேறு செய்தி (அதற்கு யாரும் மறுப்பு சொல்லப்போவதில்லை- அங்கும் கருத்துகளை மறுக்கலாம்). கடுமையான சொற்களை வீசுவது ஏன்? இப்படி எல்லோரும் பேசப்புகுந்தால் என்ன ஆகும்? நீங்கள் அப்படிச் சொன்னதால், இன்னொருவர் வந்து "நீங்கள் பாசிசிட்டு, நீங்கள்தான் கோமாளி" என்றெல்லாம் அவரவருக்கும் "உரிமை" என்னும் பெயரில் சொல்ல முற்பட்டால் என்ன ஆகும்? "உரிமை" என்பதை எப்பொழுதுமே "பொறுப்பு", "பொதுநலம்" ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது நல்லது அல்லவா? --செல்வா 17:04, 23 பெப்ரவரி 2012 (UTC)

இதற்குரிய கூகிள் ஆவணம்[தொகு]

ஸ்ரீகாந்த்! நீங்கள் ஆலமரத்தடியில் கூறியது போல, கூகுள் ஆவணம் உருவாக்கும் வரைக் காத்திருக்கிறேன்.அங்குள்ள இது குறித்த உரையாடல்களின் நகலை இங்கேயும் பதிந்தால், அனைத்தும் ஒரே இட்டத்தில், கோர்வையாக இருக்கும். பின்னாளில் அதிகம் தேட வேண்டியதில்லை. இதற்கு முன் இது போல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா? அவற்றினையும் இங்கே ஒருங்கிணைக்க விரும்புகிறேன்.ஆவலுடன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

தகவலுழவன், ஊடகப் போட்டி, இன்ன பிற காரணங்களால், தற்சமயம் இதனை என்னால் உடனே செய்யமுடிய இயலவில்லை. விரைவில் ஆவணத்தை பகிர்ந்து, இங்கும் பதில் இடுகிறேன். நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:43, 5 மார்ச் 2012 (UTC)

விக்கிமேனியா தள அறிவிப்பு[தொகு]

இரவி, "...வாசிங்கடன் டி.சியில் சூலை 12-15 இல் ...." என மாற்றம் செய்ய முடியுமா? முடிந்தால் செய்ய வேண்டுகிறேன். நன்றி.--செல்வா (பேச்சு) 19:22, 10 மார்ச் 2012 (UTC)

செல்வா, அது translatewiki மூலமாக வரக்கூடிய நடுவண் அறிவிப்பு என நினைக்கிறேன். குறிப்பிட்டு எந்தக் கோப்பு என்று சொன்னீர்கள் என்றால், எனக்கு அணுக்கம் இருந்தால் உதவுகிறேன்--இரவி (பேச்சு) 19:28, 10 மார்ச் 2012 (UTC)
திரான்சிலேட்டு விக்கியில் சூலை என்பதை மாற்றுவதால் குழப்பம் வரும் என்று கூறி முன்னர் செய்த திருத்தத்தை மீளமைத்து உள்ளனர் (இதற்கான சரியான காரணம் இன்று வரை எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இங்கே கொடுத்த விளக்கம் எனக்குச் சரியானதாகத் தெரியவில்லை; மாறி என்பதன் அடிப்படைக் கருத்தையே செயலிழக்கச் செய்கின்றது இது. வாசிங்டன் என்பது எங்கிருக்கின்றது என்று தெரிந்தால் தெரிவிக்கின்றேன். திரான்சிலேட்டு விக்கி எனில் நானும் மாற்றவும் முடியும். ஆனாலும் இணைப்பு முறிந்துவிடுகின்றது என்னும் காரணமும் முன் வைக்கக்கூடும். --செல்வா (பேச்சு) 20:08, 10 மார்ச் 2012 (UTC)
(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) translatewiki மென்பொருட்களை மட்டுமே மொழிபெயர்க்கும் தளம். விக்கிமீடியா அறிவிப்புகள் மேல் விக்கியில் மொழிபெயர்ப்பு வேண்டுகோள்கள் மூலம் மொழிபெயர்யக்கப் படுகின்றது. meta:Wikimania_2012/CentralNotice பக்கத்தில் மொழிபெயர்ப்புக்கள் உள்ளன. ஆனால் இதை மாற்றக் கூடாது என்பது என் கருத்து.
  • translatewiki யில் ஏன் மாற்றக் கூடாது : அது ஒரு மென்பொருளை மொழிபெயர்க்கும் தளம். உலகளாவிய தமிழ் மக்களுக்காக மொழிபெயர்க்கப்ப்டுவதால், அவர்கள் தமிழ் வழக்கில் இன்றும் ஜூலை என்றே பயன்படுத்துவதால்("தமிழ் ஆசான்கள்/காப்பாளர்கள்" உட்பட) அது பயன்படுத்த வேண்டும். விக்கிப்பீடியா சமூகத்தில் மாதங்களைப் பொருத்த வரை மட்டும் இணக்கம் இருப்பதால், நாம் இங்கு தனிப்பட்ட செய்திகளின் மூலம் அவற்றை மாற்றியுள்ளோம்.
  • இந்த செய்தியை ஏன் மாற்றக்கூடாது : இது விக்கிப்பீடியர்களை மட்டும் சென்றடைய வேண்டிய செய்தியில்லை, ஆகையால் சூலை என்று மாற்றுவது என்பது இந்த அறிவிப்பின் தாக்கத்தை விக்கிப்பீடியா கிரந்த வழக்கு தெரியாமல் இருக்கும் ஒருவரை குழப்பக்கூடும்.
பி.கு, இது பற்றி (தேவைப்பட்டால்) விவாதிக்க நாம் ரவியின் பேச்சுப் பக்கத்தை பயன்படுத்தாமல், வேறு எங்காவது விவாதித்தால் பிற்காலத்தில் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 16:01, 11 மார்ச் 2012 (UTC)
நீங்கள் மேலே சொன்ன இரண்டு கூற்றுங்களும் சரியானதல்ல!! சூன், சூலை என்று எழுதுவோரும் ஜூன் ஜூலை என்று எழுதுவோரும் உள்ளனர். சரியான தமிழ் முறை, தமிழ் எழுத்துகளில் எழுதுவதே. மேலும் அம்மாதங்களில் ஒலிப்பு பல மொழிகளில் பலவாறு உள்ளன. திரான்சிலேட்டு விக்கியில் முறைப்படி உரையாட ஒரு குழுமம் இல்லை. விக்கிப்பீடியாவில் உள்ளது போன்ற அறவொழுக்க வழிமுறைகள் ஏதும் இல்லை (இது வரை). ஆகவே முதன்மைத்தளமாக விளங்கும் தமிழ்விக்கிப்பீடியாவில் வழங்கும் முறைகளை அங்கு முதன்மைப் படுத்தி இடுவதே முறை. திரான்சிலேட்டு விக்கியைப் பயன்படுத்தும் பிற திட்டங்கள் வேண்டும் எனில் அவர்கள் திட்டத்துக்குள் மற்றிக்கொள்ளலாம். முதலில் கூறப்பட்டது "நுட்பக்காரணம்" இப்பொழுது நீங்கள் சொல்வது "கருத்தியல் கோட்பாடு". இவற்றை முறைப்படி உரையாட விக்கிப்பீடியா போன்ற களங்கள் உள்ளனவா? "தனிக்கருத்து" (opinion) என்றால் பலரும் பலவும் கொள்ளலாம், ஆனால், "பொது" முறையில் வைத்தல் என்றால் அறிவடிப்படையான, அற அடிப்படையான முறைமை வேண்டும். ஊடகங்கள் இன்ஜினியர் என்று எழுதினால் அப்படித்தான் எழுத வேண்டும் என்பது போல உரையாடினாலோ, சிறுபான்மையரே இணைய வசதி பெற்ற இந்நாளில் கூகுள் முதலானவற்றைன் உதவி கொண்டு அறுதியிட்டுச் சிலவற்றைக் கூறுவதோ பொருந்தாது. திரான்சிலேட்டு விக்கி விக்கிப்பீடியாவுக்கு மட்டும் அல்ல என்பதும் தெரிந்த ஒன்றே. ஆனாலும் தமிழ்விக்கிப்பீடியாவை முதன்மைக் களமாகக் கொண்டு திரான்சிலேட்டு விக்கியில் இடுவதே பொருந்தும் (வேறு பொதுவான முறைகள் இருந்தால் தெரிவிக்கவும்). இவற்றை இங்கு இரவியின் பேச்சுப் பக்கம் அன்றி வேறு இடத்தில் கருத்தாடுதல் எனக்கும் உடன்பாடே. --செல்வா (பேச்சு) 17:20, 11 மார்ச் 2012 (UTC)

சிறீக்காந்த், http://meta.wikimedia.org/wiki/Wikimania_2012/CentralNotice பக்கத்தில் Open translation request என்று சொல்லி உள்ளார்கள். எனவே, அனைவரும் மாற்றலாம். மொழிபெயர்ப்பில் வரும் கருத்து வேறுபாடுகளைக் களைய மெட்டாவிக்கியில் உரையாடுவது அனைத்துலகச் சமூகத்துக்குப் பயனற்றதாய் இருக்கும். போதுமான தமிழர்களின் கவனத்தை ஈர்க்காது. இச்செய்தி, விக்கிப்பீடியர்களைக் குறித்தது என்பதால், இது குறித்து இங்கேயே உரையாடி முடிவெடுக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் மாதப் பெயர்களில் சீர்மை பேணுவது என்றும் ஜூலையை சூலை என்று எழுதலாம் என்றும் ஏற்கனவே பொதுக் கருத்து உள்ளது. எனவே, ஏன் இதனை மாற்றக் கூடாது?

தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் கிரந்தம் குறித்து என்ன கொள்கை என்பது வேறு உரையாடல். அதனைக் குறுந்தட்டுத் திட்ட உரையாடலுக்குப் பிறகு பார்ப்போம். இப்போது, மீடியாவிக்கி மென்பொருள் மொழிபெயர்ப்பிலும் தள அறிவிப்பில் வரும் விக்கிமீடியா அறிவிப்புகளுக்குப் பின்பற்ற வேண்டிய நடைக்கையேடு குறித்து உரையாடுவோம்.

விக்கிமேனியா அறிவிப்புகளில் வேறுசில குறைபாடுகளும் இருந்ததால் இங்கே மாற்றியுள்ளேன் . இங்கே இணைப்பு முறியும் போன்ற சிக்கல்கள் இல்லாததால் சூலை என்றும், வாசிங்டன் என்றும் மாற்றியுள்ளேன். வாசிங்டன் தமிழர்கள் நடத்தும் பல தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வாசிங்டன் என்று இருப்பதை நான் அறிவேன், கண்டிருக்கின்றேன் என்பதால் (எ.கா. இலக்கிய வட்டம் ++) மாற்றியுள்ளேன். மேலே இரவி சொன்னவாறு உரையாடல் செய்வது தேவை. இதனைப் பொறுமையாகச் செய்வோம். --செல்வா (பேச்சு) 20:55, 11 மார்ச் 2012 (UTC)

மீடியாவிக்கி மென்பொருள் மொழிபெயர்ப்பு[தொகு]

மீடியாவிக்கி மென்பொருள் விக்கிமீடியா திட்டங்களுக்கு வெளியேயும் பயன்படுவதால், அங்கு தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் கொள்கையைத் திணிக்கக்கூடாது என்கிறீர்கள். சரி. அதே வேளை, தமிழ் விக்கிப்பீடியாவுக்கே பல உறவுத் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உறவுத் திட்டத்திலும் இது போன்ற உரையாடல்களை மீண்டும் மீண்டும் செய்வது வீண். எனவே, தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்குப் பொதுவான ஒரு உரையாடல் களமும், மீடியாவிக்கி மென்பொருள் மொழிபெயர்ப்புக்கு ஒரு பொதுவான களமும் தேவைப்படுகிறது. தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி என்பதால், இங்கேயே அதற்கான உரையாடலை மேற்கொள்ளலாம். திரான்சுலேட்டு விக்கியில் இத்தகைய வசதி உள்ளதா? இல்லையெனில், இதனை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கிரந்தம் குறித்து மட்டுமல்ல, கலைச்சொல் வேறுபாடுகள், நடை வேறுபாடுகள், உள்ளூர் வழக்கு வேறுபாடுகள் குறித்தும் கூட இங்கு உரையாடலாம்.

விக்கிமீடியா தள அறிவிப்புகள்[தொகு]

மேலே சொன்ன அதே ஏரணத்தின் படி, விக்கிமீடியாவின் அனைத்து அறிவிப்புகளுக்கான தமிழாக்கங்கள் குறித்த உரையாடல்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவையே களமாகக் கொள்ளலாம்.

//இது விக்கிப்பீடியர்களை மட்டும் சென்றடைய வேண்டிய செய்தியில்லை,//

விக்கிமேனியாவுக்கு விக்கிப்பீடியர் அல்லாமல் யார் போகப் போகிறார்கள் :) விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குச் சூலை என்பது புரியும் என்று ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அதே விக்கிப்பீடியாவில் வருகிற தள அறிவிப்பில் உள்ள சூலை என்பது மட்டும் எப்படிப் புரியாது என்கிறீர்கள்? :)

//உலகளாவிய தமிழ் மக்களுக்காக மொழிபெயர்க்கப்ப்டுவதால், அவர்கள் தமிழ் வழக்கில் இன்றும் ஜூலை என்றே பயன்படுத்துவதால்("தமிழ் ஆசான்கள்/காப்பாளர்கள்" உட்பட) அது பயன்படுத்த வேண்டும்.//

//சூலை என்று மாற்றுவது என்பது இந்த அறிவிப்பின் தாக்கத்தை விக்கிப்பீடியா கிரந்த வழக்கு தெரியாமல் இருக்கும் ஒருவரை குழப்பக்கூடும்.//

இது ஒரு அகவயமான கருத்து (subjective opinion). சூலை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, குழம்புவார்கள் என்பதை புறவயமான தரவுகளால் நிறுவ முடியுமா? இந்தத் தள அறிவிப்பில் ஜூலை என்று இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எத்தனையோ கட்டுரைகளில் அப்படியே உள்ளது. ஆனால், அதை மாற்றக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் புறவயமாக இருக்க வேண்டும். நன்றி--இரவி (பேச்சு) 20:23, 11 மார்ச் 2012 (UTC)