விக்கிப்பீடியா பேச்சு:அடிக்கடி ஏற்படும் பிழைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவைப்படும் விளக்கம்:

rajasthan patrika என்று ஒன்று சென்னையில்(?) உள்ளது. ஆகவே, யுவர் ஆனர், பத்ரிகா என்பது சமற்கிருதம். தமிழில் ஐ போட்டு முடிப்பதாலும், ka என்று வருவதாலும், பத்திரிக்கை என்பது பொருத்தம் :-) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 27 சனவரி 2013 (UTC)

  1. நிறுவனம் என்பது நிறுவப்பட்ட ஓர் அமைப்பு; நிருவனம் அல்லது நிரூபனம்== நிருவுதல்- உறுதிசெய்தல் என்ற பொருளில் வரும்...
  2. பத்திரிகை என்பது வடமொழிச் சொல் பத்ரம்(இலை) என்ற சொல்லடியாகப் பிறந்தது.. அக்காலத்தில் பனை ஓலையில் எழுதியதால் பத்திரிகை எனப்பட்டது. பின்னர் அது பத்திரிக்கை எனத் தமிழ்ப்படுத்தப்பட்டது... ஓலை, மடல், இதழ் என்பது சரி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:03, 27 சனவரி 2013 (UTC)


மிகவும் பயனுள்ளது[தொகு]

தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள ஒரு பக்கம். இதனை அட்டவணையாக்த் தொகுத்தால் சிறப்பு. எ.கா பின்வருமாறு:

அடிக்கடி பிழை விடும் சொற்கள்
பிழை சரி விளக்கம்
பிளை பிழை எடுத்துக்காட்டு

--Natkeeran (பேச்சு) 15:16, 27 சனவரி 2013 (UTC) 👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:26, 27 சனவரி 2013 (UTC)

பெயர்ச்சொற்களையும் (இடம், நபர், அமைப்பு), வட்டார மொழி நோக்கில் சொற்கூட்டல் வேறுபடும் சொற்களையும் இப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பது நன்று. --Natkeeran (பேச்சு) 15:34, 27 சனவரி 2013 (UTC)

கறுப்பு[தொகு]

கறுப்பு என்பது சரியான தமிழ்ச் சொல். கறுப்பு என்று எழுதக்கூடாது என்று திட்டத்தின் பக்கத்தில் உள்ளது எந்த வகை நியாயம்?--பாஹிம் (பேச்சு) 16:18, 27 சனவரி 2013 (UTC)

நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 27 சனவரி 2013 (UTC)


ஒ, ஓ. இந்த முடிவை இங்கு எடுக்க முடியாது. தெளிவாக இலக்கணைப் பிழை உள்ள சொற்களை மட்டும் இங்கு பட்டியலிடலாம். --Natkeeran (பேச்சு) 19:42, 27 சனவரி 2013 (UTC)

பார்வதிஸ்ரீ, சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முன்னர் அது சரியான சொல்லா அல்லவா என்பதுதானே இங்கு தேவைப்படுவது. அடிக்கடி பிழை விடும் சொற்கள் எனும் போது கறுப்பு என்பது பிழை என எப்படிக் கூற முடியும்? கறுப்பு என்பது தான் நிறத்தைக் குறிக்கும் சொல்லென்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி குறிப்பிடுகிறதே.--பாஹிம் (பேச்சு) 02:32, 28 சனவரி 2013 (UTC)

நீங்கள் இப்பக்கத்தில் கேட்ட கேள்விக்குத்தான் இணைப்பில் கூறப்பட்டதைத் தந்தேன்.. அது பிற்கால வழக்கு. காலப்போக்கில் இது போல பல சொற்கள் பொருள் மாறி வழங்கி வருகின்றன. மேலுள்ள பல்கலைக்கழக இணைப்பில் தொல்காப்பியம் கூறும் குறிப்பும் உள்ளது.. தமிழண்ணல் அவர்களின் விளக்கமும் உள்ளது... கறுப்பு பக்கத்திலும் இவ்விணைப்பைப் பகிர்ந்துள்ளேன். நன்றி....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 28 சனவரி 2013 (UTC)

முண்ணாண்[தொகு]

முண்ணாண், முண்ணான் ஆகிய இரு சொற்களையும் இலங்கைப் பாட நூல்களில் மாற்றி மாற்றிப் போட்டிருப்பதால் முண்ணாண் பற்றிய குறிப்பையும் சேர்த்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:57, 28 சனவரி 2013 (UTC)

இலக்கணக் குறிப்புகள்[தொகு]

அடிக்கடி ஏற்படும் எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் பற்றிய நூல்களை, இணையதளங்களை இங்கே இடலாமே! குறிப்பாக, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பக்கங்களை இணைக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:34, 17 ஆகத்து 2014 (UTC)

அனைத்திற்கும் பொருந்தாதே!![தொகு]

//பெயர்ச்சொற்குறிகள் - ஒரு, ஓர், அந்த (a, an, the) கவனம் தேவை,// ஆங்கிலச் சொற்கள் அனைத்திற்கும் நேரடியாக இவற்றைப் பயன்படுத்த முடியாதே!!!. an என்பது 'ஒரு' ஆகவும் இருக்கலாம் ஓர் ஆகவும் இருக்கலாம்???? விளக்கம் தேவை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:18, 21 ஆகத்து 2015 (UTC)