உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/மடிக்கணினி-இணைய இணைப்பு-வேண்டுகோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கீழ்கண்ட இந்த வேண்டுகோள்கள், ஆலமரத்தடியில் இருந்து படியெடுக்கப்பட்டன.

1. Deepa arul[தொகு]

  • மடிக்கணி பெற ஆதரவு வேண்டல்

எனக்கு என்று தனியாக மடிகணினி இல்லாமல் என் கணவரின் மடிகணினியையே பயன்படுத்தி வருகிறேன். அவர் மடிகணினியை பயன்படுத்தும்போதோ அல்லது அவர் வெளியே எடுத்துச் செல்லும்போதோ என்னால் பங்களிப்பை வழங்க இயலுவதில்லை. எனவே வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டிகிறேன்--தீபா அருள் (பேச்சு) 10:08, 27 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

2. Parvathisri[தொகு]

வீட்டிலுள்ள கணினி பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், போதுமான இணைய வசதியின்மையாலும் தற்பொழுது எனது பங்களிப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனவே வேங்கைத் திட்டம் 2.0 இல் முழு மூச்சுடன் பங்களிக்க எனக்கு மடிக்கணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எனக்கு தங்களின் மேலான ஆதரவினை இங்கு வழங்குமாறு தமிழ் விக்கிச் சமூகத்தினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:06, 28 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

3. Sridhar G[தொகு]

எனக்கு இங்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.ஸ்ரீ (talk) 01:50, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

4. சே. கார்த்திகா[தொகு]

புதுப்பயனர் போட்டியின் போது தான் எனது பயணத்தை விக்கிப்பீடியாவில் தொடங்கினேன். ஆங்கில கட்டுரைகளை மொழிமாற்றம் செய்தேன், எனக்கு அது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் ஆங்கிலம் மொழியில் எனக்கு சிறிது தடுமாற்றம் உண்டு. எழுத துவங்கும் பொழுது மிகவும் கடினமாக இருந்தது. முதல் கட்டுரை முடித்த பிறகு தான் எனக்கு எழுதுவதில் அதிகம் ஆர்வம் வந்தது. தொடர்ந்து கட்டுரை எழுதுவதன் மூலமாக அதிகம் கற்றுக்கொண்டேன். நான் தொடர்ந்து முயற்சி செய்து அந்த போட்டியின் வெற்றியாளர்களின் ஒருவராக இருந்தேன். அதே கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் பங்குபெற ஆசை. என் கணவரின் மடிக்கணினியை பயன்படுத்தி வந்தேன் தற்போது பழுதாகிவிட்டதால் புதிய மடிக்கணினி வழங்க ஆதரவு கேட்கிறேன். நன்றி. இங்கு. -சே. கார்த்திகா (பேச்சு) 16:20, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

5. பாத்திமா ரினோசா[தொகு]

விக்கிபீடியாவின் பயனாளரான நான் புதுப் பயனர் போட்டியில் பங்குபற்றி 30 கட்டுரைகளை எழுதினேன். பொழுது போக்கிற்காக எழுத தொடங்கிய நான் எனது திறன்பேசியின் மூலம் visual editing இனால் பெரும்பாலும் போட்டிக்காக கட்டுரை எழுதி வந்தேன். கணனி வகுப்பின் கணனியையும் பாவிப்பதுண்டு. திறன்பேசியில் கட்டுரை எழுதுவது இலகுவானதல்ல. கணனி இல்லாததால் மடிக்கணனி வழங்க ஆதரவு கேட்கிறேன். என்னால் முடிந்தளவு பங்களிப்பை விக்கிபீடியாவின் வேங்கை திட்டத்தில் வழங்குவேன்.

பயனர்:பாத்திமா ரினோசா ( பாத்திமா ரினோசா) 8:04, 31 ஆகத்து 2019 (UTC)

6. தகவலுழவன்[தொகு]

எனது மடிக்கணினி சரிவர இயங்கா நிலைமையில் இருப்பதால், நான் வேங்கைத் திட்டம் 2.0 வழி, மடிக்கணினிப் பெற இங்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். .--உழவன் (உரை) 02:36, 3 செப்டம்பர் 2019 (UTC)

7. ஹிபாயத்துல்லா[தொகு]

என்னிடம் மடிகணினி இல்லாத காரணத்தால் விக்கி பயிலகங்களில் கூட சக விக்கிபீடியர்களிடம் இரவல் வாங்கி பயன்படுத்தி வந்தேன் என்பது முன்னணி விக்கிபீடியர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அலுவலக மேஜைக்கணினியை பயன்படுத்தி வருகிறேன். ஆகையால் என்னால் பங்களிப்பை வழங்க இயலுவதில்லை. எனவே வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை [1] அளிக்குமாறு வேண்டுகிறேன்.ஹிபாயத்துல்லா (பேச்சு) 06:25, 3 செப்டம்பர் 2019 (UTC)

8. VASANTHALAKSHMI V[தொகு]

தமிழ் விக்கிபீடியாவின் பயனராகிய நான் புதுப்பயனர் போட்டியில் பங்கு கொண்டு 181 கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். மேலும், தமிழ் விக்கி மூலத்தில் இதுவரை நான்கு புத்தகங்கள் மெய்ப்புப் பணி செய்துள்ளேன். நான் தற்போது மேஜைக்கணினியை பயன்படுத்தி வருகிறேன். விரைவான இணைய வசதி சரியாக இல்லாத காரணத்தால் அதிக பங்களிப்பு செய்ய இயலவில்லை. எனவே, நான் வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்--வசந்தலட்சுமி (பேச்சு) 16:29, 3 செப்டம்பர் 2019 (UTC)

9. balu1967[தொகு]

தமிழ் விக்கிபீடியாவின் பயனராகிய நான் புதுப்பயனர் போட்டியில் பங்கு கொண்டு 261 கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து முதலாம் இடம் பிடித்துள்ளேன். இந்த கட்டுரைகள் அனைத்தும் என்னுடைய அலுவலக கணிணியை பயன்படுத்தியே பங்கு கொண்டேன். மேலும், தமிழ் விக்கி மூலத்தில் இதுவரை மூவாயிர்த்திற்கும் மேலான பிழைத் திருத்தங்களை முடித்துள்ளேன். ஆறு புத்தகங்கள் மெய்ப்புப் பணி முழுமையாக (பக்கங்கள் மஞ்சள்) செய்துள்ளேன். எனவே, தமிழ் விக்கிபீடியாவில் மேலும் அதிக பங்களிப்பினை மேற்கொள்ள எனக்கு வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:50, 3 செப்டம்பர் 2019 (UTC)

10. TVA ARUN[தொகு]

தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை) பொறுப்பில் முனைவர் தமிழ்ப்பரிதி பணியாற்றியபோது தமிழ் உள்ளடக்கம் கொண்ட ஆங்கில விக்கிபீடியர்களுக்கான பயிலரங்கை தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் (14 & 15 நவம்பர் 2015) அவருடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு நடத்தினோம். அந்நிலையில் பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் மடிக்கணினி தேவைப்பட்ட நிலையில் எனது மடிக்கணினியை வழங்கினேன். சென்னை பெரு வெள்ளத்தின் முதல் இரு நாட்களில் சனி, ஞாயிறு அன்று நிகழ்வு முடிந்த நிலையில் அலுவலகம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் எனது மடிக்கணினி நீரில் முழுமையாக மூழ்கிப்போனது. அத்தகைய நிலையிலும் இன்று வரை எனது விக்கி பங்களிப்பு தொடர்ந்தே வருகிறது. தமிழக அரசு சார்பில் த.இ.க. பங்களிப்பில் விக்கியினை தொடர்ந்து மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறேன். பணி தொடர ஊக்கமளிக்ககும் விதமாக மடிக்கணினி வழங்க விண்ணப்பித்துள்ளேன். ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கின்றேன். எனது விண்ணப்பம் --TVA ARUN (பேச்சு) 04:53, 10 செப்டம்பர் 2019 (UTC)