விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்தைய பயிற்சியில், தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி மணல்தொட்டி மூலம் எழுதிப் பழகுவது என்று பார்த்தோம்.

இன்றைய பயிற்சியில், எவ்வாறு விக்கிப்பீடியாவில் உங்கள் ஆர்வம், நேரத்துக்கு ஏற்ப சிறு சிறு பங்களிப்புகளை நல்குவது என்று பார்ப்போம்.

இத்தளத்தின் இடப்பக்கம் பட்டையில் ஏதாவது ஒரு கட்டுரை என்று ஒரு இணைப்பு இருக்கிறது அல்லவா? அதனை அழுத்துங்கள்.

மீண்டும் மீண்டும் அதனை அழுத்தி வெவ்வேறு கட்டுரைகளைக் காணலாம்.

ஏதாவது ஒரு துறை சார்ந்த கட்டுரைகளப் பார்க்க விரும்புகிறீர்களா?

ஒரு குறிப்பிட்ட பகுப்புக்குள் ஏதாவது ஒரு கட்டுரை பாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, விலங்குகள், பறவைகள், நாடுகள், நாணயங்கள் போன்ற பகுப்புகளை முயன்று பாருங்கள்.

சிறு பங்களிப்புகளை வழங்கும் முறை

என்ன வகையான சிறு பங்களிப்புகளை நல்கலாம்?

* எழுத்துப் பிழை / இலக்கணப் பிழை / தகவல் பிழை திருத்தலாம்.

  • பிற மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைத் தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதலாம்.
  • படிக்க இலகுவாக சொற்றொடர் அமைப்பை மாற்றியும் எளிய சொற்களைப் பயன்படுத்தியும் எழுதலாம்.

முயன்று பாருங்களேன் !

நாளைய பயிற்சியில், விக்கிப்பீடியாவில் என்னவெல்லாம் எழுதலாம், எழுதக்கூடாது என்பதனைப் பார்ப்போம். நன்றி.

இப்பயிற்சியில் பங்கு பெற்று வருகிறீர்களா?

உங்கள் பெயரை விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயில்வோர் என்ற பக்கத்தில் பதியுங்கள். மற்ற பயனர்கள் உங்களைக் கவனித்துத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.