விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிப்பு 2.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கியன்பு
விக்கியன்பு
விக்கியன்பு 2.0

தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களை அவர்களது பங்களிப்பிற்ககப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் பயன்படும் கருவியே விக்கியன்பு ஆகும். விக்கியன்பின் புதிய பதிப்பான விக்கியன்பு 2.0 Emoji u1f496.svg பயனர் ஸ்ரீகர்சனால் உருவாக்கப்பட்டது. இப்பதிப்பு பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்[தொகு]

நெறியத்தோற் பட்டியலில் விக்கியன்பு கருவிக்கான படவுரு
விக்கியன்பு இணைப்பு
விக்கியன்பு இணைபின் இடைமுகம்
விக்கியன்பின் இடைமுகம்
பதக்கத் தெரிவும் முன்தோற்றமும்
பதக்கத் வடிவமைப்பும் முன்தோற்றமும்

தோற்றம்[தொகு]

 • முன்னர் நெறியத்தோற் பட்டியலில் (vector menu) விக்கியன்பு கருவிக்கான பொத்தான் சற்று நீண்ட இடத்தை ஆக்கிரமித்திருந்தது, தற்போது அது Emoji u1f499.svg என்னும் படவுருவாக (icon) மாற்றப்பட்டுள்ளது. இதன் மீது சுட்டியைக் (mouse pointer) கொண்டுசெல்லும் போது Emoji u1f496.svg படவுருவாக மாறும் வகையில் விழுத்தொடர் பாணித் தாளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • பயனர் பேச்சுப் பெயர்வெளியிலுள்ள அனைத்துப் பக்கங்களிலும் இயங்கக் கூடியதாக இக்கருவி இருந்தது. தற்போது இக்கருவி தமது பயனர் பேச்சுப் பக்கம் (பயனர் பேச்சின் உப பக்கங்கள் உள்ளடங்கலாக) தவிர்ந்த, பிற பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் மட்டும் இயங்கக்கூடியாதக மேம்படுத்தப்பட்டுள்ளது. (நீங்களே உங்களுக்குப் பதக்கமிட முடியாது!)
 • நெறியத்தோற் பக்கத்தின் மேலுள்ள பேச்சுப் பக்க இணைப்பின் அருகில் விக்கியன்புடன் தொடர்புபட்ட பக்கங்களை அணுகுவதற்கான இணைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடைமுகம்[தொகு]

 • பதக்கத் தெரிவுப் பட்டியலில் இலகுவாகப் பதக்கத்தைத் தெரிவுசெய்ய உதவியாகப் பதக்கங்கள் விக்கிப் பதக்கங்கள் மற்றும் துறைசார் பதக்கங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 • தெரிவுப் பட்டியலில் உள்ள பதக்கங்களுக்கு மேலதிகமாக நாமே சுயமாகப் பதக்கத்தை வடிவமைக்கும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

முன்தோற்றம்[தொகு]

 • விக்கியன்பு நீட்சியில் உள்ளது போல் முன்தோற்றம் (Preview) காட்டும் வசதியும் இக்கருவியில் இணைக்கப்பட்டுள்ளது.
 • இந்த முன்தோற்றம் HTML வடிவில் இருப்பதால் உள்ளிடப்பட்ட செய்தி முல உரையாகவே (எகா:[[தமிழ்]] கட்டுரையை சிறப்பாக விரிவாக்கியமைக்கு வாழ்த்துகள்--~~~~) காட்சியளிக்கும்.

பதிகை[தொகு]

 • இக்கருவியைப் பயன்படுத்திப் பதக்கமிடும் தரவுகளை பதிகை பக்கத்தில் தானாகவே உடனுக்குடன் சேர்க்கும் வகையில் கருவி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது போன்றதொரு வசதியை அமைத்துதவும் படி ஸ்ரீதர் விக்கியன்பு பேச்சுப் பக்கத்தில் கோரியிருந்தார். பதிகை பக்கத்தை பயனர்கள் கவனிப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் யாருக்காவது பதக்கம் வழங்கப்பட்டால் அதனை இலகுவில் அறிந்துகொண்டு, குறித்த பயனருக்குத் தமது வாழ்த்துகளையும் தெரிவிக்க மிக உதவியாக அமையும்.
 • இக்கருவி மூலம் நாம் யாருக்காவது பதக்கம் வழங்கினால் பதிகை பக்கம் நமது கவனிப்புப் பட்டியலில் தானாகவே சேரும் வகையில் இக்கருவி நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 • பதக்க வார்ப்புருவின் கீழுள்ள பதிகை என்ற இணைப்பை சொடுக்கும் போது பதிகை பக்கத்தில் அப்பதக்கத்திற்குரிய நிரை (row) இளநீல நிறப் பின்னணியுடன் (Highlight செய்யப்பட்டு) தோற்றமளிக்கும்.
 • பதிகை பக்கத்தில் உள்ள பட்டியலில், பதக்கம் என்ற நிரலின் கீழுள்ள பதக்கத்தின் பெயரை சொடுக்கும் போது இடப்பட்ட செய்தி தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • பதிகை பக்கத்தின் பட்டியலில் உள்ள தரவுகள் விக்கியன்பு 2.0 கருவியின் மூலம் பதக்கம் வழங்கும் போது தன்னியக்கமாகச் சேர்கப்படுவதால் இப்பக்கத்தை தொகுப்பதை தவிர்க்கும் வகையில் தொகுப்புப் பெட்டி மறைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இப்பக்கத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம். இப்பக்கத்தில் ஏதாவது தவறுகள் இருப்பின் பேச்சுப் பக்கத்தில் அறியத்தாருங்கள். என்ற உதவிக்குறிப்பு தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • உங்களது கவனிப்புப் பட்டியலில் பதிகை பக்கத்துடன் தொடர்புபட்ட தொகுப்பு இளநீல நிறப் பின்னணியுடன் (Highlight செய்யப்பட்டு) தோற்றமளிக்கும்.
 • அண்மைய மாற்றங்களைக் குழுவாக்கும் வசதியை தெரிவுசெய்திருந்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் பதிகை பக்கத்துடன் தொடர்புபட்ட தொகுப்பு இளநீல நிறப் பின்னணியுடன் (Highlight செய்யப்பட்டு) தோற்றமளிக்கும்.

சிறப்புப் பக்கம்[தொகு]

 • பதிகை பக்கத்தில் உள்ளிடப்பட்ட தகவல்களை மூலமாகக் கொண்டு வழங்கப்பட்ட அனைத்துப் பதக்கங்களையும் Special:Wikilove பக்கத்தின் ஊடாகவும், நீங்கள் பெற்ற/அளித்த பதக்கங்களை Special:MyWikilove பக்கத்தின் ஊடாகவும், பிற பயனர் பெற்ற/அளித்த பதக்கங்களை Special:Wikilove/பயனர் பெயர் பக்கத்தின் ஊடாகவும் (எகா: Special:Wikilove/Shrikarsan ) பார்வையிடலாம்.
(இவ்விணைப்புகள் சிவப்ப்ணைப்பாகவே காட்சியளிக்கும் ஆயினும் கருவியை நிறுவியவர்களுக்கு உரிய பக்கங்கள் காட்டப்படும்)

வார்ப்புரு[தொகு]

 • தனித்தனி வார்ப்புருகளினூடாக இணைக்கப்பட்ட பதக்கங்கள் ஒரே வார்ப்புருவாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் பதக்க வார்ப்புருச் சீராக்கம் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
 • வார்ப்புருவின் வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 • பழைய வார்ப்புரு
SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
பதக்கமிடும் போது உள்ளிடப்பட்ட செய்தி --கையொப்பம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • புதிய வார்ப்புரு
Special Barnstar Hires.png சிறப்புப் பதக்கம்
பதக்கமிடும் போது உள்ளிடப்பட்ட செய்தி --கையொப்பம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 • நுட்பப்பதக்கம் மட்டும் வித்தியாசமான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
Barnstar - technical works.svg நுட்பப் பதக்கம்
பதக்கமிடும் போது உள்ளிடப்பட்ட செய்தி --கையொப்பம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

வழு நீக்கம்[தொகு]

 • விருப்பத் தேர்வில் நீங்கள் விக்கியன்பைச் செயற்படுத்தியிருந்தால் இக்கருவி இயங்காத வண்ணம் நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது. விருப்பத் தேர்வில் விக்கியன்பு 2.0 செயற்படுத்தப்பட்ட பின் இது மிகப் பயனுள்ளதாக அமையும். விருப்பத் தேர்விலும் பயனரின் vector.js அல்லது common.js பக்கத்திலும் செயற்படுத்தியிருந்தால் விருப்பத்தேர்வின் மூலம் செயற்படுத்தப்பட்ட கருவிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முன்னர் இப்பிரச்சினை சில வழுக்களை ஏற்படுத்தியிருந்தது. (காண்க).
 • ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்ட கல்டாரி (Kaldari) இனது நிரலை சூர்யபிரகாசு தமிழ் விக்கிக்கு அமைய மாற்றும் போது தவறுதலாக நீக்காது விட்ட தேவையற்ற நிரல் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
// ஒரு பட்டியல் படிமங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கானச் செயற்கூறு (Function)
    $.fn.selectItem = function() {
     return this.each(function() {
      var containerId = this.id;
      var customId = 0;
      $('#'+containerId+' img').css('border', '8px solid transparent');
      $('#'+containerId+' img').each(function() {
       if (this.id == '') {
        this.id = 'select_img_' + customId;
        customId++;
       }
       $('#'+this.id).click(function() {
         $('#'+containerId+'Selected').val(this.title);
         $('#'+containerId+' img').css('border', '8px solid transparent');
         $('#'+this.id).css('border', '8px solid #AED0EA');
       })
      });
     });
    };

நிரல்கள்[தொகு]

நிரல்வரியாக நிறுவ[தொகு]

  importScript('பயனர்:Shrikarsan/விக்கியன்பு2.js');

நீங்கள் இக்கருவியை நிறுவும் போது பழைய விக்கியன்பு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவிகளின் பயன்பாட்டை செயலிழக்கம் செய்தால் தேவையற்ற நுட்பக் கோளாறுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.