விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா/கட்டுரையைத் தெரிவுசெய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்கள் கட்டுரை தெரிவு செய்யும் போது உங்களிற்குப் பிடித்த ஒரு கட்டுரையைத் தெரிவு செய்யலாம். அல்லது ஒரு கட்டுரையில் ஒரு பகுதியைக் கூட தெரிவுசெய்யலாம் (இருப்பினும் முழுக்கட்டுரையைத் தெரிவு செய்வதையே நாம் பரிந்துரைக்கின்றோம்). பின்வரும் கட்டுரைகளைத் தெரிவு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.  • கட்டுரையைத் தெரிவு செய்து ஒலிப்பதிவு செய்யத்தொடங்கும் முன்னர் அக்கட்டுரையின் கடைசிப் பதிப்பை சேமித்துக் கொள்ளவும். கட்டுரைகள் மாறக் கூடியது என்பதனால் நீங்கள் ஒலிப் பதியும் கட்டுரை ஒரே பதிப்பு என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சு ஒலிப்பதிவு பல்வேறு பதிப்புகளில் குழப்பமாக இருக்க கூடாது.
  • கட்டுரையை ஒலிப்பதிவு செய்ய முன்னர் கட்டுரையில் ஏதும் இலக்கணப் பிழை, சொற்றொடர் பிழை உள்ளதா என சோதித்து திருத்திக் கொள்ளவும். இதைவிட நீளமான வாசிக்கத் தடங்கல் தரக்கூடிய பகுதிகள் இருந்தால் அவற்றையும் கட்டுரையில் மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
  • கட்டுரையைத் தெரிவு செய்யும் போது நிலைத்து நீடித்து உள்ள கட்டுரையைத் தெரிவு செய்யவும். சிறிய குறுங்கட்டுரைகள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படும் தன்மையுடையவை. இவற்றை ஒலிப் பதிவு செய்து சிறிது நாட்களிலேயே ஒலிப் பதிவு பழையதாகிவிடலாம். ஆகவே சிறப்புக் கட்டுரைகளை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கின்றோம்.
  • காப்புரிமை உள்ள பகுதிகளைக் கொண்டுள்ள கட்டுரைகளைத் தெரிவு செய்யவேண்டாம். இவற்றைப் பயன்படுத்தினால் ஒலி கோப்பை Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License இன் கீழ் பயன்படுத்த முடியாது. இப்படியான கட்டுரைகளை கட்டாயம் தவிர்க்கவும்.