விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Wiki Project image.png


இத்திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நெற்களஞ்சியம் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நெற்களஞ்சியத்தை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

பட்டியலில் பங்குபற்றுதல்[தொகு]

நெற்களஞ்சியத்தில் பங்குபெறும் அன்பர்கள், தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல், மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் போன்ற பக்கங்களுக்கு சென்று, உருவாக்கம், விரிவாக்கம், மற்றும் தரவாக்கம் போன்ற பணிகளில் பங்குபற்றலாம்.

மேற்கோள் சுட்டுதல்[தொகு]

நெற்களஞ்சியம் தொடர்புள்ள பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

தரம் பிரித்தல்[தொகு]

நெற்களஞ்சியத்தின் கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.

நோக்கம்[தொகு]

இத்திட்டம் நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடல்[தொகு]