உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விக்கித்தரவு/தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக ஊராட்சிகள் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள 10,000+ கட்டுரைகளின் தரவுகளை விக்கித்தரவில் சேர்ப்பது, அங்கிருந்து தரவுகளைப் பெற்று கட்டுரைகளை இற்றைப்படுத்துவது முதலிய நோக்கங்களுடன் இந்தத் தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு துணைத்திட்டம் செயற்படும்.

எடுத்துக்காட்டு உருப்படி

[தொகு]

நிலவரம்

[தொகு]
 • தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் தானாகவே விக்கித்தரவு உருப்படி தோன்றும் (?). எனவே, இக்கட்டுரைகள் அனைத்துக்கும் உருப்படிகள் உள்ளன. ஆனால், உருப்படிகளுக்கான ஆங்கில விவரிப்பை மட்டும் ஒரு பயனர் (தானியக்கமாகச்?) சேர்த்துள்ளார். இதர விவரங்களைச் சேர்க்க வேண்டும்.

உருவாக்க வேண்டியவை

[தொகு]
 • ஊராட்சி ஒன்றியங்கள் / வட்டாரங்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்க வேண்டும். குறைந்தது, அவற்றுக்கு விக்கித்தரவு உருப்படிகளை உருவாக்க வேண்டும்.
 • சிற்றூர்கள் (ஏவறத்தாழ 60,000+ ஊர்கள் வரலாம்) அனைத்துக்கும் தானியக்கமாக உருப்படிகள் உருவாக்க வேண்டும். ஆனால், விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கத் தேவையில்லை.

சேர்க்க வேண்டியவை

[தொகு]
 • நமது கட்டுரைகளில் உள்ள பின்வரும் தகவலை எப்படி விக்கித்தரவில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும்.
  • ஆண், பெண் மக்கள் தொகை
  • ஊராட்சி மன்றத் தொகுதிகள் எண்ணிக்கை, ஊராட்சி மன்றத் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை
  • அடிப்படை வசதிகள்

பெற வேண்டிய கூடுதல் தரவு

[தொகு]
 • ஒவ்வொரு ஊராட்சியும் தனித்தொகுதியா பொதுத்தொகுதியா, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியா போன்ற விவரங்களைப் பெற வேண்டும். இவை காலத்துக்கு காலம் மாறும் என்றால் காலக்கட்டம் குறித்த விவரங்களையும் பெற வேண்டும்.
 • எல்லைகளைப் பகிரும் ஊராட்சிகள் பற்றிய தரவு