உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்பாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியினைப் பயன்படுத்துவர்கள் கவனிக்க வேண்டியவை

அணுக்கம் பெறுவதற்கான தகுதி

[தொகு]

அனைத்துப் பயனர்களும் இந்த அணுக்கம் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், கீழ்க்கானும் அடிப்படைத் தகுதிகளை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

புதிய பயனர்கள்

[தொகு]

மூன்று கட்டுரைகளை இந்தக் கருவி கொண்டு உருவாக்கி கட்டுரையின் தலைப்புகளைக் குறிப்பிட்டு இங்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பு: * விண்ணப்பிக்கும் காலம் வரையில் இந்தக் கருவியினைப் பயன்படுத்தாதவர்கள் (தொடர்பங்களிப்பாளர்கள், நிருவாகிகள், அதிகாரிகள் உட்பட) இந்தக் கருவியினைப் பொருத்தமட்டில் புதிய பயனர்கள் எனப்படுவர்.

ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள்

[தொகு]

ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள் எனில் அவர்கள் உருவாக்கிய மூன்று கட்டுரைகளை முன் வைத்து அணுக்கம் கோரலாம். ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் உருவாக்கிய கட்டுரைகளின் தரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கால அளவு

[தொகு]

விண்ணப்பிப்பவர்களின் பங்களிப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிரப் போதிய அவகாசம் தரும் வகையிலும், மொழிபெயர்ப்பாளர் அணுக்கத்தைத் தரும் முடிவை நிருவாகிகள் எடுப்பதற்காகவும், விண்ணப்பிக்கும் நாளில் இருந்து, ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளப்படும்.

அணுக்கம் வழங்கல்

[தொகு]

நிருவாகிகள் மற்ற பயனர்களின் கட்டுரையின் தரத்தினைச் சரிபார்த்த பிறகு, அணுக்கம் வழங்குவர். ஒரு நிருவாகியின் கட்டுரையினை மற்ற நிருவாகி சரிபார்த்து வழங்குவர்.

அணுக்கம் மீளப் பெறுதல்

[தொகு]

அணுக்கம் பெறப்பட்ட பிறகு பயனர்கள் உருவாக்கும் கட்டுரையானது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு ...) முரணாக இருக்கும் சமயத்தில், தொடர்ந்து மூன்று எச்சரிக்கைக்குப் பிறகும், அதே நிலை தொடருமானால் தகுந்த உரையாடலுக்குப் பிறகு அணுக்கம் மீளப் பெறப்படும்.

வார்ப்புருக்கள்

[தொகு]

இற்றை செய்யப்படும்