விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 13, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.


பெட்ரோலியம் என்பது புவியில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ் எண்ணெய் நீர்ம நிலையில் உள்ள பல ஐதரோகார்பன்களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் C5H12 இல் இருந்து C18H38 வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், திண்ம நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் நிலக்கரி ஆகும்.


றோய்யன் போர் (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி, றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது. கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, மனித தளத்தில் நோக்கலாம்.