விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 6, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு எனும் செடியின் பூவிலிருந்துத் தருவிக்கப்படும் நறுமணப் பொருளாகும். இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலக முடிகளும் சூல் தண்டுகளும் சமையலில் நறுமணத்திற்கும் வண்ணமூட்டவும் பயன்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது, நீண்டகாலமாக உலகின் மிகவும் விலை உயர்ந்த நறுமணப் பொருளாக இருந்துவருகிறது. பொதுவாக இப்பூ ஊதா நிறம் கொண்டதாகும். இதில் எளிதில் ஆவியாகும் ஆவியாகா நறுமணமிகு 150க்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் உள்ளன. மேலும்...


ஈருறுப்புத் தேற்றம் என்பது அடிப்படை இயற்கணிதத்தில் ஓர் ஈருறுப்புக் கோவையின் அடுக்குகளின் இயற்கணித விரிவுகளைத் தருகிறது. (x + y)nன் விரிவை, axbyc என்ற வடிவில் உள்ள உறுப்புகளின் கூட்டலாக எழுதலாம். b,c இரண்டும் குறையற்ற முழுஎண்கள், b + c = n ஆகும். ஒவ்வோர் உறுப்பின் குணகமான a ஆனது n, bஇன் மதிப்புகளைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட மிகை முழுஎண்ணாகும். விரிவிலுள்ள உறுப்புகளில் பூச்சியஅடுக்கு கொண்ட பகுதி இருந்தால் அப்பகுதியை எழுதாமலேயே விட்டுவிடலாம். மேலும்...