விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் "சூப்பர் 8" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக ஆஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.


முத்தையா முரளிதரன் (பி: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. எனினும் பல ஆய்வுக் கூட பரிசோதனைகள் நடத்தப்பட்டும் இக்குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.