விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 12, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது மாந்தவுருபியம் (anthropomorphism) எனப்படும். பல வேளைகளில் சமயம், நாடு, பொருளியல் இயக்கம் போன்ற உருவமற்றவையும் கருத்தளவில் மட்டுமே உள்ளனவுமாகிய நுண் பொருட்களின் மீதும் மாந்தரின் பண்புகளை இவ்வாறு ஏற்றுவர். மாந்தவுருபியம் என்பது மனிதரின் சிந்தையில் ஆழமாக அமைந்துள்ள உருவகப் பகுப்பாய்வு (reasoning by analogy) உத்தியின் வெளிப்பாடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். உருவமற்றவையும் உற்று அறியவியலாதவையுமாகிய [நுண்மமாக்கல்|நுண்]]பொருட்களைப் பற்றிய கருத்தாக்கத்தின்போது உருவகங்களின் துணையை நாடுவதால் பல சமயங்களில் இவ்விளைவு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.


உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, குனூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியனினை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.


உங்களுக்குத் தெரியுமா