விக்கிப்பீடியா:மார்ச் 19, 2011 சிறுவர் நாள் அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்ச் 19, 2011 அன்று அன்று தமிழ் சிறுவர் நாள் இங்குள்ள தமிழ் பாடசாலைகள் (அறிவகம் - http://www.arivakam.org/) மற்றும் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்படுகிறது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இது கோளிக்கை நோக்கிலான ஒரு ஏற்பாடே. எனினும் தமிழ் விக்கிப்பீடியா, நூலகத் திட்டம், தமிழ்க் கணிமை ஆகியவற்றை பரந்து பட்டவர்களுக்கு அறிமுகப் படுத்தும் நோக்கில் ஒரு கடை (booth) ஒழுங்கு செய்தோம். இதில் சிறுவர்களை ஈர்க்கும் வரை பொது அறிவுப் போட்டி மற்றும் சொற் போட்டி நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டது.

நாள் நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள்[தொகு]

பல தரப்பட்ட நிகழ்வுகள், கடைகள் (booths) ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. நான்கு தமிழ் விக்கிப்பீடிய ஆர்வலர்கள் booth இல் இருந்து அறிமுகங்கள் வழங்கினார்கள். பெரும்பாலும் மிகச் சிறியவர்களே வந்ததால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. மாற்றாக நாம் அவர்களுக்கு தமிழில் சில எளிமையான கேள்விகள் கேட்டு, பரிசுகள் வழங்கினோம். உங்களுக்கு எத்தனை வயது? இந்த சட்டையில் நிறம் என்ன? இன்று என்ன கிழமை? எலிபண்டுக்கு என்ன தமிழ்? இந்த உடல் உறுப்பின் (சுட்டிக் காட்டி) பெயர் என்ன? எனவே பல பயனர்கள் பங்களித்த கேள்விகள் முறைப்பட பயன்படாமல் போகின. எனினும் அந்தக் கேள்விகள் பின்னர் பல வழிகளில் பயன்படும் என நம்புகிறோம். இது சற்று வித்தியாசமான முயற்சி என்ற படியால் சில கற்றல்கள் பெற்றுக் கொண்டோம்.

ஒழுங்குபடுத்தல் பற்றிய கருத்துக்கள்[தொகு]

ஒரு கிழமைக்கு முன்னரே ஒழுங்குபடுத்தல் தொடங்கப்பட்டது. இது பல பயனர்கள் கருத்துப் பகிர, பங்களிக்க ஒரு தடையாக இருந்தது என அறியப்பட்டது. வருபவர்கள் தம்மோடு எடுத்துச் செல்லவென நான்கு வகையான தகவல் குறிப்புகள் அச்சடிக்கப்பட்டன. அவை பின்வருமாறு:

  • நூலகத் திட்டம் பற்றிய விரிவான அறிமுகம்
  • தமிழ் விக்கிப்பீடியா பற்றிய துண்டறிக்கை
  • தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய ஒரு தாள்
  • தமிழ் வலைத்தளங்களில் விரிவான பட்டியல்

சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டி, மற்றும் சொற் போட்டி நடத்தும் வண்ணம் பல பயனர்களின் பங்களிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்வி பதிலகள், சொற் பட்டியல்கள் தொகுக்கப்பட்டன. இது சற்று நெடிய பணி. கேள்விகளைத் வயது எல்லைப் படி தெரிவது, அவற்றுக்கான பதில்களை உறுதி செய்வது, கேள்விகளில் பல்வகைத் தன்மையைப் பேணுவது என பல கூறுகளை கருத்துக் கொள்ள வேண்டி இருந்தது. (எனினும் பின்னர் 12 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்களுக்கு இந்தக் கேள்விகளை தமிழில் எடுத்துச் செல்ல முடியாமல் போய் விட்டது. மேலும் எளிமையான கேள்விகளைக் கேட்க வேண்டியதாயிற்று.)

சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் 50 வரையான மொம்மைகளை வாங்கினோம். நேரடியாக காட்ட முடிந்தால் சிறப்பு என projector ஒன்றை எடுத்துச் சென்றோம். எனினும் எமது கம்பியில்லா திசைவி சரியாக வேலை செய்யாதால் அதை நிறைவாகச் செய்ய வில்லை. எதாவது ஒரு நிகழ்படம் ஓடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சிறுவர்களை, மக்களை ஈர்க்க மேலும் ஏதாவது சற்று வித்தியாசமாக செய்திருந்தால் சிறப்பாக் இருந்திருக்கும்.

தொடர்புகள்[தொகு]

இந்த நிகழ்வில் சில முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக நூலகத் திட்டம் செயற்பாடுகளில் ஈடுபாடு உள்ள சிலர் தொடர்பு கொண்டனர். நுட்ப பின் தள வேலைகளில் ஆர்வம் காட்டியவர்கள், உள்ளடக்கம் தந்து உதவக் கூடியவர்கள் போன்றோர்.

படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]