விக்கிப்பீடியா:மார்ச்சு 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:2009_IISc_tawiki_workshop

மார்ச்சு 21, 2009 சனி அன்று பெங்களூருவில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

பேரா.வி.கே - உரையின் பொழுது
பேரா.வி.கே - உரையின் பொழுது
பங்கேற்றவர்கள்
சுந்தர் - த.வியை பற்றி அறிமுகம் கொடுக்கிறார்
முகுந்தன் - தமிழ் தட்டச்சு பற்றி விளக்குகிறார்
புதிய பயனருடன் சுந்தர்

பட்டறை பற்றிய விபரங்கள்[தொகு]

கலந்து கொள்வோர்[தொகு]

விருப்பமுள்ளவர்கள் தயவு செய்து தங்களது பெயரை இங்கு எழுதவும். (தொகு - என்பதை அழுத்தவும்)

  1. பிரசாத் பாபு
  2. Sivaprakasam M
  3. அரவிந்த்
  4. பூமிநாதன்
  5. Anandhakumar.S
  6. கொ.பூபதி
  7. கங்கை கொண்டான்
  8. Viswanathan A
  9. Eswaran
  10. கி. முத்துராமலிங்கம்
  11. Senthil , free software movement , karnataka
  12. Karthik, Free Software Movement, Karnataka
  13. கணேஷ்குமார்
  14. தயாளன்
  15. சுரேஷ்
  16. yuvaraj.d
  17. துளசிராமன்
  18. R.Kannan
  19. கோவிந்த் நாராயன்
  20. Sivasurendar
  21. ச.நவின்
  22. Bharathi Rajeswaran

பயிற்சி அளிப்போர்[தொகு]

  1. சுந்தர்
  2. கார்த்திக்
  3. கிருஷ்ணமூர்த்தி
  4. முகுந்த்

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  • 14.30 : தமிழ்த்தாய் வாழ்த்து
  • 14.35 : வரவேற்புரை
  • 14:40 : "எதற்காக இந்தப் பட்டறை?": பிரசாத் பாபு
  • 14:45 : "தமிழ் விக்கிப்பீடியா - ஓர் அறிமுகம்": சுந்தர்
  • 15:00 : பேராசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தி - அறிமுகம்: கார்த்திக்
  • 15:05 : சிறப்புரை - பேராசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தி
  • 15:25 : பேராசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தியுடன் கேள்வி பதில்
  • 15:30 : தேனீர் இடைவேளை
  • 15:40 : "தமிழ் தட்டச்சு": முகுந்தன்
  • 16:00 : "தமிழ் விக்கிப்பீடியா செயல் விளக்கம்": சுந்தர், கார்த்திக்.
  • 16:50 : கலந்துரையாடல் - தமிழ் விக்கி குறித்த கேள்விகளுக்கான விளக்கம்
  • 17:00 : நன்றியுரை

நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்[தொகு]

சுந்தர்[தொகு]

துவக்கத்தில் நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டாலும், கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் பொறுமையாகக் காத்திருந்து கடைசி வரை இருந்து ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். பேரா.வி.கே. அவர்களின் உரை மிக மிக அருமை. ஆழமான விளைவை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். பலர் பங்களிக்க்த் துவங்குவார்கள் என்று நம்புகிறேன். முகுந்தும் குறைந்த நேர அறிவிப்பானாலும் வந்து தமிழ் தட்டச்சு முறைகளை விளக்கினார். விரிவான குறிப்புகளையும் தகவல்களையும் கார்த்தியும் இங்கு இடுவார். படங்கள் உள்ளன. ஒலிக்கோப்பும் உள்ளது. விகேவின் உரைக் கோப்பும் உள்ளது. நற்கீரனின் கோப்பும் உள்ளது. இவற்றை விரைவில் இணைப்போம். -- சுந்தர் \பேச்சு 17:05, 21 மார்ச் 2009 (UTC)

மேலும் ஏற்பாடுகளைச் செய்த பிரசாத் பாபு (மற்றும் குழுவினர்), நமது கார்த்திக்பாலா பூமிநாதன் ஆகியோருக்கும், அரங்கத்திற்கு அனுமதி பெறவும் இணைப்பு பெறவும் உதவிய பேரா.அருணன், பேரா.அபிநந்தனன் ஆகியோருக்கும் மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 17:52, 23 மார்ச் 2009 (UTC)

கார்த்திக்[தொகு]

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது இணைய இணைப்பில் சிறிது (இல்லை பெரிய) கோளாறுகள் :(. பிறகு வேறு ஒரு அரங்கத்திற்கு நிகழ்ச்சியை மாற்றினோம். முதல் அரங்கத்திலிருந்து இரண்டாம் அரங்கத்திற்கு செல்லும் பொழுது அனைவரும் (20 நண்பர்கள் இருக்கும்) ஒன்றாக சென்றோம், அப்போது "இத்துணை பேர் த விக்காக செல்கிறார்கள் என்று நினைத்த பொழுது மிகவும் பெருமையாக இருந்தது. அப்பொழுது தோன்றியது புதிய படை ஒன்று புறப்பட்டுவிட்டது என்று!


முதலில் தேநீர் இடைவேளையில் கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தோம், பின்பு ஏற்பட்ட காலதாமத்தால் தேநீர் முதல்வேளையாக கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகு முதலில் அச்சடித்து இருந்த 25 தேர்ந்தொடுத்த கட்டுரைகள் கொண்ட புத்தகத்தை அனைவருக்கும் கொடுத்தோம். நிகழ்ச்சியின் முதலில் நான் அனைவரையும் வரவேற்று விருந்தினர்களைப் பற்றி ஓரு சிறிய அறிமுகத்தைக் கொடுத்தேன். பின்னர் சுந்தர் த.வியை பற்றி சுமார் 10 நிமிடத்திற்கு அருமையான ஒரு அறிமுகத்தை கொடுத்து எல்லோரையும் எழுந்து உற்காறச்செய்தார். பின்பு பேரா.வி.கே. அவர்களின் உரை தொடங்கியது. உரை ஆரம்பிக்கும் முன்பே அனைவரையும் கண்டிப்பாக குறிப்பு எடுக்க கூறினார். தன்னுடைய அருமையான சொற்பொழிவால் அரங்கத்தில் இருந்த அனைவரையும் கட்டிப்போட்டார். சிறிய நகைச்சுகைகளுடன் த. விக்கு ஏன் பங்களிக்க வேண்டும் என்று மிக அருமையாக கூறினார். பேரா.வி.கே. அவர்களின் ஒலிக்கோப்பு உரையை விரைவில் பதிவேற்றுகிறேன். அந்த ஒலிக்கோப்பை வைத்தே இன்னும் சில ஆயிரம் பங்களிப்பாளர்களை நம்மால் உருவாக்க முடியும். அத்துனை வலிமைக் கொண்டது அந்த உரை!


பின்பு முகுந்தன் அவர்கள் இ கலப்பை மற்றும் தமிழ்விசை உபயோகிப்பதை பற்றி மிக எளிமையாக விளக்கி, வந்திருந்தவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக சுந்தர் புதிய பயனர் உருவாக்குதல், புதிய கட்டுரை உருவாகக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் தொகுத்தல் போன்றவற்றை மிகவும் எளிமையாக விளக்கினார். பின் விக்சனரி பற்றிய சிறு குறிப்பையும் மற்றும் விக்சனரிக்கு பங்களிப்பது பற்றியும் சுந்தர் விளக்கினார். பின்பு சுந்தரும் நானும் ஒரு சிலரின் சந்தேகங்களுக்கு பதில்களை சொன்னோம். நிகழ்ச்சியின் இறுதியாக கட்டற்ற மென்பொருள் அமைப்பை சேர்ந்த தோழர் ஒருவர் அவ்வமைப்பை பற்றியும் அவர்களது வேலைகளை பற்றியும் விளக்கினார். அவர் பின்பு பேரா.வி.கே. அவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். பின்பு அனைவரையும் வாழ்த்து ஒரு லட்சம் கட்டுரைகள் கொண்ட த வி உருவாக்கும் கனவுடன் பிரிந்து சென்றோம்.

இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாவிட்டாலும் எஙகளுடனே இருந்த செல்வா, மயூரநாதன், நற்கீரன், கோபி, ரவி, கனகு, உமாபதி, டெரன்சு மற்றும் அனைவருக்கும் நன்றி.--கார்த்திக் 18:21, 22 மார்ச் 2009 (UTC)

கோப்புகள்[தொகு]

  • - பட்டறையில் கலந்து கொண்டவர்களிடம் தரப்பட்ட கட்டுரைத் தொகுப்பு
  • - பேரா.வி.கேயின் சிறப்புரை வரைவு (உரை நிகழ்த்தும்போது பல எடுத்துக்காட்டுகளைச் சேர்த்துப் பேசினார்.)

இவற்றையும் பாக்க[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]