விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/கூடுதல் தகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • விக்கிப்பீடியாவிற்குப் புதியவரான நீங்கள் உங்கள் பேச்சுப்பக்கத்திற்குச் சென்று அங்கிருந்து விக்கிப்பீடியாவின் அடிப்படை நெறிமுறைகளை அறிந்துகொள்ளவும் ஏனைய பயனர்களுடன் உரையாடவும் ஐயங்களைக் கேட்டுத்தெளிவு பெறவும் முடியும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவையொட்டி இந்தப் போட்டி நடைபெறுகிறது. புதுப்பயனர் போட்டி என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி புதுப்பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் ஒரு கட்டுரைப் போட்டி ஆகும்.
  • சனவரி 1, 2019 முதல் மார்ச்சு 31, 2019 வரை போட்டிக்கான காலமாகும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் அனுபவம் மிக்க நெடுநாள் பயனர்கள் தவிர்த்த அனைவரும் பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர். போட்டி அறிவிப்பு வெளியான நாளின் (டிசம்பர் 22, 2018) நிலவரப்படி, தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பேதும் (edit) செய்யாதவர்கள் அல்லது 100 தொகுப்புகளுக்குக் குறைவாகச் செய்தவர்கள் மற்றும் புதிதாகப் பயனர் கணக்கு தொடங்குகிறவர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெறலாம். ஏற்கனவே உள்ள பயனர்கள் புதிய கணக்கின் கீழ் பங்கேற்கக் கூடாது.
  • கட்டுரைகளின் உரைப்பகுதி குறைந்தது 150 சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது 150 சொற்களை மேலதிகமாக சேர்த்து மேம்படுத்தியிருக்க வேண்டும். குறைந்தது 5000 பைட்டுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். https://wordcounttools.com/ , http://dev.neechalkaran.com/sulaku போன்ற கருவிகள் கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)
  • ஒரு கட்டுரை, போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பரிசு விவரங்களைக் கீழே காணலாம். விக்கிமீடியா அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கமையப் பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. மேற்குறித்த பெறுமதிக்கேற்ப புத்தகங்கள்/பரிசுச்சீட்டுகள் போன்ற பொருத்தமான பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு பரிசுத்தொகை குறிப்பு
1 8000 இந்திய ரூபாய்/ 20000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2 6000 இந்திய ரூபாய்/ 15000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
3 4000 இந்திய ரூபாய்/ 10000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
4 - 8 5 நபர்களுக்கு தலா 2000 இந்திய ரூபாய்/ 5000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
9 - 20 12 நபர்களுக்கு தலா 1000 இந்திய ரூபாய்/ 2500 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 10 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
மொத்தம் (மாதாந்த பரிசுகளையும் சேர்த்து) 52,000 இந்திய ரூபாய்/ 1,30,000 இலங்கை ரூபாய்

ஒட்டு மொத்தமாகக் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கியோருக்கு, 8,000 INR / 20,000 LKR, 6,000 INR / 15,000 LKR, 4,000 / 10,000 மதிப்பிலான முதல் மூன்று பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் தவிர, மேலும் 17 பேருக்குக் கூடுதல் பரிசுகள் வழங்கப்படும்.

  • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுகள் 2,000 INR / 5,000 LKR, 1,200 INR / 3,000 LKR, மற்றும் 800 INR / 2,000 LKR மதிப்புடையனவாக அமையும்.