விக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 04

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயனர் தெரிவுக் கட்டுரைகள்
இலக்கியம் - நூலகம் திட்டம் பண்பாடு - சுடோக்கு
படிமம்:Noolaham.gif
நூலகம் திட்டத்தின் சின்னம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கள் ஆரவத்துக்கு ஏற்பவே பகிர்ந்தளிக்கபட்டுள்ளன. திட்டத்தின் அங்கத்துவர்கள் யா.ரும் மடலாடற் குழு ஒன்றில் இணைந்திருப்பர். முக்கியமான முடிவெடுப்புக்கள், விவாதங்கள் அனைத்தும் அக்குழுவிலே நிகழ்த்தப்படும். பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் தகுதி உடையோர்க்கும் மடற்குழு பொறுப்புகளை வழங்கும். இணையப்பாதுகாப்பு காரணமாக வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஓரிரு உறுப்பினர்களிடமே இருக்கும்

சுடோக்குப் புதிர்- படத்தை சொடுக்கினால் விடை கிடக்கும்

சுடோக்கு என்பது சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு சதுரத்தில் ஒரு குறிப்பட பண்பு பொருந்துமாறு, எண்களை அமைத்து விளையாடும் புதிர் கணக்கு வகையான விளையாட்டு. சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில் எண்-இடம் என்றும் பொருள் (?). மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக சதுரமாக அமைக்க வேண்டும். இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு சட்டகம்.

வரலாறு - பாண்டியர் அறிவியல் - பொருளறிவியல்
கி.பி. 1200ல் பாண்டியரின் ஆட்சியின் பரப்பு
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.இங்கு பாண்டியர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

பொருளறியவியல்

பொருட்களின் அமைப்புக்கும் பொருட்களின் தன்மை அல்லது இயல்புகளுக்கும் உள்ள தொடர்பை ஆயும் இயல் பொருளறிவியல் (Material Science) ஆகும். மேலும், பொருட்களை எப்படிப்பட்ட செயல்பாட்டு முறைகளுக்கு உட்படுத்துவதி வேண்டிய செய்கை அல்லது விளைவுகளை பெறலாம் என்பதையும் இவ்வியல் ஆய்கின்றது.

பொருளறிவியல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒரு துறை. மனித அல்லது சமூகங்களின் வளர்ச்சியை அவர்களின் பொருளறிவியல் நிலைகளை கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் வகுத்து விபரிப்பர். கற்கலாம், உலோக காலம், இயந்திர காலம், குறைகடத்திகள் காலம், நூணபொருளியல் காலம் என வரலாறை பிரிக்கலாம்.

கணிதம் - புள்ளிப் பெருக்கல் புவியியல் - நிலப்படம்
</nowiki>a|•cos(θ) என்பது bயின் மீது படியும் aயின் படிநிழல்
கணிதத்தில் புள்ளிப் பெருக்கல் என்பது இரு நெறிமங்களுக்கு இடையே நிகழ்த்தும் ஒரு செயல் அல்லது வினை. இப் புள்ளிப் பெருக்கலின் விளைவாய்ப் பெறும் விடை ஒரு பரும அளவுள்ள மெய்யெண்ணே (R) தவிர ஒரு நெறிமம் அல்ல. மாறாக இதே இரு நெறிமங்களைக் கொண்டு செய்யும் குறுக்குப் பெருக்கலில் கிடைக்கும் பெருக்கு விளைவு ஒரு நெறிமம் ஆகும். இந்த புள்ளிப் பெருக்கல் என்பது யூக்ளீடிய இட வெளியில் உள்முகப் பெருக்கல் எனப்படும்.

a, b என்னும் இரு நெறிமங்களை எடுத்துக்கொள்வோம். இவ்விரு நெறிமங்களும் நெறிமவெளியில் உள்ள முழுதும் வேறுபட்டவைகளாகக் கொள்வோம். ஈவிரு நெறிமங்களையும் கீழ்காணுமாறு கொண்டால் a = [a1, a2, … , an] மற்றும் b = [b1, b2, … , bn], புள்ளிப்பெருக்கலானது:

மேலுள்ளதில் Σ என்னும் குறி தொடர் கூட்டுத் தொகைக் குறி ஆகும்.

புவியின் நிலப்படம்.

நிலப்படம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு (scale) அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது. இதனைக் குறிக்க, தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில், நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது. நிலப்படவரைவியல் (Cartography) என்பது நிலப்படங்களை வரைவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். முக்கியமான நிலப்படவகைகளிலே தரைத்தோற்ற வரைபடங்கள் அடங்குகின்றன. இவை புவியின் நில மேற்பரப்பு, கரையோர மற்றும் கடல்சார்ந்த பகுதிகள், கடல் ஆழம் மற்றும் நீர்ச் சுற்றோட்டங்களைக் காட்டும் படங்கள், விமானப் போக்குவரத்து தொடர்பான படங்கள், காலநிலை விபரங்களைக் காட்டும் படங்கள் போன்றவையாக அமைகின்றன.

சமூகம் - உலகமயமாதல் தொழில்நுட்பம் - நனோ தொழில்நுட்பம்
எமது உலகம் விற்பனைக்கு அல்ல.
தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.


உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய "globalization" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "globalization" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. உலகமயமாதல் தனாக விரியும் ஒரு செயல்பாடு, அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது.

Molecular gears from a நாசா computer simulation.

நனோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நனோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நனோ மீட்டர் தடிப்புடையது.

நனோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்துவரும் ஒரு நுட்பம் ஆகையால் நனோ தொழல்நுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நனோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது.

நபர்கள் - புளோரன்ஸ் நைட்டிங்கேல் தெரிவுப் படிமம்
புளோரன்ஸ் நைட்டிங்கேல்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு தரவியலாளாருமாவார்.

பிரிட்டிஷ் செல்வக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875), தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880). தாதியர் சேவையில் ஈடுபட விரும்பிய புளோரன்சுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லை. தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது.


கடல் அலை ஊஞ்சல்