விக்கிப்பீடியா:பயனர் குறித்த தனிக்கட்டுரைகள் உரையாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவின் பயனர்கள் குறித்த தனிக்கட்டுரைகள் உருவாக்கப்படுதல் குறித்து நடைபெற்ற உரையாடல்கள் இப்பக்கத்தில் தொகுத்தளிக்கப்படுகின்றன. இவை பயனர்கள் குறித்த தனிக்கட்டுரைகள் குறித்த கருத்துக்களை வழங்குகின்றன.

சுந்தர் பெயர் சேர்க்க வேண்டும்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்:Sundar எட்டயபுரத்துக்காரர்தான். இவரையும் எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் பட்டியலில் சேர்க்கலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி. 09:52, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

  1. ஆதரிக்கிறேன், புத்தகம் எழுதுவது பெருமை சேர்க்கும் என்றால், கலைக்களஞ்சியம் எழுதுவதும் அவ்வாறே கருதப்பட வேண்டும். ஆனால் ஆங்கில விக்கியில் இதற்கு நிகரான கோட்பாடு இருக்கிறதா என தெரியவில்லை. ஸ்ரீகாந்த் 11:15, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
  2. ஆதரிக்கிறேன்.ஏனெனில், பல வரலாறு படைத்த தமிழன் என்றுமே, தனது சமகால வரலாற்றைப் பேணுவதில்லை என்ற மனக்குறை என்னுள் உண்டு. சுந்தரைப் போன்றோரது கலைக்களஞ்சியச் செயல்கள் வரலாற்றில் பேண, அவரைப் பற்றிய இதுபோன்ற அறிமுகம் மிக அவசியம்.-- உழவன் +உரை.. 03:13, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  3. மறுக்கிறேன் என்னைப் பற்றி ஒரு கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடும் அளவுக்கு குறிப்பிடுதகுதி எனக்கு இல்லை. மேலும், விக்கிப்பீடியா பயனர்கள் தங்கள் பங்களிப்பினால் குறிப்பிடும் தகுதி பெறும்போதும் அவர்களைப் பற்றி கட்டுரையில் எழுதுவதில் நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஓர் இன்றியமையாத கட்டுப்பாடாகும். உண்மையாகவே தேனியார் விளையாட்டாகத்தான் கேட்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 09:22, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  4. ஆதரிக்கிறேன்.நான் முன்பு விளையாட்டாகக் குறிப்பிட்டாலும், ஸ்ரீகாந்த், தகவலுழவன் குறிப்பிடுவது போல் சில தகவல்கள் சேர்க்கப்படுவதும் அவசியம்தான். எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் இடம் பெற்றிருக்கும் நிலையில், எவ்விதப் பயனும் எதிர்பாராமல் விக்கியின் செயல்பாட்டில் பங்களித்து வரும் விக்கிப்பீடியர்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்/நிர்வாகி/அதிகாரி நிலையிலுள்ள முன்னோடி தமிழ் விக்கிப்பீடியர் சுந்தரின் பெயர் இடம் பெறுவது அவசியம் என்றே கருதுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:50, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  5. ஆதரிக்கிறேன்! சுந்தர் உங்களுக்கு இது நகைச்சுவையாக தென்படலாம். யோசித்துப் பாருங்கள், தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழர்களின் வளர்ந்து வரும் கலைக்களஞ்சியம்! அதற்கே நிர்வாகி நீங்கள்! முக்கியப் பங்களிப்பை வழங்கி மொழி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது சாதாரண விடயமா! பல இடங்களில் வழு நீக்கி, பிழை திருத்தி, மொழியை வளர்ப்பது சாதாரணமல்லவே! ஆகவே சுந்தரின் பெயரை பயனர் என்றில்லாமல், "பங்களிப்பாளர்" என்ற வகையில் சேர்க்கலாம் என வழிமொழிகிறேன். மாபெரும் கலைக்களஞ்சியத்தின் முக்கிய வளர்ப்பாளர் பெயர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். சுந்தர், இதில் தலையிடுவது சரியல்லவே!! :-) -- 59.161.254.21
    • இதை நான் தன்னடக்கத்துக்காகச் சொல்லவில்லை, உண்மை பொருட்டே சொல்கிறேன். விக்கியில் தனிநபர் பங்களிப்பையும் அதன் பயனையும் அளப்பது இயலாத ஒன்று. அது சரியான போக்கும் அல்ல. கூட்டாக்கத்தில் ஒரு வார்ப்புருவை ஒருவர் உருவாக்கினால், ஒரு கொள்கையை முன்மொழிந்தால், ஒரு வழு பதிந்தால் அதன்பின் வரும் அனைவரது பங்களிப்பிலும் அதன் தாக்கம் இருக்கும். தொடக்கநாட்களில் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் 'அளவில்' குறைவாக இருப்பினும் என்னைப்போல் சிலரது பங்களிப்புகளுக்கான பயன் கூடுதலாக அமைந்துள்ளது உண்மைதான். ஆனால் அதில் வாய்ப்பின் பங்குதான் முதன்மையானது. செராக்ஃசு பார்க்கு ஆய்வு நிறுவனம் விக்கி பங்களிப்பாளர்களின் நட்பு, நம்பகத்தன்மை, பங்களிப்பின் வீச்சு முதலியவற்றை ஆய்வு செய்து வருகிறது. ஒருவேளை மதிப்பிட முடிந்தாலும் கூட நமது குமுக சூழலுக்கு அதனால் நன்மை விளையுமா தெரியவில்லை. உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி, ஆனால் குறிப்பிடுதன்மையை எனக்காகவோ வேறு எந்தவொரு பயனருக்காகவுமோ தளர்த்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். விக்கிப் பங்களிப்புகளில் குறிப்பிடுதன்மை பற்றி ஐயம் திரிபற தெளிவு பிறந்தால் பார்த்துக் கொள்ளலாம். இன்னும் மயூரநாதனுக்குக்கூட நாம் கட்டுரை தொடங்கவில்லை. என்னைப் பொருத்தவரை விக்கியின் தொடங்குனர் என்ற முறையிலும் தனி ஆளாக பத்து திங்கள் தமிழ்ச்சூழலில் வரலாற்றில் குறிப்பிட வேண்டிய தமிழ் விக்கியை வளர்த்தெடுத்தவர் என்ற முறையிலும் அவருக்குக் குறிப்பிடும் தகுதி உண்டு. இருப்பினும் மற்றொரு விக்கியில் (என்னைப் பொருத்தவரை) அவரைக் காட்டிலும் பங்களிப்பினால் தகுதி குறைந்த தொடங்குனர் ஒருவரைப் பற்றிய கட்டுரை இருப்பதைக் கண்டு பலர் முகம் சுளித்தபடியால் மயூரநாதனையும் அவ்வாறு தவறாக எண்ணிவிடக்கூடாதே என்று அஞ்சுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:38, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  6. மறுக்கிறேன். சுந்தரின் மேற்கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். பயனர் பெயர்களைக் கட்டுரைகளில் சேர்ப்பது வழக்கமல்ல. இது முன்னுதாரணமாகவும் அமைந்து விடக் கூடாது. சுந்தரின் பெயர் இக்கட்டுரையில் சேர்க்கப்பட வேண்டுமானால், அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை விக்கியில் எழுதிய பின்னர் அந்த இணைப்பைச் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 20:16, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  7. மறுக்கிறேன். விக்கியின் உழைப்புக்காக விக்கியின் பொதுக் கட்டுரை ஒன்றிலேயே பயனர் ஒருவரை உள்ளிடுவது நல்லதல்ல. ஆயினும் விக்கிச் செயற்பாடுகளுக்கு புறம்பான விக்கிப்பயனர் ஒருவர் கொண்டுள்ள ஆக்கமும் உழைப்பும் கணிக்கப்படுமாயின் அது கட்டாயம் சேர்க்கப்படவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:54, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  8. மறுக்கிறேன். Kanagsஇன் கருத்துடன் உடன்படுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 04:34, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  9. மறுக்கிறேன் - சுந்தர், சிறீதரன், சஞ்சீவி சிவகுமாரின் கருத்துகளுடன் உடன்படுகிறேன்--இரவி (பேச்சு) 08:19, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  10. வணக்கம். இக் கட்டுரையில் முழுமையான பங்களிப்பை சுந்தர் செய்திருந்தால்! கண்டிப்பாக அவரின் பெயரை இடுவது நன்று. காரணம்: எட்டயபுரம் தமிழை மட்டும் வழக்கவிலை, தங்களின் ஊரின் பெருமையையும் வழத்திருக்கிறது. இதன் காரணமாக விக்கி என்னும் கலைக் களஞ்சியத்தில் தமிழ் மேன்பாட்டுகாக பாடு படுவதனாலும் இவரின் பெயர் இக் கட்டுரையில் இடுவது சிறந்ததே! இவர் விக்கியின் பங்களிப்பாளராக இருந்தாலும் தமிழின் வளர்ச்சிக்கு வேறு பல கலை பிரிவுகள் மூலமாகவும் பங்களிப்பு செய்கிறார். நன்றி.--சிவம் 08:42, 18 அக்டோபர் 2012 (UTC)

விமர்சனங்கள்[தொகு]

//எவ்விதப் பயனும் எதிர்பாராமல் விக்கியின் செயல்பாட்டில் பங்களித்து வரும் விக்கிப்பீடியர்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்//... எனும் போது யார்யார் முக்கியப் பயனர், யார்யார் முக்கியமற்ற பயனர் எனும் தரம் பிரித்தல் தோற்றுவிக்கப்படுகிறது. இது கண்டிக்கத் தக்கது.
//நிர்வாகி/அதிகாரி நிலையிலுள்ள...// முதலில் இந்த "நிர்வாகி", "அதிகாரி" எனும் பெயரையெல்லாம் தூக்கவேண்டும். நிர்வாகி என்றால் அங்கே ஒரு நிர்வாகம் இருக்கிறது என்றும், அந்த நிர்வாகத்தை நிர்வகிப்பவர் இருக்கிறார் என்றும், ஏனையோர் அந்த நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவோர் என்றும் பொருள் கொள்ளவேண்டியதாக இருக்கும். அதிலும் அதிகாரி எனும்போது, ஒரு அதிகாரியால் எவரையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டங்களை பிறப்பிக்கவும் முடியும் எனும் நிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா என்பது தன்னார்வப் பயனர்களால் கிடைக்கும் நேரத்தைப் பொருத்து பங்காற்றி வளர்க்கும் ஒரு திட்டம். தொடர்ந்து பங்களிக்கும் ஒரு பயனரின் பணியை எளிமையாகச் செய்ய, சில கூடுதல் வசதிகளைக் கொண்ட அணுக்கம் வழங்கப்படுகிறது. அதிலும் Sysop என்பவருக்கு கூடுதலான (கருவிகளை பயன்படுத்தும்) அணுக்கம் உள்ளது. இந்த இரண்டும் ஒருவர் தொடர்ந்து எத்தகைய பங்களிப்புகளை செய்துள்ளார், என்பதன் அடிப்படையில் ஏனையப் பயனரின் விருப்புக்கும், ஏனையப் பயனரின் நம்பிக்கைக்கும் அமைவாகவே பெற்றுக்கொள்ளும் ஒரு அணுக்கம் மட்டும்தான். அதனாலேயே அவர்களுக்கு விசமிகளை தடுக்கும், விசமத் தொகுப்புகளை அழிக்கும், சில பக்கங்களை காக்கும் கருவிகளை பயன்படுத்தும் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி அனைவரும் விக்கியில் சமமானப் பயனர்களே!
//பயனர் என்றில்லாமல், "பங்களிப்பாளர்" என்ற வகையில் சேர்க்கலாம்...// விக்கியில் பயனர் வேறு, பங்களிப்பாளர் வேறு அல்ல: பயனர்களே பங்களிப்பாளர்கள். இன்று விக்கியைப் பார்க்கும் ஒருவர் நாளை பங்களிப்பாளராகலாம். தமிழ் விக்கியில் பலரின் புகுபதிவு, பிழைகளை திருத்துவதற்கு நுழைந்து பயனர்களாக மாறியுள்ளோரை கவனிக்கவும்.
தவிர விக்கியில் சில கூடுதல் வசதிகள் கொண்ட, கருவிகளைப் பயன்படுத்தும் அணுக்கங்களைப் பெற்றிருப்போர், விக்கியின் உள் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். இவை விக்கியெனும் உள்கட்டமைக்குகான அணுக்கம் மட்டுமே. விக்கிக்கு வெளியே "நிர்வாகி", "அதிகாரி" போன்ற சொற்கள் பயன்படுத்துவது ஒரு தேவையற்ற சுயவிளம்பரமாகவே கருத வேண்டியுள்ளது. −முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆம், மேலே 59-இல் தொடங்கும் ஐ.பி. எண்ணில் இருந்து பதிந்த ஒருவர் நிருவாகியாக இருப்பதைச் சிறப்புத் தகுதியாகக் குறிப்பிட்டிருந்ததில் எனக்கும் ஏற்பு இல்லை. அதற்கு மாற்றாக வேறு சொல் வேண்டுமென ஒரு உரையாடல் நடைபெற்றுள்ளது. விரைவில் முடிவு செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:42, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
அன்புடன் சுந்தர், இதனை உங்களுக்கான விமர்சனமாக கருதவேண்டாம். மேலுள்ள கோரிக்கையையும், அதற்காக கூறப்படும் காரணிகளும், அதுவே நாளை விக்கியில் பங்களிக்கும் ஏனையவர்களுக்கும் ஒரு முற்சான்றாக ஆகிவிடக்கூடாது என்பதாலும் என் விமர்சனங்களை வைத்துள்ளேன். தவிர உங்களின் பங்களிப்பையும் விக்கியில் நீங்கள் கொண்டுள்ள நாட்டத்தையும் நான் அறிவேன். குறிப்பு: இ. மயூரநாதன் கட்டுரை உள்ளது. (சற்று திருத்த வேண்டும்) −முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உங்கள் கருத்தையோ இங்கு மறுப்பு தெரிவித்தவர்களின் கருத்துக்களையோ என்னை நோக்கிய விமர்சனமாகச் சற்றும் கருதவில்லை. இது பொருத்தமில்லை என்பது முதல் கவலை என்றாலும், இது தவறான முன்மாதிரியாகிவிடக்கூடாது என்பதே எனது பெரிய கவலையுங்கூட. -- சுந்தர் \பேச்சு 10:17, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
என் முடிவு எட்டைய புரத்தில் பிறந்த சுந்தரை எனக்குத் தெரியாது. ஆனால் பாரதியாரை தெரியும். அது போன்று இப்போ எட்டயபுரத்தில் பிறந்த சுந்தரை எனக்குத் தெரியும். காரணம்: அவர் பாரதியாரின் பேரனாக தமிழை அன்போடு வளர்கிறார் அது மட்டும் இல்லை தமிழ் பண்பையும். அதற்க்கு நாம் அனைவரும் மரியாதை குடுத்து அவருக்கு, அவருக்காக உரியாதுமான மரியாதையை நாம் குடுக்க வேண்டும்.

குறிப்பு: பயனர் காங் காங் தயவாக குழப்பவேண்டாம் இங்கே. நன்றி.--சிவம் 10:52, 18 அக்டோபர் 2012 (UTC)

நான் பாரதியாரின் பேரனில்லை. இங்கு அனைவருமே தமிழ்பால் கொண்ட அக்கறையால்தான் பங்களிக்கிறோம் சிவம். நான் மட்டுமல்ல. -- சுந்தர் \பேச்சு 12:33, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
//தொடர்ந்து பங்களிக்கும் ஒரு பயனரின் பணியை எளிமையாகச் செய்ய, சில கூடுதல் வசதிகளைக் கொண்ட அணுக்கம் வழங்கப்படுகிறது.// இக்கருத்து உண்மைதான். இருப்பினும், தங்களின் கூற்றுப்படியே //தொடர்ந்து பங்களிக்கும் ஒரு பயனரின் // பணிகளை எளிமப்படுத்துவதற்காகச் சில கூடுதல் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தக் கூடுதல் அணுக்கங்களைப் பெற்றவர் சுந்தர். கடந்த 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய மாநாட்டிற்காக அறிவித்த தமிழ் விக்கிப்பீடியாவிற்கான கட்டுரைப் போட்டியில் விக்கிப்பீடியாவின் சார்பில் அரசு அமைத்த குழுவில் இடம் பெற்றிருந்தவர். இவரை முன்னிலைப்படுத்தியோ அல்லது முதன்மைப்படுத்தியோ இங்கு செய்திகள் சேர்க்கப்படவில்லை. எட்டயபுரத்தில் பிறந்த சில முக்கிய நபர்களுடன் சுந்தர் பெயரும் சேர்க்கப்படுகிறது, அவ்வளவுதான். நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்களின் பட்டியல் எனும் தலைப்பில் தனிக் கட்டுரை இருக்கும் பொழுது, எட்டயபுரம் எனும் கட்டுரையில் சுந்தர் பெயர் சேர்க்கப்படுவதில் என்ன தவறு வந்து விடப் போகிறது? இது போன்று பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில் தங்கள் பெயரும் இதில் இடம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் மேலும் பல பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கூடுதல் பங்களிப்புகளை அளிக்க முன் வரலாம்.பெயரில்லாமல் செய்யப்படும் சில பங்களிப்புகள் குறையலாம். குறிப்பிட்ட ஊர்களுக்கான கட்டுரையில் அந்த ஊர்களைச் சேர்ந்த //தொடர்ந்து பங்களிக்கும் ஒரு பயனரின் பணியை//ப் பாராட்டும் விதமாகக் கூட, அதிகப் பங்களிப்பு செய்து வரும் பயனர்கள் இருப்பின் “தமிழ் விக்கிப்பீடியர்கள்” எனும் தனித் தலைப்பின் கீழ் அவர்களது பெயர்களைச் சேர்க்கலாம். இது பங்களிப்பாளர்களுக்குக் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சில பயனர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இவர்களைப் பற்றிய செய்தி இரு வார காலங்களுக்கு முதற்பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தத் தொகுப்பு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் எனும் தனிப்பக்கத்தில் இன்னும் கூட உள்ளது. சில கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியாகவே கொள்ள வேண்டும். இதற்காகத் தமிழ் விக்கிப்பீடியாவில் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் கூட மாற்றிக் கொள்ளலாம் என்பது என் கருத்து. முடிவாக, இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. இக்கட்டுரையில் தன் பெயர் இடம் பெறத் தேவையில்லை என்று சுந்தர் இதை மறுக்கும் நிலையில் அவருடைய விருப்பத்தை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:56, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தேனி. மு. சுப்பிரமணி, பயனர்களை ஊக்குவிக்க ஏற்கனவே நீங்கள் காட்டியுள்ளதுபோல் அவர்களைப் பற்றிய அறிமுகத்தைத் தரலாம் (எவ்வித வரிசைப்படுத்தலும் படிநிலையும் இல்லாமல்). அது கட்டுரைப் பெயர்வெளியில் இல்லை, விக்கிப்பீடியா பெயர்வெளியில் உள்ளது எட்பதைக் கவனிக்கவும். ஒருவருக்கொருவர் நன்றி, பாராட்டுக்கள், பதக்கங்கள் போன்றவற்றைத் தரலாம். வேண்டுமென்றால் விக்கிப்பீடியா பெயர்வெளியில் ஒரு உங்களுக்குத் தெரியுமா தொகுப்பை இடலாம். எ.கா. (தகவல்கள் சரியா தெரியாது)
  • தொடர்ந்து முதல் பக்கத்தில் செய்திகளையும் அந்தத் தேதியில் நடைபெற்ற நிகழ்வுகளையும் தொகுத்து வந்த சிறீதரன் விக்கிசெய்திகளில் ஆர்வம் கொண்டு தொகுக்கத் தொடங்கினார் எனத் தெரியுமா?
  • ஆலமரத்தடிக்கு அப்பெயரைப் பரிந்துரைத்தது சுந்தர் எனத் தெரியுமா?
  • கட்டடக்கலை பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை மயூரநாதன் எழுதியுள்ளார் எனத் தெரியுமா?
  • மிகவிரைவாக பல நூறு கணிதக் கட்டுரைகளை எழுதிய பேரா.வி.கே. 84 ஆகவையைத் தாண்டியவர் எனத் தெரியுமா?
  • கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பான காட்டமான உரையாடலைப் பயன்படுத்தி ஸ்ரீ கட்டுரையை உருவாக்கியவர் இரவி எனத் தெரியுமா?
  • பல நூறு கலைச்சொற்களுக்கு ஆழமான பொருளுடன் தக்க தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைத்தவர் செல்வா எனத் தெரியுமா?
  • விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியிக்காகப் பயனர்களின் பெரும் உழைப்பின் பயனாக ஒரேயொரு பயனராக சோடாபாட்டில் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து தொடர்ந்து பங்களித்தார் என்றாலும், அவர் குறைந்த நாட்களில் முப்பதாயிரத்துக்கும் மேலான தொகுப்புக்களைச் செய்தார் எனத் தெரியுமா?
  • தமிழ் விக்கிப்பீடியாவின் காட்டுயிர் சாய்வுக்குத் தொடக்க நாட்களில் சிவக்குமாரும் பின்னாளில் கார்த்திக்பாலாவும் வித்திட்டார்கள் எனத் தெரியுமா? என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் யாரும் மனங்கோணாத வகையில் நையாண்டி கூடச் செய்யலாம்.
விக்கியில் நமது பங்களிப்புக்கள் ஒவ்வொன்றும் ஓரெழுத்தை மாற்றினாலும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்குத்தான் மென்பொருளில் தொகுத்தல் வரலாற்று வசதி உள்ளது. அதே வேளை, பங்களிப்புக்களை அளப்பது, ஒப்பிடுவது, வரிசைப்படுத்துவது போன்றவை தேவையில்லை. இதைப் பற்றிய எனது கருத்து: http://www.quora.com/Wikipedia/Could-Wikipedia-benefit-from-gamifying-editing/answer/Sundar-Lakshmanan -- சுந்தர் \பேச்சு 12:33, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

//விக்கியில் நமது பங்களிப்புக்கள் ஒவ்வொன்றும் ஓரெழுத்தை மாற்றினாலும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்குத்தான் மென்பொருளில் தொகுத்தல் வரலாற்று வசதி உள்ளது.//

இந்தக் கருத்தை நான் கோயம்புத்தூரில் தமிழ்நாடு அரசு நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப் பெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் நடைபெற்ற “விக்கிப்பீடியா மற்றும் வலைப்பூக்கள் குறித்த கலந்துரையாடல்” நிகழ்வில் அமர்வுத் தலைவர் பத்ரி சேசாத்ரி கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலில் ”விக்கிப்பீடியாவில் செய்யப்படும் ஒவ்வொரு பதிவேற்றங்களும், மாற்றங்களும் குறிப்பிட்ட கட்டுரை/திட்டங்கள் வரலாற்றுப் பக்கங்களில் பயனர் பெயர்களுடன் பதிவாகி விடும். மேலும் பயனர்களுக்கான பங்களிப்புகள் பக்கத்திலும் இது பதிவாகி விடும்” எனவே விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிக்க முன் வரவேண்டும் என்று சொன்னேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த தாங்களும், சுப்பிரமணி சொல்வது போல் அனைத்துத் தொகுப்புகளும் நாள், நேரம் உட்பட அனைத்தும் பதிவாகிவிடும் என்று சொன்னதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

//அதே வேளை, பங்களிப்புக்களை அளப்பது, ஒப்பிடுவது, வரிசைப்படுத்துவது போன்றவை தேவையில்லை.//

உண்மைதான். இது பயனர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கலாம் என்கிற கருத்தும் ஏற்கக் கூடியதுதான். இருப்பினும், தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (அட்டவணை) இதை எப்படி எடுத்துக் கொள்வது?
சுந்தர், இந்த விவாதத்துக்குத் தங்களுடைய முடிவே சரியாக இருக்குமென்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தங்களுக்கு விருப்பமில்லை என்பதால் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், தாங்கள் மேலே தெரிவித்துள்ளதைப் போன்று பயனர்கள் பலரின் தமிழ் விக்கிப் பணிகள் குறித்த தகவல்கள் அறியாமல் போவதை விட தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்துவதும் அவசியமானதுதான். தாங்கள் குறிப்பிட்ட சில பயனர்கள் குறித்த தகவல்களுடன், விடுபட்டுப் போன மேலும் பல விக்கிப் பயனர்கள், விக்கியில் செய்த சிறப்புகளை/சுவையான தகவல்களை கட்டுரைப் பெயர்வெளியில் இல்லாவிட்டாலும், விக்கிப்பீடியாவின் பெயர்வெளியில் அவசியம் சேர்க்க வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:31, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தேனியார், நீங்கள் முதலில் வேடிக்கையாகவே இந்தக் கருத்தை முன்வைத்ததாகத் தெரிவித்திருந்தீர்கள். அதை ஏன் இவ்வாறு பொதுவான ஒரு கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் தந்தீர்கள் என்பது எனக்குப் புதினமாகவுள்ளது?--Kanags \உரையாடுக 19:59, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
கனக்ஸ், எனக்கு சுந்தர் பெயரைக் கட்டுரையில் சேர்க்க முடியாது என்கிற நிலையில், அவர் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் நிலையில், எட்டயபுரம் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து வைப்போம் என்று 2010 ஆம் ஆண்டு நவம்பர் 25ல் ஒரு தகவலைச் சேர்த்தேன். அதைப் பார்வையிட்ட ஸ்ரீகாந்த் இதை “ஆதரிக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, தகவலுழவன் “ஆதரிக்கிறேன்” என்று ஒரு கருத்தை வெளியிட, அதை சுந்தர் “மறுக்கிறேன்” என்றும் கருத்துகள் தெரிவிக்க விவாதம் நீண்டு வந்து விட்டது. சுந்தர் தெரிவித்தது போல் விக்கிப்பீடியா பயனர்கள் (பங்களிப்பாளர்கள்) விக்கியில் செய்த சிறப்புகளை/சுவையான தகவல்களை கட்டுரைப் பெயர்வெளியில் இல்லாவிட்டாலும், விக்கிப்பீடியாவின் பெயர்வெளியில் சேர்க்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:07, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாப் பெயர்வெளியில் அவ்வாறு இணைப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதிலும்கூட இயன்றவரை தொகுப்பு எண்ணிக்கை போன்றவற்றைத் தவிர்த்து சுவையான செய்திகள், குறிப்பிட்ட பங்களிப்புகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம். பயனரைக் காட்டிலும் கட்டுரைக்கு முகனையிருந்தால் நல்லது. இப்போது உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் வரும் கட்டுரைகளைப் பற்றிப் பயனர் பேச்சுப் பக்கத்தில் தருவது போல இருக்கலாம். செய்ய விரும்பினால் ஆலமரத்தடியில் உரையாடிவிட்டுச் செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (அட்டவணை) பற்றிக் கேட்டிருந்தீர்கள். ஆம் அதிலுள்ள பயனர் பங்களிப்புக்களைப் பற்றி மிகுந்த ஆர்வம் காட்டுவது நல்லதல்ல, பயன் நோக்கியே பங்களிக்கிறோம். தனிப்பட்ட அளவில் ஒரு ஊக்கத்துக்காகப் பார்ப்பது வேறு, போட்டி போல எண்ணுவதும் புள்ளிகளை நோக்கித் தொகுப்பதும் வேறு. மேலும் en:Wikipedia:Editcountitis. -- சுந்தர் \பேச்சு 06:35, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
மேலே நான் உங்களுக்குத் தெரியுமா போன்று செய்திகளைத் தந்தது ஓர் எடுத்துக்காட்டுக்காகவே. இன்னும் பலரைப் பற்றி பற்பல செய்திகளைத் தரமுடியும். கோபியைப் பற்றி, தெரன்சைப் பற்றி, நற்கீரனைப் பற்றி, கணேசைப் பற்றி, சந்தோசைப் பற்றி, சிந்துவைப் பற்றி, உங்களைப் பற்றி, பரிதிமதியைப் பற்றி, கலையைப் பற்றி, நம் மருத்துவப் பங்களிப்பாளர்களைப் பற்றி என அடுக்கிக் கொண்டே போகலாம். அனைவரும் எழுதினால் தொடர் பங்களிப்பாளர்கள் அனைவரையும் பற்றிய செய்திகளைக் குவிக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 06:41, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

//சுந்தர், இந்த விவாதத்துக்குத் தங்களுடைய முடிவே சரியாக இருக்குமென்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தங்களுக்கு விருப்பமில்லை என்பதால் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.//

சுப்பிரமணி, இதில் சுந்தரின் கருத்து ஒரு பொருட்டே அன்று. அவர் ஆதரவு தெரிவித்தாலும் சரி, கருத்தே தெரிவிக்காவிட்டாலும் சரி. கட்டுரைகள் எந்த ஒரு கலைக்களஞ்சியத்திலும் இடம்பெறத்தக்க நடுநிலைமையுடன் விருப்பு வெறுப்பு இன்று எழுதப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், எட்டயுபுரம் குறித்த உயர் தர நூல் ஒன்றிலோ மற்றொரு உயர் தர கலைக்களஞ்சியம் ஒன்றில் உள்ள எட்டயபுரம் குறித்த கட்டுரையிலோ சுந்தரின் விக்கிப்பீடியா பணி, மற்ற பணிகள் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் அதனை சான்று காட்டிக் கட்டுரையில் சேர்க்கலாம். அனைத்துத் துறை சார்ந்தோருக்கும் இது பொருந்தும். விக்கிப்பீடியா திட்டம் தொடர்பான மேலாண்மை, ஆவணப்படுத்தல், பரப்புரைகளுக்கு கட்டுரைகளைப் பயன்படுத்தக்கூடாது. தேவையான முயற்சிகளை விக்கிப்பீடியா பெயர்வெளியில் மேற்கொள்ளலாம். தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் வேண்டுமானால் முறையான ஆவணப்படுத்தலைச் செய்யலாம். அதனைக் கூட தனிப்பட்ட பங்களிப்பாளர் நோக்கில் இல்லாமல் ஒட்டு மொத்தத் திட்டத்தின் நோக்கில் செய்ய வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா போன்ற ஒரு திட்டத்துக்கு பத்தாண்டு என்பது குறுகிய காலமே. இன்னும் பல தலைமுறைப் பங்களிப்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அப்போது திட்டம், அதற்கான பலரின் பங்களிப்பு பற்றிய ஒட்டு மொத்தப் பார்வை மாறும். சுந்தரை முன்வைத்து நடக்கும் இந்த உரையாடல் நடுநிலை தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய ஒரு கட்டுப்பாடு குறித்த எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில் சுந்தர் உள்ளிட்ட பல தமிழ் விக்கிப்பீடியர்கள் பல புலங்களில் அரிய பணி ஆற்றி வருகிறார்கள். காலப்போக்கில் அவர்களின் குறிப்பிடத்தக்கமை அறியப்பெற்று தனிக்கட்டுரைகள் பெறும் அளவுக்கு சிறப்பு எய்த வேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை :)--இரவி (பேச்சு) 19:33, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஒரு கருத்தைக் கூறி முடிக்க விரும்புகிறேன். இங்கே என் பெயரைப் பற்றிய உரையாடல் என்பதால் நான் மறுக்கவில்லை. விக்கிக் கொள்கையின் அடிப்படையிலும், நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும், இரவி, சிறீதரன், சஞ்சீவி, மதன் போன்றோர் மறுத்த அதே அடிப்படையிலும் தான் நான் மறுத்தேன். இதே போல் குறிப்பிடுதகுதி பெறும் முன்னர் விக்கிப் பணிகளுக்காக மட்டும் வேறு பயனரொருவரின் பெயரைக் கட்டுரையில் இணைப்பதானாலும் இதுவே என் நிலைப்பாடு. இருந்தாலும் அத்தகு சூழலில் இவ்வளவு கடுமையாக நான் மறுத்திருப்பேனா தெரியவில்லை. இதைத் தவிர வாழும் நபர்களைப் பற்றிய கட்டுரைகளைப் பொருத்தவரை தொடர்புடைய நபருக்கு சில உரிமைகள் உண்டு என நினைக்கிறேன் (உறுதியாகத் தெரியவில்லை), ஆனால் இங்கு நான் கொள்கை அடிப்படையிலேயே மறுத்துள்ளேன். சோடாபாட்டில் தன்னுடைய விக்கிசாராப் பணிக்காகக் கட்டுரை அமைவதை மறுத்திருக்கிறார் என நினைக்கிறேன். (அவரது உண்மைப் பெயரை இங்கு குறிப்பிட வேண்டாம், அவர் புனைப்பெயரிலேயே அறியப்பட விரும்புகிறார்.) -- சுந்தர் \பேச்சு 03:51, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி சுவையாக உள்ளது. அதில் பல தகவல்களை நான் ஏற்கனவே அறிவேனே!! :) மேலும், ஒருவரின் பங்களிப்பைப் போற்ற வேண்டுமென்றும் வரிசைப்படுத்தலோ, பட்டியலிடுவதோ நன்றன்று, விக்கி வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்ற உங்கள் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். குறிப்பாளர்களுக்கு, இதை குறிப்பெடுத்து வையுங்கள். மேலும், சோடாபாட்டிலின் பெயரை நான் அறிவேனே!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:25, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கனகரத்தினம் சிறீதரன்[தொகு]

விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்க பயனர்கள் குறித்த கட்டுரை விக்கிப்பீடியாவில் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால்,பொதுவாக, விக்கிப்பீடியாவின் பயனர்கள் குறித்த கட்டுரைகளைத் தொடங்குவதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இக்கட்டுரையில் கனக்ஸ் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், முழுமையான தகவல்கள் இல்லை. இக்கட்டுரையை நீக்கம் செய்திட எனக்கு விருப்பமில்லை. விரிவாக்கம் செய்யலாம். இருப்பினும் இதை கனக்ஸ்தான் முடிவு செய்திட வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:46, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை விரிவாக்கம் செய்யலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியர்களுக்கென பயனர் பக்கங்கள் உள. தவியில் ஐம்பது முன்னோடி பங்களிப்பாளர்கள் இருந்தால் அவர்கள் எல்லோருக்கும் இதுபோன்று கட்டுரை எழுதப்படவேண்டுமா? இக்கட்டுரை தொடக்கம் தவறான முன்னுதாரணம் என்று தோன்றுகிறது. பயனர்களின் பங்களிப்புகளை பயனர் பக்கங்களில் பதக்கங்களை இட்டு கவுரவிக்கும்/ஊக்குவிக்கும் வழக்கம் ஏற்கெனவே உள்ளது. விக்கிக்கு வெளியே அறியப்பட்ட பயனராயிருந்தால் தனியாக கட்டுரைகள் எழுதலாம் என்பது எனது கருத்து. தனிநபர் கட்டுரைகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து துறை சார் கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். -- மாகிர் (பேச்சு) 17:34, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
தேனியார், இதனை நீங்கள் உடனடியாக நீக்கியிருக்க வேண்டும். மாகிரின் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:08, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]