விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நிரோஜன் சக்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரோஜன் சக்திவேல், கனடாவில் வாழும் கல்லூரி மாணவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் மிக முனைப்பான இளைய பங்களிப்பாளர்களில் ஒருவர். தமிழீழம், திரைப்படத்துறை, தமிழர் வரலாறு, தமிழ் நாடகம், இசை முதலியன இவரது ஆர்வத் துறைகள். 2000க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை எழுதியது நிரோஜனின் முக்கியப் பங்களிப்பு.