விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரவணன் பெரியசாமி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சார்ந்தவர். உயிர்நுட்பவியலின் முதுகலை அறிவியலும், முதுகலை மேலாண்மையும் பயின்றவர். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் மனிதவள மேலாண்மைத்துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கியில் உரைத் திருத்தம், கட்டுரையாக்கம், போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.