விக்கிப்பீடியா:நீக்கப்பட்ட பக்க உரையாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நீக்கப்பட்ட கட்டுரைப் பக்கங்களின் உரையாடல்களை எதிர்கால தேவை கருதியும் மீண்டு மீண்டும் ஒரே விடயம் உரையாடப்படாமல் இருக்கவும் இங்கே சேமித்து வைக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா[தொகு]



கட்டுரைப் பகுதியில் இருந்து இங்கு மாற்றம்: பதிப்புரிமை:-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133596&p=970733 பகுதி பகுதியாக யாழில் வெளியிடப்பட்ட இக்கட்டுரை ஆசிரியரின் முழு அனுமதியோடு விக்கிப்பீடியாவில் வெளியிடப்படுகிறது. ஆசிரியரின் அனுமதி யாழ் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=133596&p=970733) பக்கத்தில் பார்க்கலாம்.

இது என் கட்டுரைதான். விக்கிப்பீடியாவிற்கு நான் Creative Commons Attribution/Share-Alike License 3.0 மற்றும் GFDL பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு என் பங்களிப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்கிறேன்.

இந்த ஆக்கத்தினை மறுபயன்பாடு செய்பவர்கள், குறைந்த பட்சம் இந்தப் பக்கத்துக்கு ஒரு மீத்தொடுப்பு தருவதன் மூலம் பங்களிப்பு உங்களுடையது என்று அறிவித்துவிட்டு, இதனைப் பயன்படுத்தவும் ஒப்புதல் அளிக்கிறேன். விக்கிப்பீடியா தமிழின் விதிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.--−முன்நிற்கும் கருத்து லிவி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இக்கட்டுரை முழுவதுமாக சொந்த ஆய்வுக் கருத்துகளைக் கொண்டுள்ளதால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். இக்கட்டுரையை நீக்குவதானால், பயனர் பக்கவெளிக்கு நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 12:32, 26 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
en:Wikipedia:Requesting copyright permission, en:Wikipedia:Example requests for permission --Anton·٠•●♥Talk♥●•٠· 02:56, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரை தகுந்த முறையில் அனுமதி தரப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். கட்டுரை நீக்கப்படுவதற்கு பதிப்புரிமை காரணமாக இருக்கக் கூடாது.--Kanags \உரையாடுக 03:11, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
en:Wikipedia:Donating copyrighted materials#Granting us permission to copy material already online--Anton·٠•●♥Talk♥●•٠· 03:42, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
//இந்த முழுக்கட்டுரையை விக்கிபீடியா-தமிழில் "தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா" என்னும் தலைப்பில் நீங்கள் பார்க்கலாம். பதிப்புரிமை ஆசிரியருக்கு 'லிவி' என்பவருக்கு வழங்கப்படுகிறது// என்று மட்டுமே உள்ளது. கட்டற்ற உரிமத்தில் (cc-by-sa போல) உள்ளது என குறிப்பிடப்படவில்லை. மேலும் சொந்த ஆய்வுக் கட்டுரைகளை பயனர் வெளிக்கு நகர்த்தவும் தேவையில்லை என கருதுகிறேன். பயனர் வெளி விக்கி தொடர்பான விவரங்கள் மற்றும் பயனர் பற்றிய சிறு குறிப்புகளை மட்டுமே கொண்டிருக்கலாம். காண்க விக்கிப்பீடியா:பயனர் பக்கம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:13, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சண்முகா கணினி பயிற்சி நிலையம்[தொகு]

நீக்கல் விபரம்:16:48, 3 செப்டெம்பர் 2007 கோபி



இக்கட்டுரை ஒரு தனிபட்ட நபரின் நிருவனம் போல் தெரிகிறது.

From the links provided in this article, I believe that this article is an advertisement, and the author has used this article to advertise his business venture.

இதை நீக்க நான் பரிந்தரை செய்கிறேன். Vasanthakumarep 06:10, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

ஆம் நானும் வசந்தகுமாரின் கருத்தை ஆதரிக்கிறேன்.--Sivakumar \பேச்சு 06:16, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

இக்கட்டுரையை நீக்கலாம். வவுனியா கட்டுரையில் இருந்த இணைப்பை கோபி நீக்கியிருந்தார். அதனை மீண்டும் வெளி இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன். அங்கு இணைப்பது பரவாயில்லை என்றே நான் நினைக்கிறேன். யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.--Kanags 08:11, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

ஆம் சிறீதர், வவுனியாக் கட்டுரையில் இந்நிறுவனம் அல்லது அமைப்புப் பற்றி ஒருவரியாவது இருப்பதில் யாதொரு பிழையும் இல்லை. ஆயினும் இக்கட்டுரையில் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களைக் குறைத்து ஆரம்பித்த ஆண்டு போன்ற விபரங்களைத் தரலாம். --Umapathy (உமாபதி) 13:14, 26 ஆகஸ்ட் 2007 (UTC)


இது ஒரு தமிழ் கணினி பயிற்சி நிலையம். தமிழ்ச் சூழலில் பெரிய நிறுவனங்களைப் பார்க்க இப்படியான சிறிய நிறுவனங்கள் தோன்றவே சந்தர்ப்பங்கள் அதிகம். எனவே, தகவல் நோக்கில் இந்தக் கட்டுரையை பேண வேண்டுகின்றேன். இது விளம்பர ரீதியில் அமையாமல், தகவல் ரீதியில் அமைந்தால் சரி. --Natkeeran 17:25, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

Strong delete. இத்தகைய நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. இக்கட்டுரையை விக்கிபீடியாவில் வைத்திருத்தல் எவ்விதத்திலும் பொருத்தமல்ல. All they teach is Ms Word, Ms Paint etc. --கோபி 04:05, 27 ஆகஸ்ட் 2007 (UTC)

Please check this. [1] This artcle seems created by the owner himself. There are hundreds of such tuition centres all over Sri Lanka. இப்பகுதிகளில் வாழ்ந்து நேரடியாக இது பற்றி அறிந்தவன் என்ற வகையில் இக்கட்டுரையை நீக்கக் கோருகிறேன். நன்றி. --கோபி 04:10, 27 ஆகஸ்ட் 2007 (UTC)

தமிழ்ச் சூழலில் பல இருந்தால், முழுக் கட்டுரைக்கு ஏற்ற தகவல்கள் இல்லாவிட்டால், ஒரு பட்டியலை உருவாக்கலாம். அதுவரைக்கும் இந்தக் கட்டுரையை பயனுடையதே. என்ன அடிப்படையில் இந்த கட்டுரையை நீக்க சொல்கிறீகள். இது முற்றிலும் ஒரு சிறு வணிக நிறுவனம் போல தெரியவில்லை. கல்வி நிறுவனங்களை சராசரி வணிக நிறுவனங்களோடு ஒப்பிடுவது அவ்வளவு பொருத்தமில்லை. --Natkeeran 21:54, 27 ஆகஸ்ட் 2007 (UTC)

நற்கீரன், இலங்கை முழுதும் மூலைக்கு மூலை சந்திக்குச் சந்தி இத்தகைய நிறுவனங்கள் உள்ளன. அவை யாவும் வறிய மாணவருக்கு பயிற்சியளிப்பதாகக் கூறிக் கொள்கின்றன. அவை பற்றிக் கட்டுரைகள் எழுதுவதாலோ பட்டியல் இடுவதாலோ யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இந்தக் கட்டுரை குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்டதாகும். உருவாக்கிய போது அவர் "எமது நிறுவனத்தின் வலைப்பதிவு செல்ல இங்கே சொடுக்கவும்" என்றே எழுதியிருந்தார். கனக்ஸ் அதனை மாற்றியமைத்த போது கொடுத்த வெளியிணைப்பு மாறுபடுகிறது. அது ஏனென்று தெரியவில்லை. பழைய இணைப்பில் தனிநபரொருவரது தனிப்பட்ட அனுபவங்கள் பதிவாகின்றன. இந்தக் கட்டுரை அநாமதேயமாக உருவாக்கப்பட்டது. அவர் தொகுத்துக் கொண்டிருந்தபோது நான் இட்ட நீக்கு வார்ப்புருவுக்கு எந்தப் பதிலும் இல்லை. "இது முற்றிலும் ஒரு சிறு வணிக நிறுவனம் போல தெரியவில்லை" என்று நீங்கள் எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ தெரியவில்லை.

தொழினுட்ப ரீதியில் சமூகம் உள்வாங்கப்படுவதென்பது மிக அடிப்படை நிலையிலிருந்து செயற்படும் குழுக்கள், நிறுவனங்களின் பங்களிப்பால் மட்டுமே வினைத்திறனுடன் சாத்தியமாகும் என்ற புரிதல் எனக்கும் உண்டு. இது அத்தகையதொரு நிறுவனமாக இருக்கலாம் என்று எண்ணியே நீங்கள் நீக்க வேண்டாம் என்று கூறுவதாக நான் எண்ணுகிறேன். ஆனால் அதற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆதாரமில்லாமல் கட்டுரைகள் எழுதுவது பொருத்தமல்ல.

நான் தொடர்ந்தும் கட்டுரைகளை நீக்கி வருவது விக்கிபீடியாவின் தரம் பேண மட்டுமே. கோபி 03:53, 29 ஆகஸ்ட் 2007 (UTC)

கோபி, தமிழ்ச் சூழலில், தமிழில் தொழில்நுட்ப தகவல்கள் தொடர்பான ஆக்கங்களுக்கு நான் முதலில் ஒரு நல்நம்பிக்கை அணுகுமுறையே நன்று என்று நினைக்கின்றேன். அவர்கள் அடித்தள, கீழிருந்து எழும் ஒரு சேவை நிறுவனம் இல்லை என்று நீங்கள் சொல்லவும் எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் வணிக நோக்கம் கொண்டிருந்தால்ம், அவர்களைப் பற்றிய தகவல்களை விடய நோக்கில், விளம்பரத் தன்மை அற்று சேர்த்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. எனவே தயந்து நீக்க வேண்டாம். வேறு நிறுவனங்கள் வந்து தகவல்கள் சேர்க்கும் பொழுது, அவற்றை ஒவொன்றாக கையாளலாம். இப்போதைக்கு ஒரு பொது நிலைப்பாடு தேவையில்லை. --Natkeeran 14:40, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், நான் தமிழ் விக்கிபீடியாவை ஒரு நம்பகமான கலைக்களஞ்சியமாகக் கருதுவதாலே நீக்க வேண்டும் என்கிறேன். சேவை நிறுவனம் என்பதற்கான ஆதாரம் இல்லையென்றால் இங்கு கட்டுரை எழுத முடியாது என்பதே என் வாதம். ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் தன் நிறுவனம் பற்றி எழுதிய கட்டுரைக்கு இவ்வளவு விவாதம் நடப்பது வருத்தமளிக்கிறது. அவர் தன் நிறுவனம் பற்றி இணையத்தில் வலைப்பதிவுகள் எழுதட்டும். அது பற்றி எழுத விக்கிபீடியாவா கிடைத்தது? யாரும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் அதனை நீக்க வேண்டுமானால் ஆதாரம் தர வேண்டும் என்று கேட்பது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பையே கேள்விக்குள்ளாக்கிறது. --கோபி 14:48, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தன்னைப் பற்றிய கட்டுரைகள், தான் சார்ந்துள்ள நிறுவனம் சார்ந்துள்ள கட்டுரைகளைத் தானே தொகுப்பது விக்கி நன்னடத்தையாகப் பார்க்கப்படுவதில்லை. கட்டுரையை முதலில் எழுதுபவர் தான் அதைத் தற்காத்துக் கொள்ள போதுமான ஆதாரங்களை வைக்க கடமைப்பட்டவர். விக்கி துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர் ஒவ்வொன்றுக்குமான ஆதாரங்களைத் தேடி பின் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இந்நிறுவனத்தின் வலைப்பதிவு கூட இப்போது செயல்படவில்லை. கட்டுரையில் போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், இந்நிறுவனத்தைச் சார்ந்தவரே இதை எழுதி இருக்கிறார் என்ற ஒரு காரணமே இதை விளம்பர நோக்காகக் கருதி அழிக்கப் போதுமானது. தமிழர் சார் தகவல்களை சேகரிக்கிறோம் என்பது உண்மை தான் என்றாலும், ஏதேனும் ஒரு இடத்தில் கலைக்களஞ்சியத் தகுதி வரையறுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், classifieds, directory போல் நாம் ஆகிவிட வாய்ப்புண்டு. இது போல் ஊருக்கு நூறு கணினி பயிற்சி நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் காணலாம். கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Ravishankar 15:01, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

வணிக நிறுவனங்களும் தகவல்கள் சேர்க்கலாம். பெரிய நிறுவனங்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவிலேயே உண்டு. தமது நிறுவனத்தைப் பற்றி தகவல்களை அவர்களே சேர்ப்பதில் தவறு இல்லை. அவை எந்த முறையில் அமையவேண்டும் (தகவல் நோக்கில், விளம்பரத்தன்மை அற்று, விக்கி நடைக்கு ஏற்ப) எனபதையே த.வி நிர்னாமனிக்க வேண்டும். யாரும் என்ன வேண்டுமானாலு எழுதாலாம் என்பதைப் பற்றிய விவாதம் இல்லை. இது நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு கட்டுரை பற்றிய விவாதம். பொது நிலைப்பாடுகளுக்கு அல்லது பரிந்துரைகளுக்கு இவ்விவாதம் இட்டுசெல்லாம் என்ற படியால்தான் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். ஒருவரையும் நாம் அசட்டை செய்ய கூடாது. அது த.வி கூட்டு செயற்பாட்டுக்கு நல்லதல்ல. அதேவேளை யாரும் என்ன வேண்டுமானலும் எழுதலாம் என்றும் இல்லை. ஒவ்வொன்றையும் அவ்வப்பொழுது கவனமாக மதிப்பிடுவதே நன்று. --Natkeeran 15:04, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
வலைப்பதிவு இப்பொழுது செயல்படவில்லை. எனவே இந்தக் கட்டுரையை நீக்கலாம். எனினும் இந்த உரைப்பகுதியின் சாரத்தை எங்கேயாவது இட்டுவைத்தால் நன்று. நன்றி. --Natkeeran 15:08, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

http://shanmugha.blogspot.com/ நற்கீரன், வலைப்பதிவு இயங்குகிறது. நான் நீக்கக் கோருவது அதற்காக அல்ல. --கோபி 15:15, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கோபி மற்றும் நற்கீரன், நான் இன்று மதியம் தான் வவுனியாவில் இருந்து வந்தேன், தனிப்பட்ட காரணங்களுக்காக வவுனியா சென்று திரும்பியிருந்தேன். (அங்கு கோயில்களில் ஒளிப்படங்களை எடுத்திருந்தேன் பின்னர் http://www.panoramio.com/user/69195 இல் பதிவேற்றி விடுகின்றேன்.) அங்கு தற்போது இருக்கும் சூழ்நிலையில் (இரவு முழுவதும் ஓர் எறிகணைச் சத்தம் கேட்டபடி இருந்தது) இப்படி ஒரு நிலையம் இருப்பது பாரட்டுவதற்குரியது. தவிர தமிழில் ஓர் கணினி நிறுவனம் வலைப்பதிவை மேற்கொள்வதும் ஓர் முற்போக்கான விடயமே. கொழும்பில் உள்ள எத்தனை கணினி நிறுவனங்கள் இதைச் செய்கின்றன? தமிழ் நாட்டில் உள்ள எத்தனை கணினி நிறுவனங்கள் இதைச் செய்கின்றன? கட்டுரை பெரிதாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை கட்டுரையில் தேவையற்ற வரிகளை நீக்கவிரும்பினால் தாராளாமாக நீக்குங்கள். மைக்ரோசாப்ட் ஓர் வணிக நிறுவனம் இதைப் பற்றி நாம் கட்டுரை எழுதவில்லையா?. இந்த நிறுவனம் சரிவர இயங்காமல் வெறுமனே விளம்பர யுக்தியாக தமிழ் விக்கிபீடியாவை பயன்படுத்தினால் நிச்சயமாக நீக்கப்படவேண்டியதே. ஆயினும் எதையும் தீரவிசாரிக்காமல் கருதுக்கூற இயலாது. பின்னர் சிலப்பதிகாரம் போன்று வந்துவிடும் இல்லையா? தமிழ் விக்கிபீடியாவில் தரம் நிதந்தரமாக இருக்கவேண்டும் என்னும் கோபியின் கருத்து மிகவும் சரியானது.--Umapathy (உமாபதி) 15:23, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]


தமிழில் அறிவியல், கல்வி, தொழில்நுடபம் தொடர்பான தகவல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. அவற்றை தொகுப்பதற்கு த.வி இயன்றவரை உதவவேண்டும். அதுவே எனது அடிப்படை நிலைப்பாடு. அந்நோக்கில் குறைந்த பட்சம் சிறு வணிக பயறிசி நிலையங்களை பட்டியலப்படுதலை நான் வரவேற்கவே செய்வேன். எல்லா திரைப்படங்களையும் பட்டியடும் த.வி. இதில் தயக்கம் காட்டுவது எந்த அடிப்படையில் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். சிறு பயிற்சி நிலையங்களைப் பற்றி அவர்களைத் தவிர வேறு யார் ஆராய்ச்சி செய்து தகவல் தருவார்கள் என்பதை தெரிவித்தாலும் நன்று. தமிழ் நாட்டில் இருந்தாலும் அவர்கள் தகவல்களை முன்னர் குறிப்பட்ட மாதிரி தகவல் நோக்கில், விளம்பரத்தன்மை அற்று, விக்கி நடைக்கு ஏற்ப சேர்த்தால் ஏற்று கொள்வதில் தவறு என்ன? --Natkeeran 15:30, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன் உங்கள் அக்கறை வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தமிழ் விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். ஒரு கலைக்களஞ்சியத்தில் கட்டுரை இருப்பதற்கான தகுதியற்ற எவற்றையும் இங்கு சேர்ப்பது பொருத்தமல்ல. சிறுபயிற்சி நிறுவனங்களைப் பற்றி அவர்கள் வலைப்பதிவு செய்வார்கள். அத்தகைய ஊடகங்கள் தாராளமாகவே உள்ளன. எல்லாவற்றையும் விக்கிபீடியாவில் சேர்க்க வேண்டுமென்று நினைப்பது பொருத்தமல்ல. --கோபி 15:38, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தகுதி என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்? அளவையா? இந்தக் குறிப்பிட்ட பயிற்சி நிலையத்தில் சேவை மனப்பான்மையும் ஒருங்கே இருப்பது போன்றே தோன்றுகின்றது. என்னால் உறுதி செய்ய முடியாது. ஆனால் முதலில் நல்நம்பிக்கை என்ற அடிப்படையில் சொல்கிறேன். இருப்பினும் வேறு களங்களில் இதே அளவு கோலை நாம் பாவிக்க முடியுமா, என்றால் உங்களில் நிலைப்பாடு சரியாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு சிறு மருந்து நிலையம் வந்து தங்களைப் பற்றி தகவல்களை தன்னிக் கட்டுரையாக இடுதல் விரும்பப்படமாட்டாது. இவற்றுக்கான எல்லைகள் கடினமாகவே இருக்கும். ஆனால் ஒரு பொதுநிலைப்பாடோ பரிதுரையோ இப்பொழுது அவசியம் இல்லை. ஏன் என்றால் இணையத் தமிழ்ச் சூழல் அதற்கு தேவையை ஏற்படுத்தவில்லை என்றே சொல்வேன். --Natkeeran 15:49, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், இத்தகைய நிறுவனங்கள் சந்திக்குச் சந்தி வீதிக்கு வீதி உள்ளன. இவற்றினது இலக்கே ஏழை மாணவர்கள்தான். பணம் படைத்த, சொந்தமாகக் கணினியுள்ளவர்கள் பலர் சிறுமுதலாளிகளாக்னார்கள். எவ்வாறு என்றால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் சாதாரண நடுத்தரக் குடும்பங்களும் கூட கணினி வாங்கும் வசதியுடையன அல்ல. ஆனால் கற்பதற்கான ஆர்வம் மிக்கவர்கள். இத்தகைய ஆர்வமுள்ள மாணவர்களால் சில ஆயிரங்களைச் செலவழிக்க முடியும்.

ஓரளவு கணினி அறிவுள்ள ஆசிரியர்கள், ஏற்கனவே கணினிப் பயிற்சி முடித்த இளைஞர்கள் இந்த ஆர்வத்தைப் பணமாக்குகிறார்கள். எவ்வாறு என்றால் நான்கு ஐந்து கணினிகளை வாங்கிக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள் பத்து இருபதும் வாங்குவதுண்டு. பின்னர் சிறந்த சான்றிதழ்கள் வழங்குவதாக விளம்பரம் செய்து மாணவர்களைத் திரட்டுவார்கள். ஒவ்வொரு கற்கை நெறிக்கும் சில ஆயிரங்கள் பணம் பெற்றுக் கொள்வார்கள். Ms Word, Excel, Photoshop போன்றவற்றைக் கற்பித்துச் சான்றிதழ்கள் வழங்குவார்கள். இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு யாரும் type setting தவிர வேறு வேலை எடுக்க முடியாது. அத்துடன் கற்பித்தலும் தரமானதாக அமையும் என்றில்லை.

இத்தகைய நிறுவனங்களை எந்தச் சமூகப் பயனுமற்ற நிறுவனங்கள் என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால் இத்தகைய நிறுவனங்களின் இருவாக்கத்தால்தான் கணினி வாங்கச் சந்தர்ப்பமேயற்ற பெருமளவானோர் அவற்றில் பரிச்சயமாகக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் சமூகம் கணினித் தொழில்நுட்பத்தில் சிறிதளவேனும் உள்வாங்கப்படுகிறது. ஆனால் தனித்தனியே இவற்றுக்கு எந்தச் சமூக மதிப்பும் இல்லை.

இதற்குமேலும் நான் இங்கு நேரம் வீணாக்கி விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? கோபி 16:09, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

அங்கிருக்கும் நிலையை வெளியில் இருந்து உணர்ந்து கொள்வது கடினம். எல்லா இடங்களிலும் சுரண்டுபவர்கள் இருக்கின்றார்கள். அதேவேளை உண்மையான சேவை மனப்பான்மையுடன் உதபுவர்களும் இருக்கின்றார்கள். இது எப்படிப்பட்ட என்பதை என்னால் உணர முடியாது என்பது உண்மையே. ஆனால் முதலில் நல்நம்பிக்கை என்ற அடிப்படையில் எனக்கும் நம்பிக்கை இருக்கின்றது. இருப்பினும் நீங்கள் குறிப்பிடும் சமூக சுரண்டல் சூழல், இந்த விடயத்தில் அதை கோள்விக்குட்படித்தியிருக்கின்றது. எனவே, நீக்குவதென்றால் நீக்குங்கள், இருப்பினும் இந்த உரையாடல் பகுதியை எங்கேயாவது ஒரு கொள்கை அலசல் பகுதியில் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran 16:19, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், இந்தச் சூழலை ஒரேயடியாக சமூகச் சுரண்டல் என்று சொல்ல மாட்டேன். (சில சுரண்டவும் செய்கின்றன) எனக்கு முதன்முதலில் கணினி அறிமுகம் கிடைத்தது கூட இத்தகைய ஒரு நிறுவனத்தில்தான். இத்தகைய நிறுவனங்களால் ஒட்டுமொத்த அளவில் சமூகத்துக்குப் பயன்தான். ஆனால் தனித்தனியாக இவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இதன் கட்டுரைப் பக்கத்தை நீக்குகிறேன். ஆனால் இந்தப் பேச்சுப்பக்கம் நிச்சயம் பேணப்படல் வேண்டும். இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க ஒன்றென்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் கட்டுரையை மீள்விப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை. நன்றி. கோபி 16:30, 3 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். எனது பெயர் ச.இலங்கேஸ்வரன். எனது கணினி நிறுவனம் 2009 மார்கழி மாதத்துடன் மூடப்பட்டு விட்டது. நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் உள்ள என சமுதாயத்தவர்கள் கணினி அறிவுடன் வளர வேண்டும் என்ற பொது நல நோக்கில் தான் அப்பணியை ஆரம்பித்தேன். ஆனால் இன்றைய சமுதாயம் பணமுள்ள ஆடம்பரத்தை விரும்பும் சமுதாயமாகவே உள்ளது. பெரும் வணிக நிறுவனங்களுக்கு மத்தியிலும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மத்தியிலும் என்னால் போட்டியிட முடியவில்லை. விக்கி நிறுவனர் எவ்வாறு தனது இணைய தளத்தை ஆரம்பித்து இன்று கஸ்ரப்படுகின்றாரோ. அது போலவே என் நிலையும் ஆகிவிட்டது. போய்வருகின்றேன் வவுனியாவை விட்டு.

ஷிராந்தி ராஜபக்ச[தொகு]

நீக்கல் விபரம்:



இவர் கலைக்களஞ்சியத்தில் இடம் பெருமளவுக்கு முக்கிய நபரா?--டெரன்ஸ் \பேச்சு 14:37, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் மகிந்த ராஜபக்ச கட்டுரையில் இவர் பெயரில் சிகப்பு இணைப்பே இருக்கிறது. இக்கட்டுரையை நீக்கலாம் என்பது என் கருத்து. --Ravidreams 15:15, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
மகிந்த இலங்கையின் ஆறாவது அதிபர் என்றே நினைக்கின்றேன். ஆங்கில விக்கிபீடியாவில் மகிந்த 6வது அதிபராகவே குறிப்பிடப்படுகின்றார். இதுவும் சரிசெய்யப்படவேண்டும். --Umapathy 15:34, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நாட்டின் முதல் பெண்மணி என்பது போதிய முக்கியத்துவம் உள்ள தகுதியே என்பது எனது கருத்து. Mayooranathan 17:19, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

முதல் குடிமகள் என்பதை ஒரு தகுதியாக ஏற்றுக் கொண்டாலும் தற்போது உள்ள இரு வரிச்செய்திக்காக ஒரு கட்டுரை தேவை இல்லை என நினைக்கிறேன. மகிந்த அவர்களின் கட்டுரையில் அவரது குடும்ப வாழ்க்கை குறித்த துணைத்தலைப்பில் இத்தகவல்களை சேர்க்கலாம். --Ravidreams 18:32, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

டெரன்ஸ், இந்தப் பக்கத்தை முன்னரும் நீக்கக் கோரி வாக்கெடுப்பு வரை சென்றது. நீக்கப்படவில்லை. ராஜபக்சவின் மனை என்பதற்கப்பால் ஷிராந்திக்கு எந்த முக்கியத்துவமுமில்லை. ஷிராந்தி பற்றிய தகவல் ராஜபக்ச கட்டுரையில் குறிக்கப்படுவதே போதுமானது. ஆங்கில விக்கிக் கொள்கை [2] அதனையே பரிந்துரைக்கிறது. இக்கட்டுரையை நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடும். --கோபி 15:17, 11 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]