உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025/நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலந்துகொள்வோரின் பொறுப்புகள்

[தொகு]
  1. இந்தியாவில் வாழும் பயனர்கள், தமது பயணத்திற்கான ஏற்பாடுகளை தாமே செய்துகொள்ள வேண்டும். இவற்றிற்கானச் செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
  2. இலங்கைப் பயனரின் வானூர்திப் பயணத்திற்குரிய ஏற்பாட்டை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செய்து தருவர். இலங்கையில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், விசா, இந்தியாவில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை பயனர் தானே செய்துகொள்ள வேண்டும். இவற்றிற்கானச் செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
  3. பயனர்கள் தமது மடிக்கணினியைக் கொண்டு வர வேண்டும்.

தங்குமிடம், உணவு ஏற்பாடு தொடர்பான தகவல்கள்

[தொகு]
  1. 14-மார்ச்-2025 அன்று மாலை முதல் 16-மார்ச்-2025 மாலை வரை தங்குவதற்கான அறை வழங்கப்படும். ஒரு அறையில் இருவர் தங்கும் வகையில் இருக்கும். அறைக்கான வாடகையை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
  2. 14-மார்ச்-2025 அன்றைய இரவு உணவிற்கான ஏற்பாட்டை, கலந்துகொள்பவர் தானே செய்துகொள்ள வேண்டும். இதற்கானச் செலவு மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
  3. 15-மார்ச்-2025 அன்றைய 2 வேளை உணவு, 2 வேளை நொறுவை / காப்பி / தேநீர் ஆகியன விடுதியில் வழங்கப்படும். இதற்குரியக் கட்டணத்தை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
  4. 15-மார்ச்-2025 அன்றைய இரவு விருந்து, இன்னொரு உணவு விடுதியில் நடைபெறும். இதற்குரியக் கட்டணத்தை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
  5. 16-மார்ச்-2025 அன்றைய 2 வேளை உணவு, 2 வேளை நொறுவை / காப்பி / தேநீர் ஆகியன விடுதியில் வழங்கப்படும். இதற்குரியக் கட்டணத்தை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
  6. 16-மார்ச்-2025 அன்றைய இரவு உணவிற்கான ஏற்பாட்டை, கலந்துகொள்பவர் தானே செய்துகொள்ள வேண்டும். இதற்கானச் செலவு மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.

மதிப்பூதியம் தொடர்பான தகவல்கள்

[தொகு]

இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மதிப்பூதியம்

[தொகு]
வரிசை எண் செலவு விவரம் தொகை
1 வசிக்கும் ஊரிலிருந்து சேலம் வந்து, திரும்புதலுக்கான போக்குவரத்து* ₹ 1,600
2 உள்ளூர்ப் போக்குவரத்து (வசிக்கும் ஊரிலும், சேலத்திலும்)** ₹ 800
3 14-மார்ச்-2025 நாளின் இரவு உணவு ₹ 300
4 16-மார்ச்-2025 நாளின் இரவு உணவு ₹ 300
- மொத்தம் ₹ 3,000

* தொடருந்துப் பயணம் (அல்லது) பேருந்துப் பயணம் என்பதாக கருதப்பட்டுள்ளது.
** மூவுருளி உந்துப் பயணம் என்பதாக கருதப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கலந்துகொள்ளும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மதிப்பூதியம்

[தொகு]

இலங்கையில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், விசா, இந்தியாவில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், 14-மார்ச்-2025 நாளின் 3 வேளைக்கான உணவு, 16-மார்ச்-2025 நாளின் இரவு உணவு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்தியப் பணம் ₹ 10,000 மதிப்பூதியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

கூகுள் படிவம் வாயிலாக முன்பதிவு செய்தல்

[தொகு]