விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியில் உலாவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு விக்கியைத் திறனாகப் பயன்படுத்த அதில் வழிநடத்தல் (Navigation) கூறுகளைப் பற்றி அறிந்திருப்பது உதவும்.

பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்கள், விக்கிகளில் ஏற்கெனவே அடங்கியுள்ளன. நீங்கள் தெரிவு செய்த விக்கியில் அதன் முதற் பக்கம் சென்று, விருப்பமான செய்தி ஒன்றைத் தெரிந்து ஆராயுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் வலதுபகுதியிலும் தேடல் பெட்டியொன்றும் உள்ளது.

நீங்கள் ஏதாவதொன்றை வாசித்து, அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பை ஏன் விட்டுச் செல்லக் கூடாது? முதலில் ஒவ்வொரு பக்கத்தின் மேலும் காணப்படும் "உரையாடல்" இணைப்பைத் தெரிந்து பேச்சுப் பக்கம் செல்லுங்கள்; பின்னர் அப்பக்கத்தின் மேல் காணப்படும் , தொகு இணைப்பைத் தெரியுங்கள். உங்களிடமிருந்து கொஞ்சம் பாராட்டுகள் கிடைப்பதையும், உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அறிவதையும் விக்கிப் பங்களிப்பாளர்களும் நிர்வாகிகளும் பெரிதும் போற்றுவர்.

ஏதாவதொரு செய்தி இங்கே காணப்படாவிட்டால் அல்லது நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பதில் இன்னல் இருந்தால், உசாத்துணைப் பகுதியில் எங்களைக் கேளுங்கள்; அல்லது, கோரப்பட்ட கட்டுரைகள் பட்டியலில் தேவையான செய்தியைச் சேர்த்து விடுங்கள்.