விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/நிதித் திரட்டு/புரவலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
To read this page in English, please click here.

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்துக்கான புரவலர்களை வரவேற்கிறோம். தாங்கள் அளிக்கும் ஆதரவு தமிழ் விக்கிப்பீடியாவை இன்னும் பரவலாக அறிமுகப்படுத்தவும் கூடுதல் பங்களிப்பாளர்களைப் பெற்றுக் கொள்ளவும் உதவும். நன்றி.

நிதி அடுக்குகள்[தொகு]

  • தொடக்க நிலை - குறைந்தது 5,000 இந்திய ரூபாய்.
  • வளர் நிலை - 10,000 இந்திய ரூபாய்.
  • சிறப்பு நிலை - 20,000 இந்திய ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகை.

நிதி ஆதரவு அளிக்க[தொகு]

நிதி ஆதரவு அளிக்க விரும்பும் நிறுவனங்கள் ravidreams at gmail dot com , natkeeran at gmail dot com ஆகிய முகவரிகளுக்கு மின்மடல் அளிக்கலாம். அல்லது, இரவியின் 99431 68304 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு புரவலர்களுக்கு நன்றி நவிலப்படும்.

புரவலர்கள் பட்டியல்[தொகு]

  • கிழக்கு பதிப்பகம் - 5000 இந்திய ரூபாய் மதிப்பிலான புத்தகங்களைக் கட்டுரைப் போட்டி வெற்றியாளர்களுக்குத் தர முன்வந்திருக்கிறார்கள்.
  • ஜெகதீஸ்வரன் - 6000 - சட்டைகள் அச்சிட.

தமிழ் விக்கிப்பீடியர்கள் அளிக்கும் நிதி ஆதரவு[தொகு]

குறிப்பு: பத்தாண்டு கொண்டாட்டச் செலவுக்கான முழு தொகையையும் விக்கிமீடியா அறக்கட்டளை தர முன்வந்துள்ளது. இதற்குப் பிறகும் புரவலர்களை நாடுவது, நமது செலவுகளை நாமே இயன்ற அளவு ஏற்றக் கொள்வது நல்ல முன்மாதிரியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே. ஏற்கனவே விலைமதிப்பற்ற பல மணித்துளிகளையும் அறிவையும் உழைப்பையும் ஈன்று வரும் விக்கிப்பீடியர்கள் இந்நிகழ்வுக்கு நிதியாகவும் ஆதரவு தரத் தேவையில்லை. அப்படியே தர முன்வந்தாலும், பிறகொரு வேளையில் தகுந்த திட்டத்துக்குத் தருவது சரியாக இருக்கும். இவை அனைத்தையும் கருதிய பிறகு, நிதி ஆதரவு அளிக்க முன்வருகிறீர்கள் என்றால் கீழே விவரங்களைத் தாருங்கள்.


  1. செல்வசிவகுருநாதன் - அண்மையில் கட்டுரைப் போட்டியில் வென்ற முத்துராமன், நந்தினி இவர்கள் இருவரும் கலந்துகொள்ளும் பட்சத்தில் இவர்களின் பயணச் செலவுகளை முழுமையாக ஏற்க விருப்பம்! அண்மையில் கல்லூரிப் படிப்பினை முடித்துள்ள இவர்களை ஊக்குவித்தல் எனக்கு மன மகிழ்ச்சியினைத் தருகிறது. இவர்கள் வராத பட்சத்தில், இந்தியப் பணம் 2000 உரூபாயை நிதித் திரட்டலுக்கு வழங்குவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 12 செப்டம்பர் 2013 (UTC)

புரவலர்களுக்கான நன்றி செலுத்தல்[தொகு]

  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்புப் பக்கத்திலும் நிகழ்வு அரங்கிலும் புரவலர்களின் நிறுவனச் சின்னங்கள் இடலாம்.
  • நிகழ்வின் இறுதியிலான நன்றி நவிலலில் நிறுவனங்களில் பெயரைக் குறிக்கலாம்.

(விரியும்)