விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தர மேம்பாட்டுக் கருத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிமீடியாவில் அவ்வபோது வெளியிடப்படுகின்ற புள்ளிவிபரங்களை மேலோட்டமாகப் பார்த்துத் தமிழ் விக்கிப்பீடியாவின் தரநிலையைப் பற்றி ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அது பற்றிய பயனர்களின் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதற்கு அப்பால் அந்தப் புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தித் திட்டமிட்ட முறையில் தவியின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதில்லை. புள்ளிவிபரங்களை இன்னும் சிறிது ஆழமாகப் பகுத்தாய்ந்து, செய்யவேண்டிய மேம்பாட்டுப் பணிகளை ஓரளவு கணியப்படுத்தவும், இலக்குகளை ஏற்படுத்தி அவற்றை திட்டமிட்ட முறையில் அடைய முயற்சிப்பதற்குமாகவே இப்பக்கம் உருவாக்கப்படுகிறது.


இலக்கு[தொகு]

தவி 15,000 கட்டுரை அளவை எட்டும்போது பின்வரும் பைட் அளவுத் தரநிலையை எட்டுதல்.

>32 >64 >128 >245 >512 >1000 >2000 >4000 >8000 >16000 >32000
100% 100% 100% 97.5% 90% 70% 40% 15% 5% 2,5% 5%

இதிலிருந்து கணக்கிடப்பட்ட பல்வேறு பைட் அளவு இடைவெளிகளில் இருக்கவேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

32-64 64-128 128-252 252-512 512-1கி 1கி-2கி 2கி-4கி 4கி-8கி 8கி-16கி 16கி-32கி >32கி
0 0 375 1125 3000 4500 3750 1500 375 75 -


தற்போதைய நிலை[தொகு]

>32 >64 >128 >245 >512 >1000 >2000 >4000 >8000 >16000 >32000
100% 100% 97.7% 95% 77.6% 42.1% 16.7% 4.9% 1.4% 0.3% 0%

விழுக்காட்டு அளவுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் 15,000 கட்டுரைகளை எட்டும்போது பல்வேறு பைட் அளவு இடைவெளிகளில் இருக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கை:

32-64 64-128 128-252 252-512 512-1கி 1கி-2கி 2கி-4கி 4கி-8கி 8கி-16கி 16கி-32கி >32கி
0 45 705 2610 5325 3810 1770 525 165 45 -

தற்போதைய விழுக்காட்டு அளவுகளைக் கொண்டு பார்த்தால் 15,000 கட்டுரைகளை எட்டும்போது மொத்தக் கட்டுரைகளில் மிக அதிகமாக மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் 512பை-1கிபை அளவுகளுக்கு இடையில் உள்ளவையாகும்.

தேவையான மாற்றங்கள்[தொகு]

இலக்கை அடைவதற்குக் குறைந்த பைட் அளவுகளைக் கொண்ட கட்டுரைகளை விரிவாக்கி மேல் மட்டங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த மாற்றங்களின் அளவுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது. எண்ணிக்கைக் குறைவுகள் (-) குறியாலும், அதிகரிப்புகள் (+) குறியாலும் காட்டப்பட்டுள்ளன.

32-64 64-128 128-252 252-512 512-1கி 1கி-2கி 2கி-4கி 4கி-8கி 8கி-16கி 16கி-32கி >32கி
0 -45 -330 -1485 -2325 +690 +1980 +975 +210 +30 -

இந்த அட்டவணையின்படி 256 - 512 பைட்டுகளுக்கு இடைப்பட்ட அளவு கட்டுரைகளில் சுமார் 1500 கட்டுரைகளும், 512பை - 1கிபை அளவு கட்டுரைகளில் 2325 கட்டுரைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 1 - 2கிபை, 2 - 4 கிபை, 4 - 8கிபை அளவுகளுக்கு முறையே, சுமார் 700, 2000, 1000 எண்ணிக்கையான கட்டுரைகள் கீழ் மட்டத்திலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுவரப்பட வேண்டும். 15,000 கட்டுரை எண்ணிக்கையை அடைவதற்கு இன்னும் சுமார் 1,700 கட்டுரைகள் எழுதப்பட இருக்கின்றன. இவை அனைத்தையும் குறைந்தது 2-4 கிபை அளவுக்கு உட்பட எழுதினால் இலகுவாக > 2கிபை கட்டுரைகளின் அளவை 40% க்கு நெருக்கமாகக் கொண்டுவந்து விடலாம்.

முதல் கட்டமாக 64-128 பைட்டுகளுக்கு இடையில் உள்ள 45 கட்டுரைகளையும் இனங்கண்டு விரிவாக்க வேண்டும்.


விரிவாக்கப்படக்கூடிய கட்டுரைகள்[தொகு]

 1. பொருள் இலக்கணம்
 2. செறுகுந்நப்புழா
 3. கண்டமங்கலம்
 4. மதகடிப்பட்டு
 5. மௌன குரு
 6. வினோத விளையாட்டு திறன்கள் பட்டியல்
 7. பூளை
 8. சுருதகீர்த்தி
 9. காப்பு (அய்யாவழி)
 10. மரவேலைக் கருவிகள்
 11. செய்நிரல்
 12. பி. லெனின்
 13. மூக்குச்சளி
 14. வ. கீதா
 15. அமீர்
 16. மலை நாட்டுச் சிங்களவர்
 17. கரவைச் செல்வம்
 18. குடிவழக்கு
 19. கௌசல்யா
 20. தாவரப் பாகுபாடு
 21. ஆனி உத்தரம்
 22. கரு (கணினியியல்)
 23. இந்தித் தமிழியல்
 24. ஊர்மிளா
 25. தமிழ் சுருக்கங்கள் பட்டியல் - நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 26. மதுராப்புரி - நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
 27. பிணந்தின்னிக் கழுகுகள் - நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
 28. பொருள் பகுப்பாய்வி
 29. கோட்டாறு ஐராவதீசுவரர் கோயில்
 30. ஜோஸ்வா ஜே.அருளானந்தம் - நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
 31. தமிழ் நாடு தீயணைப்பு மீட்பு சேவை
 32. நடைப்போட்டி
 33. திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில்
 34. கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
 35. திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
 36. பின்னத்தூர் (மேற்கு)
 37. திருக்கலிக்காமூர்
 38. திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில்
 39. திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்

வேண்டுகோள்[தொகு]

ஏதேனும் ஒரு பக்கத்தில் முன்னேற்ற வேண்டிய கட்டுரைகளின் தலைப்புகளை பட்டியலிடலாம். குறும் பக்கங்கள் என்னும் பக்கத்தில் பட்டியல் உள்ளது. என்றாலும், உண்மையான 'பைட் அளவு என்ன என்று தெரியவில்லை.

 • நெடிய கட்டுரைகளில் ஒரு 1000 கட்டுரைகளாவது 32 கி.'பைட்டுக்கு அதிகமாக இருக்க வேண்டும். அவற்றுள் ஒரு 100 கட்டுரைகளாவது சிறப்பானதாக இருத்தல் வேண்டும்.
 • கட்டுரைகளுக்கு தரச்சாத்துகள் (தர முத்திரைகள்) இடுதல் வேண்டும். பேச்சுப் பக்கத்தில் என்னென்ன குறைகள் உள்ளன, எவற்றை சீர் செய்ய வேண்டும் என ஒரு திறனாய்வு வேண்டும் (பெரிய அளவில் அல்ல, ஓரிரு கருத்துக்களாவது). சிறப்புக் கட்டுரைகளும் (5-நாள்மீன்) அதற்கு அடுத்த நிலை (மிக நல்ல கட்டுரைகள்: 4-நாள்மீன்) என்று முத்திரை குத்தி, 15,000 கட்டுரைகளை அடையும் பொழுது ஒரு 1,500 கட்டுரைகளாவது 5-நாள்மீன் முதல் 3-நாள்மீன் வரை தரமுள்ளவையாக இருக்க பாடு படவேண்டும்.
 • மிக முக்கியமாக எல்லா மொழி விக்கிகளிலும் இருக்கவேண்டிய ~1,000 தமிழ் விக்கியில் இருத்தல் மட்டுமன்றி அவற்றுள் 1/3 ஆவது தரம் நிறுவப்பட்ட கட்டுரைகளாக இருத்தல் வேண்டும்.
 • துறைவாரியாக குறைந்தது இவ்வளவு கட்டுரைகள் இன்ன இன்ன அடிப்படையில் இருத்தல் வேண்டும் என்று கொள்ளுவது நல்லது. எடுத்துக்காட்டாக, ஏறத்தாழ 9,500 பறவைகள் இருக்கும் பொழுது நம் த.வி-யில் 500 பறவைகளாவது இருத்தல் வேண்டும். அவற்றுள் இந்தியா இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள பறவைகள் நிறைய (எவ்வளவு? 250? ) இருத்தல் வேண்டும். பறவைகளின் பெரிய உள் பகுப்புகளாகிய 27 (?) வரிசைகளிலும் (order) கட்டாயம் ஓரு கட்டுரையாவது இருப்பதும், அவற்றுள் உள்ள குடும்பங்களில் குறைந்தது 2-3 கட்டுரைகள் இருப்பதும் என்று கொள்வது நல்லது. அடுத்த எடுத்துக்காட்டாக, தனிமங்கள் எனில் எல்லா தனிமங்களுக்கும் கட்டுரை இருத்தல்; அவற்றுள் குறைந்தது 10 கட்டுரைகளாவது சிறப்புக்கட்டுரை அல்லது மிக நல்ல கட்டுரையாக இருத்தல்., எல்லா பெரிய மதங்களைப் பற்றிக் கட்டுரைகள் இருத்தல், இத்தனை மொழிகள் பற்றிய கட்டுரை இருத்தல், எல்லா நாடுகள் பற்றி கட்டுரை இருத்தல், அவற்றுள் 20 சிறப்புக் கட்டுரைகள் இருத்தல், மின்னியல், இயந்திரவியல்,வெப்பவியல் என்று திட்டம் வகுத்தல் வேண்டும். ஓரிடத்தில் பட்டியல் தந்து, முதல்கட்ட எதிர்பார்ப்புகளை பதிவு செய்து வைத்தால், புதுப்பயனர்களுக்கு வழி காட்டுவதாக இருக்கும். ஒரு முறைப்படி வளர்வதாகவும் இருக்கும்.
 • விக்கித்திட்டங்களும், விக்கி "வாயில்"களும் அமைத்து ஒரு 20-30 துறைகளையாவது வளர்த்தல் வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு 3-5 பேர்களாவது "காவலர்களாக" இருந்து போற்றி வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வாயில்களைத் தனி உள் விக்கியாகவே சீரோடும் சிறப்போடும் வளர்த்தல் வேண்டும்.
 • நமக்கு உள்ள பெரும் இடர்ப்பாடு, பங்களிப்பவர்கள் மிக மிகக் குறைவு (~10 பேர்). எவ்வளவுதான் நாம் செய்தல் இயலும்?! ஆனால் இன்னும் பலர் வந்து கை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு 50 பேராவது விரைவில் வர வேண்டும். போதுமான எண்ணிக்கையில் புதிய பங்களிப்பாளர்கள் வராமல் திட்டங்கள் வகுப்பதும், செய்லாற்றி வெற்றி கொளவதும் கடினனமாகவே இருக்கும். அதற்காக நாம் என்ன சும்மாவா இருக்கப்போகிறோம். இல்லவே இல்லை இன்னும் கடினமாக உழைக்கப்போகிறோம். வரலாற்றுப் புகழ் மிக்க இந்தப் பெரும் திட்டத்தில் பங்களித்து பயன் பெருக்க பலரும் வருவர்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை[தொகு]

ஆகிய துறைகள் முக்கியம்; ஒப்பீட்டளவில் பிந்தங்கியுள்ளன. இவை அனைத்திலும் தமிழ் அறிவு பரவி கிடக்கிறது.