விக்கிப்பீடியா:தமிழ் விக்கிபீடியாவில் பங்குபெற இருக்கும் தடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த.வி யில் தொகுப்பதோ, அல்லது அதன் நடைமுறைகளை அறிந்து பின்வற்றுவதோ வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அவ்வளவு எளிதல்ல. பலருடன் எனக்கு ஏற்றப்பட்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இதை தொடர் பயனர்கள் போதிய அளவு புரிந்து கொள்ளவேண்டும்.

  1. இணைய இணைப்பு இல்லாமை.
  2. தமிழ் விக்கிபீடியா அறிமுகம் இல்லாமை.
  3. கணியில் தமிழ் பயன்படுத்த தெரியாமை.
  4. தமிழ் தட்டச்சு தெரியாமை.
  5. விக்கியில் தமிழ்க் கட்டுரைகளை தொகுக்க தெரியாமை.
  6. தமிழ் விக்கிநடை பரிச்சியமின்மை (முதலில் வரையறை, படர்க்கை நிலை, விடய நோக்கு, தனி-சார்புக் கருத்துக்களைத் தவர்த்தல்).
  7. விக்கி நடைமுறைகள் பற்றி பரிச்சியமின்மை, அல்லது சரியான விளக்கம் இன்மை.

இப்படிப்பட்ட தடைகளை நாம் அடையாளம் கண்டு அவற்றை இயன்றவரை விலக்க வேண்டும். நன்றி. --Natkeeran 13:05, 29 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரன் கூறுவதை எனது 6 மாதத்தீவிர ஈடுபாட்டில் என் அனுபவத்தால் ஆமோதிக்கிறேன். மேலே நற்கீரன் பட்டியலிட்ட 7 இடர்களில், முதல் இரண்டைத் தாண்டினபிறகு, 3-ஆவதுக்கு முன்னமேயே ஒரு முக்கிய இடர் உள்ளது. அதுதான் த.வி.யில் கட்டுரைகளை எப்படிப் பார்ப்பது என்ற முதல் பிரச்சினை. பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டபிறகும், 'முதற்பக்கம்' தான் கிடைக்கிறதே ஒழிய, 'செல்' என்ற கட்டத்தில் எதைப் போடுவது என்ற பிரச்சினை. அவர்கள் த. வி. க்கு வருவதற்கு முன்னமேயே அவர்களுக்கு கட்டுரைகளின் தலைப்பு தெரிந்திருக்கவேண்டும். இந்த ஒரு பிரச்சினையே அவர்களை விரட்டிவிடுகிறது.
இதற்கு ஒரு தீர்வு. அவர்கள் மனதிலிருக்கும் கட்டுரை தலைப்பிற்கு ஆங்கிலத்தில் அதற்கு இணையான தலைப்பைப் போய் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அனேகமாக அவ்வாங்கிலக் கட்டுரையில் இடது பக்கத்தில் 'Other languages' பட்டியலில் 'தமிழ்' என்றிருக்கும் . அதை சொடுக்கினால் தமிழ்க்கட்டுரைக்கு வரலாம். இது நமக்குத்தெரியும் ஆனால் அவர்களுக்கு? இப்படி அவர்களுக்கு உதவி செய்வதற்கு நாம், த.வி. முதற்பக்கத்தில், இப்படியும் த.வி. கட்டுரைக்கு வரலாம் என்ற குறிப்பை கொட்டை எழுத்துக்களில் போடவேண்டும்.
அது மட்டும் போதாது. ஒவ்வொரு த.வி. கட்டுரைக்கும் அதற்கு ஒத்த ஆங்கில அல்லது பிரென்ச், ஜெர்மன் மொழிகளிலுள்ள கட்டுரைகளில், "Other languages" பட்டியலில் (இடது margin இல்) 'தமீழ்' வரும்படி, 'ta: ...." என்ற இணைப்பை சேர்க்க வேண்டும். I do not know whether this will be an automated process or has to be manually done for every article.

--Profvk 14:42, 29 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரன் சொல்வதும் பேரா.வி.கே சொல்வதும் முற்றிலும் உண்மை! நிர்வாகிகள் செய்ய வேண்டிய முதல் பணி, "எப்படி தேடு பொறியை சரி செய்வது? எங்கு யாருடைய உதவியை நாடி செய்ய வேண்டும் என்று சிந்திப்பது." அடுத்தாக தேடுபொறிக்கு கீழேயே அகரவரிசைப்படித் தேட சுட்டி இருக்கச் செய்வது, அல்லது, தேடு பொறி சரியான தேர்வைச் செய்யவில்லை என்றால் தானியங்கியாக இந்த அகரவரிசைப் பக்கத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். மூன்றாவதாக பெரும்பகுப்பாக 10 பகுப்புகள் முதற்பக்கத்தில் இருப்பது நல்லது. "அறிவியல்" என்று உள்ளே நுழைந்த பின் உள் பகுப்புகள் காட்டலாம், அங்கேயும் அகரவரிசைச் சுட்டி இருக்கலாம். நாம் எழுதும் கட்டுரைகளுக்கு யாஅரும் வந்து படிக்கின்றார்கள் என்றால் அது பெரும்பாலும், கூகிள் தேடுதலில் சிக்கியதாக இருக்கும். தமிழ் விக்கியை முறைப்படி ஒரு கலைக்களஞ்சியம் போல் பயன்படுத்துவது கடினம் (இப்பொழுதிருக்கும் அமைப்பில்). இன்னும் பல இடர்ப்பாடுகள் உள்ளன, ஆனால் இவை முதன்மையானவை. இங்கே நற்கீரன், பேரா.வி.கே கூறியவற்றை மறக்காமல் பலமுறை வந்து பார்த்து முழுத்தீர்வுகள் காண வேண்டும். கடைசியாக ரவி செய்யும் கருத்துப் பரப்பல் போன்றவற்றை நாம் எல்லோரும் நமக்கு இயன்றவாறு செய்யலாம், செய்ய வேண்டும்! --செல்வா 17:29, 29 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரன், நீங்கள் சொல்ல வருவதை இரண்டு பெரும் காரணங்களாகக் கூறலாம்.

1. விக்கி கூறுகள், விதிமுறைகள், நடைமுறைகள் அறியாமை. இது எல்லா மொழி விக்கிகளுக்கும் பொதுவான அறியப்பட்ட குறைகள். post doctorate செய்யும் என்னுடைய நண்பராலேயே ஆங்கில விக்கியில் எப்படி ஒரு பக்கத்தைத் தொகுப்பது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. விக்கி தொகுப்புப் பக்கம் இன்னும் மேம்பட வேண்டும் என்று மீடியாவிக்கி மென்பொருள் உருவாக்குனர்கள் அறிந்தே இருக்கிறார்கள். மென்பொருள் ரீதியாக செய்யக்கூடிய மாற்றங்கள் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக வரும் என்று எதிர்ப்பார்ப்போம். நம்மவர்கள் மீடியாவிக்கி மேம்பாட்டில் பங்கு கொள்வதும் பயன் அளிக்கும். அடுத்து, நம் தளத்துக்கு வருகிறவர்களுக்கு உதவும் வண்ணம் கூடிய அளவு உதவிப் பக்கங்கள், வழிகாட்டுக் குறிப்புகள் தர வேண்டும். செல்வா, profvk ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தப் பார்ப்போம். Profvk, நாம் எழுதும் கட்டுரைகளில் ஆங்கில விக்கிக் கட்டுரைக்கான இணைப்பை மட்டும் மனித முறையில் நாம் ஒவ்வொரு கட்டுரைக்கும் தரவேண்டும். அப்படித் தந்தால் sundarbot போன்ற விக்கியிடை தானியங்கிகள் பிற விக்கிகளில் இருந்து தமிழ் விக்கிக்கு இணைப்பை ஏற்படுத்தித் தந்து விடும். பிற மொழி விக்கிகளுக்கான இணைப்புகளையும் தமிழ் விக்கியில் சேர்த்து விடும்.

2. கணினியில் தமிழ் குறித்த அறிவின்மை இரண்டாவது தடை. தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியிலேயும் இது குறித்த விழிப்புணர்வு பரப்புவது இதற்கு அவசியம். பள்ளிகள், கல்லூரிகளில் நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது போன்றவை பலனளிக்கலாம். --Ravishankar 22:25, 29 செப்டெம்பர் 2007 (UTC)

தமிழ் விக்கியின் தேடு பொறியின் வழு குறித்து ஏற்கனவே வழு பதிந்திருக்கிறேன். இது குறித்து தகுந்தவர்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும்.--Kanags 22:56, 29 செப்டெம்பர் 2007 (UTC)