விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி
தோற்றம்
இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.
தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சித் திட்டம் (Tamil Wiki Internship Programme) என்பது தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும்.
நோக்கம்
[தொகு]- மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை வளர்த்துக் கொள்ள உதவுதல்.
- தமிழ் விக்கிமீடிய திட்டங்களில் பங்களிப்பதற்கான பயனர்களை உருவாக்குதல்.
வடிவமைப்பு
[தொகு]- கல்லூரிகளின் அழைப்பின்பேரில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
- கல்லூரியுடன் இணைவாக்க முறையில் திட்டம் நடத்தப்படும்.
- மாணவர்களுக்கு நேரடியாகப் பங்குகொள்ளும் பயிற்சிப் பட்டறை, இணையம் வழி ஆகியவற்றின் மூலமாக பயிற்சிகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
- பயிற்சி வழங்கப்படும் திட்டங்கள்: விக்கிப்பீடியா, பொதுவகம், விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு.
- மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிமீடியாவால் வழங்கப்படும்.
விதிமுறைகள்
[தொகு]- பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளுதல் அனைவருக்கும் அவசியம் ஆகும்.
- இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலவில்லை எனில், நண்பர்கள் மூலமாகவோ தானாகவோ கற்று இலக்குகளை அடையலாம்.
- இலக்குகள்:
- விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுத வேண்டும். விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது தொகுப்புகள் செய்ய வேண்டும்.
- பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும்.
- விக்சனரியில் குறைந்தது ஐந்து புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தவும் வேண்டும்.
- விக்கிமூலத்தில் குறைந்தது இருபது பக்கங்கள் மெய்ப்புப்பார்க்க வேண்டும்.
- விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் செய்ய வேண்டும்.
- நிர்ணயிக்கப்படும் நாட்களுக்குள் இலக்குகளை அடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால் இலக்கினை அடைய இயலவில்லை எனில், கூடுதலான நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கலாம். இலக்கினை எட்டிய பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.
இதுவரை நடந்துள்ள நிகழ்வுகள்
[தொகு]- விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021