விக்கிப்பீடியா:சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

இடம்

Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி - 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில்.

நேரம்

ஞாயிறு 23.07.2017 காலை 10.00 முதல் மாலை 5 வரை.

அவசியமானவை[தொகு]

  • மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.
  • குறைவான இணைய இணைப்பே இருப்பதால், திறன்பேசி அல்லது இணையக் கருவிகள் வழியே சொந்த இணைய இணைப்பு கொண்டுவந்தால் மிக நன்று.
  • ஏதேனும் ஒரு நிரலாக்க மொழி அறிந்திருப்பது அவசியம்.

முன் தயாரிப்புகள்[தொகு]

கீழ்க்கண்ட இணைப்புகளை ஆய்ந்து விட்டு வருதல் மிக நன்று.

நிரல் தேவைகள்[தொகு]

உங்களுக்கோ, தமிழ் விக்கி, பிற மொழி விக்கி சூழலுக்கோ, தேவையான நிரல்கள் ஏதேனும் இருப்பின் இங்கே எழுதுக. நிரல் திருவிழாவில் கலந்து கொள்ளும் நிரலர்களுக்கு நிஜமான சிக்கல்களை தீர்க்கும் ஆர்வம் தர இயலும்.

  1. தமிழக ஆசிரியர்களின் பங்களிப்பு விவரப் பட்டியல். ஒவ்வொரு பயனரும் உருவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை, பைட் அளவு முதலானவை. உதாரணம் - https://ta.wikipedia.org/s/6s9e
  2. தலைப்புகளை தானாகவே திருத்துதல் - துப்புரவு பணியில் தற்போது புள்ளி உள்ள தலைப்புகள், வளைவு அடைப்புகுறிகள், ஆங்கில எழுத்தை இணைத்து எழுதுவது, பக்கத்தில் தொடங்கும் போது தாள்களில் எழுதுவது போல இடம் விட்டு எழுதுகின்றனர். அதனை சேமிக்கும் போது, இடப்பக்க பத்தி சீரமைவு தானாகவே அமையும் படி செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கி, இதுபோன்ற பொது விதிகளை தானியங்கிகள் சரி செய்து கொள்ளும் படி செய்யலாம். இதில் பல பெரும்பாலும் சிறப்புரிமை(sysop) செய்தவரே செய்ய இயலும் என்பதால், உரிய பகுப்புகளை, இந்த பக்கத்தில் இருந்து உருவாக்கும் போது, முதற்கட்ட வெற்றியைப் பெறும். அடுத்து ஒவ்வொரு பகுப்புக்கும், சில விதிகள்.
  3. காாி, மாாி, பொி, மேடேந்தாிகை, கதிைர, வாிகள், கையாிய, சிறாா் போன்ற பிழைகளைத் திருத்துதல் - https://ta.wikipedia.org/s/6svo
  4. தமிழகத்தில் பலர் பங்களிப்பாளர்கள் தட்டச்சு செய்ய, தட்டச்சகத்தில் பயின்றவர்கள். எனவே, அவர்களும் தட்டச்ச வசதியாக old/new type writer வசதியை நாம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, லினக்சின் எளியமுறையான m17n நிறுவ வேண்டும்.
  5. விக்சனரியில் பன்மொழி தளம். எனவே, லினக்சில் தமிழக பெண் நிரலர் உருவாக்கிய, உபுண்டு மென்பொருளகத்தில் கிடைக்கக்கூடிய IOK பன்மொழி திரைவிசைப்பலகையை இணைத்தால் வசதியாக இருக்கும்.
  6. விக்கிமூலம் ஓங்கி வளர, பல்வேறு விக்கிக் குறிகள் இட வேண்டியுள்ளன. அப்பொழுதே அசராமல் தொடர்ந்து 4 இலட்சம் பக்கங்களை மேம்படுத்த இயலும். அதற்கு அக்குறியீடுகள் இடப்பக்கமாக அமைத்து, அது வேண்டும் பொழுது சுருக்கி, தற்போது தெரியும் அண்மையமாற்றங்கள், முதற்பக்கம், போன்றவைகள் தெரியுமாறு செய்யலாம். விக்கிமூலத்திற்கு வந்தவரை தக்க வைத்துக்கொள்ள இது மிகவும்இன்றியமையாதது.1) பக்கவடிவநிரல்-மாதிரிப்பக்கம் 2) மாதிரி-நிகழ்படம்
  7. அனைத்து மொழியினரும் பயன்படுத்தும் மூன்று ஆழிகளை மட்டுமாவது (floating button - edit, preview, save) வலப்பக்கம் எப்பொழுதும் தெரியும் படி செய்யலாம்.
  8. ஏற்கனவே உள்ள யாவாகிரிப்டுகள்(javascript) மேம்படுத்தப் பட வேண்டும். திரைவிசைப்பலகைகள், விக்கியிணைப்பி
  9. தமிழ் உரை ஒலி மாற்றியை நிறுவி, விக்கிப் பக்கங்களை ஒலியாக மாற்றுதல் - https://www.iitm.ac.in/donlab/tts/index.php
  10. Convert Wikitools python library to python 3
  11. Daily page creation count and stats
  12. ஒலிக்கோப்புகளை பதிவு செய்து தரவல்ல ஆன்ட்ராய்டு செயலை உருவாக்கலாம். தற்போது ogg தரவல்ல முழுமையான செயலி இல்லை என( firefox அருணிடம்) உரையாடிய போது தெரியவந்தது. இதற்கு முன் எடுத்த முயற்சிகள்- பல இந்திய மொழிகளுக்கு பயன்படக்கூடியது.
  13. நீச்சலாரின் கூகுள் பதிவேற்றக் கருவி(SpreadSheet Version) போன்று, Open Calc பதிவேற்றக்கருவி செய்யலாம்.( Appswiki Editor)
  14. விக்கித்தரவு: இக்கருவி பைத்தான்2 சிறப்பாக ஒரு மொழிக்கு இயங்குகிறது. ஆனால், பன்மொழிக்கு இயக்க பல மூலங்களை மாற்ற, Convertion to python3 for multilingual-இதனைக் காணவும்
  15. பொதுவகம்(Wikimedia Commons): இந்த மின்னூல்கள் பதிவேற்றியை, எந்த ஒரு ஊடகத்தையும் (ஒலிக்கோப்பு, நிழற்படங்கள், நிகழ்படங்கள்,அசைப்படங்கள்..)பதிவேற்ற மாற்றலாம். அது ஏற்காடு இளங்கோ போன்ற துறைசார் அறிஞர்களின் திறனை, அவர்களே எளிமையாக பதிவேற்ற உதவும். அதாவது ஒரு கோப்புரை, அதனுள் ஊடகங்கள், கட்டளை இட்டால் அது பதிவேற்றம். இப்பொழுது எளிமையாக இல்லை.
  16. பெரும்பாலான MP4 நிகழ்படங்களை, ogv, webM மாற்ற எளிமையான நடைமுறை இல்லை.

தொடர்புக்கு[தொகு]

த.சீனிவாசன் - 98417 9546 எட்டு, tshrinivasan@gmail.com

பங்கு பெறுவோர்[தொகு]

பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயரை இங்கு பதிவு செய்க. --த.சீனிவாசன் (பேச்சு) 04:27, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

  1. த.சீனிவாசன்
  2. ர. தினேஷ் கார்த்திக்
  3. நீச்சல்காரன் (பேச்சு)
  4. இரா.பத்மகுமார்

அறிவிப்புகள்[தொகு]

  1. ILUGC Meetup