விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்
Appearance
(விக்கிப்பீடியா:சுற்றுக்காவலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பக்கம் சுருக்கமாக: சுற்றுக்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகத் தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை உட்பட்ட விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும். |
சுற்றுக்காவல் அல்லது சுற்றுக்காவலர் (Patrol அல்லது Patroller) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.
அணுக்கம் பெறுவதற்கான தகுதி
[தொகு]- குறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.
- கணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.
- தற்காவல் அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். அல்லது குறிப்பிடத்தக்க வேறு விடயம் இருப்பின், இப்பக்கத்தில் விண்ணப்பித்து விக்கிச் சமூகத்தின் ஒப்புதலுடன் அணுக்கத்தை வழங்கலாம்.
- புதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.
- இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.
- இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
- அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது
[தொகு]எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிப்பது
[தொகு]விக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கலாம். இவற்றில் முக்கியம் பார்க்கப்பட வேண்டியவை:
- பதிப்புரிமை மீறல் விடயங்கள்
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல்
- தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருத்தல்
- மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள்
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல்
- விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருத்தல்
- இன்னும் பல
எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்கக்கூடாது
[தொகு]விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.
அடுத்து என்ன செய்வது
[தொகு]- பதிப்புரிமை மீறல் இருந்தால், நீக்கக் கோரல் அல்லது வார்ப்புரு இணைத்தல்
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படாது இருந்தால், முறையாகத் திருத்துதல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்
- தகுந்த ஆதாரம் இணைக்கப்படாது இருந்தால், ஆதாரம் இணைத்தல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்
- மூன்று வரிக்குக் குறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் இருந்தால், விரிவாக்கல் அல்லது குறித்தகால நீக்கல் வார்ப்புரு இணைத்தல்
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டாது இருந்தால், சரியான பகுப்பில் இணைத்தல்
- விக்கித்தரவில் இணைக்கப்பட்டாது இருந்தால், விக்கித்தரவில் இணைத்தல் (இணைக்க முடியாவிட்டால் விட்டுவிடல்)
- அனுபவமிக்க பயனர் அல்லது நிருவாகிகளின் உதவி பெறல்
சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்
[தொகு]எண் | பயனர் | அணுக்கம் வழங்கியவர் | நாள் | குறிப்பு |
---|---|---|---|---|
1 | L.Shriheeran | AntanO | 16 ஆகத்து 2015 | |
2 | Dineshkumar Ponnusamy | AntanO | 16 ஆகத்து 2015 | |
3 | Commons sibi | AntanO | 16 ஆகத்து 2015 | |
4 | Booradleyp1 | மதனாகரன் | 6 திசம்பர் 2015 | |
5 | Srithern | இரவி | 13 அக்டோபர் 2016 | |
6 | Arulghsr | இரவி | 13 அக்டோபர் 2016 | |
7 | கி.மூர்த்தி | இரவி | 13 அக்டோபர் 2016 | |
8 | Sivakosaran | இரவி | 13 அக்டோபர் 2016 | |
9 | Maathavan | இரவி | 13 அக்டோபர் 2016 | |
10 | Nandhinikandhasamy | இரவி | 13 அக்டோபர், 2016 | 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
11 | உலோ.செந்தமிழ்க்கோதை | இரவி | 15 அக்டோபர், 2016 | |
12 | Balajijagadesh | இரவி | 15 அக்டோபர், 2016 | 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
13 | Gowtham Sampath | AntanO | 26 ஆகத்து 2018 | 3000+ முதன்மைவெளித் தொகுப்புகள். சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார். |
சுற்றுக்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்
[தொகு]இதனையும் பார்க்க
[தொகு]- {{User wikipedia/Patrol}} சுற்றுக்காவல் அணுக்கம் உள்ளதைத் தெரிவிக்கும் பயனர் பெட்டி.
- அணுக்கம் தொடர்பான ஆரம்ப உரையாடல்
- அணுக்கங்களை உருவாக்க பரிந்துரை
- கொள்கை உரையாடல்
- விக்கிப்பீடியா:பயனர் அணுக்க நிலைகள்