விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்

டிசம்பர் 25[தொகு]

Sœur Nivedita.jpg

டிசம்பர் 18[தொகு]

டிசம்பர் 11[தொகு]

Maaveeran Senbagaraaman.JPG
 • விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான மாம்பா, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.

டிசம்பர் 4[தொகு]

Bruxelles Manneken Pis.jpg
 • சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.
 • முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

நவம்பர் 27[தொகு]

Church of Transfiguration Mount Tabor200704.JPG
 • தன்னுடல் தாக்குமை என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.
 • சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 5 விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.

நவம்பர் 20[தொகு]

Sachin at Castrol Golden Spanner Awards (crop).jpg
 • கணிமி (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.

நவம்பர் 13[தொகு]

ചതുർവിംശതി മുദ്രകൾ.png

நவம்பர் 6[தொகு]

Clock Tower - Palace of Westminster, London - September 2006-2.jpg
 • தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும்.

அக்டோபர் 30[தொகு]

Jamuna aaree at Nallur.jpg

அக்டோபர் 23[தொகு]

Higginbothams.jpg
 • ஹிக்கின்பாதம்ஸ் (படம்) என்பது ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழைமையான புத்தக நிலையம் ஆகும்.
 • பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.
 • உலகில் யூத மதத்தினை பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.

அக்டோபர் 16[தொகு]

Makkahi mukarramah.jpg
 • மக்கா (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
 • முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
 • ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.

அக்டோபர் 9[தொகு]

Hong Kong at night.jpg

அக்டோபர் 2[தொகு]

Dance, clap-hands 1.jpg

செப்டம்பர் 25[தொகு]

Na-2.JPG

செப்டம்பர் 18[தொகு]

2004 Indonesia Tsunami Complete.gif

செப்டம்பர் 11[தொகு]

Messerschmitt Me 262A at the National Museum of the USAF.jpg

செப்டம்பர் 4, 2013[தொகு]

Pythagoras-2a.gif

ஆகஸ்ட் 28, 2013[தொகு]

Black Sea map ta.png
 • கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.
 • திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
 • பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
 • கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.
 • நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 21, 2013[தொகு]

Tsar Bell in Kremlin.jpg

ஆகஸ்ட் 14, 2013[தொகு]

BritishEmpire1919.png

ஆகஸ்ட் 7, 2013[தொகு]

Greater Coucal (Centropus sinensis) in Kolkata I IMG 3240.jpg

ஜுலை 31, 2013[தொகு]

 • காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.
 • சிவபெருமான் பிநாகம் எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் பிநாகபாணி என்று அறியப்பெறுகிறார்.

ஜுலை 24, 2013[தொகு]

Ganoderma lucidum 01.jpg

ஜுலை 17, 2013[தொகு]

Salto Angel from Raton.JPG
 • 1946 இல் முடிசூடிய ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.
 • ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் சமபகுதியங்கள் எனப்படும்.

ஜுலை 10, 2013[தொகு]

 • நர்கிசை (படம்) கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை அவர் பெயரில் வழங்கி வருகிறது.

ஜூலை 3, 2013[தொகு]

PeterMaas-India-MudumalaiNationalPark-Langur1.jpg
 • சிங்கத்தை காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் புலியே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும்.

ஜூன் 26, 2013[தொகு]

Lakshya PTA.JPG
 • லட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.

ஜூன் 19, 2013[தொகு]

Saus Crane I IMG 8663.jpg
 • 5 அடி உயரமுள்ள சாரசு கொக்கு, (படம்) வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன. இவ்வகையான கொக்குகள் ஆண், பெண் என இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும்.
 • வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.

ஜூன் 12, 2013[தொகு]

ஜூன் 5, 2013[தொகு]

Chandrashekar azad.jpg
 • யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
 • இந்திய விடுதலைப் போராளி சந்திரசேகர ஆசாத் கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.

மே 29, 2013[தொகு]

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப் போட்டி.jpg

மே 22, 2013[தொகு]

Kerala boatrace.jpg

மே 15, 2013[தொகு]

Riccio Melone a Capo Caccia adventurediving.it.jpg

மே 8, 2013[தொகு]

Sølvguttene oslo rådhus 23 des 2005.jpg

மே 1, 2013[தொகு]

Kolli Malai Aagaya Gangai Falls.jpg

ஏப்ரல் 17, 2013[தொகு]

Dværgsilkeabe Callithrix pygmaea.jpg
 • ஆவுரோஞ்சிக் கல் என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.
 • ஒடியல் என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.

ஏப்ரல் 17, 2013[தொகு]

Toronto - ON - Toronto Harbourfront7.jpg
 • கத்தூரி மானில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.

ஏப்ரல் 10, 2013[தொகு]

NEO ararat big.jpg

ஏப்ரல் 3, 2013[தொகு]

Kreiselkompass Schnitt Anschütz.jpg

மார்ச் 27, 2013[தொகு]

Golconda2.JPG

மார்ச் 20, 2013[தொகு]

Inti Raymi.jpg

மார்ச் 13, 2013[தொகு]

Liger couple.jpg

மார்ச் 6, 2013[தொகு]

OR Using NAND.svg

பெப்ரவரி 27, 2013[தொகு]

BartailedGodwit24.jpg

பெப்ரவரி 20, 2013[தொகு]

SJPan.jpg
 • மஞ்சட் கோட்டுச் சருகுமான் இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.

பெப்ரவரி 13, 2013[தொகு]

Kew Gardens Palm House, London - July 2009.jpg

பெப்ரவரி 6, 2013[தொகு]

Nasreddin (17th-century miniature).jpg
 • உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
 • ஏபெல் பரிசு 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.
 • கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான மயன் கணிதத்திலும் திறமையாயிருந்தார்.

சனவரி 30, 2013[தொகு]

6104 - Gadmertal - Triftbrücke.JPG

சனவரி 23, 2013[தொகு]

Cheraman jumamasjid.JPG

சனவரி 16, 2013[தொகு]

சனவரி 9, 2013[தொகு]

சனவரி 2, 2013[தொகு]

Globen Stockholm February 2007.jpg