விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 7, 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • செரெங்கெட்டி இடப்பெயர்வு (படம்) ஒவ்வோராண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்காவின் செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு லட்சக்கணக்கான விலங்குகள் இடம் பெயரும் ஒரு நிகழ்வு.
  • புழுப்பாம்புகள் அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன.
  • 188 மீட்டர் உயரம் உடைய தக்கீசு அணை ஆப்பிரிக்காவிலேயேஉயரமான அணையாகும்.
  • என்ஹெடுவானா என்பவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றவர் ஆவார்.