விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 23, 2009
- பனங்கிழங்கை பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.
- இன்று உலகில் வழங்கும் 6900 வரையான மொழிகளில் 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.
- விதிவிலைக்கை கையாளுத்தல் (exception handling) என்பது வழமையான இயக்கத்தில் இருந்து ஒரு விதிவிலக்கான நிகழ்வு இடம்பெறும் பொழுது அதை கையாளும் முறை பற்றிய ஒரு நிரலாக்க கட்டு (construct) அல்லது வன்பொருள் செயலமைப்பு ஆகும்.
- முதலாவது நிலையான ஒளிப்படம் 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.
- தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) ஆவார்.