விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 3, 2010
- விண்வெளிக் குடியிருப்பு என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.
- பரிவு மசக்கை என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.
- அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.
- தர அமுக்கத்தில் நீரின் உருகுநிலை 0° செல்சியசு, கொதிநிலை 100° செல்சியசு ஆகும்.
- சங்கத் தமிழ் பெண் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்கள் பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (314, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275) புறநானூற்றில் ஒன்றுமாக (279) இடம் பெற்றுள்ளன.