விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 8, 2021
Appearance
- டயமண்ட் சூத்திரா (படம்) நூலின் முகப்பில் அச்சிடப்பட்ட ஓவியம்தான், உலகிலேயே அச்சிடப்பட்ட முதல் ஓவியமும் அட்டைப்படமும் ஆகும்.
- பச்லுர் ரகுமான் கான் 1973 முதல் 1998 வரை உலகின் உயரமான வானளாவியாக இருந்த சியர்சு கோபுரத்தின் கட்டமைப்புப் பொறியாளர்.
- ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியாவுடன் இணைக்கும், 26 அக்டோபர் 1947 ஆம் அண்டின் ஒப்பந்தமாகும்.
- சில்கா ஏரி கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.