விக்கிப்பீடியா:இலங்கை மாணவர்களுக்கான புதுப்பயனர் போட்டி - 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள் உதவி

உங்களுக்கு அறிவியல், வரலாறு, புவியியல், பண்பாடு, கலை, இலக்கியம், திரைப்படங்கள், கணிதம், அரசியல், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டா? இவை குறித்து நீங்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதலாம் வாருங்கள்.

எப்படி கட்டுரை எழுதுவது என்று அறிந்து கொள்ளவும் இணையத்தில் இலவசமாகப் பயிற்சி பெறவும் [இணைப்பு இங்கு] உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களைத் தரவும்.

பதிவு செய்பவர்களுக்கு இணையம் மூலம் விக்கிப்பீடியாவில் தகவல் சேர்ப்பதற்கான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்குவோம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாக எழுத வருபவர்களுக்கான இந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்! மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள தகவல்களை பாருங்கள்.

விதிகள்[தொகு]

கீழே உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு "பக்கத்தை உருவாக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

தலைப்புகள் பட்டியல் பார்க்கவும் - இங்கு உள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்.


  • கட்டுரையை
    • தக்க சான்றுகளுடன்
    • இயல்பான நடையில்
    • பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி
    • தகவல் நிறைந்ததாக எழுத வேண்டும்.

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழில் எழுதலாம்.

பரிசுகள்[தொகு]

  • மூன்று மாதங்களுக்கும் சேர்த்து மொத்தப்பரிசு 150,000 இலங்கை ரூபாய்.

பங்கேற்கவும்[தொகு]

1. உங்கள் பெயரில் ஒரு பயனர் கணக்கினை உருவாக்குங்கள்

2. உங்கள் பயனர் கணக்கில் நுழையுங்கள்

3. கீழே உங்கள் பெயரைப் பதிவு செய்க என்று உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பெயரைச் சேர்த்து Publish changes என்று பக்கத்தின் கீழே உள்ள நீலநிறப் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் பெயர் போட்டியில் பதியப்படும்.

ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.

கூடுதல் தகவல்[தொகு]

குறுக்கு வழி:
WP:NUC2020