விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{texttitle}}}

ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கு நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. கனடா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், சுவீடன், எசுப்பானியா, தென் ஆபிரிக்கா நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் (civic unions) சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு ஆயுள் தண்டனை, அல்லது மரண தண்டனை விதித்துள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


நவம்பர் 30, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

யெர்றோனோமோ (Chiricahua: Goyaałé, "one who yawns" சூன் 16, 1829 – பெப்ரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 23, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஈழத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், தடுப்பு முகாங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை விடுவிக்கக் கோரியும், இறந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தியும் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு தொடர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் 150 ம் நாளில் நடைபெற்ற மொழுவர்த்தி அஞ்சலிப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒரு பெண்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 16, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மனித மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 8, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உருளைக்கிழங்கு உண்போர் ஓவியம் டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ வால் தீட்டப்பட்டது. இவ் ஓவியம் 1885 ம் ஆண்டு, நெதர்லாந்தில் தீட்டப்பட்டது. இது உழவர்களின் ஏழ்மை நிலையையும், அவர்கள் உருளைக்கிழங்கு உண்பதையும் சித்தரிக்கிறது. இதைப் பற்றி வான் கோ பின்வருமாறு கூறுகிறார். "எந்தக் கைகள் தட்டில் இருந்து உணவை எடுத்தனவோ, அந்தக் கைகளே வயலில் உழைத்தன. இவர்கள் இந்த உணவை நேர்மையான வழியில் பெற்றார்கள். இந்த கருத்தையே நான் எண்ணை விளக்கின் அருகே மக்கள் உருழைக்கிழங்கு உண்போர் ஓவியத்தில் சொல்ல முயன்றேன்."


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 11, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 25, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். படத்தில் கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் நிகழ்ந்த பரதநாட்டிய நிகழ்ச்சி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டெம்பர் 27, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பகுவல் எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம் ஆகும். பகுவல்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றைத் பிரித்துப் பார்த்தால் அல்லது பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்த்தால் அவற்றின் கணிதப் பண்புகள் அல்லது தோற்றம் ஒரே மாதிரி அமையும். அதாவது அவை தன்னிலை சமநிலை பேணும். படத்தில் இவ்வாறு பண்புகளைக் கொண்ட பகுவல் ஒன்று.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 30, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது ஆப்கானித்தானின் கந்தகார் நகருக்கருகில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப்புயலின் தோற்றமாகும்.
புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும். காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படல் புழுதிப்புயல் எனப்படுகிறது. புழுதிப்புயல் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது மேலும் மேற்பரப்பு மண் அடித்துச் செல்லப்படுவதால் அப்பகுதியில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. புவிக்கு மேலதிகமாக செவ்வாயிலும் புழுதிப்புயல்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 23, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது ஐரோப்பிய மலர்த்தேன் தேனீ ஆகும்.
இன்று உலகில் ஒன்பது குடும்பத்தைச் சேர்ந்த 20,000 இன தேனீக்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் இவ்வெண்ணிக்கை இன்னும் கூடுதலாக காணப்படலாம். தேனீக்கள் அண்டார்க்டிக்கா தவிர்ந்த மற்றைய எல்லா கண்டங்களிலும் உள்ளன. மகரந்த சேர்க்கையில்முக்கிய பங்கு வகிக்க்கும் தேனிக்கள், பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை செய்யும் பூக்கள் உள்ள எல்லா வாழிடங்களிலும் வசிக்கின்றன. மலர்த்தேன், மகரந்தம் என்பவற்றை உண்பதற்காக தேனிக்கள் படிமலர்ச்சியடைந்துள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 16, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 16, 2009
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 9, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது சாப்பானின் கியோத்தோ நகரில் அமைந்துள்ள கின்காகு-ஜி கோவில் ஆகும்.
பொன்விதானமுடைய கோவில் என பொருள்படும் வகையில் நிப்பானிய மொழியில் கின்காகு-ஜி (金閣寺) என அழைக்கப்படும் இது ஒரு சென் பௌத்த கோவிலாகும். கௌதம புத்தரின் சாம்பல் இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.1397 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோவில் மூன்று முறை தீவிபத்துகளால் பாதிக்கப்பட்டு பின்னர் செப்பனிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடம் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். மூன்று மாடிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலிற்கு 0.0005 மில்லிமீட்டர் தடிப்புள்ள தங்கப் பூச்சு பூசப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 2, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது தோடர்களின் குடிசையாகும்.

தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கில் கொண்டுச் செய்யப்படுகிறது. எருமை வளர்ப்பு இவர்களது முதன்மைத் தொழிலாகும். எனவே பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. தற்போது பல தோடர்கள் மந்துகளை விடுத்து மேற்கத்திய வகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 26, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது ஒருவகை தட்டாரப்பூச்சியாகும்.
தட்டாரப்பூச்சி கணுக்காலிகள் தொகுதியில் பூச்சிகள் வகுப்பையும் ஓடோனாட்டா வரிசையையும் சேர்ந்த ஒரு உள்வரிசையாகும். எல்லா தட்டாரப்பூச்சிகளும் ஒரே இனமல்ல மாறாக அவை பல குடும்பங்களைக் கொண்டுள்ளது. இப்பூச்சிகள் தட்டான், தும்பி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறன.இப்பூச்சியின் உடல் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டு இருக்கும். தட்டாரப்பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிக மிக மெல்லிய, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் இருக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிமீ வரையிலும் விரைவாக பறக்க வல்லன. தட்டான் பூச்சிக்கு இரண்டு பெரிய கூட்டடுக்குக் கண்களும் ஆறு கால்களும் உண்டு.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 19, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சீயோன் தேசியப் பூங்காவில் ஏஞ்சல் லேண்டிங் என்னுமிடத்திலிருந்து பார்க்கும் போது தோன்றும் காட்சி

சீயோன் தேசியப் பூங்கா தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். செந்நிற நவஜோ என்றழைக்கப்படும் மணற்பாறையினால் ஆன 15 மைல் (24 கிலோமீட்டர்) நீளமானதும் அரை மைல் வரை (800 மீட்டர்) ஆழமும் கொண்ட சீயோன் பள்ளத்தாக்கு இத்தேசியப் பூங்காவின் முக்கிய கவர்ச்சியாகும். பல் வகை தட்பவெப்பநிலை, புவியியல் வலயங்களைக் கொண்டுள்ளமையால் இங்கே உயிரியற் பல்வகைமை செறிவாக உள்ளது. இங்கு பல வகையான நிலைத்திணைகளும், 289 வகையான பறவைகளும், 75 வகை பாலூட்டிகளும் (19 வகை வௌவால்கள் உட்பட), 32 வகை ஊர்வனவும் வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 12, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இந்திய தொடருந்துக்குச் சொந்தமான WCG2 வகையைச் சேர்ந்த மூன்று தொடருந்துப் பொறிகள் நகரிடை விரைவுத் தொடருந்தை மேற்குத் தொடர்ச்சி மலை மீது இழுத்துச் செல்லும் காட்சி.
இந்திய தொடருந்து இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு நிறுவனமாகும். 1853 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக காணப்படுகிறது. இந்திய தொடருந்து நிறுவனத்தில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கு இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். நாளுக்கு 14,444 தொடர்வண்டிகளை இயக்கும் இந்திய தொடருந்துக்கு 63,140 கிலோமீட்டர் நீளமான பாதை உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 5, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கையின் மலை நாட்டின் அம்பேவளையிலிருந்து தென்மேற்குத் திசையாக தோன்றும் காட்சி. நிலநடுக் கோட்டுக்கு அமையாக அமைந்திருந்தாலும் கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளபடியால் இங்கே ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகின்றது. இலங்கையில் பால் பண்ணைகள் அதிகளவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். கடந்த காலத்தில் இதை அண்மித்த பகுதிகளில் உருளைக் கிழங்குப் பண்ணைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன எனினும் சூழலுக்கு ஏற்பட்ட தீங்கு காரணமாக பின்னர் இவை அகற்றப்பட்டன. தொலைவில் தெரியும் முகடு இலங்கையின் முக்கிய வணக்கத்தலங்களுள் ஒன்றான சிவனொளிபாத மலையாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 29, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களின் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் அரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 21, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். கிழக்கிந்தியக் கம்பனியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு அக்டோபர் 16 1799 இல் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். படத்தில் ஒர் ஓவியரால் வரையப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தோற்றம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 14, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு நாள்மீன்பேரடை முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை. படத்தில் எசு.என் 1054 என அறியப்படும் 1054 ம் ஆண்டில் வெடித்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு. இப் படம் நாசாவால் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 7, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிர இறுதிப் போரில் மட்டும் கடந்த சில மாதங்களில் இதுவரை 20 000 மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. பன்னாட்டு மன்னிப்பு அவை இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளதாகவும், முழு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 300 000 மேற்பட்ட தமிழ்ப் பொது மக்கள் முகாம்களில் சிறைவைக்கப்பட்டு உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு
மே 3, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஐக்கிய நாட்டு அறிக்கை வன்னியில் சனவரி 2009 மாதம் தொடக்கம் குறைந்தது 6,432 தமிழர்கள் கொல்லப்பட்டும், 13,946 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறுகிறது.[1] எறிகணை வீச்சு, விமானக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், பட்டினிச்சாவு, சித்தரவதைச் சாவு என பல வழிகளில் இவர்கள் கொல்லப்பட்டார்கள். படத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 10, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்சு நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 17, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிரப் போரில் கடந்த சில மாதங்களில் இதுவரை குறைந்தது 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்காணோர் காயப்பட்டும், சுமார் 250 000 மேற்பட்டோர் முகாம்களில் சிறைவைக்கப்பட்டும் உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 31, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிர இறுதிப் போரில் மட்டும் கடந்த சில மாதங்களில் இதுவரை 20 000 மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. பன்னாட்டு மன்னிப்பு அவை இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளதாகவும், முழு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 275 000 மேற்பட்ட தமிழ்ப் பொது மக்கள் முகாம்களில் சிறைவைக்கப்பட்டு உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 5, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாக தமிழர் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றி தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாய பாடமாக அறிவித்துள்ளது. சுவாமி சிவானந்தா, யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் சீடரான சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி சச்சிதானந்தா, வேதாத்திரி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்க பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 12, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக புலம் பெயர் தமிழர்கள் 2009 ஏப்ரல் மாதம் தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். இந்த வகையில் ஐந்து ஈழத்தமிழர்கள் கனடா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோரில் ஒரு பகுதி படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது போன்று ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் முன்பாகவும், மேலும் பல நாடுகளிலும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழர்கள் நடத்தினர்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 19, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தடுக்க கோரியும் 2009ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைநகரான இலண்டனில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏப்ரல் 11, 2009 நடந்த ஒரு பேரணியில் 1,00,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஏ.எப்.பி கூறுகிறது. இலண்டன் நாடாளுமன்றம் முன்பாக இருவர் உண்ணாநிலைப் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர். படத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்ச் சிறுவர்களும் பெரியோரும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 26, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஐக்கிய நாட்டு அறிக்கை வன்னியில் சனவரி 2009 மாதம் தொடக்கம் குறைந்தது 6,432 தமிழர்கள் கொல்லப்பட்டும், 13,946 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறுகிறது.[2] எறிகணை வீச்சு, விமானக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், பட்டினிச்சாவு, சித்தரவதைச் சாவு என பல வழிகளில் இவர்கள் கொல்லப்பட்டார்கள். படத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 1, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

களரிபயத்து என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இன்று இது கேரளாவிலியே பெரிதும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த, வளர்த்த தமிழர் தற்காப்புக் கலைகளுல் இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்குச் சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் ஆகியவற்றையும், உடற்பிடித்தல், மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கலையாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 8, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிலம்பம் ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை. முற்காலத்தில் இக்கலையை மறவர்கள் பயன்படுத்தினர். சிலம்பம் பற்றி பழந் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உண்டு. படத்தில் கனேடியத் தமிழ் இளம் சிலம்பர்கள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 15, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. குதிரை போன்று மயில், மாடு போன்ற விலங்குகளின் கூடுகள் அணிந்தும் ஆடுவர். படத்தில் மயில், குதிரை கூடுகள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 22, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிளித்தட்டு அல்லது தாச்சி தமிழீழத்தில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். சிறுவர் முதல் பெரியோர் வரை இதை விளையாடுவார்கள். இது உடற் பயிற்சி மிகுந்த விளையாட்டு. எந்த வித உபகரணங்களும் இல்லாமல், ஒரு மைத்தானத்தில் கிளித்தட்டு விளையாடலாம். புகுதல், காத்தல், உச்சுதல், பாய்தல் என பல திறன்கள் இவ்விளையாட்டில் உண்டு.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 29, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மணக்கோலம் என்ற சொல்லில் வருவது போல கோலம் என்பது பொதுப்படையாகத் தோற்றம் அல்லது வடிவம் என்று பொருள்படும். எனினும் கோலம் என்று சொல்லும்போது, பெரும்பாலும் நினைவிற்கு வருவது, வீட்டு வாயில்களிலே அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் கோலங்களே ஆகும். கோலம் போடுதல் தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு ஆகும். படத்தில் தமிழ்நாட்டில் ஒரு சிறுமி கோலம் போடுகிறாள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 1, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கைப் படைத்துறை முன்னெடுக்கும் தமிழர் இனவழிப்பு. இச் சிறுவன்/சிறுமி சனவரி 29, 2009 அன்று இலங்கை அரசால் 'பாதுகாப்பு வலையம்' என அறிவிக்கப்பட்ட பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தான். அன்று 44 மக்கள் கொல்லப்பட்டு, 178 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். [3]


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 8, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கைத் தமிழர் இனவழிப்பைக் கண்டித்து உலகத் தமிழர்கள் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஐந்து பேர் தீக்குளித்து, மேலும் பலர் தற்பலி கொடுக்க முனைந்து தமது எதிர்ப்பைக் வெளிப்படுத்தியுள்ளார்கள். படத்தில் நோர்வேத் தமிழர் பெப்ரவரி 5, 2009 அன்று நடத்திய எதிர்ப்புப் போராட்டம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 15, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளை வான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். 1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கையின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும். இவ்வாறு கடத்தப்படுவர்களில் பெரும்பான்மையானோர் ஈழத் தமிழர்கள் ஆவர். படத்தில் வெள்ளை வான் குழுவிற்கு தங்களின் மகளை பறிகொடுத்த தாயும் உறவினரும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 22, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நவீன நடனம் என்பது 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குலகில் விருத்தி செய்யப்பட்ட நடனப்பாணி ஆகும். மேற்குநாட்டு செவ்வியல் நடனத்துக்கு (Ballet) எதிர் வடிவமாக இது தோன்றியது. செவ்வியல் நடனத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் மிகுந்த நுணுக்கங்கள், அணிகலன்கள், காலணிகள் ஆகியவற்றை விலக்கி, படைப்பாறல் மிக்க தனி மனித வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து இந்நடனம் வளர்ந்தது. படத்தில் நவீன நடனமாடும் கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 4, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பேரடை என்றும் நாள்மீன்பேரடை (Galaxy) என்றும் குறிக்கப்பெறுவது பெரும் நாள்மீன் கூட்டம் ஆகும். ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். இன்று கணக்கிடக்கூடிய பேரடைகள் நூறு பில்லியனுக்கும் (1011) மேல் இருக்கும். ஒவ்வொரு நாள்மீன் பேரடையும் சில ஆயிரம் முதல் பன்னூறாயிரம் ஒளியாண்டுகள் அளவு விட்டம் கொண்டிருக்கும். பேரடைகளுக்கு இடையேயான வெளியில் மிககுறைவான அளவில்தான் அணுப்பொருள்கள் இருக்கும். ஒரு கன மீட்டரில் ஓர் அணு என்னும் விதமாக மிக அருகியே விண்துகள்கள் இருக்கும். படத்தில் அன்டென்னே பேரடை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 11, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 18, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 25, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விஜயகுமார் தனுசன், இலங்கைப் படைத்துறை படுகொலை செய்த ஒரு பிஞ்சு. [4]


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு