விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 16, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

ஐரோப்பிய ஈ பிடிப்பான் என்பது ஈ பிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.

கூகபுரா 81
தொகுப்பு · சிறப்புப் படங்கள்