விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 3, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிக்கரடி (துருவக் கரடி) புவியின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்ல கொன்றுண்ணிப் பாலூட்டி. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20,000 பனிக்கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டு அழிந்துவரும் இனங்களுள் இவை சேர்க்கப்பட்டுள்ளன. காணொளியில் இரு பனிக்கரடிகள் விளையாட்டுக்காக சண்டையிடுவது காட்டப்பட்டுள்ளது.

காணொளி: புரோக்கன் இனாக்ளோரி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்