விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 21, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{texttitle}}}

பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. மலர்களில் தேன் குடிக்கும் வானம்பாடி போன்ற பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு. இவ்வாறு பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்