விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 17, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

படத்தில் உள்ளது சாரசு கொக்கு (Grus antigone), இவை இந்தியாவின் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை 6 அடி உயரம் வரை வளரும். நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கறுத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஏனைய கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக வாழ்கின்றன. சாரசுகள் பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. தரையிலேயே கூடு கட்டும். ஆண், பெண் இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்