உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு04

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரூவிட்(ProveIt) நீட்சி இயங்கவில்லை

[தொகு]

இதுநாள் வரை நான் கட்டுரைகளை தொகுக்கும்போது புரூவிட் கருவியைப் பயன்படுத்தி மேற்கொள்கள் தந்துவந்தேன், தற்போது எனக்கு தொகுத்தலின்போது புரூவிட் நீட்சி இல்லை. எனக்கு மட்டும்தான் இந்த நிலையா அல்லது நீட்சி வேறு எங்காவது இடம் மாற்றப்பட்டுள்ளதா என தெளிவுபடுத்தவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:06, 12 செப்டம்பர் 2013 (UTC)

Reload செய்து பார்க்கவும். சில சமயம் ஒழுங்காக லோட் ஆகாமல் இருந்தால் வலைத்திரை கீழ் இடது மூலையில் ஆச்சிரியக்குறி இருக்கும். அதை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஆச்சரியக்குறி வராமல் புரூவிட் வராமல் இருந்தால் கூறவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:55, 12 செப்டம்பர் 2013 (UTC)

ஆச்சரியக்குறி இல்லை :( நீட்சி இயங்கவில்லை. நான் லினக்சு இயங்குதளத்தில் குரோமியம் மற்றும் ஃபயர்பாக்சு உலாவிகளைப் பயன்படுத்துகிறேன், விக்கிப்பீடியாவில் என் விருப்பத்தேர்வுகளில் புரூவிட்-ஐ enable செய்துள்ளேன். புகுபதிகை செய்தும், புகுபதிகை செய்யாமலும் கூட தொகுத்துப் பார்த்தேன் பலனில்லை. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:05, 13 செப்டம்பர் 2013 (UTC)
எனக்கும் இந்தக் கருவி சில நாட்களாகவே இயங்கவில்லை. நான் விண்டோஸ், ஃபயர்பாக்சு மற்றும் இண்டெர்னெட் எக்ஸ்புளோரர் உலாவிகளைப் பயன்படுத்துகின்றேன். விருப்பத்தேர்வுகளில் புரூவிட் enable செய்யப்பட்டுள்ளது--கலை (பேச்சு) 12:24, 18 செப்டம்பர் 2013 (UTC)
:( எனக்கும் தான். நான் கூகிள் குரோம் உலாவியைப்பையன்படுத்துகிறேன். ப்ரூவ் இட் வேலைசெய்யவில்லை அத்துடன் விரைவுபகுப்பியும் வேலை செய்யவில்லை :( --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:56, 18 செப்டம்பர் 2013 (UTC)
நான் புரூவ் இட் பயன்படுத்துவதில்லை. விரைவுபகுப்பியை பயன்படுத்துகிறேன். சில நாட்களாக விரைவுபகுப்பி வேலை செய்யவில்லை கவனிக்கவும் --74.116.63.13 15:15, 18 செப்டம்பர் 2013 (UTC)
FF, IE இல் உங்களுக்கு வேலை செய்கிறதா ? --Natkeeran (பேச்சு) 15:19, 18 செப்டம்பர் 2013 (UTC)

இந்தக் கருவி முன்னர் ஒரு தடவை இயங்காமல் இருந்து, பின்னர் இயங்கி வந்தது. தற்போது மீண்டும் இயங்கவில்லை. நான் விண்டோசில், ஃபயர்பாக்சு, இண்டெர்னெட் எக்ஸ்புளோரர், கூகிள் குரோம் மூன்று உலாவிகளிலும் முயற்சி செய்து பார்த்தேன்.--கலை (பேச்சு) 08:00, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியினங்களுக்கான வகைப்பாட்டியல் பெட்டி

[தொகு]

விக்கியினங்களின் வகைப்பாட்டியல் குறிப்புகள் பல தாவரவியல் உயர்நடுவங்களில் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. ஏனெனில், அதன் தரம், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகிறது. அதன் வளத்தை பயன்படுத்தும் வகையில், வகைப்பாட்டியல் பெட்டி அமைக்கக் கோருகிறேன். எடுத்துக்காட்டு தரவு -

Regnum: Plantae (தாவரங்கள்)
Cladus: Angiosperms
(பூக்கும் தாவரங்கள்)
Cladus: Eudicots
Cladus: Core eudicots
Cladus: Rosids
Cladus: Eurosids I
Ordo: Fabales
Familia: Fabaceae
Subfamilia: Caesalpinioideae
Tribus: Caesalpinieae
Genus: Acrocarpus
Species: Acrocarpus fraxinifolius

மேற்கண்ட குறிப்புகள், இங்கிருந்து எடுக்கப்பட்டது. Cladus: = உயிரினகிளை என்பது பொருள். தற்போது (தரப்படுத்தப்படாத) என வருகிறது. அக்குறிப்பு தவறு. அந்நிலை10-15 வருடங்களுக்கு முந்தைய நிலை ஆகும். தவறான குறிப்புகளை தர விரும்பாததால், இக்கோரிக்கைய முன்வைக்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 03:02, 13 செப்டம்பர் 2013 (UTC)

எழுத்துப்பிழை

[தொகு]

விக்கிப்பீடியாவில் நான் எழுதுகையில், துணைக்கால் (ா), எந்த எழுத்துடன் எழுதினாலும், ரவாக மாறி தெரிகிறது. நிறைய கட்டுரைகளில் எழுதிய பின்னரே கண்டேன். பிழை என்ன என்று சொல்லுங்களேன்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 17 செப்டம்பர் 2013 (UTC)

படத்தில் எது என்று தெரியவில்லையே?. இன்னும் வருகிறதா?--சோடாபாட்டில்உரையாடுக 09:54, 30 செப்டம்பர் 2013 (UTC)
பயனர்:செல்வா என்பது ”பயனர்:செல்வர” என்று மாறிப்போயிருப்பதைக் கவனியுங்கள். இது ஏற்கனவே இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால், எப்போதாவது தான் நிகழும். துணைக்கால் திடீரென்று ”ர”வாகி இருக்கும். ஒருங்குறியில் துணைக்காலைக் கொண்டு ”ர” வடிவமைக்கப்பட்டிருக்குமோ? அல்லது மொசில்லாவில் பிழையா? -00:31, 2 நவம்பர் 2013 (UTC)

Call for Wikimedia tech projects needing contributors

[தொகு]

தொகுக்கும் போது வார்ப்புருக்கள் பட்டியலைக் காணவில்லை

[தொகு]

தொகு பெட்டியின் கீழே வாப்புருக்கள் பட்டியல் இருப்பது வழமை. ஆனால் இப்பொழுது இல்லை. இது நீக்கப்பட்டுள்ளதா?--Natkeeran (பேச்சு) 03:16, 22 செப்டம்பர் 2013 (UTC)

Mediawiki:Edittools ஐ தானே கூறுகிறீர்கள். இன்னும் இருக்கிறதே--சண்முகம்ப7 (பேச்சு) 18:43, 23 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன் கூறுவது பொதுவான கட்டுரைகளையே. கட்டுரைகளை முழுமையாகத் தொகுக்கும் போது அடியில் வார்ப்புருக்களுக்குத் தொடுப்பு வருகிறது. ஆனால் அது வழக்கமான நீல எழுத்தில் இப்போது வருவதில்லை. மேலும், கட்டுரையின் ஒரு பகுதியைத் தொகுக்கும் போது வார்ப்புருக்களுக்குத் தொடுப்பு வருவதில்லை. ஆனாலும், முன்தோற்றத்தைக் காட்டும் போது வருகிறது.--Kanags \உரையாடுக 21:21, 23 செப்டம்பர் 2013 (UTC)
வார்ப்புருகளுக்கான தொடுப்பு என்று நீங்கள் எதனை கூறுகிறீர்கள் என புரியவில்லை, Mediawiki:Edittools இதில் உள்ளவையா? (இப்பக்கத்தில் உள்ளவைதான் கட்டுரையை தொகுக்கும் போது அடியில் வரும்) வேறா? screen shot கொடுக்க இயலுமா?--சண்முகம்ப7 (பேச்சு) 08:10, 24 செப்டம்பர் 2013 (UTC)
இணைத்திருக்கிறேன். "இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்:" என்பதைச் சொடுக்க பட்டியல் கீழிறங்கி வரும்.--Kanags \உரையாடுக 10:12, 24 செப்டம்பர் 2013 (UTC)
தமதமாகப் பின்தொடருவதற்கு மன்னிக்க. கனக்சு பதில் தந்து விட்டார். நன்றி. --Natkeeran (பேச்சு) 17:54, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விரைவு பகுப்பி (hotcat) வேலை செய்யவில்லை

[தொகு]

IE, FF, Chrome என்று எல்லா உலாவிகளைகளையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன். Windows8 ல் IE, Chrome; Windows7ல் IE, FF, Chrome பயன்படுத்தினேன். முன்பு இது நன்றாக வேலை செய்தது பல முறை புழங்கியுள்ளேன். கொஞ்ச நாளா பயன்படுத்தவில்லை இப்ப படுத்துது :)) --குறும்பன் (பேச்சு) 21:05, 25 செப்டம்பர் 2013 (UTC)

Windows7ல் FF, உபன்டு 12.04 ஆகிய இயக்குதளங்களிலும் எனக்கு சரியாகவே இயங்குகிறது. மேலும், வின்டோசில், தமிழ்99 எழுதும் முறையை, எகலப்பை வழியை செயற்படுத்தும் போது, சீராக செயற்படவில்லை. ஆனால், உபன்டுவில் எந்த இடரும் தோன்றுவதில்லை. நமது பணிகளுக்கு உபன்டு எளிதாக உள்ளது. புதியவர் என்றால் லினக்சு மிந்(linuxmint-XFCE) இதுபோல இடர்கள் எதுவும் இராது.--≈ உழவன் ( கூறுக ) 01:59, 26 செப்டம்பர் 2013 (UTC)
குறும்பன் என்ற கணக்குக்கு இது வேலை செய்யவில்லை, இன்னொரு கணக்கு உருவாக்கினேன் அதற்கு வேலை செய்கிறது. --குறும்பன் (பேச்சு) 19:25, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கணிதக் குறியீடுகள் சிக்கல்

[தொகு]

புதிய Mathjax நிரல் வசதியால் கணிதக் குறியீடுகளைக் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. காண்க விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல்.

இதனைத் தவிர்க்க உங்கள் விருப்பத் தேர்வுகளில் > தோற்றம் > கணிதம் >MathJax (experimental; best for most browsers) என்னும் தெரிவினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சிக்கல் எழாது. இந்தத் தெரிவு சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் (புகுபதிகை செய்யாதவர்க்கும்) டீஃபால்ட்டாக மாறுவதற்கு வழு பதிய வேண்டும் (சமூக ஒப்புதலுடன்). இந்த வசதி கணித நிரல்கள் png படிமமாகத் தோன்றுவதற்கு பதில் வரி (text) ஆகத் தோன்ற செய்யப்பட்ட புதிய வசதி (படியெடுத்து பிற மென்பொருட்களில் ஒட்ட வசதியாக). இப்போதைக்கு இதை சரி செய்ய பக்சில்லாவில் ஒரு வழு பதிந்துள்ளேன். ஒரு வாரத்துக்குள் சமூக ஒப்புதல் பெற்று அனைவருக்கும் Mathjax default ஆக வரும்படி மாற்றம் செய்து விடுகிறேன்.-

விக்கி இலச்சினை தெரியவில்லை

[தொகு]

தமிழ் விக்கியின் இலச்சினை(10 ஆண்டு கொண்டாட்ட இலச்சினை / பழைய இலச்சினை) விக்கியின் எந்தப் பக்கத்திலும் தெரியவில்லை, இலச்சினை இருக்கும் இடம் காலியாக இருக்கிறது விரைந்து கவனிக்கவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 04:45, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Anton (பேச்சு) 05:02, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

20:16, 2 அக்டோபர் 2013 (UTC)

ஓரே மாதிரியான தோற்றம்

[தொகு]

தமிழ்விக்கிப்பீடியாவின் இடபக்கத்தில் உள்ள தமிழ்விக்கித்திட்டங்கள், கருவிகள், பிற, உதவி, மொழிகள் என்பன சுருங்கி விரியும் அமைப்புடையதாக அழகாக உள்ளன. இப்பட்டியல்களை அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் அமைக்கக் கோருகிறேன். இதனால் அனைத்து தமிழ் விக்கிமீடியா திட்டங்களிலும், பக்கத்தோற்றம் ஓரே மாதிரியாக அமைந்து புதிய பயனர்களுக்கு நெருக்கத்தையும், எளிமையையும், சீர்மையையும், நிலைநாட்டும். மேலும், பல்வேறு தமிழ்திட்டங்களில் பங்கேற்கும் பலருக்குமிது விரைவாகவும் உதவும். செயற்படுத்துக. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 18:43, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அத்துடன், தமிழ் விக்கியில் உள்ளது போன்று கருவிப்பெட்டியின் கீழ் உள்ள பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம் என்ற கருவியை ஏனைய தமிழ் விக்கித் திட்டங்களிலும் சேர்க்க முடியுமா?--Kanags \உரையாடுக 01:23, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
முடியுமென்றே எண்ணுகிறேன். நினைவூட்டியமைக்கு நன்றி. --≈ உழவன் ( கூறுக ) 02:54, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்த் தட்டச்சிற்குத் திரை விசைப்பலகை

[தொகு]

திரை விசைப்பலகை(on Screen Keyboard) என்பது தட்டச்சு செய்வதற்குத் திரையிலேயே மெய்நிகர் பலகையாகக் காட்சி தரும் பலகையாகும். அம்மாதிரி தமிழ்ப் பலகைகள் தமிழ் விக்கிப்பீடியாவுற்குப் பயன்படுமா என்று தெரியாது இருந்தும் தகவலுழவன் மற்றும் ஸ்ரீனிவாசன் அவர்களின் விருப்பதிற்கிணங்க சிறு நீட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவிக்கொள்ளும் வழிமுறை இப்பக்கதில் உள்ளது. தற்போதைக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் பெரிய வசதிகளையெல்லாம் தற்போதைக்கு எதிர்பார்க்கமுடியாது. இங்கு ஒலிபெயர்ப்பு[Phonetic] மற்றும் தமிழ்99 ஆகிய பலகைகள் மட்டும் உள்ளன. நவீன உலாவிகளில் செயல்படுகிறது; தட்டச்சும் செய்கிறது. இந்நீட்சி பயன்படுமானால் இதனை மேலும் மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளையும், இந்நீட்சியிலுள்ள வழுக்களையும் இங்கு சுட்டிக்காட்டுங்கள். தமிழ்99 பலகையில் எனக்குப் பரிட்சியம் இல்லாததால் அதனை முழுவதும் சோதிக்க முடியவில்லை அதனால் அதனை நுணுக்கமாகச் சோதித்து தட்டச்சுப் பிழைகளைச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறேன். வேறு உலாவி சார்ந்து அல்லது இயங்குதளம் சார்ந்த நுட்பச் சிக்கல் என்றால் அதன் விபரங்களுடன் தெரியப்படுத்துங்கள். தீர்ப்பதற்கு முயல்வோம்

கூகிள் வழங்கும் மெய்நிகர் விசைப்பலகையில் ஒலிபெயர்ப்புப் பலகை மட்டுமே உள்ளது(தமிழ்99 இல்லை) மற்றும் கூகிள் கருவிகளை அந்நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளும் ஆகையால் தனியான விசைப்பலகையே இந்நீட்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகிள் நீங்கலாக வேறு மெய்நிகர் தமிழ் விசைப்பலகை கட்ஜெட் வழங்கும் பிற சேவைகள் இருந்தாலும் குறிப்பிடலாம். சிறப்பாகயிருந்தால் அப்பலகையை இந்த நீட்சியில் இணைத்துக் கொள்ளலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • நீச்சலாரே! மிக்க மகிழ்ச்சி. நான் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துபவன். எனது பெயரை குறிக்க வேண்டுமென்பதில்லை. அப்படியே குறிப்பிட்டாலும் 'அவர்கள்'... போன்ற சொற்களைத் தவிர்க்கவும். இதனை விக்சனரியிலும் நிறுவ அடிகோலுங்கள். .--≈ உழவன் ( கூறுக ) 02:01, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்சனரியில் நிறுவ அப்பக்கத்தில் உள்ள அதே வரியை இங்கு இட்டு சேமித்துக் கொண்டால் போதும். ஆனால் இது தொடக்க நிலைதான் என்தால் அதிக வசதிகள் இல்லை என்று சண்டைக்கு வரவேண்டாம் :)--நீச்சல்காரன் (பேச்சு) 02:18, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வழுக்களை, உங்கள் தொடக்கத்திட்டப்பகத்திலேயே பதிவு செய்கிறேன். தமிழ் எழுத தமக்குள்ளே 'சண்டையிட்டுக்' கொள்பவர்களே ஏராளம். அவர்களின் மனதுள் மிகப்பெரிய மகிழ்ச்சி துள்ளலை உருவாக்கப் போகின்றீர்கள். இதுபற்றிய பிறரின் கருத்துக்களை, அப்பக்கத்திலேயே எழுதுவார்கள். விக்சனரியில் நீங்களே செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே கூறுகிறேன். 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!' --≈ உழவன் ( கூறுக ) 02:24, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரரே!, திரை விசைப்பலகையை என்னுடைய பயனர் வெளியில் இட்டு சோதித்துப் பார்த்தேன், சிறப்பாக உள்ளது. முழுவதுமாக தயார் செய்ததும் பயனர்:Jayarathina/iwt போல ஒரு பக்கத்தில் விளக்கங்களை தாருங்கள். (தற்போது சோதனை முறையில் இருப்பதால் இப்பக்கம் அவசியமன்று. ) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:34, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்களுக்கு வழிகாட்டும் TOUR கருவி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருகின்ற ஒவ்வொரு புதுப் பயனர்களும் எங்கு செல்வது, எவ்வாறு தொகுப்பது, எவற்றை எழுதுவது என்பது குறித்தான பல வழிகாட்டுதல்கள் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறைந்தளவு பங்களிப்பாளர்களை கொண்டிருக்கும் நாம், பயனர் வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அதிகமான கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் பயனர் வரவேற்பு வார்ப்புருவை இடுவதற்கும், ஒவ்வொரு பயனர்களுக்கும் மீண்டும் மீண்டும் தொகுத்தல் குறித்தான வழிகாட்டல்களை எல்லா நேரங்களிலும் நம்மில் ஒரு ஆர்வலர் தனது உழைப்பினை கட்டுரையாக்கம் வழி செலுத்த இயலாமல் இருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்குகின்ற நண்பர்கள் தற்போது விக்கிப்பீடியாவிற்கென கருவிகள் அமைத்து தருவதில் ஈடுபாட்டுடன் இருப்பதால் கீழ்க்கண்ட எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

  1. புகுபதிகை செய்த பயனர்களை கைபிடித்து அழைத்து சென்று விக்கிப்பீடியாவை சுற்றிக்காட்டும் ஒரு கருவி தேவை. முகநூல் போன்றவற்றில் முதல் முறை புகுபதிகை செய்யும் பொழுது இவ்வாறான Tour அமைப்புகள் இருக்கின்றன. மணல்தொட்டியில் தொகுத்தல், பயனர் பக்கத்தில் தங்களைப் பற்றிய குறிப்புகள் சேர்த்தல் போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளை மட்டும் தற்போது வழிகாட்டினால் நலம். முழுவிக்கிப்பீடியாவையும் இம்முறையின் மூலம் பயனர் அறிய இயலாது என்றாலும், தொடக்கத்தில் வெகு எளிமையாக பங்களிக்க தொடங்கலாம்.(ஏறத்தால இதே நோக்கம் கொண்டு வழிகாட்டல் காணொளிகள் குறித்து முன்பு உரையாடியுள்ளோம். குறைந்த இணையதளம் வேகம் உள்ளவர்களுக்கும், காணொளிகளை காணாமல் வருகின்றவர்களுக்கும் இம்முறை உபயோகமாக இருக்கும்.)
  2. புதுப்பயனர்களை வரவேற்கும் {{anonymous}}{{புதுப்பயனர்}} போன்ற வார்ப்புருகளை இடுகின்ற தானியங்கள் தேவை.

இவை குறித்தான தங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் மறவாமல் குறிப்பிடுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:28, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:53, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தானியங்கியை உபயோகப்படுத்தி புது பயனரை வரவேற்பு செய்வது குறித்து சென்ற வருடம் உரையாடல் நிகழ்ந்ததாக நினைவு. அப்பொழுது, தமிழ்விக்கி சமூக வளர்ச்சிக்கு ஒரு பயனரே மற்றொருவரை வரவேற்பது நல்லது என்ற கருத்து உரையாடல்களில் பரவலாகக் காணப்பட்டதாக எண்ணுகிறேன். அப் பக்கத்‌தை தேடி கண்டுபிடிக்க முயன்றேன், முடியவில்லை. எதற்கும் இரவியைக் கேட்டு பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 17:37, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கருத்துரைக்கு நன்றி நண்பரே. இரவி அவர்களிடம் இதுகுறித்து உரையாடுகிறேன். தானியங்கி உபயோகம் குறித்த ஐயமோ, விக்கிப்பீடியர்களுடன் புதுப்பயனர்களுடான தொடர்பு குறித்த ஐயமோ ஏற்பட்டிருக்கலாம். தானியங்கி மூலம் இயங்கும் பொழுதும் புதுப்பயனர் வார்ப்புருவுடன் இணைந்த பயனரின் கையெழுத்தினை இட வழிகை செய்யும் தானியங்கி உருவக்கப்பட்டால் தீர்வு கிடைக்கும். இருப்பினும் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:48, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு எழுத்துருக்களில் தமிழெழுத்துக்கள் பல இல்லை

[தொகு]

அனைத்து மொழி விக்கிப்பீடியாவிலும் தொகுப்புப் பெட்டியின் கருவிப்பட்டையிலுள்ள சிறப்பு எழுத்துருக்கள் என்ற விரிபட்டியலில் தமிழ் மொழியின் கீழ் [Editor -> Special Characters Menu -> Tamil] தமிழ் எண்கள் மட்டுமே உள்ளன பிற முக்கிய எழுத்துக்கள் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துருக்களில் எல்லாம் அவ்வெழுத்துருவின் அனைத்து வடிவங்களும் உள்ளன. இதை விக்கிப்பீடியாவின் நுட்பப் பிரிவின் கவனத்திற்கு இதற்கு முன் எடுத்துச் சென்றதுண்டா? அல்லது செல்வோமா? --நீச்சல்காரன் (பேச்சு) 00:53, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


உதவி தேவை

[தொகு]

இப்பக்கத்தில் சமய இலக்கியம் என்ற தலைப்பிற்கான பகுதி, பக்கத்தில் முழுமையாக வரவில்லை. இதனுடைய நிரலும் பிற தலைப்புகளை போலவே உள்ளது, சரி செய்ய உதவ வேண்டுகிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:31, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நீச்சல்காரன் (பேச்சு) 08:01, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு:Wantedpages இற்றைப்படுத்துதல்

[தொகு]

இங்கு இப்பக்கத்துக்கான இற்றைப்படுத்தல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இங்கே உள்ளத் தரவுகள் தற்சமயம் இற்றைப்படுத்தப்படமாட்டாது. என்று கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இப்பக்கம் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இப்பக்கம் இற்றைப்படுத்தப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும். இயலுமா? --அஸ்வின் (பேச்சு) 07:26, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


விக்கிமேற்கோள் இலச்சினை மாற்றம்

[தொகு]

விக்கிமேற்கோள் இலச்சினை மாற்ற வேண்டியுள்ளது. புதிய இலச்சினை இத்துடன் இணைத்துள்ளேன். விரைந்து மாற்றவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:31, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிமேற்கோள் புதிய இலச்சினை தரவேற்றம் செய்ய வழு பதிந்த பிறகு, தற்போது சரியாக மாற்றப்பட்டு விட்டது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:27, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஒருங்குறியில் குழப்பம்

[தொகு]

அண்மைக்காலத்தில் புதிய பயனர்கள் பலர் கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிலர் எழுதும் கட்டுரைகளில் எழுத்துக்கள் சிதறி வருகின்றன. எடுத்துக்காட்டாக: தியாகி ெவள்ைளயத்தா. இது எதனால் ஏற்படுகிறது? அறிந்தவர்கள் விளக்குங்கள்.--Kanags \உரையாடுக 05:12, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சாதாரணமான வெ என்பதை உள்ளிட (பாமினியில்) முதலில் "n"வும் பின்பு "t"யும் உள்ளிடப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள உள்ளீட்டுக் கருவி எதிர்மறையாகச் செயல்படுகிறது. முதலில் "t"வும் பின்பு "n"யும். அவ்வாறே ளை என்பதை உள்ளிட முதலில் "i"வும் பின்பு "s"யும் உள்ளிடப்பட வேண்டும்.--Anton·٠•●♥Talk♥●•٠· 05:38, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நான் யூகிப்பது அவர்கள் யுனிக்கோட் அல்லாத உருவில் இருந்து எதோவொரு கருவியில் எழுத்துபெயர்த்து இங்கிடுகிறார்கள். பழைய எழுத்துருக்கள் ஒவ்வொரு வடிவத்திற்கும் தனியான குறியீடு கொண்டு, எழுத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அவ்வுருக்கள் pdf கோப்பில் முதலில் ஒற்றை/இரட்டைக்கொம்பை இட்டு பின் உயிர்மெய் வருமாறு சேமிக்கப்பட்டிருக்கும். அவை யுனிக்கோடாக மாறும் போது அந்த அனுசரணையை எழுத்துபெயர்ப்பி கண்டுகொள்ளாமல் இருந்திருக்கும். அவர்களின் தட்டச்சுக் கருவியில் பிழையாக அடித்திருக்க வாய்ப்புக் குறைவே.--நீச்சல்காரன் (பேச்சு) 05:45, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இச்சிறு கருவிகளில் ஒரு ஒருங்குறி சீராக்கி[Tamil Unicode unifier] ஒன்றை அமைத்துள்ளேன். இதில் இத்தகைய கட்டுரைகளின் ஒருங்குறிகளைச் சீராக்கிக் கொள்ளலாம். சிறப்பான கட்டுரையெனில் விக்கியில் நீக்கத் தேவையில்லை --நீச்சல்காரன் (பேச்சு) 19:17, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 00:36, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்.--Kanags \உரையாடுக 21:32, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சில வாக்கிய சீர்திருத்தங்கள்

[தொகு]

தவியில் ஒற்றுப் பிழையாகவும், கருத்து முரணாகவும், ஆலோசனையாகவும் தோன்றியவற்றை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன் சரியெனில் அணுக்கம் உள்ளவர்கள் திருத்திவிங்கள்.

தொகு பக்கத்தில் உள்ளவை

[தொகு]
  • இந்த ஆக்கத்தைச் சேமிப்பதன் மூலம் நீங்கள் Creative Commons Attribution/Share-Alike License 3.0 மற்றும் GFDL பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு உங்கள் பங்களிப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
  • இந்த ஆக்கத்தினை மறுபயன்பாடு செய்பவர்கள், குறைந்த பட்சம் இந்தப் பக்கத்துக்கு ஒரு மீத்தொடுப்பு தருவதன் மூலம் பங்களிப்பு உங்களுடையது என்று அறிவித்துவிட்டு, இதனைப் பயன்படுத்தவும் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
  • தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்குச் செல்லுங்கள்.
  • நீக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
  • நம்பகத்தன்மையைப் பிறர்
  • அத்துடன் நீங்களே இதை எழுதியதாகவும் வேறு பொதுக் களத்திலிருந்தோ அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்தோ பிரதி எடுக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறீர்கள்.

    இதில் கருத்து முரண் இருப்பதாகத் தெரிகிறது. விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்து பிரதி எடுக்க உரிமை உள்ளது என்று நினைக்கிறேன்.
  • Creative Commons Attribution/Share-Alike License 3.0 உரிமத்திற்கு இணைப்பாகப் புற இணையத்தளம் உள்ளது அதற்கு மாற்றாக அகத்தளமான ஆங்கில விக்கிப்பக்கத்திற்கு இழுத்துவிடலாம்

Y ஆயிற்றுஅத்துடன் நீங்களே இதை எழுதியதாகவும் வேறு பொதுக் களத்திலிருந்தோ அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்தோ பிரதி எடுக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறீர்கள். என்பது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: You agree that a hyperlink or URL is sufficient attribution under the Creative Commons license. --Anton·٠•●♥Talk♥●•٠· 07:22, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வரலாறு பக்கத்தில் உள்ளவை

[தொகு]
நன்றி நீச்சல்காரன். எந்த மீடியாவிக்கிச் செய்தி என்று இணைப்பு தாருங்கள், மாற்றிவிடலாம். உங்களுக்கு அணுக்கம் இருந்தால் நீங்களே நேரடியாக மாற்றிவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:52, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
எந்த மீடியாவிக்கி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது பொதுவான பக்கமே, எந்தக் கட்டுரையையிலும் தொகு சுட்டியை அழுத்தினால் வரும் பக்கம் மற்றும் வரலாற்றைக் காட்டவும் என்ற சுட்டியை அழுத்தினால் வரும் பக்கங்களின் உள்ளடக்கமே. மீடியாவிக்கி வெளியில் திருத்த எனக்கு அணுக்கமில்லை--நீச்சல்காரன் (பேச்சு) 06:09, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மீடியாவிக்கிச் செய்தியில் மாற்ற வேண்டுமா, translatewiki-இல் மாற்ற வேண்டுமா தெரியவில்லை. தேடிப் பார்க்கிறேன், நீச்சல்காரன். வேறு யாருக்கும் தெரிந்திருந்தால் உதவவும். -- சுந்தர் \பேச்சு 06:30, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி அன்ரன். -- சுந்தர் \பேச்சு 07:36, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • மிகப் புதிய - இது வரலாறு பக்கத்தில் உள்ளதா?
  • &action=info#mw-pageinfo-watchers இதன் முழு URLஐத் தரமுடியுமா?

--Anton·٠•●♥Talk♥●•٠· 07:54, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உடனேதிருத்தங்களைப் புரிந்ததற்கு நன்றிகள். வரலாறு பக்கத்தில் அதிக திருத்தங்கள் இருக்கும் போது இத்தொடர் தெரியும் [8]. கவனிப்பவர்கள் காட்டும் உரலி இதோ [9] மேலும் ஆங்கில விக்கியிலும் அதே இடத்தில் இந்த இணைப்பைப் பார்க்கலாம் --நீச்சல்காரன் (பேச்சு) 02:00, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. உரலி சரியாகிவிட்டது. மிகப் புதிய எங்கு உள்ளதெனக் கண்டறிய முடியவில்லை. மீண்டும் முயல்கிறேன். அல்லது வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:12, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மிகப் புதிய, Y ஆயிற்று..betawiki:MediaWiki:Histlast/ta ஓரிரு நாட்களில் மாறிவிடும்--சண்முகம்ப7 (பேச்சு) 07:47, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

எனது கட்டுரை டி. பிருந்தாவின் திருத்த வரலாறு பக்கத்துக்குப் போய் பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் என்பதைச் சொடுக்கினால் Page not found (404) பக்கம் வருகிறது. இதே போல் எனது வேறு கட்டுரைகளிலும் இவ்வாறே நிகழ்கின்றது. இத்தகவலைப் பார்க்க என்ன செய்யலாம் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 01:32, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]

toolserverல் உள்ள அனைத்து கருவிகளுமே சரியாக வேலை செய்யமால் போகலாம். பார்க்க m:Future of Toolserver. இக்கருவி wmflabsக்கு மாற்றப்பட்டதாக தெரியவில்லை. அவ்விணைப்பை நீக்க வேண்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 18:39, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நன்றி, சண்முகம். Uksharma3 (பேச்சு) 01:59, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மீடியாவிக்கி:Sitenotice

[தொகு]

தற்போது உள்ள அறிவிப்புகள், புகுபதிகை செய்தவருக்கு மட்டுமே காட்சிதருகிறது. புகுபதிகை செய்யாதவர்களுக்குப்(இவர்கள் தான் அதிக பார்வையாளர்கள்) பழைய அறிக்கைதான் இன்னும் தெரிகிறது. நாம் வேறு எங்காவது திருத்த வேண்டுமா? அல்லது மீடியாவிக்கி:Sitenoticeல் கூறியவாறு ஐடி கொண்டு திருத்த வேண்டுமா என்று பார்க்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீச்சல்காரன் கேட்ட கேள்வியை இங்கு பதிகிறேன். --Natkeeran (பேச்சு) 01:44, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மீடியாவிக்கி:Sitenotice id இற்றை செய்ய வேண்டும் என்று இப்போதுத்தான் பார்த்தேன். கவனக் குறைவு. நன்றி நீச்சல்காரரே. --Natkeeran (பேச்சு) 01:47, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புகுபதிகை செய்யா பயனர்களுக்கான அறிவிப்பை மீடியாவிக்கி:Anonnotice பக்கத்தில்இ டவேண்டும்.--இரவி (பேச்சு) 01:51, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

09:35, 21 அக்டோபர் 2013 (UTC)

த.வி.வில் தானியக்கத் தேவை

[தொகு]

விக்கிப்பீடியாவில் சில வகை தானியக்கத் தேவை இருப்பதாக யூகிக்கிறேன். அவற்றைப் பட்டியல் இடுகிறேன், அவற்றினைப் பூர்த்தி செய்யும் ஒரு தானியங்கியையும் முன்வைக்கிறேன். தேவையும் முக்கியமும் இருந்தால் தானியக்க அணுக்கம் பெற்று அந்தத் தானியங்கியைப் பயன்படுத்துவோம். மேலும் தானியக்கக் கூறுகள்/தேவைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். முடிகின்ற செயல்களை அவ்வகையில் முடிக்கலாம்.

  1. தற்போதைக்குத் தினமும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியைப் புள்ளிவிவரத்தினை WP:MSபக்கத்தில் பயனர்:LogicwikiBot மூலம் செய்யப்படுகிறது. அதுபோல பயனர்களில் புது ஆக்கங்களின் புள்ளிவிவரத்தை வாரவாரம் அல்லது மாதம்தோறும் தானியக்க முடுக்கத்தில் ஓரிடத்தில் இற்றைப்படுத்தலாம். உதாரணம்
  2. பல விக்கிப்பீடியா திட்டங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக ஏதேனும் வகை பக்கங்களில் ஒரு நிர்ணயித்த தகவலொன்றைத் தனியங்கி கொண்டு பதியலாம். ஒரே தகவலைப் பல பக்கங்களில் இட்டு பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிற்கலாம்.
  3. புதிய கட்டுரைகள் உருவாகும் போதே ஏதேனும் எளிய வகை தணிக்கைகளைத் தானியக்கம் செய்யலாம். அதாவது ஆங்கிலத் தலைப்பு, ஒருங்குறி அல்லாத உள்ளடக்கம் போன்ற காரணங்களில் எழுதிய பயனருக்கு ஒரு அறிவிப்பை விட்டு மாற்றச் சொல்லும் வேலையை தானியங்கியிடம் கொடுக்கலாம்.(புதுப் பயனர் வரவேற்பு அல்ல)

மேலுள்ள செயல்பாட்டினைச் செய்யும் தானியங்கி NeechalBOT என்று ஒன்றுள்ளது. முதலிரண்டு செயல்களை வெற்றிகரமாகச் செய்தும் உள்ளது. இத்தானியக்கத் தேவை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தேவையெனில் இத்தானியங்கிக்கு அணுக்கம் வாங்கி களமிறக்குகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:50, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Math Error

[தொகு]

கணிதச் சமன்பாடுகளில் தமிழ் சொற்கள் எழுதும் போது மொசில்லா தவிர்ந்த உலாவிகளில் வழு வருகிறது, இது பற்றிய உரையாடல் இங்கே: பேச்சு:ஈட்டம் (மின்னணுவியல்). உதவி தேவை.--Kanags \உரையாடுக 04:48, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பக்கத்தைச் சேமிப்பதில் சிக்கல்

[தொகு]

ஒரு தொகுப்பைச் செய்த பின்னர், பக்கத்தைச் சேமிக்கவும் என்பதனை அழுத்தினால், அது சேமிக்காமல், மீண்டும் தொகுப்புப் பெட்டிக்கே செல்கின்றது. 2 அல்லது 3 தடவைகள் அழுத்திய பின்னரே பக்கம் சேமிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சனை வேறு யாருக்காவது உண்டா என்றும், அது எதனால் என்றும் அறிய விரும்புகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 07:49, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொகுப்புச் சிக்கல்கள்

[தொகு]

தொகுப்புச் சேமிப்பில் சிக்கல்

[தொகு]

எனக்கு இன்னமும் இந்தச் சிக்கல் தீரவில்லை. ஒவ்வொரு தடவை தொகுப்புச் செய்யும்போதும், சேமிப்பதற்கு 2 அல்லது 3 தடவைகள் 'பக்கத்தைச் சேமிக்கவும்' என்பதை அழுத்த வேண்டியுள்ளது. இந்தச் சிக்கல் வேறு எவருக்காவது உள்ளதா என்பதையும், இதனை எப்படித் தீர்க்கலாம் என்பதையும் அறிய விரும்புகின்றேன். யாராவது உதவுங்கள். நன்றி --கலை (பேச்சு) 10:08, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அப்படி ஏதும் பிரச்சினை இருக்கவில்லை. உலாவியில் சிக்கலோ தெரியவில்லை. வேறு யாரும் உதவிக்கு வருகிறார்களா பார்ப்போம்.--Kanags \உரையாடுக 10:10, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"Alt+S" அழுத்திச் சேர்த்து முயன்று பாருங்கள். ஒருவேளை இது தற்காலிக தீர்வாய் அமையலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:30, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"Alt+S" அழுத்தினால் History dropdown menu தானே திறக்கின்றது.--கலை (பேச்சு) 11:40, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Alt+Shift+S என்பது சேமிப்பதற்கான குறுக்கு வழி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:00, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இதனை முயற்சி செய்தேன். ஆனால் Alt+Shift+S ஐ அழுத்தும்போது எதுவுமே நடக்கவில்லையே. அல்லது எனக்குத்தான் புரியவில்லையா தெரியவில்லை :(--கலை (பேச்சு) 12:27, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புரூவிட் கருவி பயன்படுத்தலில் சிக்கல்

[தொகு]

இந்தக் கருவியும் எனக்குச் செயற்படவில்லை. மேற்கோள்களை இணைப்பதில் இந்தக் கருவி மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது அதனைப் பயன்படுத்த முடியவில்லை. நான் விண்டோசில், ஃபயர்பாக்சு, இண்டெர்னெட் எக்ஸ்புளோரர், கூகிள் குரோம் மூன்று உலாவிகளிலும் முயற்சி செய்து பார்த்தேன். யாராவது உதவுவீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 10:08, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புரூவிட் கருவியை இடது பக்க கீழ் மூலையில் தேடினீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:21, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புரூவ்இட் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது. நான் அதுகுறித்துப் பார்க்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:02, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று புரூவ்இட் இரசிகர்கள் தற்போது அதனைப் பயன்படுத்தலாம் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:09, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆலோசனை தேவை - இரு நூல் தகவல் சட்டங்கள்

[தொகு]

வார்ப்புரு:நூல் தகவல் சட்டம் வார்ப்புரு:Infobox Book என ஒரே நோக்கம் கொண்ட வார்ப்புருகள் இரண்டு உள்ளன. இரண்டும் மிகவும் நெருக்கமானவை, சிறிய வேறுபாடுகளையே கொண்டவை. இதில் Infobox Book ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புருவின் அண்மையப் பதிப்பு. நூல் தகவல் சட்டம் தமிழ் விக்கியில் பரந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எமக்குத் தேவையான பல உறுப்புக்களையும் இதில் சேர்த்து உள்ளோம். இந்த இரண்டு வார்ப்புருக்களையும் சேர்ப்பது விரும்பத்தக்கது. Infobox Book கூடிய செயற்கூறுகளைப் பெற்றுக் கொண்டால் (எ.கா automatic citation) அதனை நாம் நேரடியாக இங்கு பயன்படுத்த முடியும். எமது தேவைகள் பின்வருமாறு:

  • ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் வார்ப்புருக்கள் உருவாக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். பன்மொழி ஆதரவு விரும்பத்தக்கது.
  • நாம் ஆங்கில விக்கி வார்ப்புருவை கூடிய உறுப்புக்கள் கொண்டு நீட்ட வேண்டும்.
  • ஒரு வார்ப்புருவில் இருந்து இறுதி வார்ப்புருவிற்கு தகவல்களை நகர்த்த வேண்டும். (migration infobox data from one template box to another)
  • ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டினால் அது அப்படியே வேலை செய்யக் கூடியதாக இருப்பது விரும்பத்தக்கது.
  • விக்கி தரவுகளைப் பயன்படுத்தி இதனைச் செய்யலாமா!

மேலதிக தகவல்களுக்கு: வார்ப்புரு பேச்சு:நூல் தகவல் சட்டம் --Natkeeran (பேச்சு) 17:33, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளிடக் கூடியதாக மாற்ற முடியும் என்றே நினைக்கிறேன். இந்திய நகரங்களுக்கான தகவல் சட்டத்தையும் முன்னர் மாகிர் இவ்வாறே மாற்றியமைத்தார். சோதனையாக ஒரு வார்ப்புருவை உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 08:09, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

10:03, 28 அக்டோபர் 2013 (UTC)

ஐ.இ 9 பதிப்பு உலவியில் த.வி. கட்டுரைகளைப் பார்க்க முற்படுகையில் பிழைச் செய்தி வருகிறது. --Anton·٠•●♥Talk♥●•٠· 07:28, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

என்ன பிழைச்செய்தி என்பதை screenshot உடன் வழு பதியலாமே அன்டன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 06:26, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இது ஒரு தற்காலிகப் பிழையாகவே இருக்கும் என நம்புகிறேன். இப்போதும் உள்ளதா?--Kanags \உரையாடுக 06:33, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம், இப்போதும் உள்ளது. வழு பதிந்துவிடுகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:49, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் எழுத்துக்களில் குழப்பம்

[தொகு]

இடது பக்கத்தில் மற்ற மொழிகளில் என்ற தலைப்பின் கீழ் இணைப்புக்களைத் தொகு என்ற சொற்றொடர் குழம்பிப் போயுள்ளது. சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:22, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இந்த மற்ற மொழி இணைப்புகளுக்கு என புதிய எழுத்துருவை உருவாக்கியுள்ளார்கள் என நினைக்கிறேன். mw:MediaWiki_1.23/wmf1 வெளியீட்டில் இந்த மாற்றம் நமது விக்கிக்கும் வந்திருக்கும். அதனால்தான் இந்த பிரச்சினை என நினைக்கிறேன். "தமிழ்" என்ற இணைப்பும் மற்ற மொழி விக்கிகளில் உடைந்துதான் தெரிகிறது. அதில் உள்ள மற்ற மொழி எழுத்துக்களும் (ஆங்கிலம் உட்பட) சற்று உடைந்துதான் தெரிகிறது--சண்முகம்ப7 (பேச்சு) 06:22, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழுக்கு மீரா தமிழ் எழுத்துருவை அதில் பயன்படுத்துகிறார்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 06:32, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

10:53, 4 நவம்பர் 2013 (UTC)

பங்களிப்பு புள்ளி விவரம்

[தொகு]

இதுஆங்கில விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புப் புள்ளிவிவரம் அறியும் கருவி. அதுபோல, தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்பாளர் புள்ளிவிவரங்களை அறிய கருவி உள்ளதா?--≈ உழவன் ( கூறுக ) 02:36, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு பயனரும் அவர் தொடங்கிய பக்கங்கள், பங்களிப்பு செய்த பக்கங்கள் தலைப்பு விபரங்களை ஒரு அட்டவணையாக அந்தந்த பயனரின் பயனர் பங்களிப்புகள் பக்கத்தில் காட்டினால் உதவியாக இருக்கும். Uksharma3 (பேச்சு) 01:41, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தொகுப்பதில் சிக்கல் + புரூவிட் கருவிச் சிக்கல்

[தொகு]

நான் ஏற்கனவே இரு தடவைகள் மேலே கேட்டிருந்தேன். இன்னமும் எனக்கு இந்தச் சிக்கல்கள் தீரவில்லை.

தொகுப்பு ஒன்றைச் செய்த பின்னர், 2 - 4 தடவைகள் "பக்கத்தைச் சேமிக்கவும்" பொத்தானை அழுத்தினால் மட்டுமே பக்கம் சேமிப்புக்குப் போகின்றது. கிடைக்கும் சொற்ப நேரங்களில் எதையாவது தொகுக்கலாம் என்று வந்தால், ஒரு தொகுப்பிற்கு மீண்டும் மீண்டும் அழுத்த வேண்டியதாயுள்ளது. :(

தமிழ் விக்கிப்பீடியாவில்தான் எனக்கு இந்த புரூவிட் கருவி வேலை செய்யவில்லை. ஆங்கிலப் பக்கம் ஒன்றிற்குச் சென்று தொகுப்பை அழுத்தும்போது அது வேலை செய்கின்றது. :(

யாராவது உதவினீர்கள் என்றால் நல்லது. நன்றி.--கலை

//புரூவ்இட் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது. நான் அதுகுறித்துப் பார்க்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 12:02, 27 அக்டோபர் 2013 (UTC)// என்று விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#புரூவிட் கருவி பயன்படுத்தலில் சிக்கல் குறிப்பிட்டு இருக்கிறார். அக்கருவியை செயல் தெரிவு செய்திருப்பதை நீக்கிவிட்டு செயற்பட வேண்டுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 02:51, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆம், தகவலுழவன், சூர்யபிரகாஷின் அந்தக் குறிப்பை நானும் பார்த்தேன். ஆனால் இன்னமும் சரி வராதபடியால்தான் மீண்டும் கேட்டேன். தவிர, இந்த தொகுப்புப் பிரச்சனையும் இன்னமும் சரி வரவில்லை :(. அதுசரி, எதற்காக புரூவிட் கருவி செயல் தெரிவை நீக்க வேண்டும்? சரியாகப் புரிந்து கொள்வதற்காகவே இதனைக் கேட்கின்றேன். அதனை நீக்கினாலும், நீக்காவிட்டாலும், அது தொழிற்படாதவிடத்து நாமாகவேதானே மேற்கோள்களைச் சேர்க்க வேண்டியிருக்கும். அப்படியே அது செயல்படத் தொடங்கினால் நல்லதுதானே? அல்லது கருவி செயற்படாத நிலையில், அதன் செயல் தெரிவு செய்து வைத்திருப்பதினால் ஏதாவது பிரச்சனை உண்டா? அல்லது செயற்படாத நிலையில், அதனை நீக்கி வைத்திருப்பதனால் ஏதாவது நன்மையுண்டா? தெரிந்தால், நானும் அடஹ்னைச் செய்து பார்க்கலாம். --கலை (பேச்சு) 15:22, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

எந்தக் குழப்பங்களும் இனித் தேவையில்லை. உங்கள் மேற்கோள்களை இப்போது புரூவ்இட் கொண்டு எளிமையாகச் சேர்க்கலாம் - என்ன, கருவி இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் ஆங்கிலத்திலுள்ளது. இவ்வார இறுதிக்குள் அதுவும் முடிந்துவிடும் :) புரூவ்இட்டினைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மிக்க நன்றி :) இவ்வளவு இரசிகர்கள் உருவாவர் என்று தனிப்பயனாக்கியபொழுது (customization) எண்ணவில்லை :) அனைத்து பாராட்டும் ஜார்ஜியா பல்கலைக்கழக மாணவர்களுக்கே! :) நன்றி -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:17, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

{{convert}} என்பதில் வழு நீக்குக.

[தொகு]

{{convert|2600|m|ft}} என்று பயன்படுத்தினால், 2,600 மீட்டர்கள் (8,500 அடிகள்) என வரவேண்டும், ஆனால், 2,600 மீட்டர்கள்s (8 அடி) என வருகிறது. ஆனால், {{convert|200|m|ft}} என்று பயன்படுத்தினால், 200 மீட்டர்கள்s (660 அடி) என வருகிறது. இதில் s வரக்கூடாது. அடி என்பது, அடிகளாக மாறணும்.--≈ உழவன் ( கூறுக ) 03:19, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது ஒரு மிகவும் சிக்கலான வார்ப்புரு. முதலாவது வழுவிற்கு மிகக் கவனமாக இதனை கையாள வேண்டும். யாராவது சோதனை முறையில் தமது மணல்தொட்டியிலேயோ அல்லது தனிப்பக்கத்திலோ புதிதாக எழுதிப் பார்க்கலாம். இரண்டாவது வழு திருத்த முடியும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:21, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்பதிலும் வார்ப்புரு முறிவுகள் காணப்படுகின்றன.--≈ உழவன் ( கூறுக ) 13:24, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரனால், வார்ப்புரு:Convert/track/abbr/on உருவாக்கப்பட்டு, சீர்செய்யப்பட்டது--≈ உழவன் ( கூறுக ) 17:14, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அவலோகிதம் (யாப்பு மென்பொருள்)]

[தொகு]

அவலோகிதம் (யாப்பு மென்பொருள்) கொடுக்கப்பட்டத் தரவினை, தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து - எழுத்து, அசை, சீர், தளை, அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை) , அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை), தொடை (யாப்பிலக்கணம்)ஆகிய யாப்பு உறுப்புக்களை வெளியிடும். மெல்ல தமிழ் இனி சாகும் என்பது பேதமையன்றோ! வெல்ல தமிழ், இனி ஒரு வகை செய்வோம்!!. இதுபோல.. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 15:53, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தொகுத்தலில் வரிச்சீராக்கம்

[தொகு]

இப்பக்கத்தில் உள்ள வரிகளைக் கவனிக்கவும். முன்தோற்றம் காணும் போதோ அல்லது சேமிக்கும் போதோ, தொகுச்சாளரத்தில் உள்ள வரிகள், தானாகவே சீரான தொடக்கத்தில் வருவது போல, யாவா(Java) நிரலில் செய்ய இயலும் என்கிறார்கள். செய்ய இயலுமா?--≈ உழவன் ( கூறுக ) 02:04, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அடிப்படையில் புதிய வரியின்(Technically newline \n) தொடக்கத்திற்கடுத்துள்ள இடைவெளிகளை நீக்கினாலே அது சீராகிவிடும். எங்கெல்லாம் "\n " உள்ளதோ அங்கெல்லாம் "\n" என்று சுழல் முறையில் முழுதும் மாற்ற வேண்டும். இதுசார்ந்து எங்கேனும் திருத்த வேண்டும் என்றால் முடியும், தானியங்கி கொண்டு பல பக்கங்களிலும் முடியும். ஆனால் நிரல்கள் எழுதி, தொடர் ஆதரவு வழங்க எனக்கு நேரப்பற்றாக்குறை உள்ளது.--நீச்சல்காரன் (பேச்சு) 02:51, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நல்ல செய்தி. மகிழ்ச்சி. அவசரமில்லை. சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:53, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

13:26, 11 நவம்பர் 2013 (UTC)

தானியங்கி செய்ய வேண்டிய வேலைகளுக்கு தனிப்பக்கம்

[தொகு]

தானியங்கி செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு பக்கம் உருவாக்கினால் என்ன? ஒரு பகுப்பை 100 கட்டுரைகளில் இணைக்க வேண்டும் என்றால் அதை அந்த பக்கத்தில் இணைத்தால் தானியங்கி சேர்ப்பது போல் செய்ய வேண்டும். இதே போல் வார்ப்புரு, திட்ட வார்ப்புரு இன்ன பிறவெல்லாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:37, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பகுப்பிடும் பணிகளில் தானியங்கி தவறாக செயற்படவும் வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக பாரதி என்ற பக்கமொன்று பகுப்பிட வேண்டுமெனில், அது சரியாக செயற்பட ஒவ்வொரு சொல்லையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. --≈ உழவன் ( கூறுக ) 13:43, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் தொடங்க வேண்டும். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு என்ற திட்டப் பக்கம் வேண்டும். அதில் தானியங்கித் தேவைகளைக் கொடுக்கத் துணைப்பக்கமும் வேண்டும். சமூகத்தின் அனுமதி இருந்தால் மேகக் கணிமையில் இயக்கப்படும் ஒரு பொதுத் தானியங்கையையும்(படங்களைப் பொதுவகத்தில் சேர்க்கும் பொதுவகத் தானியங்கி போல) வடிவமைக்கலாம். அதனால் அனைவரும் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் இயக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 14:00, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு என்பதை மட்டும் சொல்லவில்லை உழவரே. தானியங்கியைவிட வேகமாகப் பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியாவில் ஜெகதீஸ்வரன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஜெகதீஸ்வரன் விக்கித்திட்டம் சைவம் வார்ப்புருவை பல கட்டுரைகளில் சேர்த்து கொண்டிருந்தார். தானியங்கியை விட வேகமாகப் பங்களிக்கக் கூடிய ஒருவர் இந்த நேரத்தை கட்டுரையாக்கத்தில் செலுத்தி இருந்தால்?

நீங்கள் சொல்லும் பகுப்பு சிக்கலுக்கும் வழியுள்ளது. நான் தற்போது பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் தொடங்கியிருக்கிறேன். இதில் வரப்போகும் ஆசிரியர்கள் எல்லாம் தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் இக்கட்டுரையிலுள்ள பட்டியலில் இருக்கிறார்கள்.

மேலும் தாய் பகுப்பு உட்பகுப்பு வேலைக்கும் இதைச் செய்யலாம். உதாரணத்துக்கு இந்திய ஆய்வாளர்கள் பட்டியல் முதலில் தொடங்கும் போது ஒரு 5 பேர் சேர்க்கிறோம். பிற்பாடு அவர்களின் எண்ணிக்கை 1000 ஆனால் தமிழக ஆய்வாளர் என்னும் பகுப்பை உருவாக்க வேண்டிவரும். அதில் வரவேண்டிய 200 ஆய்வாளர்களும் 1000க்கு உள்ளே தானே இருப்பார்கள். அதனால் பெருமளவு நீங்கள் கூறுவது போல் சிக்கல் வராமல் தடுக்க முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:09, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பல பணிகளுக்கு தானியங்கி சிறப்பே. எனினும், ஒரு தானியங்கி செய்யவிருக்கும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவித்து விட்டு, செயற்பட்டால் பிழைகள் ஏற்படவே வாய்ப்பில்லை. உரிய பகுப்புகளை ஏற்படுத்திய JayarathinaAWB BOT நன்றி.-≈ உழவன் ( கூறுக ) 16:51, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

09:03, 18 நவம்பர் 2013 (UTC)

தானியங்கிச் செயலி ஆப்ஸ்விக்கி

[தொகு]

பயனர்:KalaiBOT என்ற தானியங்கிக் கணக்கிற்காக கூகிள் ஸ்கிரிப்ட்டில் உருவாக்கப்பட்ட ஆப்ஸ்விக்கி இடைமுகம் தற்போது பொதுப்பயன்பாட்டிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே திருத்தத்தைப் பல விக்கிப்பீடியப் பக்கங்களுக்குச் செய்ய வேண்டுமெனில் இந்தச் செயலி உதவும். இது மேகக் கணினி நுட்பம் ஆகையால் விரும்பமுள்ள யாரும் ஒரு தானியங்கியை எளிதில் இயக்கமுடியும். இந்தச் செயலியை NeechalBOT கணக்கின் வழியாகச் சோதித்துப் பார்க்க சோதனைப் பதிப்பும் உள்ளது (பயனர்:neechalkaran/demo/ என்ற வெளியில் மட்டும் திருத்தும்). மேலும் விபரங்களை இங்குக் காணலாம். ஏதேனும் இவ்வகைத் தானியக்கம் தேவையெனில் பதிவு செய்துவிட்டு இதைப் பயன்படுத்திக் கொள்க. --நீச்சல்காரன் (பேச்சு) 02:33, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல் வெளி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள Module, Portal வெளிகள் தவிர முக்கிய வெளிகள் எல்லாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தானாக வழிமாற்றிக் கொள்கிறது. வலைவாசல்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், இவ்வெளிக்கும் இதன் பேச்சுவெளிக்கு அணுக்கமுள்ளவர்கள் சுயவழிமாற்றி அமைக்கவும். ta.wikipedia.org/wiki/Portal:விலங்குகள் என்ற உரலி தானாக ta.wikipedia.org/wiki/வலைவாசல்:விலங்குகள் ஆகவேண்டும்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:00, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அதற்கு வழு பதிய வேண்டும் என நினைக்கிறேன் நீச்சல்காரன். மீடியாவிக்கியில் (mw:Manual:Namespace) தேடியதில் இங்கு alias சேர்க்க வேண்டும் என கருதுகிறேன், ஆனால் உறுதியாக தெரியவில்லை. எப்படியாயினும் வழு பதிந்தால்தான் மாற்ற இயலும் என நினைக்கிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 16:00, 23 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

07:01, 25 நவம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கியின் சின்னம் சரியாக தெரிவதில்லை

[தொகு]

குரோம் உலாவியில் (பதிப்பு 31 / உபுண்டு 12.04) தமிழ் விக்கியின் சின்னம் இருபுறமும் வெட்டியது போல் தெரிகிறது. எழுத்துருவை 'very large' என்று தெரிவு செய்யும்போது தான் சின்னம் முழுமையாக் தெரிகிறது. ஃபயர்பாக்சில் / நைட்லியில் இந்த பிரச்சனை இல்லை.

08:38, 9 திசம்பர் 2013 (UTC)

விரைவுப்பகுப்பி - உதவி

[தொகு]
  • எனது குரோம் மற்றும் ஃபயர்பாக்சு உலாவிகளில் விரைவுப் பகுப்பி வேலை செய்யவில்லை. இடைமாற்றை மீளமைத்தும் பயனில்லை.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் visualeditor வேலை செய்கிறது. தமிழ்விக்கியில் தெரிவு செய்தும் வேலை செய்யவில்லை. பிரச்சினை எனக்கு மட்டும் தானா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:24, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

wmflabs கருவிகள்

[தொகு]

அண்மைய மாற்றங்கள் கருவி புதிதாக கிடைத்துள்ளது. இக்கருவி தானாக இயங்குகிறது, நிகழ்நேரத்தில் நடக்கும் தொகுப்புகளைக் காட்டுகிறது. மேலும் சில பயனுள்ள கருவிகளுக்கு இங்கு செல்லவும்.

08:35, 16 திசம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா beta பயனர் முகப்பு சில சிறு பிரச்சனைகள்

[தொகு]

வணக்கம், நான் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய பயனர் முகப்பு beta-ஐ பயன்படுத்திவருகிறேன். நான் கண்ட சில சிறு பிரச்சனைகளை குறிப்பிடுகிறேன், நேரம் கிடைக்கும்போது சரி செய்யவும்

  1. விக்கியின் முதற்பக்கத்தில் இடதுபுறத்தில் பிற மொழிகளுக்கான இணைப்புகள் இருக்கும் அதில் கடைசியா "complete list" என்ற இணைப்பு "https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias" என்கிற உரலியுடன் இணைக்கப்பட்டிருக்கும், beta பயனர் முகப்பில் அது இல்லை. (நான் அவ்வப்போது ஒரு ஆர்வத்தில் நமது விக்கியை பிற இந்திய/பன்னாட்டு விக்கிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க இவ்விணைப்பைப் பயன்படுத்துவேன்)
  2. தமிழ்விக்கியின் பத்தாண்டு இலச்சினை அகலம் வெட்டுப்பட்டு ஒரு மாதிரி அவலட்சணமாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக இடப்புற column-ன் அகலம் குறைக்கப்பட்டுள்ளாதால் இப்பிரச்சினை.

குறிப்பு: நான் பயர்பாஃக்ஸ் மற்றும் கூகுள் குரோம் உலாவிகளைப் பயன்படுத்துகிறேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:01, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கம், ஆலமரத்தடி போன்ற பக்கங்களின் இடைமுகப்பு பாதியாக தெரிகிறது

[தொகு]

முதற்பக்கம், ஆலமரத்தடி போன்ற பக்கங்களின் இடைமுகப்பு பாதியாக தெரிகிறது, சரி செய்யவும்.
நான் லினக்சு இயங்குதளத்தில் பயர்ஃபாக்சு உலாவியைப் பயன்படுத்துகிறேன். மேலும், விருப்பத்தேர்வுகளில் பீட்டா தெரிவுசெய்துள்ளேன். நான் இதற்கு முந்தைய செய்தியில் குறிப்பிட்டிருந்த தமிழ்விக்கி(10 ஆண்டு) இலச்சினை இப்பொழுது சரியாகத் தெரிகிறது(பழைய விக்கி இலச்சினை, பத்தாண்டு இலச்சினை நீக்கப்பட்டுள்ளதென்று நம்புகிறேன்). அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:51, 10 சனவரி 2014 (UTC)[பதிலளி]

08:30, 23 திசம்பர் 2013 (UTC)

08:48, 30 திசம்பர் 2013 (UTC)

தேடுதல் பொறிகள் மணல்தொட்டி பக்கங்களை Index, follow செய்வதைத் தடுத்தல்

[தொகு]

நான் கட்டுரைகளை முதலில் மணல்தொட்டியில் தயார் செய்து, முழுமை பெற்றபின் புதிய பக்கத்துக்கு மாற்றுகிறேன். எனது கட்டுரை மணல்தொட்டியில் இருக்கும்போது கூகிள் பொறி அதனை Index செய்து தனது தேடுதல் முடிவுகள் பட்டியலில் காண்பிப்பதை அவதானித்தேன். இவ்வாறு கூகிளோ வேறு தேடுதல் பொறிகளோ மணல்தொட்டிப் பக்கத்தை Index செய்வதை தவிர்க்கவேண்டும். தேடல்முடிவைப் பார்த்து அந்தப் பக்கத்துக்கு வரும் ஒரு பார்வையாளர், அவர் வரும்போது அந்தப் பக்கத்திலுள்ள தகவல் வேறாக இருப்பதைக் காணக்கூடும். ஏனெனில் கட்டுரையை புதிய பக்கத்துக்கு மாற்றியவுடன் மணல்தொட்டியில் வேறு கட்டுரை தொடங்கிவிடுவேன். In HTML I use meta tag to stop Google and other bots from indexing and following. Also I use robots.txt file to stop indexing certain pages or folders. இவ்வாறு தடுக்க வழி உண்டா?−முன்நிற்கும் கருத்து Uksharma3 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் __NOINDEX__ பயன்படுத்த வேண்டும். see mw:Help:Magic words. --சண்முகம்ப7 (பேச்சு) 13:37, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]

08:34, 6 சனவரி 2014 (UTC)

09:32, 13 சனவரி 2014 (UTC)

இலகு மேற்கோள் zotero

[தொகு]

http://zotero.org பயன்படுத்தி மேற்கோள்களைத் தொகுத்துவிட்டு, பின்னர் விக்கிக் குறியீட்டாகத் தரவேற்றலாம். --Natkeeran (பேச்சு) 21:56, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

10:21, 20 சனவரி 2014 (UTC)

visaipalagai kaanavilai

[தொகு]

Visai palagai therthetukum dropdown varavilai.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பத்தேர்வுகளில்(Preference), பயனர் தரவு தத்தலில், உலகமயமாக்குதல் பிரிவில் "Enable the Universal Language Selector" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கவும். -அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:11, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தானியங்கிகள் தேவை

[தொகு]

en:User:JL-Bot, en:User:SineBot இந்த இரு தானியங்கிகளும் இங்கு இருந்தால் உதவியாக இருக்ககும். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:00, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

09:46, 27 சனவரி 2014 (UTC)

தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்- இடபக்கப் பட்டியல் வசதி

[தொகு]

தற்போதுள்ள தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் என்ற இடப்பக்க பட்டியல் வசதி, அனைத்து திட்டபக்கங்களிலும் வர என்ன செய்ய வேண்டும்? எடுத்துக்காட்டாக, தமிழ் விக்கிப்பீடியாவின் எப்பக்கத்தில் இருந்தாலும், இதன் வழியே பிற திட்டங்களுக்கு செல்வதற்கு எளிதாக உள்ளது. ஆனால், பிற திட்டங்களில் இருந்து விக்கிப்பீடியாவிற்கு வருவதற்கு சுற்றி வளைத்து வர வேண்டியுள்ளது. இதனால், குறைந்த அலைவரிசையில், முன்கட்டணம் செலுத்தி செயற்படுபவருக்கு, பணவிரயமும், நேரவிரயமும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.மேலும், இவ்வசதி செய்தால், பிற விக்கித்திட்டங்களில் இருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே, இப்பட்டியலை கொண்டு வர எங்கு, யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? ஆலோசனைத் தருக. --≈ உழவன் ( கூறுக ) 02:47, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வழிகாட்டிய இரவிக்கும், அமைத்துக்கொடுத்த சண்முகத்திற்கும் நன்றி.--≈ உழவன் ( கூறுக ) 03:38, 5 மார்ச் 2014 (UTC)

08:30, 3 பெப்ரவரி 2014 (UTC)

சிக்கல்கள்

[தொகு]
  • எழுத்துச் சிக்கல்
  • தொகுப்புப் பெட்டி சரியாகத் தோன்றாதல்.

மேற் சுட்டப்பட்ட இரண்டும் எந்தளவு வேகமாக தீர்க்கப்படும். இதனால் பயனர்கள் வருகை/பங்களிப்பு தடைப்படுகிறது. --Natkeeran (பேச்சு) 14:51, 5 பெப்ரவரி 2014 (UTC)

புதிதாகக் கட்டுரை தொடங்கும் போது தொகுப்புப் பெட்டி வருவதில்லை. பயனர்:Shanmugamp7 இதனைக் கவனிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 22:10, 7 பெப்ரவரி 2014 (UTC)
தொகுப்பு பெட்டி
படத்தில் உள்ளதை குறிப்பிடுகிறீர்களா? அனைவருக்கும் இப்படித்தான் வருகிறதா?--சண்முகம்ப7 (பேச்சு) 02:04, 8 பெப்ரவரி 2014 (UTC)
இதைத்தான் குறிப்பிடுகிறேன். பழைய கட்டுரைகளைத் தொகுக்கும் போது கருவிகளுடன் ஒழுங்காக வருகிறது..--Kanags \உரையாடுக 02:28, 8 பெப்ரவரி 2014 (UTC)

ஆமாம் பயனர் பேச்சு, பேச்சு என எப்பக்கத்தைத் தொடங்கும் போதும் தொகுப்புப் பெட்டியைக் காணமுடிவதில்லை.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:08, 8 பெப்ரவரி 2014 (UTC)

தொகுப்புப் பெட்டி சரி செய்யப்பட்டது. எழுத்துச் சிக்கல் என்னவென்று புரியவில்லை --சண்முகம்ப7 (பேச்சு) 05:41, 9 பெப்ரவரி 2014 (UTC)
எதனால் இம்மாற்றம் நிகழ்ந்தது சண்முகம்?--Kanags \உரையாடுக 06:32, 9 பெப்ரவரி 2014 (UTC)
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் Kanags. இதனை கவனிக்கவில்லை. சமூக வலை தளங்களில் பகிரப் பயன்படும் கருவியை சரி செய்ததில் எதோ வழு இருந்திருக்கிறது. அதனை சரி செய்ய உதவியரையே மீண்டும் அணுகி இதனை கண்டறிந்து சரி செய்தேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:45, 17 பெப்ரவரி 2014 (UTC)

09:30, 10 பெப்ரவரி 2014 (UTC)

புதிய கருவிகள்

[தொகு]

கூகிளில் தேடுக

[தொகு]

கூகிளில் தேடுக என்பது விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையை கூகிளில் தேட உதவும் ஒரு கருவியாகும். தேடல் முடிவுகள் புதிய சாளரத்தில் (Tab) திறக்கப்பட்டும். இக்கருவியின் சிறப்பம்சம் யாதெனில் கூகிளின் தேடல் முடிவுகள் விக்கிப்பீடியாவை உள்ளடக்காததாக இருக்கும். இக்கருவி குறித்த கட்டுரை பற்றிய மேலதிக விடயங்களினை பிற தளங்களிலிருந்து அறியவும் உசாத்துணை, மேற்கோள் என்பவற்றைத் தேடிச் சேர்க்கவும் உதவியாக அமையும்.

நிரல்வரியாக நிறுவ

[தொகு]
  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/googleTitle.js');

தோற்றம்

[தொகு]
கூகிளில் தேடுக








விருப்பம்&ஆயிற்று

[தொகு]

விருப்பம்&ஆயிற்று என்பது விக்கிப்பிடியாவின் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விருப்பம் மற்றும் ஆயிற்று ஆகிய வார்ப்புருக்களினை இலகுவில் உள்ளிடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவியாகும். இவ் வார்ப்புருக்களை உள்ளிட தொகுத்தல் பெட்டியில் வார்ப்புருவை உள்ளிட வேண்டிய இடத்தில் சொடுக்கியபின் குறியீட்டின் (icon) மீது சொடுக்கினால் இலகுவாக விருப்பம் மற்றும் ஆயிற்று என்பவற்றை உள்ளிடலாம்.

நிரல்வரியாக நிறுவ

[தொகு]
  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/like&done.js');

தோற்றம்

[தொகு]
விருப்பம்&ஆயிற்று






பன்னாட்டு நேரம் காட்டி

[தொகு]

பன்னாட்டு நேரம் காட்டி என்பது தனிப்பட்ட கருவிப்பட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரத்தைக் காட்டும் கருவியாகும். இக்கருவி மண்த்தியாலம், நிமிடம், செக்கன், என்பவற்றைக் காட்டக்கூடியதாக உள்ளது. இது தற்போது விக்கிபீடியாவில் உள்ள இதேபோன்ற மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js கருவியை விடத் தோற்றத்தில் சிறியதாகவும் அழகானதாகவும் உள்ளது.


நிரல்வரியாக நிறுவ

[தொகு]
  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/UTCLiveClock.js');

தோற்றம்

[தொகு]
பன்னாட்டு நேரம் காட்டி






பன்னாட்டு நேரம் காட்டி 2

[தொகு]

பன்னாட்டு நேரம் காட்டி 2 என்பது தனிப்பட்ட கருவிப்பட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரத்தைக் காட்டும் கருவியாகும். இக்கருவி மண்த்தியாலம், நிமிடம் என்பவற்றைக் காட்டக்கூடியதாக உள்ளது. இது செக்கன் காட்டப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

நிரல்வரியாக நிறுவ

[தொகு]
  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/clock.js');




@பயனர்:Shrikarsan இந்தக் கருவிகளை விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் அல்லது விக்கிப்பீடியா:பயனர் நிரல்கள் போன்று ஏதேனும் ஒரு தனிப் பக்கத்தில் ஆவணப்படுத்தினால் பிற்காலத்தில் பயன்படுத்த உதவியாக இருக்கும். இங்கு அதற்கான இணைப்பை மட்டும் இடலாம். ஆலமரத்தடி தொகுப்பில் போடப்பட்ட பிறகு இக்கருவிகளை தேடி எடுப்பது கடினமாகி விடும்--சண்முகம்ப7 (பேச்சு) 13:36, 17 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி அண்ணா-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:38, 17 பெப்ரவரி 2014 (UTC)

08:38, 17 பெப்ரவரி 2014 (UTC)

10:18, 24 பெப்ரவரி 2014 (UTC)

09:30, 3 மார்ச் 2014 (UTC)

{.{Infobox OS

[தொகு]

வார்ப்புரு பேச்சு:Infobox OS என்ற பக்கத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.--≈ உழவன் ( கூறுக ) 18:02, 6 மார்ச் 2014 (UTC)

நீங்கள் செய்த மாற்றத்தால், இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள பக்கங்கள் அனைத்தும் சீராக இருக்கின்றனவா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 02:49, 8 மார்ச் 2014 (UTC)

09:10, 10 மார்ச் 2014 (UTC)

07:14, 17 மார்ச் 2014 (UTC)

18:56, 24 மார்ச் 2014 (UTC)

09:20, 31 மார்ச் 2014 (UTC)

08:00, 7 ஏப்ரல் 2014 (UTC)

படங்கள் பதிவேற்றம்

[தொகு]

இங்கு வழு பதியப்பட்டுள்ளது. பின் தொடரக் கூடியவர்கள் அதனைக் கவனிக்கலாம். --AntonTalk 18:31, 12 ஏப்ரல் 2014 (UTC)

07:18, 14 ஏப்ரல் 2014 (UTC)

08:34, 21 ஏப்ரல் 2014 (UTC)

07:22, 28 ஏப்ரல் 2014 (UTC)

07:29, 5 மே 2014 (UTC)

விக்சனரி:விரைவுப்பகுப்பி

[தொகு]

விக்சனரியில், விரைவுப்பகுப்பி கருவி இயங்கவில்லை. சீர்செய்க. காரணமறிய விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:45, 6 மே 2014 (UTC)[பதிலளி]

நான் விக்சனரியல் சோதனை செய்து பார்த்தேன். இங்கே அம்மாற்றம் உள்ளது. எனக்கு வேலைசெய்கின்றது. உங்களுக்குப் பலகாலமாகத் தொடர்ந்து வேலைசெய்யவில்லையா? அல்லது தற்போது வேலைசெய்யவில்லையா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:11, 6 மே 2014 (UTC)[பதிலளி]

, எனக்கும் வேலை செய்கின்றது. இணைய வேகம் குறைவாக இருந்தால் எனக்கு அடிக்கடி இப்பிரச்சினை ஏற்படும். எதற்கும் ஒரு முறை reload செய்து பார்ப்பேன். வேலை செய்யும். முயற்சிக்க வேண்டுகிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:20, 6 மே 2014 (UTC)[பதிலளி]

பயனர் கட்டுரைகளின் பட்டியல்

[தொகு]

முன்பு தமிழ் பெயர் வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் கட்டுரைகளின் அப்படியலை பார்க்க முடியாத மாதிரி இருந்தது. தற்போது பட்டியல் வந்தாலும் கடைசி 500 கட்டுரைகளை மட்டுமே காட்டுகிறது. மற்றவற்றை எப்படிப் பார்ப்பது? https://tools.wmflabs.org/sigma/created.py?name=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&server=tawiki&ns=,,&redirects=none --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:07, 6 மே 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் எழுதிய அனைத்து கட்டுரைகளின் விவரமும் இங்கு கிடைக்கும். பயனர்களின் விக்கி சாதகம் பார்க்க https://tools.wmflabs.org/supercount/index.php அணுகவும் :)--இரவி (பேச்சு) 19:47, 6 மே 2014 (UTC)[பதிலளி]

இப்படி ஓர் கருவி இருப்பதைக் கண்டுபிடித்ததற்கு நன்றி இரவி அவர்களே. X!'s Edit Counter உடன் இதனையும் இழுத்து மூடிவிட்டார்கள் என்று நினைத்தேன். நேற்று இரவு முழுதும் துருவித்துருவித் தேடி தூங்கியதுதான் மிச்ச்ம்:) அப்படியானால் மீடியாவிக்கி:Sp-contributions-footer இல்

[https://tools.wmflabs.org/sigma/created.py?name={{urlencode:{{{1|$1}}}}}&server=tawiki&ns=,,&redirects=none தொடங்கிய கட்டுரைகள்]

என்பதற்குப் பதிலாக

[http://tools.wmflabs.org/xtools/pages/?user={{urlencode:{{{1|$1}}}}}&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects தொடங்கிய கட்டுரைகள்]

என்று மாற்றிவிடுங்கள். மீடியாவிக்கி பெயர்வெளியில் உள்ளதால் என்னால் மாற்ற முடியாதுள்ளது. மேலும் வேறு ஏதாவது மீடியாவிக்கி பெயர்வெளியிலுள்ள கருவிகளில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படின் இங்கு தெரிவிக்கின்றேன் நிர்வாகியாகும் வரை:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:33, 7 மே 2014 (UTC)[பதிலளி]

06:00, 12 மே 2014 (UTC)

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி

விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள் எத்தனை? இவற்றை இனங்காண்பது எப்படி?--இரவி (பேச்சு) 10:58, 16 மே 2014 (UTC)[பதிலளி]

இதை குறிப்பிடுகிறீர்களா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:12, 16 மே 2014 (UTC)[பதிலளி]
இணைப்புக்கு நன்றி. இவற்றில் பொருத்தமான பக்கங்களுக்கு விக்கி தரவு தகவல் சேர்க்கப்பட வேண்டும். பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் தேங்கியுள்ள பக்கங்கள் உள்ளனவா? அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு வழி என்ன?--இரவி (பேச்சு) 13:09, 16 மே 2014 (UTC)[பதிலளி]
பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் இருந்தவை அனைத்தும் தானியங்கிகள் மூலம் நீக்கப்பட்டு விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டன என்றே நம்புகிறேன். தமிழ்க்குரிசில் சுட்டிக் காட்டிய பட்டியலில் உள்ள கட்டுரைகளில் எப்போதுமே விக்கியிடை இணைப்புகள் இருக்கவில்லை போல் தெரிகிறது. ஆனாலும், தானியங்கி ஒன்று இவற்றுக்கும் விக்கித்தரவில் பக்கங்களை உருவாக்கியுள்ளது. இப்பட்டியலில் உள்ள பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் மட்டுமே உள்ளவை போலத் தெரிகிறது. ஏனையவற்றை இனம் கண்டு இணைக்க வேண்டும். (இவற்றுக்கு விக்கித்தரவில் merge மூலமாக மட்டுமே இணைக்க முடியும்.) அது மட்டுமன்றி ஏராளமான பகுப்புகள் விக்கியிடை இணைப்பின்றி உள்ளன. அவற்றையும் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 13:27, 16 மே 2014 (UTC)[பதிலளி]

சில பக்கங்கள் உள்ளன. உதாரணம் அஜந்தா ஓவியங்கள், அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி இவ்வாறான பக்கங்களை இங்கே காணலாம். ஆனால் இங்குள்ள அனைத்துப் பக்கங்களும் பொருத்தமானதாக இல்லை சிலவெ பொருத்தமாக உள. (ஒன்றுக்கு மேற்பட்ட விக்கியிடை இணைப்புக்கள் உள்ளவை)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:22, 16 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி சிறீகர்சன்.--Kanags \உரையாடுக 07:17, 17 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கல்

[தொகு]

முன் எழுதப்பட்ட ஒரு பகுதியை நீக்கியது போல் இதையும் நீக்கத்தான் போகிறீர்கள். "மென்பொருள் தொழில்நுட்பத்தில் பொருட்பால்" என்று தொடக்கப்பட்ட பூர்த்தி பெறாத பகுதியை நீக்கும் தாங்கள், தமிழை வளருங்கள். இருப்பினும் ஒரு ஆர்வத்தில் எழுதும் என் போன்ற சாதரணமான பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் கொடுத்த பேராதரவுக்கு நன்றி.. அண்ணா பல்கலைக்கழகமும் உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனமும் ஒத்துக்கொண்ட ஒரு கட்டுரையின் பகுதியைகருவிலே நீக்கி விட்டீர்கள்.

தமிழ் வாழட்டும். சு.சந்திரசேகரன், பேராசிரியர்

வணக்கம் ஐயா, உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தில் பதில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 07:03, 17 மே 2014 (UTC)[பதிலளி]

07:18, 19 மே 2014 (UTC)

இந்த tech news செய்திகளை வேறு தனிப்பக்கத்தில் இடுமாறு செய்ய எங்கு கோர வேண்டும் / மாற்ற வேண்டும்? பிற்காலத்தில் தொழினுட்ப ஆலமரத்தடியைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இட்ட செய்திகளை மட்டும் பார்க்குமாறு இருப்பது உதவும்.--இரவி (பேச்சு) 14:16, 24 மே 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே இந்த tech news செய்திகளை வேறு தனிப்பக்கத்தில் இடுமாறு செய்ய இங்கு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு tech news பெறப்படவேண்டிய பக்கத்தை மாற்ற வேண்டும். tech news செய்திகளை இடப் புதிய பக்கத்தை உருவாக்கிய பின் அங்கு மாற்றிவிடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:04, 24 மே 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Wikipedia:Village pump (technical) இல் tech news செய்திகளை இடுவதுடன் தற்போது இவற்றை இட en:Wikipedia:Tech news என்ற புதிய பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர். அங்கு இவ்விரு பக்கங்களிலும் tech news செய்திகள் பெறப்படுகின்றன. நாமும் விக்கிப்பீடியா:தொழினுட்பச் செய்திகள் என்று (அல்லது வேறு பொருத்தமான பெயரில்) ஒரு பக்கத்தை உருவாக்கி tech news செய்திகள் அங்கு மட்டும் பெறப்படும் வகையில் மாற்றிவிடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:14, 24 மே 2014 (UTC)[பதிலளி]

  • 👍 விருப்பம்ஒரு எண்ணம். இச்செய்திகள் அனைத்து விக்கிமீடியாகளுக்கும் பொருந்துவன என்பதால், விக்கிமீடியா தொழினுட்பச் செய்திகள் என வைக்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 04:04, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]