விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
  கொள்கை   தொழினுட்பம்   அறிவிப்புகள்   புதிய கருத்துக்கள்   ஒத்தாசைப் பக்கம்  
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்


International Mother Langage Day and Open Data Day Wikidata Edit-a-thon[தொகு]

Wikidata-logo-v3.png
Please translate the message to your language, if applicable

Hello,
We are happy to inform you that a national level Wikidata editing campaign "IMLD-ODD 2018 Wikidata India Edit-a-thon" on content related to India is being organized from from 21 February 2018 to 3 March 2018. This edit-a-thon marks International Mother Language Day and Open Data Day.

Please learn more about this event: here.
Please consider participating in the event, by joining here.
You may get a list of suggested items to work on here.

Please let us know if you have question. -- Titodutta using MediaWiki message delivery (பேச்சு) 07:12, 21 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் - பங்கேற்போர்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ளதற்கிணங்க இதற்கான நல்கை விண்ணப்பத்தை மார்ச் 4 இற்கு முன் அளிக்க வேண்டியுள்ளது. இந்தக் கூடலில் பங்கேற்க விரும்புபவர்கள் இங்கே உங்கள் பெயர்களைப் பதிவு செய்தால் நல்கை விண்ணப்பத்தை இறுதி செய்யவும் எமது இணக்கப்பாட்டைத் தெரிவிக்கவும் உதவும். --சிவகோசரன் (பேச்சு) 15:49, 21 பெப்ரவரி 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி அறிவிப்பு[தொகு]

வேங்கைத் திட்டம்

2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தின் முதற் பகுதியாக கணினி, இணைய இணைப்பு தேவைப்படுவோருக்கு உதவி நல்கும் திட்டம் தொடங்கியது. இதன் அடுத்த கட்டமாக, ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள இணைய உள்ளடக்கத்தின் இடைவெளி அறிந்து அதனை நிரப்புவதற்கான கட்டுரைப் போட்டி ஒன்றை முன்வைக்கிறது. இப்போட்டி, மார்ச்சு 1, 2018 தொடங்கி மூன்று மாதங்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும். மேலும் விவரங்கள் அறிய திட்டப் பக்கம் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு)

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:26, 26 பெப்ரவரி 2018 (UTC)
இன்று தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குப் போட்டி நடைபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 01:50, 1 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மடிக்கணினிகள்[தொகு]

வேங்கைத் திட்டத்தின் கீழ் மடிக்கணினி பெறுபவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து அருளரசன், மகாலிங்கம், மூர்த்தி, தமிழ்ப்பரிதி ஆகியோர் மடிக்கணினிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதற்கும் வழங்க 50 கணினிகளே இருந்ததாலும், இவ்வுதவி தேவையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டதாலும் இன்னும் சில தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு உதவி நல்க இயலாமல் போயிருக்கிறது. இது எந்த வகையிலும் அவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது அன்று. வேங்கைத் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுரைப் போட்டி போன்ற முயற்சிகள் வெற்றி பெறும் போது, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது போல் இன்னும் பல பேருக்கு உதவிகளைப் பெற்றுத் தரும் வாய்ப்பு உண்டு. உதவி விண்ணப்பங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் நன்றி. --இரவி (பேச்சு) 08:49, 13 மார்ச் 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் என்னையும் மடிக்கணினி பெற தேர்வு செய்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருளரசன், மூர்த்தி, தமிழ்ப்பரிதி ஆகியோரின் உழைப்போடு ஒப்பிடும் போது நான் வெகுதொலைவில் உள்ளேன் என்பதை என்னால் உணர முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நான் கடன் பட்டுள்ளதாகவே உணர்கிறேன். எனது வேண்டுகோளுக்கு ஆதரவளித்த தமிழ் விக்கிப்பீடியர்கள் Nan,Info-farmer,Kanags,Shrikarsan, Drsrisenthil, Sivakosaran,Selvasivagurunathan m, BALA. R,Kalaiarasy,உமாசங்கர் முருகேசன் மற்றும் இரவி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நன்றியை தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்ந்து வளப்படுத்தும் எனது பங்களிப்புகள் வாயிலாக வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.மகாலிங்கம் (பேச்சு) 14:22, 13 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - கூடுதல் தலைப்புகள் - முக்கிய அறிவிப்பு[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:22, 13 மார்ச் 2018 (UTC)