விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பற்றிய கருத்துக் கணிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியை நீக்குவது தொடர்பான கருத்துக்கணிப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் இடம்பெற்றுள்ளது. தற்போது ஓரளவு வளர்ந்துவிட்ட தவியில் முதற்பக்கத்தில் இந்த பெட்டிக்கு பதில் பயனுள்ள பல தகவல்களைத் தர இயலும். தொடர்ந்து பங்களிக்கும் விக்கிப்பீடியர்களைப் பற்றிய குறிப்புகள் விக்கியில் இருக்கவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அதனால், தற்போதுள்ள விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தைத் தொடரலாம். ஆனால் முதல்பக்கத்தில் தேவையில்லை.

விக்கிப்பீடியர் அறிமுகம் முதற்பக்கத்தில் தேவையில்லை என்பதற்கு உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பதியவும்.

ஆதரவு[தொகு]

எதிர்ப்பு[தொகு]

நடுநிலைமை[தொகு]

கருத்துகள்[தொகு]

 • நானும் கையெழுத்திடலாமா? -- மாகிர் 08:33, 10 மார்ச் 2011 (UTC)
 • தயக்கத்துடன் எதிர்ப்பு. அடையாளமற்ற பங்களிப்பினை ஊக்குவிக்கும் ஆங்கில விக்கியில் தொடங்கியதால் மெய்யியல் ரீதியில் எனக்கு தனிமனித அங்கீகாரத்துடன் உடன்பாடு கிடையாது. ஆனால் நாம் இன்னும் இது போன்ற ஊக்குவிப்பு முயற்சிகள் தேவையில்லாத அளவுக்கு நாம் வளரவில்லை என்பது என் கருத்து. இன்னும் புற ஊக்குவிப்புகள் நமக்குத் தேவை. இப்போதிருப்பதை விட குத்துமதிப்பாக சமூகம் நான்மடங்காவது பெரிதாகிய பின்னர் இதனை நீக்குவது பற்றி யோசிக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 08:44, 10 மார்ச் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில், தயக்கம் எதற்கு. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. இன்னும் சொல்லப்போனால், தேனியார் ஏதும் நினைத்துவிடக்கூடாதே என்பதுதான் என் நினைப்பு. -- மாகிர் 08:56, 10 மார்ச் 2011 (UTC)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தின் விக்கிப்பீடியா அறிமுகத்தில் சிலருடைய படங்கள் இடம் பெறுவது அவர்களை ஊக்குவிக்கிறதோ இல்லையோ நம்முடைய படமும் அந்த இடத்தில் வர வேண்டும் என்கிற எண்ணம் தமிழ் விக்கிப்பீடியாவில் அவ்வப்போது பங்களிக்கும் பலருக்கும் வரக்கூடும். இதனால் அவருடைய பங்களிப்புகளும் அதிகமாகும் என்பது என்னுடைய கருத்து. இதனடிப்படையில்தான் இரவி இந்தப் பகுதியையும், முதற்பக்க அறிமுகத்தையும் தொடங்கியிருக்க வேண்டும். மாஹிரின் கருத்துக் கேட்பு குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை. மாஹிரைப் போல் பிற பயனர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள நானும் ஆவலாயிருக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:08, 10 மார்ச் 2011 (UTC)
மாஹிர் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கட்டுரைகளில் அதிகமாகப் பங்களிக்காவிட்டாலும், தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பயனளிக்கும் பல வார்ப்புருக்களையும், நிரல்களையும் உருவாக்கி அளித்து வருகிறார். மாஹிரும் முதல் பக்கத்தில் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகத்தில் இடம்பெற வேண்டியவர்தான். வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவரும் அவரைப் பற்றிய அறிமுகத்தை அளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:23, 10 மார்ச் 2011 (UTC)
சுப்பிரமணி, தொடங்கப்பட்ட நோக்கம் பற்றியோ அல்லது முதல்பக்கத்தில் இவ்வளவு நாட்கள் இருந்தது பற்றியோ நான் குறைகாணவில்லை. நல்லவிசயம் தான். ஆனால் நாம் அடுத்தகட்டத்திற்கு செல்லவேண்டும். குறிப்பாக இந்தப் பக்கத்திற்கு வருவதற்கு விதிமுறைகள் வகுக்கலாம். நிர்வாகிகள் மட்டுமே தொகுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். சென்ற மாதத்திற்கான சிறந்த பங்களிப்பாளர் போன்றோ அல்லது பதக்கங்களோ உருவாக்கிக் பயனருக்கு வழங்கி ஊக்கப்படுத்தலாம். பதக்கங்களுக்கு வரையறை செய்யவேண்டும். -- மாகிர் 13:41, 10 மார்ச் 2011 (UTC)
தற்போது கூட முதற்பக்க அறிமுகங்கள் - விக்கிப்பீடியா நிர்வாகிகளால் மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும். இங்கு விக்கிப்பீடியாப் பங்களிப்பாளர் அறிமுகப் பகுதியில் இடம் பெறும் பயனர்கள் குறித்த செய்தியில் அவர்கள் விக்கிப்பீடியாவிற்கு செய்த பங்களிப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களின் தனிப்பட்ட வேறு திறன்கள் பல இருந்தாலும் அது குறிப்பிடப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் குறிப்பிடும் பதக்கங்கள் பயனர்களுக்கான உரையாடல் பக்கங்களில் சிலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்கள் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றில் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வது வழக்கத்திலுள்ளது. இதனால் பயன்...? தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர் எனும் நிலை அவர்கள் தொகுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் மாதத்திற்கொருமுறை தானியங்கிகளால் செயல்படுத்தப்பட்டு விடுகிறது. இதன் மூலம் விக்கிப்பீடியா பயனர்களின் தரம் (நிலை) பட்டியலிடப்பட்டு விடுகிறது. இதில் அதிகம் பங்களிப்பு செய்பவர்கள் மட்டுமே முன்னிலைக்கு வர முடிகிறது. இந்தப்பட்டியலில் இருப்பவர்களில் முதல் ஐம்பது/நூறு நிலைக்குள் வருபவர்களுக்கு அவர்கள் நிலையைக் குறிப்பிட்டு அச்சிட்ட சான்றிதழ்களை வருடம் தோறும் அளிக்கலாம். என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்காக ஒரு குழுவை அமைத்து (தேர்வு செய்து) அவர்கள் வழியாக சான்றிதழ்களை அளிக்கலாம். இதற்கு முயற்சிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:08, 10 மார்ச் 2011 (UTC)
 • என்னடா இவன் பேச வந்துட்டான் என்று நினைக்க வேண்டாம். (ஏனெனில் என்னைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் வந்துள்ளது.) ஆனால் எனக்கு அப்போது இருந்த கொள்கை மனநிலையில் இது பெரியதாகத் தெரியவில்லை. ஆனால் பல முகங்காட்டாதவர்களின் (இங்கு மட்டுமில்லை, கணினி உலகின் பல இடங்களிலும்) பங்களிப்புகளை நோக்கும்போது இது தேவையற்ற ஒன்றாகத்தான் தோன்றுகிறது. மாகிரின் கருத்துக்கு நான் ஆதரவளிக்கிறேன். (மாற்று: அப்பக்கத்தின் இணைப்பை மட்டும் முதற்பக்கத்தில் தந்து விருப்பமுள்ள அனைத்துப் பயனர்களையும் அப்பக்கத்தில் தங்களைப் பற்றி அறிமுகம் தரச்சொல்லலாம்) தற்போது இருக்கும் பக்கம் அப்படியே இருக்கட்டும். ஆனால் முதற்பக்க அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். (இதை எழுதி முடித்தவுடன் என்னைப் பற்றிய அறிமுகத்தை நீக்கிவிடுகிறேன்.) --சூர்ய பிரகாசு.ச.அ. 13:06, 10 மார்ச் 2011 (UTC)
சூர்யபிரகாசு, அனைத்துப்பயனர்களின் விவரங்கள் இங்கு இருக்கவேண்டியதில்லை. அவரவர் பயனர் பக்கங்களில் அவர்கள் தங்களைப்பற்றி எழுதிக்கொள்ளலாமில்லையா?. ஆனால் அதிக உழைப்புடன், விக்கியின் வளர்ச்சிக்கு அக்கறை செலுத்துபவர்களை கண்டறிந்து முன்னிலைப்படுத்துவது அவசியமே. நீங்கள் சொல்வது போன்று விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்திற்கான தொடுப்பை மட்டும் முதல் பக்கத்தில் போடலாம் என்பது தான் எனது கருத்தும்.
அப்புறம், மற்றவர்களாக உங்களது அறிமுகம் கேட்டு அதனை பதிந்துவிட்டு நீக்கவேண்டாமே. தராமல் இருப்பது வேறு தந்துவிட்டு நீக்குவது வேறு. மாணவராக இருந்துகொண்டு உங்களுடைய ஆர்வமும் பங்களிப்பும் பாராட்டக்கூடியது. உங்களைப்பற்றிய அறிமுகம் இருக்கட்டுமே. பரிசீலனை செய்யவும். -- மாகிர் 13:41, 10 மார்ச் 2011 (UTC)
சரி மாகிர். என்னால் பிறர் தூண்டுவிக்கப்படுவாரானால் இருப்பதில் தப்பில்லை. (படத்தை மட்டும் எடுத்து விடுகிறேன்.) --சூர்ய பிரகாசு.ச.அ. 13:59, 10 மார்ச் 2011 (UTC)
சூரியப்பிரகாஷ் மாணவராகத் தாங்கள் அதிகப் பங்களிப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது. தங்களைப் போன்று பல மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருக்கலாம். தற்போதைய நிலையில் தங்கள் படத்தை எடுத்து விடுவதால் எந்தப் பயனுமில்லை. நீங்கள் செய்வது வேடிக்கையாக இருக்கிறது...!--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:39, 10 மார்ச் 2011 (UTC)
தேவை. அதற்கான காரணங்களை ஏன் தொடங்கப்பட்டது என்ற உரையாடலில் பார்க்கலாம். கருத்துக் கணிப்பு செய்யும் போது ஒரு இரு நாட்களில் முடிப்பது முறையல்ல. முக்கிய விடயங்களுக்கு குறைந்தது ஒரு கிழமை விட வேண்டும். --Natkeeran 14:27, 10 மார்ச் 2011 (UTC)
நற்கீரன் குறிப்பிடுவது போல் பல பயனர்கள் பங்களிப்பு செய்ய வாய்ப்புகள் அளிக்கப்படும் விதமாக இந்தக் கருத்துக் கணிப்பிற்கு ஒரு கிழமை (ஒரு வார காலம்) அளவு இருக்க வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:57, 10 மார்ச் 2011 (UTC)
 • ஓரளவு உரையாடலுக்குப் பிறகு இக்கருத்துக் கணிப்பை நிகழ்த்தியிருந்தால் நலமாயிருந்திருக்கும் என நினைக்கிறேன். அறிமுகம் முதல் பக்கத்தில் இருப்பதால் சில நன்மைகள் உள்ளன. புதுப் பயனர்களின் கண்களில் அது உடனடியாகப் பளிச்சென்று தோன்றும். அதனால், தாமும் விக்கியில் பங்களிக்கலாமே என்ற ஆர்வம் தோன்றக் கூடும். என்றாலும், மாஹிர் முதல் பக்கத்தை வேறு தகவல்கள் தர பயன்படுத்தலாமே என்பதையும் முற்றிலுமாகப் புறக்கணிக்க இயலவில்லை. இடம்தான் பிரச்சினை என்றால் வேறு என்ன தகவல்கள் அறிமுகத்திற்குப் பதிலாகத் தரலாம் என்பது பற்றி சிறிது ஆழ சிந்திக்கவேண்டும். முதற்பக்க பயனர் அறிமுகத்தை விடவும் அதிகப் பயன் தரும் செய்திகள் உள்ளன என்று கண்டால், அதற்கேற்ப முடிவெடுக்கலாம். இவ்வாறு, பல கூறுகள் இவ்விவாதத்தில் இருப்பதால் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. எனவே, இத்தருணத்தில் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என்று வாக்களிக்க இயலா நிலையில் உள்ளேன். கருத்துப் பகிர்வுக்குக் குறைந்தது ஒரு கிழமையாவது ஒதுக்கிவிட்டு, அதன் பிறகு கணிப்பு நடத்துவதற்கான கேள்வியைப் பொருத்தமாக அமைத்து, பயனர்களின் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை வாக்குகளைப் பெறலாம். இந்நடைமுறை சில நாள்கள் பிடிக்கலாம். அதனால் பெரிய இடையூறு இல்லை என நினைக்கிறேன். வாழ்த்துகள்!--பவுல்-Paul 15:09, 10 மார்ச் 2011 (UTC)
மாஹிர் குறிப்பிடும் இடத்தை தகவல்களுக்காக முதற்பக்கத்தில் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் எவ்வித ஆட்சேபணையுமில்லை. இருப்பினும் முதற்பக்கத்தில் இரண்டு கட்டுரைகள், விக்கிச் செய்திகள், உங்களுக்குத் தெரியுமா?, இன்று, சிறப்புப் படம் என்றிருப்பது முழுக்க முழுக்க தகவல்களே... இதில் ஒரு மாற்றமாக விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் இருப்பது சிறப்பு. நான் முன்பே ஆலமரத்தடியில் தெரிவித்திருந்தது போல் இந்த முதற்பக்கத்தில் தமிழ் விக்சனரியிலிருந்து ஒரு சொல்லை தினசரி இடம்பெறச் செய்யலாம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் பங்களித்து வரும் பயனர்கள் தமிழ் விக்சனரிக்கும் பங்களிக்கும் வாய்ப்புகள் அதிகமாகலாம். இதற்கு இடம் வேண்டுமே... என்ற கேள்வி எழலாம். இடம் என்பது அனைத்து நிலைகளிலும் பிரச்சனைதான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். இருக்கும் இடத்தைத் தேவையையும், பயன்பாட்டையும் பொறுத்துப் பகிர்ந்து கொள்ளலாம்.(அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கான இடப் பகிர்வுகளுடன் இணைக்க வேண்டாம்.)பொதுவாக இணையப் பக்கங்களில் பக்கவாட்டில் இருப்பதை விட நீளவாக்கில் நீட்டிச் செல்வதில் எந்தச் சிக்கலுமில்லை என நினைக்கிறேன்.எனவே விக்சனரிக்கு இணைப்பு அளிக்கும் விதமாக தினம் ஒரு சொல் இங்கு இடம் பெறச் செய்யலாம். இதற்காக விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் நீக்கம் தேவையில்லை...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:33, 10 மார்ச் 2011 (UTC)

தேனியாரின் கருத்துக்களுடன் உடன்பட்டவனாக,ஒரு விக்கிப்பீடியரின் அறிமுகம் காட்சிப் படுத்தப்படும் கால அளவை குறைக்கலாம். இது அதிகமானவர்களை அறிமுகப்படுத்த வசதிப்படுத்தும். இப்போதைக்கு நீக்கத் தேவையில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 15:48, 10 மார்ச் 2011 (UTC)

தேனியார் மற்றும் பவுல் கருத்துடன் உடன்படுகிறேன். தற்போது நீக்கத்தேவையில்லை. --குறும்பன் 17:17, 10 மார்ச் 2011 (UTC)

இன்னும் தமிழ்விக்கிப்பீடியா நிறைய வளர வேண்டியிருக்கிறது. பட்டறைகள் பல மூலம் பங்களிப்பாளர்களை ஈர்த்து வரும் இவ்வேளையில் இப்பகுதியை நீக்குவது நன்றன்று. புதிய பங்களிப்பாளர்களின் rewarding centre ஐத் தூண்ட இப்பகுதி நல்லதொரு வழி. . நீக்கம் பற்றிய எண்ணத்தை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒத்திப் போடலாம். அத்தோடு அவ்விடத்தில் வேறு என்ன நல்ல தகவல்கள் இடம்பெறலாம் என்றும் சிந்திக்கலாம். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 02:55, 11 மார்ச் 2011 (UTC)

விக்கிப்பீடியாவிற்கு நான் ஒரு புதிய பயனராக இருந்த போதிலும்கூட, எனது தொழில் மற்றும் ஊடக அனுபவங்களைக் கொண்டு சில கருத்துகளை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
விக்கிப்பீடியர் அறிமுகம், முதற்பக்கத்தில் தேவையற்ற பகுதி எனும் வாதத்தில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. விக்கிப்பீடியா தன்னார்வம் கொண்ட பயனர்களால் எவ்வித இலாப நோக்கமுமின்றி கட்டியெழுப்பப்படுகின்றது. இத்தகைய நிலையில் விக்கிப்பீடியர் அறிமுகம் செய்யப்படுவதினால் அவர்களிடையே விக்கி குடும்பத்தில் தானும் ஒருவர் என்ற உணர்வே அதிகமாக ஏற்படுத்துகின்றது. அதேநேரம், ஒரு ஊடகத்தில் பங்களிப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவது என்பது விக்கிக்கு மாத்திரம் உரித்தானதல்ல. அனைத்து ஊடகங்களுக்குமே உரித்தான ஒரு பொதுப்பண்பு. இங்கு சிலரின் கருத்துப்படி பேச்சுப் பக்கத்தில் உரிய பயனர்களின் விபரங்கள் உள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. தயவுசெய்து அனைத்துப் பயனர்களின் பேச்சுப் பக்கங்களையும் திறந்து பாருங்கள். எத்தனை பயனர்களின் முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது புலனாகும்.
இங்கு ஒரு விடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும். விக்கிப்பீடியர் அறிமுகம் எனும்போது புதிய பயனர்களை ஊக்குவிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றாக கருத்திற்கொள்வது தவறு. விக்கிப்பீடியர் அனைவரும் அறிமுகப்படுத்தப்படுவதே அவசியமானதாகும். ஏனெனில், விக்கிப் பங்களிப்பாளர்கள் அனைவரைப் பற்றியும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது என்னைப் பொருத்தமட்டில் அவசியம் என்றே கருதுகின்றேன். அறிமுகப் பயனர்கள் மாத்திரமன்றி அதிகாரிகள் தரத்திலுள்ளவர்களும், நிர்வாகிகள் தரத்திலுள்ளவர்களும் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்களே. ஒரு தன்னார்வ அமைப்பினை கட்டியெழுப்பும்போது முதலில் ஒருவர் பற்றி ஒருவருக்கு புரிந்துணர்வு அவசியம். இத்தகைய புரிந்துணர்வினை அவர் பற்றிய அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதினூடாகவே கட்டியெழுப்ப முடியும். இது யதார்த்த ரீதியான உண்மை. விக்கிப்பீடியா நடுநிலைமைக் கொள்கையை பிரதானமாகக் கடைபிடிக்கின்றது. இந்த நடுநிலைமைக் கொள்கையிலிருந்து விக்கிப்பீடியர் அறிமுகத்தில் அதிகாரிகள், நிர்வாகிகள் விலக எத்தனிப்பது அவ்வளவு முறையானதாக நான் கருதவில்லை.
விக்கிப்பீடியர் அறிமுகத்தை முதல் பக்கத்தில் மேற்கொள்ளும்போது ஒரு பொதுவான அளவு வரையறையையும், காட்சிப்படுத்தப்படும் காலத்தையும் தீர்மானித்துக் கொண்டால் இது பாரிய பிரச்சினையாக இருக்காது. இதனை கருத்தில் எடுத்துக் கொள்வது முரண்பாடுகளுக்கு தீர்வாக அமையலாம். மேலும், இவ்விடயத்தை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்பு தீர்மானித்திருக்க வேண்டும். இருப்பினும் இன்னும் இத்திட்டத்தைத் தீட்ட காலம் கடந்துவிடவில்லை. --P.M.Puniyameen 06:01, 11 மார்ச் 2011 (UTC)
அடடா, இதற்கு ஒரு வாக்கெடுப்பா? :) என்ன விசயமாக இருந்தாலும் முதலில் கொஞ்சம் உரையாடி, தீவிரமான எதிர்நிலைகள் இருக்கின்றன என்று தோன்றினால் மட்டும் வாக்கெடுப்பு செய்வது நன்றாக இருக்கும். விக்கிப்பீடியர் அறிமுகத்தை முதற்பக்கத்தில் இடலாம் என்று நான் முன்மொழிந்ததற்கான காரணங்கள்:
 • யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் எழுதலாம் என்றால் விக்கிப்பீடியாவை எப்படி நம்புவது என்ற கேள்வி வருகிறது. "இதோ பாருங்கள், விக்கிப்பீடியாவுக்குப் பின்னால் இத்தனை பேரின் உழைப்பு உள்ளது, இத்தகைய தகுதியும் அர்ப்பணிப்பும் கூடிய உண்மை முகங்கள் உள்ளன.." என்று எடுத்துக்காட்டுவதன் மூலம் நமது திட்டத்தின் நம்பகத்தன்மை கூடுகிறது. முகங்களும் விவரங்களும் தளத்துக்கு ஒரு மனித முகத்தை, சமூக உணர்வைத் தருகின்றன. வெறுமனே தளத்தைப் பார்வையிடுபவர்கள் ஒவ்வொரு பயனரின் பக்கமாகத் தேடிச் சென்று இந்த உணர்வைப் பெறுவது சிரமம். மிகவும் தொடக்க நிலையில் உள்ள தமிழ் விக்கிக்கான பங்களிப்புகளைக் கூட்ட இந்த கூட்டுணர்வைப் பெறுவது முக்கியம். புண்ணியாமின் குறிப்பிட்டது போல பல தளங்களிலும் உள்ள ஒரு பகுதி தான்.
 • சிலருக்குத் தாங்களும் கூட இங்கு எழுத முடியுமா, ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருக்கும். தங்களைப் போல் ஏற்கனவே சிலர் உள்ளனர் என்று அறிந்தால் அந்தத் தயக்கம் நீங்கும். குறிப்பாக, ஒரு இசுலாமியர் விக்கிப்பீடியாவை முன்வைத்து கூறியது நினைவு கூர விரும்புகிறேன்: நாங்கள் எந்தத் தளத்தில் செயற்பட்டாலும் எங்களுக்கான வரவேற்பும் அரவணைப்பும் எப்படி இருக்கிறது என பார்ப்போம். அதில் சில தயக்கங்கள் இருந்தாலும் வெளியேறி விடுவோம் என்றோர். பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மென்பொருளாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், குறிப்பிட்ட நாட்டவர்கள் என்று சமூகத்தின் பல புலங்களில் உள்ளவர்களையும் எடுத்துக்காட்டுவதால், அதே போன்ற பின்னணியில் உள்ளவர்களால் விக்கிப்பீடியாவுடன் தொடர்புப்படுத்திப் பார்த்து பங்களிக்க முன்வர முடியும்.
 • தங்கள் நேரத்தையும், அறிவையும் செலவிட்டு விக்கிக்காக உழைப்பவர்களுக்கு என்ன மரியாதை வேண்டுமானாலும் செய்யலாம். இது தமிழ் விக்கிப்பீடியாவால் செய்யக்கூடிய சிறு நன்றி நவிலலே. முதற்பக்க அறிமுகம் பெற்ற பலர் மிகவும் மன மகிழ்ந்ததையும் அவர்களின் பங்களிப்புகளும் கூடியதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். மற்றவர்களைப் போல் நாமும் கூடுதலாகப் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுமானால் இது நல்லதே.
 • யாரும் விரும்பாமல் அவருடைய படமோ, அறிமுகமோ முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தக்கூடாது என்பதற்காகவே குறிப்பிட்ட பயனரின் ஒப்புதல் பெற்றே அவரைப் பற்றிய அறிமுகம் இடப்படுகிறது. அறிமுகம் கோரியும் அது பற்றிய விவரங்களைத் தர விரும்பா பல விக்கியர்களும் உள்ளனர் :) அறிமுகப்படுத்தப்படுவர்களின் விக்கி பங்களிப்பே முதன்மையாக சுட்டப்படுகிறது. தனிப்பட்ட விவரங்கள் மிகக் குறைவாகவே அளிக்கப்படுகின்றன. இது கூட விக்கிப்பீடியர்கள் எத்தகைய பின்னணி உள்ளவர்கள் என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே. பல அறிமுகங்கள் மிகவும் சீர் செய்யப்பட்டு, தனி விவரங்கள் குறைக்கப்பட்டு பிறகே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தத் திருத்தங்களை அனைவரும் செய்யலாம்.
 • யாரை அறிமுகப்படுத்தலாம், கூடாது என்ற பிரச்சினை இது வரை வரவில்லை :) குறித்த எண்ணிக்கை, வரையறை தவிர்த்து, பொதுவாக நல்ல பங்களிப்புகளை ஆற்றி சமூகத்தின் நன்மதிப்பைப் பெறுபவர்களின் அறிமுகங்களே இடப்படுகின்றன. எவருடைய அறிமுகத்தைப் பற்றியாவது கேள்விகள் இருந்தால், அவரது விக்கிப்பீடியர் அறிமுகத் தொகுப்புப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
 • நிருவாகிகள் தங்களை முன்னிலைப்படுத்துவதாகத் தோன்றக்கூடாது என்பதால் முதலில் நிருவாகிகள் அல்லாதோரை அறிமுகப்படுத்திய பிறகே நிருவாப் பயனர்களின் அறிமுகங்களை இடத் தொடங்கினோம்.
 • 2 வாரங்களுக்கு ஒரு முறை புதிய ஒருவரை அறிமுகப்படுத்தலாம் என்றே எண்ணினோம். பிற வேலைகளின் மீதான கவனம் காரணமாக இது எதேச்சையாகத் தள்ளிப் போவது உண்டு. அல்லது, அடுத்து காட்சிப்படுத்துவதற்கான புதிய விக்கிப்பீடியரின் விவரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஏற்கனவே உள்ள அறிமுகங்களையும் இரண்டாம் சுற்றாக வெளியிவடுவதில் தவறில்லை.

இப்பகுதியை நீக்குவதற்கான எந்தக் காரணமும் இருப்பதாகத் தோன்றவில்லை. கூடுதல் பகுதிகளைச் சேர்க்க பக்கத்தை நீட்டினால் போதும். அல்லது, இந்தப் பகுதியின் அளவையோ வேறு பகுதிகளின் அளவையோ குறுக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தொடர் இப்பக்கம் இருப்பது அவசியம்--இரவி 06:39, 11 மார்ச் 2011 (UTC)

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அநேகரின் கருத்தின்படி இந்தப் பகுதியை நீக்கவேண்டாம். இந்த கருத்துக்கணிப்பை இத்துடன் முடித்துவிடுவோம். -- மாகிர் 10:05, 22 மார்ச் 2011 (UTC)