விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு95

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனியின் நிர்வாக அணுக்கம் தொடர்பாக[தொகு]

நிர்வாகி தேனியின் சில செயற்பாடுகள் தொடர்பாக அவரது நிர்வாக அணுக்கம் திரும்பிப் பெறுவது தொடர்பாக இங்கு கோரப்பட்டது. நீண்ட உரையாடல்களுக்குப் பின்பு பெரும்பான்மைப் பயனர்கள் ஆதரித்த சிக்கலும் தீர்வு முறைக்கு ஏற்ப சக பயனர்கள் ஐவர் கீழ்வரும் முடிவை வழங்கி உள்ளார்கள்.

1 தேனி மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமளவு ஒழுக்கப் பிறழ்வு இல்லை / அல்லது அதற்கான விதிமுறைகள் இல்லை (4/0/1)
2 நிருவாகிகளுக்கான நன்னடத்தை விதிகள், புற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறல் கொள்கை ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் (5/0/0)
3 தேனி. மு. சுப்பிரமணியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் / கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டேன் என்று அவர் ஐயத்துக்கிடமின்றி உறுதியளிக்க வேண்டும். (5/0/0)
 • பதிலளிக்க வேண்டியவை
 • 1) தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கம் பற்றி கட்டுரை எழுதியது
 • உறுதியளிக்க வேண்டியவை
 • தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமை
 • விக்கிக்கு வெளியில் விக்கி பற்றிய கட்டுரைகளில் உண்மைக்குப் புறம்பான, “சில பயனர்கள் கருதுகிறார்கள்” போன்று சொந்தக் கருத்தினை சமூகத்தின் போர்வையில் இருந்து கூறுவதைத் தவிர்த்தல்
 • நலமுரணாகக் கூடிய செயல்பாடுகளில் சமூக ஒப்புதல் பெற்றே முனைவது
4 இப்படி உறுதியளிக்காது தொடர்ந்து இது போன்று ஒரு செயலில் ஈடுபட்டாலும், அவரது நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும் பணியினைத் தொடங்கலாம். (4/0/1)

இதில் 3 வது விடயம் தொடர்பாக தேனியிடம் மறுமொழி எதிர்பார்க்கப்படுகிறது. 2 வது விடயம் தொடர்பாக விக்கிச் சமூகம் தெளிவான கொள்கைகள் வழிகாட்டல்கள் உருவாக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 14:33, 27 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

 • இந்தத்தீர்வுக்கு மிகப்பல மணிநேரம் உழைத்த அனைவருக்கும் நன்றி! --செல்வா (பேச்சு) 16:25, 27 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]
 • ஆம், இதற்காக உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது முதல்முறை என்பதால் இவ்வாறு இடைக்காலக் குழு வைத்து முடிவை எட்ட நேர்ந்துள்ளது. அடுத்து இவ்வாறு நிகழாமல் காப்பதற்கும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கையாள்வதற்குரிய வழிமுறைகளை வகுக்கத் தொடங்குவோம். இப்போது குழுவின் முடிவுகளை ஒருவர் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:04, 28 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]
3வது விடயம் தொடர்பில் பதிலையும் உறுதியளிப்பையும் தேனி மு.சுப்பிரமணி விரைந்து தரவேண்டும். அதுவே இப்பிணக்கை முடிவுக்குள்ளாக்கும். அடுத்த கட்ட வழிமுறைகளை வகுக்கும் பணிக்கும் உதவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:46, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

சோடாபாட்டில், ஐவர் குழு அறிக்கையை அளித்து இன்றோடு 28 நாட்கள் கடந்துள்ளன. "இப்படி உறுதியளிக்காது தொடர்ந்து இது போன்று ஒரு செயலில் ஈடுபட்டாலும், அவரது நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும் பணியினைத் தொடங்கலாம்" என்னும் இறுதிப் பரிந்துரைக்குச் செல்வதற்கான காலக்கோட்டைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். இது தொடர்பாக தேவைப்படும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இந்தச் சிக்கலைக் கையாண்டு வரும் நற்கீரனை வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:28, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இந்தப் பணியை பிற நிர்வாகிகள் பயனர்கள் பொறுப்பெடுத்து மேற்கொண்டு நகரக் கோட்டுக் கொள்கிறேன். --Natkeeran (பேச்சு) 04:44, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
நற்கீரன் வேண்டுகோளுக்கு இணங்க, வேறு யாரும் இப்பணியை மேற்கொள்ள முன்வராததால், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை அடிப்படையில் தொடர விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:03, 8 சனவரி 2014 (UTC)[பதில் அளி]

முறையீட்டு வழிமுறைக்கான பரிந்துரை[தொகு]

பத்தாண்டுக் கொண்டாட்டத்தை (!) அடுத்து ஏற்பட்டச் சிக்கல் இப்போது ஒருவழியாக முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது கொள்கை, வழிகாட்டல், பிணக்குத் தீர்வுக் கட்டமைப்பை வளர்க்க வேண்டிய தேவையை உணர்ந்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத் தொடங்கியுள்ள பிணக்குத் தீர்வுமுறையின் கட்டங்களைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். முதற்கட்டமான பேச்சுப்பக்க உரையாடல் வழியாகத் தீர்வை எட்டுவது நமக்கு வழக்கமான ஒன்றுதான். அடுத்த கட்டத்தில்தான் நம்மிடம் சரியான வழிமுறை இல்லை. ஆலமரத்தடியிலும் பிற விசயம் சார்ந்த பேச்சுப் பக்கங்களிலும் உரையாடி, இணக்க முடிவை எட்டி வந்துள்ளோம். ஆனால் முடிவின்போது தொடர்புடைய நபர்கள் வருத்தம் தெரிவிப்பது, கட்டுரை உள்ளடக்கத்தை கோரிக்கை விடுத்தவர் குறிப்பிட்டவாறு மாற்ற அனுமதிப்பது போன்றவை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இவையல்லாமல் யாராவது மூன்றாம் நபர் விக்கி சமூகத்தின் சார்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தேவை இருப்பின் எப்படிச் செய்வது என வகுக்கப்படவில்லை. அதனாலேயே பலரும் கருத்துத் தெரிவித்திருந்தாலும் யார் எப்போது செயல்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு92#நடவடிக்கை என்ற இழையில் இணக்க முடிவு ஏற்பட்டிருந்தும் யாரும் செயல்படுத்தவில்லை என்று இரவி சுட்டிக் காட்டியுள்ளார். பொதுவாக உரையாடல்களை நாம் கருத்தறிவிப்பதற்கே பயன்படுத்துவதால் நான் உட்பட பலரும் கருத்தை இட்டுவிட்டு நிறுத்திக் கொண்டோம். பின்னர் சில நாட்களில் வேறு சிக்கலில் அந்த இழை பரணேறியுள்ளது. (நடுவில் பலரும் களைத்துப் போனது, சொந்த வேலையால் விடுப்பில் சென்றது ஆகியவை இணைந்து கொண்டன.) இந்த இடத்தில் முடிவை தொடர்புடையவரே செயல்படுத்துவதிலோ, யாராவது ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்தில் போய் இதைச் செயல்படுத்துங்கள் எனக் கேட்பதிலோ தயக்கம் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், உரையாடற்காலம், முடிவு, செயல்பாட்டாளர் என உரையாடலின் தொடக்கத்திலேயே வகுத்துக் கொண்டோம் எனில் நிருவாகியணுக்கத் தேர்வு போல தானாக நடக்கும். அதனால் கருத்தறிதல் உரையாடல்களைத் தாண்டி முறையீடுகளை வைக்கப் பின்வருவது போல ஒரு வார்ப்பைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.


கோரிக்கை எண்/தலைப்பு[தொகு]

முறையீட்டாளர்: ஒப்பம்
விளக்கம்: முதற்கட்டமாக பேச்சுப்பக்க உரையாடல்களில் பயனர்களிடையே தீர்வு எட்டப்படவில்லை என்பதற்குச் சான்றுடன் விளக்கமளிக்க வேண்டும்.

கருத்துகள்[தொகு]

கூட்டு முடிவு[தொகு]

<இதை சிக்கலுக்குத் தொடர்பில்லாத பயனர் ஒருவர் நிரப்ப வேண்டும். குறித்த காலத்தில் யாரும் நிரப்பாவிட்டால் முறையீட்டாளர் எந்தவொரு பயனரின் பேச்சுப் பக்கத்திலும் நினைவூட்டலாம்.>

மேலே குறிப்பிடத்தக்க புள்ளிகளில் முடிவு எட்டப்படாவிட்டால் தேர்ந்தெடுத்த புள்ளிகளில் வாக்கெடுப்பு நடக்கும்.

ஆதரவு[தொகு]

எதிர்ப்பு[தொகு]

செயல்பாடு[தொகு]

Yes check.svgY ஆயிற்று -- செயற்படுத்துனர் ஒப்பம்


இத்தகைய முறையீட்டை சமுதாய முறையீட்டுக் கூடத்தில் வைத்து ஆலமரத்தடியில் இருந்து இணைப்புத் தருமாறு செய்யலாமா? -- சுந்தர் \பேச்சு 08:27, 28 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

முதலில் முறையீட்டின்போதே வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என்பதால் சற்று வரிசையை மாற்றிவைத்துள்ளேன். ஏனெனில் அந்நேரம் இணக்கமுடிவு எவற்றில் உள்ளன என்று பார்த்து எஞ்சியவற்றை மட்டும் புள்ளிகளாக வாக்கெடுப்புக்கு விடலாம். -- சுந்தர் \பேச்சு 11:09, 28 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

முடிவெடுக்கவேண்டிய நாள் என்பதையும் கோரிக்கை வைப்பவரே முடிவு செய்யவேண்டுமா? கோரிக்கை வைத்ததில் இருந்து இத்தனை நாள் அதாவது 1 மாதம், 5 வாரம்,.... என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமுதாய முறையீட்டுக் கூடத்தில் இருக்கும் 10 நாள் என்பது குறைவு என்பது என் கருத்து--குறும்பன் (பேச்சு) 20:23, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நல்ல கருத்து குறும்பன். நீங்கள் சொல்வதுபோல கோரிக்கை வைத்து இத்தனை நாட்கள் என்று இருப்பதுதான் சரி. இப்போது அதை வார்ப்பிலிருந்து நீக்கியுள்ளேன். கோரிக்கை வைப்பவர் ஒப்பமிடுவதிலிருந்து தானாக முடிவுறும் நாள் வந்தமரும்படி செய்தால் நன்று. இதுபோன்ற முக்கிய கோரிக்கைகளுக்குப் மூன்று வாரங்கள் வைத்துக் கொள்ளலாமா? -- சுந்தர் \பேச்சு 02:57, 30 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய முறையீட்டுக் கூடம் பக்கத்தில் தொடர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:08, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இது முக்கிய வழிமுறை என்பதால் அனைவரும் தங்கள் கருத்தை சமுதாய முறையீட்டுக் கூடத்தின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:41, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கியிலுள்ள தகவல் பற்றி வரும் செய்திகள்[தொகு]

[1] இங்கு ஒருவர் பார்த்த்பின் கட்டுரை தவறாக எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடிருந்தார். அதில் நான் பார்த்த வரை தகவல் எல்லாம் ஒழுங்காகவே இருக்கின்றன. இன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நெல்லை மாவட்டம் கட்டுரையில் தவறாக இருந்ததாக விக்கி ஏ வி முகநூல் குழுமத்தில் பகிர்கிறார். நான் ஆங்கிலம்/தமிழ் இரண்டு விக்கிப்பீடியாவிலும் இரண்டு கட்டுரைகளிலும் பார்த்துவிட்டேன். கோவில் பட்டி என்ற வார்த்தை கூட திருநெல்வேலி மாவடட்ம் கட்டுரையில் இல்லை. இதைப்போன்று தகவலை என்ன செய்வது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:07, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியா குப்பை என்று நடிகர் பார்த்திபன் கூரியிருந்ததாக ஒருவரால் முகநூலில் கூறப்படிருக்கிறது. அந்த உரையாடல் கீழே.

_______________________________________________________________________________________________________________________ Senthil Kumar November 3 at 10:47pm · Edited · விக்கிப்பீடியா குப்பை - நடிகர் பார்த்திபன்

02-11-2013 தி இந்து நாளிதழில் ரிலாக்ஸ் பக்கத்தில் (மதுரை பதிப்பு: பக்கம் 12) “அம்மாவிடம் பிடித்த குணம் என்ன?” - பார்த்திபனை பேட்டி காணும் கீர்த்தனா எனும் தலைப்பில் வெளியான பேட்டியில்,

கீர்த்தனா: ஆரம்பத்துல நாடகத்துல நடிச்சிருக்கீங்கன்னு விக்கிப்பீடியால போட்டிருக்கே நிஜமாப்பா?”

பார்த்திபன்: பள்ளிப்படிப்பு முடிஞ்சதுமே நாடக மேடையில் உயர் படிப்பு. அதைத் தவிர, அந்த விக்கிப்பீடியாவில் உள்ள செய்திகள் எல்லாம் நான் விக்கி விக்கி அழும்படியா இருக்கு! நான் பிறந்தது சென்னை ராயபுரத்தில்! அதில் தூத்துக்குடின்னு போட்டிருக்கு. அதேபோல, பிறந்த வருடம் தவறு. திரைப்படக் கல்லூரியில் படிச்சதாவும் போட்டிருக்கு! அனைத்தும் குப்பை

என்று விக்கிப்பீடியா குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

விக்கிப்பீடியாவில் பார்த்திபன் குறித்த தகவல் மட்டும்தான் குப்பையா? இல்லை அனைத்துமே குப்பையா...? _______________________________________________________________________________________________________________________ தென்காசி சுப்பிரமணியன்

இயற் பெயர் ரா. பார்த்திபன் பிறப்பு இந்தியாவின் கொடி, சென்னை தமிழ் நாடு தொழில் நடிகர், இயக்குனர் நடிப்புக் காலம் 1989-தற்போது துணைவர் சீதா (திருமணமுறிப்பு ஆகியுள்ளது)

மேலுள்ளவை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளவை. கடைசியாக திருத்தப்பட்டது செப்டம்பர் மாதத்தில். _______________________________________________________________________________________________________________________ தென்காசி சுப்பிரமணியன் Born Radhakrishnan Moorthi November 14, 1957 (age 55) Chennai, India India Occupation Actor, director, producer, writer Years active 1982–present Height 5 ft 8 in Spouse(s) Seetha (divorced) Children Abinaya Keerthana Raaki

மேலுள்ளவை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது. கடைசியாகத் திருத்தப்பட்டது 24 அக்டோபர்.

https://en.wikipedia.org/wiki/R._Parthiepan _______________________________________________________________________________________________________________________


துகளக்கில் வந்த செய்தி

//திருநெல்வேலி மாவட்டம் தொடர்பான கட்டுரையில். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தது என்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது//

இதைப் போன்ற செய்திகளை என்ன செய்வது? ஒருவர் தவறான தகவல் என்கிறார். தேடிப்பார்த்தால் அவர்கள் சொன்னதில் சில தகவல்கள் அங்கு இல்லை. இல்லை எனில் சரியாக இருக்கிறது. இதைப் போன்ற நேரங்களில் என்ன செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:15, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிப்பதற்கு முன்னர் கோவில்பட்டி நெல்லை மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. அதைத்தான் துக்ளக் கட்டுரை ஆசிரியர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பாரோ? -- சுந்தர் \பேச்சு 15:13, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

சுந்தர் நீங்கள் கூருவது போல் இல்லை. மேலே சில உள்ளடக்கங்களை சேர்த்திருக்கிறேன். முதலில் இருந்து படியுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:22, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கித்திட்டங்கள் வளர வளர வேண்டுமென்றோ அறியாமலோ இது போன்ற தவறான குற்றச்சாட்டுகள் பெருகவே வாய்ப்புண்டு.

அரசியல்ல இதெல்லாம் சகசம் :) மின்மடல் மூலமாகவோ தவறான கருத்து வந்த வலைத்தளத்தின் கருத்துப் பெட்டியின் மூலமாகவோ உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாத இடங்களில் கண்டு கொள்ளாமல் நகர்வது பரவாயில்லை. --இரவி (பேச்சு) 08:06, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கி மூலத்தின் இத் தொ.நு எல்லா வி.மூலங்களிலும் உள்ளதா[தொகு]

பார்க்க: http://fr.wikisource.org/wiki/Page:Rambosson_-_Histoire_des_M%C3%A9t%C3%A9ores,_1883.djvu/54

பிரெஞ்சு விக்கி மூலம் பயன்படுத்த எளிதாக உள்ளது போல் உள்ளது.--Natkeeran (பேச்சு) 22:10, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

ஆங்கில / பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ள வசதிகளை நாமும் பெற்றுக் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 03:46, 30 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

முதற்பக்கக் கட்டுரைகள் - இற்றை[தொகு]

முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்துவதில் உள்ள சில சிக்கல்களை முன்வைக்கிறேன். எனவே த.வி. சமூகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். நன்றி.

 • வரும் வாரங்களில் முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்த போதிய பரிந்துரைகள் இல்லை. இதனால் இற்றைப்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. பரிந்துரைகள் தரம், தகுதி (பார்க்க: முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள்) உள்ளவைகளாக இருப்பது முக்கியம். இற்றைப்படுத்த வேண்டும் என்பதற்காக தரம், தகுதி அற்ற கட்டுரைகளைப் பரிந்துரைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 • தற்போது முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்த குறித்த பயனர்(கள்) இல்லை. யாரும் இற்றைப்படுத்தாதபோது, மதியத்தின் பின் சில வாரங்களாக நான் இற்றைப்படுத்தி வருகிறேன். எனவே இற்றைப்படுத்த பயனர்(கள்) முன் வருவது நல்லது. இங்கு முன் வருபவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடலாம்.

--Anton·٠•●♥Talk♥●•٠· 17:28, 1 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

போதிய தரமான பரிந்துரைகள் இல்லாவிட்டால், இரு வாரத்துக்கு ஒரு முறை இற்றைப்படுத்தலாம். அல்லது, வாரம் ஒரு கட்டுரையை மட்டும் காட்டலாம். புதுப்பயனர்களை ஈர்க்கும் சில முயற்சிகளுக்கு முதற்பக்கத்தில் நல்ல தோதாத இடம் தேவைப்படுகிறது :) --இரவி (பேச்சு) 08:03, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
வாரம் ஒரு கட்டுரை என்றால் நன்றாக இருக்கும்.--Kanags \உரையாடுக 08:38, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]


நிறையக் கட்டுரைகள் உண்டு. விரைவில் பட்டியலிடுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:13, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

கட்டுரைப் போட்டி விதிகளில் மாற்றம்[தொகு]

கட்டுரைப் போட்டிகளில் சில விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதை இந்த மாதத்தில் இருந்து அனைவரும் பின்பற்ற வேண்டும். செய்யாதவர்கள் நாரதர் கோவத்துக்கு ஆளாக நேரிடும். நாராயண நாராயண..

கட்டுரைப் போட்டி விதிகளில் உள்ள மாற்றத்தைக் காண இங்கு வரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:18, 2 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம் அப்படியே செய்கிறோம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:27, 2 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நிருவாக அணுக்கத்தை மீளப்பெறுவது குறித்த கொள்கை முன்மொழிவு[தொகு]

கருத்து தேவை: விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை--இரவி (பேச்சு) 10:03, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

புதுப்பயனர் ஊக்குவிப்பும் உதவியும்[தொகு]

முகநூல் குழுமத்தில் பல புதுப்பயனர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அவர்களை ஒத்தாசைப் பக்கம், கலைச்சொல் ஒத்தாசைப் பக்கம் நோக்கி திருப்பிவிட்டு வருகிறோம். இவர்களின் கேள்விகளை உடனுக்குடன் கவனித்து ஆதரவு வழங்குவது அவர்களின் பங்களிப்பு ஆர்வம் குறையாமல் இருக்க உதவும். முகநூலில் விருப்பங்கள் பெறுவது போல, வலைப்பதிவுகளில் மறுமொழிகள் பெறுவது போல, புதுப்பயனர்கள் தாங்கள் எழுதும் கட்டுரைகள் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பார்த்தார்களா இல்லையா என்றும் அறிய விரும்புவதை உணர முடிகிறது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு புதுப்பயனர்களின் பங்களிப்புகளைக் கவனித்து கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களிலும் அவர்களின் பேச்சுப்பக்கங்களிலும் ஊக்குவிக்க வேண்டுகிறேன். அவர்களின் கட்டுரைகளை மேம்படுத்திக் காட்டுவது இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லா கட்டுரைகளிலும் இவ்வாறு செய்ய முடியாது. ஒரு பயனரின் ஒரு கட்டுரையிலாவது இவ்வாறு செயற்பட்டு அவர்களோடு உரையாட முனைந்தால், விக்கிச்சமூகத்தின் அரவணைப்பை உணர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 10:08, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:12, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

தமிழ் விக்கியிலுள்ள பொறுப்புகளைக் குறைத்தல்[தொகு]

ஏற்கனவே முதற்பக்க இற்றைக்கு அதிகப்பங்களிப்பாளர்கள் கிடைப்பதில்லை. தற்போது முகநூல் குழுமம் வேறு வளர்ந்து வருவதால் நிறைய இடங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அதனால் முதற்பக்கத்தில் உள்ள சிலவற்றை குறைக்கலாம் எனத் தோன்றுகிறது. மற்றவர்கள் கருத்தறிய ஆவல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:02, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

எதை எதைக் குறைக்கப் பரிந்துரைக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். அல்லது முதற்பக்கத்தையே மூடி விட்டு எல்லோரும் முகநூலுக்கும் டுவிட்டருக்கும் போய் விடலாமா:)--Kanags \உரையாடுக 11:23, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

எல்லோரும் முகநூலுக்கே போய்விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:11, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நான் வரல்ல.....--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:49, 9 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

தென்காசியாரே, பார்க்க - விக்கிப்பீடியா:விக்கிச் சுமை--இரவி (பேச்சு) 16:51, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

சஞ்சீவி சிவகுமார். நான் ரீல் விட்டதை ரியலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:29, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அப்படியா தென்காசியாரே. நான் பயந்திட்டன். எல்லாரையும் கூட்டிக்கொண்டு முகநூலுக்கு போக முடிவுகட்டிட்டியதா நினைச்சு...--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:14, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

Search_results_from_Wikidata[தொகு]

பார்க்க மீடியாவிக்கி_பேச்சு:Common.js#Search_results_from_Wikidata--சண்முகம்ப7 (பேச்சு) 17:09, 3 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நவம்பர் மாத கட்டுரைப் போட்டி[தொகு]

நவம்பர் மாத கட்டுரைப் போட்டியில் நிறைய கட்டுரைகள் விதிகளை மீறியுள்ளதால் கட்டுரைப் போட்டி அறிவிப்புகள் வர வெகுத் தாமதமாகும். சிரமத்துக்கு வருந்துகிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:35, 4 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

'உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்' எனும் கட்டுரை குறித்து[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பெயர்களின் தொகுப்புக் கட்டுரை இருந்தால் கூறவும். சில உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பெயர்கள் என்னிடம் உள்ளன. நன்றி. - ச.பிரபாகரன் (பேச்சு) 20:44, 7 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பக்கம் விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள். முற்காலத்துப் பக்கங்கள் விக்கிப்பீடியா:உருவாக்க வேண்டிய கட்டுரைகள்/செய்திகளில் அடிபடும் தலைப்புகள், விக்கிப்பீடியா:தேவைப்படும் கட்டுரைகள். ஏதேனும் ஒன்றை முன்னிலைப் படுத்தி நிலையான தொடுப்பிணைப்பு கொடுக்கவேண்டும்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:08, 9 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
நன்றி - ச.பிரபாகரன் (பேச்சு) 13:42, 11 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

கன்னட மொழி விக்கிப்பீடியாவும் தமிழ் விக்கிப்பீடியாவும்[தொகு]

அண்மையில் தி இந்து நாளிதழில் கன்னட விக்கிப்பீடியாவின் தேக்க நிலை குறித்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தமிழ் விக்கிப்பீடியா குறித்தும் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காண்க:இங்கே--பவுல்-Paul (பேச்சு) 02:11, 11 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இணைப்புக்கு நன்றி.

"Old-timers such as Mr. Nadig say that things were “irreparably damaged” a few years ago, when Google took up a transliteration project in order to enrich the intelligence of its transliteration tool. “In order to make their tool more intelligent, it hired companies or manpower to put English content through the machine, and then manually make corrections on it. This, I believe, overwrote some of the old content, and before this process was brought to a stop, a lot of damage was done. Then, the community had to work hard to undo the damage; a lot of this remains broken till this day,” he says." என்பது கவனிக்க வேண்டிய ஒரு கூற்று. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு புவி சூடாதல் கட்டுரை ஆகும். இது போன்று சில பத்து நல்ல வளர்ச்சி பெற்ற கட்டுரைகள் கூகிள் மொழிபெயர்ப்பால் பிரதி செய்யப்பட்டுள்ளன.

"first led by the free and open source community that was very active around these languages" என்பதும் ஒரு முக்கியமான கூற்று.

--Natkeeran (பேச்சு) 14:25, 11 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:28, 11 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

பட்டியல் கட்டுரைகளை மட்டும் கூகுள் மொழிமாற்றம் செய்தால் அதில் சிக்கல்கள் அவ்வளவு இருக்காது எஅன்த் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:09, 11 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

கூகிள் திட்டத்தின் மூலம் நல்ல கட்டுரைகள் பதிலீடு செய்யப்பட்டதோடு கூட, அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் மொழிநடைச் சிக்கல்கள், நுட்பச் சிக்கல்கள், பொருட்பிழைகள், இணைப்புப் பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் இருந்தன. இவற்றையெல்லாம் கவனித்துத் திருத்துவதற்கும் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் போதிய வளம் இருக்கவில்லை. இரவி, சுந்தர் போன்றவர்கள் எடுத்த முயற்சிகளினால் தமிழில் இதை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஆனாலும் தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இவ்வாறு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பல கட்டுரைகளை மொழிபெயர்த்தவர்கள் ஏற்கெனவே திருத்தியுள்ளனர். பலவற்றை இன்னும் திருத்தவேண்டி உள்ளது. கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தமிழில் 2%க்கும் குறைவு என்றாலும், "ஏதாவதொரு கட்டுரை"யைத் தேடும்போது இவ்வாறான கட்டுரைகள் அடிக்கடி வருவதையும் காண்கிறோம். அண்மையில், ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் உள்ள மொழிகள் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதி குறித்து ஆராய்ந்தபோது தமிழுக்கு இது ஒரு குறையாகக் கூறப்பட்டதாகவும் ஞாபகம். ---மயூரநாதன் (பேச்சு) 04:36, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
கூகிள் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த முக்கியமான சில கட்டுரைகளை மட்டும் நீக்கிவிட்டு தற்போது நடைபெறும் கட்டுரைப் போட்டியில் தலைப்பாகச் சேர்த்துக்கொள்ளுமாறு ஒரு பரிந்துரையை முன்வைக்கிறேன்.--பிரஷாந் (பேச்சு) 14:35, 18 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

செங்கைப் பொதுவன் அவர்கள் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை...[தொகு]

வணக்கம்! தமிழறிஞரும், விக்கிப்பீடியா பங்களிப்பாளருமான பொதுவன் ஐயா குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் (சென்னைப் பதிப்பு) கடந்த 9ஆம் தேதியன்று கட்டுரையொன்று இரண்டாவது பக்கத்தில் வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் இணையத்தளப் பதிப்பினை இங்கு காணுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:08, 12 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:39, 12 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

 • செங்கை பொதுவன் அவர்களின் அளப்பரிய தமிழ்ப்பணிக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!--பவுல்-Paul (பேச்சு) 20:15, 12 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
செங்கை பொதுவன் அடிகளாரின் தமிழ்ப்பணியைப் போற்றிட சொற்கள் இல்லை !! அவரது அரியத் தொண்டு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளதுடன் பலருக்கு உந்துதலாக இருந்துள்ளது. இத்தகையோரின் அணுக்கம் கிடைத்ததை எனது பேறாக எண்ணுகிறேன். தமது முதுமைப்பருவ நோயின் தாக்கம் குறைந்து இனிதே பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் !!--மணியன் (பேச்சு) 23:54, 12 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 17:10, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
பொதுவன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:56, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
கட்டாயம் சந்திக்க வேண்டும் என நான் எண்ணியிருந்தவர்களுள் செங்கைப்பொதுவன் ஐயா அவர்களும் ஒருவர். கடந்த தமிழ் விக்கிக் கூடலின்போது அவரைச் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. தமிழ் வளர்ச்சியில் அவருக்கு இருக்கும் அக்கறை குறித்து விக்கிச் சமூகத்துக்கு உள்ளும் வெளியிலும் பலர் குறிப்பிட்டுச் சொன்னதையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கும் மேலும் பலருக்கும் உந்து சக்தியாக விளங்கக்கூடிய அவர் உடல் நலத்துடன் நீண்டகாலம் பணியாற்ற வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 04:07, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் செங்கைப்பொதுவன் ஐயா.--கலை (பேச்சு) 16:23, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் ஐயா.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:26, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 20:27, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:54, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

செங்கைப் பொதுவன் குறித்து தினமலரில் செய்தி[தொகு]

இன்றைய தினமலர் (டிசம்பர் 15, 2013) தினமலர் இதழில் கடைசி பக்கத்திற்கு முந்நைய பக்கத்தில் செங்கைப் பொதுவன் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. ஐயாவின் சங்க கால இலக்கியங்கள் குறித்த பதிவு பற்றிய செய்திக் குறிப்புகள் உள்ளன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:46, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

தலைவரே உங்ககளுக்கு மட்டும் எப்படி ஒருநாள் முன்னரே தினமலர் செய்தித்தாளை அனுப்பி வைத்தார்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:40, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இதைப் போன்றவற்றை என்ன செய்வது?[தொகு]

//தமிழ் கட்டுரைகளை எழுத துவங்கினாலும், அதில் உள்ள தகவல்களை சமயம் சார்ந்து, கொள்கை ரீதியாக, இவர் அவற்றை வரிசைப்படுத்த விரும்பவில்லை. தமிழ் தொகை நூல்கள் எனும் தலைப்பில் உள்ள, 700 கட்டுரைகளில் சைவ, வைணவ அறிஞர்கள், கவிஞர்கள், அரசர்கள் குறித்து குறிப்பிடும் நிலையிலும், அவற்றை அகர வரிசையில் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவில், வரிசைப்படுத்தியிருக்கிறார்.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் வேறு சிலர் இவற்றை சைவம், வைணவம், சித்தாந்தம், இலக்கிய நெறிகள் என, வகைப்படுத்தி வருகின்றனர்.//

மேலுள்ளது தினமலரில் உள்ளது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:36, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

வகைப்படுத்துதல் தான் சிறந்தது. இவர்கள் சொல்வது விக்கியில் பகுப்பே கூடாது (எனக்கு மற்றவற்றை பற்றி கவலையில்லை(அறிய ஆர்வமில்லை), சைவம் பற்றிய பழைய தமிழ் நூல்கள் எது? என காண பகுப்பு தான் உதவும், பகுப்பு (வகைப்படுத்துதல்) இல்லாவிட்டால் எனக்கு தேவையானதை கண்டு எடுக்க மிக சிரமப்பட வேண்டும்) என்பது போல் உள்ளது. அதை படிக்கும் போது வகைபடுத்துதலை குற்றம் என்கிறாரா இல்லையா என்பதில் பெரும் குழப்பமே வருகிறது :) --குறும்பன் (பேச்சு) 17:09, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
கலைக்களஞ்சியம் அதன் தேவைகள், நோக்குகள் அதன் செல்நெறி என்பவை பற்றி இவர்கள் சரியான புரிதல் இல்லாமையால் இப்படி எதிபார்க்கவும் எழுதவும் செய்கிறார்கள் என இனைக்கின்றேன். இவை பற்றிக் குழம்பத் தேவை இல்லை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:00, 16 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
இதிலிருந்து, தினமலருக்கு விக்கிபீடியா என்றால் என்ன எனும் புரிதல் இல்லை எனத் தெரிகிறது. விக்கிபீடியாவில், கட்டுரை எழுதுபவர்தான் அதை வரிசைபடுத்த வேண்டும் என்று இல்லை. கட்டுரைகளை எழுதுபவர் ஒருவராக இருந்து கட்டுரைகளை வரிசை படுத்துபவர் வேறொருவராக கூட இருக்கலாம். அதற்காக எழுதுபவரை குறைகூற முடியாது. தினமலர் கூறுவது ஏதோ குறைகூறவேண்டும் எனக் கூறியது போல உள்ளது.-- ச.பிரபாகரன் (பேச்சு) 05:53, 18 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நாமே எழுதி அனுப்பும் முழு கட்டுரைகளில் மட்டுமே துல்லியம் பேண முடியும். அதற்கு மட்டுமே கட்டுரையாளர் பொறுப்பாக முடியும். அதைக் கூட இதழ்கள் திருத்தாமல் அப்படியே வெளியிடும் என்று சொல்ல முடியாது. பேட்டிகளைப் பொருத்த வரை பேட்டி எடுப்பவர் என்ன புரிந்து கொள்கிறாரோ எதை முன்னிறுத்த விரும்புகிறாரோ அது தான் இறுதியில் வரும். பெரும்பான்மை இதழாளர்களுக்கு விக்கிப்பீடியா இயங்குவது பற்றி விழிப்புணர்வு இல்லை. (ஏன், நமக்கே கூட பல காலம் இயங்கினால் தான் புரிகிறது) இது எல்லா மொழி, உலக நாட்டு ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த விசயத்தில் தினமலருக்கோ எந்த ஒரு ஊடகத்துக்குமோ தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக வேண்டுமென்றே ஒரு தவறான நிலைப்பாடு இருக்கும் அறிகுறி இல்லை. பெரும்பாலும், இத்தகைய பேட்டி எடுக்கும் நிருபர்கள் முதலில் ஒருவரிடம் பேசி விக்கிப்பீடியா பற்றி அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள முற்படுவார்கள். பிறகு, அதை வைத்து பேட்டி எடுப்பவரிடம் சில கேள்விகள் கேட்பார்கள். மிக மிக தவறான ஒரு செய்தி என்றால் மறுப்பு, திருத்தம் வெளியிடலாம். சிறு சிறு பிழைகளை ஒதுக்கி விட்டு நகர்வது தான் நம்முடைய ஊடக உறவுக்கு நலம் விளைவிப்பதாக இருக்கும். ஒவ்வொரு ஊடகச் செய்தியிலும் தவறு கண்டுபிடித்துத் திருத்திக் கொண்டிருந்தோமானால், குறிப்பிட்ட செய்தியாளர் / இதழ் அடுத்த முறை நம்மை எப்படி அணுக விரும்புவார்கள் என்று சொல்வதற்கில்லை.

அதே போல், பேட்டி அளிப்பவருக்கும் ஊடகங்கள் செய்தி அளிக்கும் முறை பற்றிய புரிதல் வேண்டும். தொடர்ந்து சில ஆண்டுகள் அனுபவம் இருந்தால் மட்டுமே இந்த தெளிவு கைவரும். எதைப் பேசலாம், பேசக்கூடாது, எதை முன்னிறுத்த வேண்டும், எங்கு நாம் பேச்சுவாக்கில் பேசுவது செய்தியாகும் என்று அறிந்து பேச வேண்டும். எதையெல்லாம் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து மீண்டும் ஒரு முறை குறிப்பிட்டு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கான சூழல் எல்லா பேட்டிகளிலும் அமையாது. எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், இறுதி விளைவு நம் கையில் இருக்காது.--இரவி (பேச்சு) 05:17, 30 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

புதியவர்களுக்கான உதவி[தொகு]

புதியவர்களுக்கான வரவேற்பு வார்ப்புருவில், புதியவரிடம் கருத்தை, உதவியை எழுதும்படி ஒரு தொகுப்புப் பெட்டி போடலாம். அந்த பெட்டியினுள் ”கருத்தை, உதவிக்கான கேள்வியை இடுக” என்று எழுதலாம். இதன்மூலம், புதியவர் சோதனை முயற்சியாக எழுதும் பக்கங்கள் தவிர்க்கப்படும். பெரும்பாலானோர் கேள்விகளையே பக்கங்களாக எழுதுகின்றனர். இதை மாற்றி, அவர் கேள்வியை, கருத்தை பெட்டியில் இட்டவுடன், அது ஆலமரத்தடிக்கோ, ”புதியவர்க்கான உதவிப் பக்கம்” என்ற பக்கத்திற்கோ செல்லும்படி மாற்றலாம். புதியவர்களுக்கான பக்கத்தில் அதைப் படித்து, அவர் கருத்தைப் பெற்று, அவர் பக்கத்திலோ, அல்லது கருத்திற்கேற்ப முடிவோ எடுக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:46, 15 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இதனால் வழமையான பயனர்களின் வேலைப்பளு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.--Kanags \உரையாடுக 08:23, 18 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

ஒரு கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே மேற்கோளைக் காட்ட வேண்டி ஏற்பட்டால் மேற்கோள்கள் பகுதியில் திரும்பத் திரும்ப வராமல் ஒரு எண்ணில் மட்டும் வருமாறு எப்படி செய்யலாம்? - Uksharma3 (பேச்சு) 04:17, 5 சனவரி 2014 (UTC)[பதில் அளி]

Uksharma! உங்கள் கேள்விக்கான பதிலை, உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டிருக்கின்றேன். பாருங்கள்.--கலை (பேச்சு) 12:25, 5 சனவரி 2014 (UTC)[பதில் அளி]

பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் பயிற்சிப்பட்டறை[தொகு]

CIS-A2K அமைப்பினர் பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் தமிழை இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்களுக்காக விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அமைப்பாளர் சுபாசீசு நேற்று என்னைத் தொடர்பு கொண்டு பயிற்சி அளிப்பதற்கு அழைத்தார். நானும் கலந்து கொள்ளவிருக்கிறேன். நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரம் 12 முதல் பிற்பகல் 2 மணிவரை புதுப்பயனர்கள் தொகுப்பார்கள். அந்நேரம் வாய்ப்பிருப்பவர்கள் அவர்களது பேச்சுப் பக்கங்களில் ஊக்குவிக்கலாம். முன்கூட்டியே கணக்கு தொடங்குமாறு மாணவர்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர். -- சுந்தர் \பேச்சு 11:28, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

கண்டிப்பாக ஊக்குவிப்போம். இப்பொழுதே ஆர்வமாய் உள்ளேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:01, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
நன்றி தமிழ்க்குரிசில். :) -- சுந்தர் \பேச்சு 03:14, 20 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

முகநூல் - Tamil Wikipedians | தமிழ் விக்கிப்பீடியர்கள்[தொகு]

முகநூல் குழுவாகிய Tamil Wikipedians | தமிழ் விக்கிப்பீடியர்கள் விடயத்தில் த.வி. தெளிவாக செயற்படுவது நன்று. இங்கு பண்பற்ற, வீக்கிபீடியாவிற்கு பொருத்தமற்ற செயற்பாடுகள்தான் நடைபெறுகின்றன. இங்குள்ள இரு வெளியீடுகளில் இவ்வாறு ஆரம்பிக்கின்றன.

 1. இன்று உலகம் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஒரு நேரடி ரஸ்லிங் காட்ச்சியை இஸ்ரேல் (யூத) நாய்கள் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி கொண்டிருக்கின்றது... சிறுவர்கள் வயதானவர்கள், பெண்கள் என்று பார்க்காமல் கொன்று வேட்டையாடுவதே இவர்களின் தொழிளாக இருக்கின்றது.... இதை நாம் ஊடக வாயிலாக அறிவது சற்று கடினமாகவே உள்ளது. ஏனென்றால் அனைத்து சர்வதேச மீடியாக்களும் யூதனின் அடிவருடிகளாக தான் இருக்கின்றன்.விதி விலக்காக ஒன்றிரண்டை தவிர.......
 2. அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம். முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்....

உரிய நடவடிக்கை தேவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:53, 20 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அதனுடைய நிர்வாகிக்கு ஆலமரத்திடியை காண செய்தி அனுப்பியுள்ளேன் நண்பரே. இவ்வாறான நடைவெடிக்கைகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தற்குப் பின்னும் தொடர்ந்தால் முறையாக குழுமத்தினை தடை செய்யவும் நம்மால் இயலும். என்னுடைய சேர்க்கை கோரிக்கை நெடுநாளாக நிலுவையில் உள்ளதால், நிர்வாகி அக்குழுமத்தினை பராமரிக்கின்றா என்ற ஐயம் உள்ளது. இவ்வாறான அதிகார்வபூர்வமாக அறிவிக்கிப்படாத முகநூல் பக்கங்கள், குழுமங்கள் மீது மற்ற விக்கிப்பீடியாவின் நிலைபாடு பற்றி அறிய விரும்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:47, 20 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி ஜெகதீஸ்வரன். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:02, 20 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இது போன்ற செயற்பாடுகள் உடைய குழுமங்கள் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளா விட்டால், முதலில் அங்குள்ள முனைப்பான தமிழ் விக்கிப்பீடியர்கள் குழுமத்தில் இருந்து விலகுவதன் மூலம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். குழுமத்தின் வீச்சைக் குறைக்கவும் உதவும். விக்கிப்பீடியாவின் வணிகக் குறிக் கொள்கை மூலம் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 06:07, 25 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அந்நிர்வாகியிடமிருந்து இன்றுவரை எப்பதிலுமில்லை. இனி அக்குழுமத்தில் இருக்கின்ற விக்கிப்பீடியர்கள் மட்டுமே உதவ இயலும். குழுமத்தின் போக்கினை மாற்ற அங்கு அறிவுரை வழங்குங்குகள். அத்துடன் விக்கியின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் என்று எண்ணினால் குழுமத்தினை முடக்குவதற்கு முகநூலுக்கு புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார்களும் கவனிக்கப்படுகின்ற என்பதால் இம்முறை [2] பலன்தரக்கூடியது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:40, 26 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

Wikipedia:The Wikipedia Library[தொகு]

--Natkeeran (பேச்சு) 18:30, 20 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

விக்கித்திட்டம் விளக்கப்படம் வரைதல் - தங்கள் பங்களிப்புக்கான வேண்டுகோள்[தொகு]

வணக்கம் .

விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள் திட்டதில் தங்களின் பங்களிப்புக்கான வேண்டுகோள்.இத்திட்டதில் இதுவரை சுமார் 91 படங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . மேலும் சாத்தியப்படும் எல்லாக் கட்டுரைகளிலும் , தமிழிலேயே விளக்கப்படம் கொண்டுவர முயற்ச்சி செய்கிறோம் .

 • நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு படத்தை பார்க்கும் போது , "தேவைப்படும் புதிய படங்கள்" என்கிற இடத்தில் மொழிபெயர்ப்புடன் பதிவு செய்ய முயலவும்.
 • மொழிபெயர்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, "மொழிபெயர்ப்பு தேவைப்படும் படங்கள்" என்கிற இடத்தில் படத்தை மட்டுமாவது பதிவு செய்யவும்.

As I have told earlier , I have speed limitations while typing in Tamil . So , an extended translation in English .

Dear all ,

As you may be aware , there is a project titled "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்". In this till date some 91 images have been translated / created in Tamil . But , mostly they are Biology related pictures (Credits to Kalaiarasy ) 1 Human nervous system Credits to Drsrisenthil) and 2 physics related (thanks to Surya Prakash.S.A and 1 general image (Credits to Booradleyp1) . But , where ever feasible , there is a plan to phase out English image and create the Tamil equivalent of it . There are 3 ways in which you could help in case you are not comfortable with drawing.

 • Placing the images at the place தேவைப்படும் புதிய படங்கள் and also giving the translation for the words inside .
 • Even if translation is not given , please place the image alone at மொழிபெயர்ப்பு தேவைப்படும் படங்கள் .
 • Whenever you start an article and feel that a image has to be added and its not in Tamil , please post it there .

Incase you are proficient in drawing , please join us and make it a success . Within next 6 months , we can clean it up :) --Commons sibi (பேச்சு) 15:06, 21 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அண்மையில் எடுத்த முனைப்புகளில் விளக்கப்படம் வரைதல் திட்டம் சிறப்பான பயனைத் தந்துள்ளதைக் காண மகிழ்ச்சி. இதில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் கேட்டிருப்பதுபோல படங்கள் தேவைப்படும் இடங்களைச் சுட்டிக் காட்ட முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:29, 3 சனவரி 2014 (UTC)[பதில் அளி]

தலைப்புக்கள் பற்றி...[தொகு]

பகுத்தறிவுக் கொள்கை எனும் கட்டுரை 2013 தொடர் கட்டுரைப் போட்டித் தலைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான ஆங்கில விக்கி இணைப்பு இல்லை. அதனால் கட்டுரையாளர் தன் சொந்தக் கருத்தில் விரிவாக்கியிருக்க இடமுள்ளது. தலைப்புக்களுடன் ஆங்கில விக்கி இணைப்பும் இருப்பது உகந்தது. மேலும், பின்வரும் பட்டியல்கள் இற்றைப்படுத்தாமல் பல குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியனவாகவுள்ளன. (ஏற்கெனவே உள்ள உருவாக்கப்பட்ட கட்டுரை பட்டியலில் வேறு பெயரில் சிவப்பு இணைப்பாகவிருத்தல். பொருத்தமற்ற தலைப்பில் சிவப்பு இணைப்புக்கள் இருத்தல்)

எனவே இற்றைப்படுத்தலும், கட்டுரைகளுக்கான சரியான ஆ.வி இணைப்பும், தேவையற்ற பட்டியலை நீக்கும் தேவையும் அவசியமாகிறது. கட்டுரைப் போட்டியாளர்கள் குழம்பாமல் இருக்க உடன் நடவடிக்கை தேவை. தகுந்த ஆலோசனை இருந்தால் என்னால் இன்றைப்படுத்தலைக் கவனிக்கலாம். மற்றவர்களின் உதவியும் தேவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 05:10, 23 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம் கட்டுரை பட்டியலிடப்பட்டிருக்கும் இடத்தின்படி பார்த்தால் பகுத்தறிவுக் கொள்கை என்னும் கட்டுரை பகுத்தறிவியம் என்னும் கட்டுரையாக இருக்க வேண்டும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:53, 23 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
நன்றி ஜெயரத்தினா. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:02, 28 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

குறுங்கட்டுரைகள்[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை#பராமரிப்பு பக்கத்தில் உரையாடலைத் தொடர வேண்டுகிறேன்--இரவி (பேச்சு) 06:50, 30 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]