உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு102

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

New Wikipedia Library Accounts Now Available (December 2014)

[தொகு]

Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians!

The TWL OWL says sign up today :)

The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:

Other partnerships with accounts available are listed on our partners page. Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team.00:22, 18 திசம்பர் 2014 (UTC)

You can host and coordinate signups for a Wikipedia Library branch in your own language. Please contact Ocaasi (WMF).
This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.

புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்

[தொகு]

வணக்கம். வரும் சனவரி 2015ல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014ல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். அடுத்து என்ன? வரும் சனவரி 2015ல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது என் கனவு :) அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. என்ன சொல்கிறீர்கள் ? :)--இரவி (பேச்சு) 12:42, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மிக 👍 விருப்பம் ! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:18, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
 ஆதரவு , என்ன சொல்கிறீர்கள்????, சொல்கிறேன் :P, தனிப்பக்கம் உருவாக்க வேண்டியது முதல் தேவை. விக்கித்திட்டம் 100, சனவரி 2015 போன்று. பங்குகொள்ளும் பயனர்களை முதலே இனம் காண்பதின் ஊடாக இலக்கை அடைவதை முதலே உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மற்றப் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதை தானியங்கி மூலம் செய்யலாமா??? செய்தால் நன்று. முகநூலிலும் அழைப்பு விடுப்போம். 100 பயனர்கள் 100 தொகுப்புக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. அனைவரும் ஒன்றாய் சேர்ந்ததால் தான் அடையமுடியும். இத்திட்டத்தில் உழைக்கவும் பயனர் குழு தேவை. :) , பக்கத்தை தொடங்கினா அங்க எங்க பெயரையும் சேர்ப்பம். என்ன சொல்கிறீர்கள்? :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:15, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
♥ ஆதவன் ♥, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ, அதை நீங்களே கூறி விட்டீர்கள் ! இந்த ஒத்த சிந்தனை பெரும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது. பணிகளைத் தொடங்குவோம் :)--இரவி (பேச்சு) 14:04, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஆம் :) , ஆரம்பிக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:19, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உரையாடல் இங்கு தொடர்கிறது. ஒரு பிரதியை அங்கும் இணைத்துள்ளேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:39, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ---உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:24, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உரையாடலுக்கான புதிய இணைப்பு இங்கு உள்ளது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:00, 29 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை விரிவாக்கி அக்கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைத் தரத்திற்கு உயர்த்துவதற்காகச் சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளேன். இத்திட்டம் விக்கிப்பீடியாவில் சிகரம் தொடும் ஒரு முயற்சியாக உருவாக்கப்படுகின்றது. உங்கள் கவனத்திற்காக இங்கு குறிப்பிடுகின்றேன். விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை வருகின்ற புத்தாண்டுடன் புதிய பாதையில் இட்டுச் செல்வோம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:52, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

[தொகு]

Apologies for writing in English

Dear Wikimedians,

I would like to introduce you all to Thomas, a fourth year law student at the National Law University Jodhpur. He has joined CIS-A2K as an intern and will be developing a primer on Copyright and Creative Commons for the use of Indian Wikimedians.

Thomas' aim is to cater to the broad spectrum of Wikimedia users and to provide both an introduction to copyright law and to address more advanced questions of copyright law that users might encounter with regards to issues like digitisation, public domain works, etc.

His approach thus far has been to comb the India Mailing List to discover the common questions or concerns that Indian Wikimedians face while dealing with content. He hopes to then transpose answers to these queries along with general copyright related information onto a primer following a mixture of a FAQ based and prose based format to allow for better transposition of information as well as to allow for better readability and engagement.

As you will realise, this approach suffers from a number of defects: 1. There are a large number of queries or concerns that users might have which are not addressed onto the mailing lists and are near impossible to pre-empt. 2. There are a number of unique processes that Wikimedia implements (like the “precautionary principle”) that is unique to the context of copyright and Wikimedia which he is yet to familiarise himself and such a familiarity can only be built with periodic use. 3. There are a large number of Wikimedians who might be unrepresented on the Mailing List and might have queries regarding the use of content.

To this end, Thomas hopes to get some support from the community here in terms of: 1. Asking any queries that you may have regarding copyright law and its application to the Wikimedia Universe. 2. Passing along any queries or issues that you may have heard of from other users, so that this may be introduced. 3. Passing along any other information that may be specifically relevant to this endeavour, in terms of experience with Wikimedia policy, practice that has been developed over the past few years and the like.

Any support in this regard would be extremely helpful. This primer will of course be a work in progress for subsequent authors to edit and build upon, true to the Wikimedia ethos, however for the sake of at least an initial completeness, I request you to reply in over the course of this week, latest by the 3rd of January 2015. You can reach Thomas at thomasjv93{at} gmail.com or on his EN Wikipedia User Talk page --Pavanaja (பேச்சு) 11:36, 29 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் ஆலமரத்தடி/தொகுப்பு102!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:54, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நான் யாரையும் அழைக்கத் தவறியிருந்தால், மற்ற பயனர்கள் உதவவும். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:03, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இரவி, இதை தள அறிவிப்பு, அண்மைய மாற்றங்களில் இட்டு உதவுக. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:12, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

திட்டக்காலம் முடிய இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஏற்கனவே பெயர் பதிந்து தொகுப்புகளைச் செய்து வருபவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இலக்குக் கோடு தொட்டு விடும் தொலைவில் தான்... :) --இரவி (பேச்சு) 01:39, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

புத்தாண்டு வாழ்த்துகள் + தமிழ் விக்கிப்பீடியர் ஒளிப்படங்கள்

[தொகு]
செங்கை செல்வி

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வேளையில், தமிழ் விக்கிப்பீடியர் ஒளிப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தாமதமாக பதிவேற்றியதற்குப் பொறுக்கவும். இன்னும் சில படங்களை விரைவில் ஏற்றுகிறேன்--இரவி (பேச்சு) 14:19, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஒளிப்படங்கள் அருமையாக உள்ளன.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 00:07, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 00:10, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் எங்கே உங்கள் படத்தைக் காணவில்லை ? --மணியன் (பேச்சு) 04:00, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மணியன், என்னுடைய படங்கள் உட்பட இன்னும் சில படங்களை இரண்டாம் கட்டமாக பதிவேற்ற உள்ளேன்.--இரவி (பேச்சு) 07:40, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இவ்வாண்டின் என் முதல் தொகுப்பு

[தொகு]

இப்புத்தாண்டில் எனது முதல் தொகுப்பு - தென்னகத்தின் மாசில்லா மதுரை. --இரத்தின சபாபதி (பேச்சு) 18:33, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பாராட்டுகள், சபாபதி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா :) --இரத்தின சபாபதி (பேச்சு) 18:58, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
தமிழ் மற்றும் சிங்கள விக்கிப்பீடியா இரண்டும் 2015ல் முதல் தொகுப்பாக எனது தொகுப்புகளுடன் துவங்கின 2015 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்ட வேண்டும் என்பது எனதுகனவு ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்
--Mohamed ijazz (பேச்சு) 16:11, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

புத்தாண்டு வாழ்த்துகள்

[தொகு]
2015 இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உலகெங்கும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும் அனைவரின் கனவும் நினைவாக நல்ல ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
-நன்றி-
-அன்புடன்


--Mohamed ijazz (பேச்சு) 23:58, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவைப் புதிய பாதையில் இட்டுச் செல்லத் தயாராகுங்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 00:03, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

அனைத்து விக்கிப்பிடியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!..--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:05, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 00:08, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:36, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வரும் ஆண்டு வளமாக அமைந்திட அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 03:12, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:37, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பொதுவகம் - இலங்கை தொடர்பான கோப்புக்கள்

[தொகு]

இலங்கைச் சட்டத்தின்படி (Intellectual Property Act), கட்டடம் உட்பட்ட கட்டமைப்புக்களின் கலைவேலைப்பாடுகள் (ஒளிப்படம், காணொளி) பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஒளிப்படம் எடுப்பவருக்கு அதன் மீது உரிமை இல்லை. அதனால் அவரால் பொதுவம் போன்ற இடங்களில் பகிர முடியாது. சட்டம் கூறுவதன்படி, "நியாயமான பயன்பாடு" என்பதன் கீழ் அதனைப் பயன்படுத்த முடியும் என்றபோதிலும் இது தொடர்பில் பொதுவில் தெளிவான முடிவு இல்லை. பார்க்க: Freedom of panorama - Sri Lanka & Copyright rules by territory - Sri Lanka இதனால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள கோப்புகள் Jaffna Post Office, Co-operator Veerasingam Hall, Jaffna, Jaffna Business இது தொடர்பில் ஆலோசனை வழங்கக் கூடியவர்கள் பொதுவில் தெரிவிக்கலாம். --AntonTalk 12:06, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

  1. குறிப்புகளுக்கு நன்றி.--≈ உழவன் ( கூறுக ) 02:50, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மிகையான ஆங்கில நூற்பட்டியல்கள்

[தொகு]

இங்கு, மிகையான ஆங்கில நூற்பட்டியல் மற்றும் நூற்பட்டியலானது சான்றாகுமா??? பற்றிய உரையாடல் இடம்பெறுகிறது. தங்களது உதவியும் தேவை. கருத்திடவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:51, 3 சனவரி 2015 (UTC) [பதிலளி]

கருத்துகளை அப்பக்கத்தில் இட்டுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:37, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நூல்களின் குறிப்பிடத்தக்கமை

[தொகு]

நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் பகுப்பு பேச்சு:நூல்கள் இல் ஒருமுறை உரையாடல் நடைபெற்றது. முடிவு எடுக்கப்படவில்லை. நூல்கள் வெளிவருகின்றன என்பதற்காக எல்லா நூல்களைப் பற்றியும் கலைக்களஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதுவது சரியல்ல. ஒரு கட்டத்தில் எழுத்தாளர்கள் தமது அல்லது தம்முடன் தொடர்புடைய நூல்களை விளம்பரப்படுத்தும் இடமாக விக்கிப்பீடியா மாறும். (இது ஏற்கனவே ஓரளவு நடைபெற்றுள்ளது) இது மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

மேலும் கலைக்களஞ்சிய உள்ளடக்கம் வராமல் வெறுமனே ஓர் அட்டவணைப்படுத்தும் இடமாக த.வி உருமாறவும் இது வழிவகுக்கிறது. ஏனென்றால் பயனர்கள் முக்கிய நூல்கள் எனக்கருதும் நூல்களின் உள்ளடக்கத்தினைக் கொண்டுவராமல் அந்நூல் பற்றிய தகவல்களை மட்டும் கொண்டுவரத் தொடங்கியிருப்பதனை அவதானிக்கிறேன். எடுத்துக்காட்டு வரலாற்றில் மணிமங்கலம் (நூல்). மணிமங்கலம் என்ற ஒரு பக்கம் தொடங்கப்பட்டுக் குறித்த நூலை உசாத்துணையாக உருவாகியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.

அண்மைக்காலங்களில் பெருமளவு நூல்கள் பற்றிய கட்டுரைகளைக் காண்கிறேன். பகுப்பு பேச்சு:நூல்கள் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது மிக நல்லது. காலங்கடந்தபின்னர் இக்கட்டுரைகள் நீக்கப்படுகையில் அவற்றை எழுதிய பயனர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதனைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்றி. கோபி (பேச்சு) 13:35, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்--AntonTalk 18:59, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--Kanags \உரையாடுக 20:27, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 21:20, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:04, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:13, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:33, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் //பகுப்பு பேச்சு:நூல்கள் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது மிக நல்லது. காலங்கடந்தபின்னர் இக்கட்டுரைகள் நீக்கப்படுகையில் அவற்றை எழுதிய பயனர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதனைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.//
    என்பதின் ஆழ்ந்த நோக்கம், விக்கியின் வளர்ச்சிக்கு, மிக மிக அடித்தளமானவை. விக்கியை விட்டு விலகியவர், விக்கியில் எழுத விரும்பாதவர் நீக்குதலைப் பற்றி குறிப்பிட்டவைகளில் இதுவும் ஒன்று. சில கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும் தெரிவித்த உள் எண்ணங்கள் அவை. அந்த எண்ணங்களை போற்றும் போதே, நாம் வளர்வோம். கவிஞன் உள்ளம் (நூல்) என்பதனை மாதிரியாகக் கொண்டு, அதன் பேச்சுப்பக்கத்திலும் உங்கள் கருத்துகளை முன்வைக்கக் கோருகிறேன். வழிகாட்டுக. வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 08:06, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்
  9. 👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 04:06, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]

புதியன எனும் பக்கம் வேலை செய்யவில்லை

[தொகு]

முதற் பக்கத்தில், கட்டுரைகள்: அகர வரிசை - துறை வரிசை - புதியன - வலைவாசல்கள் என உள்ளன அல்லவா? இதில், புதியன எனும் பக்கம் வேலை செய்யவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இரு நாட்களாக காலையில் இச்சிக்கல் இருந்து வருகிறது.--AntonTalk 05:15, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று தற்போது முதற்பக்கத்திலுள்ள புதியன என்ற இணைப்பைச் சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:35, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆண்டிராய்டு செல்பேசியில் தமிழ் விக்கிப்பீடியா முழுவதையும் பதிவிறக்க

[தொகு]

ஆண்டிராய்டு செல்பேசியில் தமிழ் விக்கிப்பீடியா முழுவதையும் பதிவிறக்க கிவிக்சு செயலியை நிறுவுங்கள். இணைய இணைப்பு இல்லாமல் மிக வேகமாக தமிழ் விக்கிப்பீடியாவைப் படிக்க முடியும். அவ்வப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய தொகுப்பை மட்டும் இற்றைப்படுத்தி வர வேண்டும். --இரவி (பேச்சு) 07:41, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

  1. நன்றி--≈ உழவன் ( கூறுக ) 07:59, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவை தொகுக்க என ஏதேனும் செயலி உள்ளதா அண்ணா --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
பயனுள்ள தகவல். @நந்தினிகந்தசாமி விக்கிப்பீடியாவினை தொகுக்க செயலிகள் இருக்கின்றன. wikipedia editor என கூகுள் பிளேவில் தட்டச்சிட்டு தேடிப்பாருங்கள். தமிழ் தட்டச்சுக் கருவிக்கான செயலியை தனியாக இறக்கிவிட்டு அதன் மூலமே தமிழில் தட்டச்சிட இயலுகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:33, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நந்தினிகந்தசாமி, தொகுப்புப் பணியை மேற்கொள்ள விக்கிப்பீடியாவின் அலுவல் முறை செயலியே போதுமானது. சிறப்பானது. செகதீசுவரன் சுட்டியபடி, தமிழில் எழுத தனியாகச் செயலி நிறுவ வேண்டும். செல்லினம் என் விருப்பச் செயலி. தமிழ்99 முறை கற்றுக் கொண்டீர்கள் என்றால் செல்பேசியில் தட்டச்ச இலகுவாக இருக்கும். --இரவி (பேச்சு) 19:31, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஜெகதீஸ்வரன், இரவி :) _/\_ --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:58, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இரவி அண்ணா, அலுவல் முறை செயலியில் சில வழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு,
1. நாம் செய்யும் தொகுப்புகள் அனைத்தும் நமது கணக்கின் கீழ் வருவதில்லை. சில தொகுப்புகள், புகுபதிகை செய்யாத பயனரின் தொகுப்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. விக்கித் திட்டம் 100ன் போது இதை கண்டேன்.
2. இதை வழு என்று கூற முடியாது. ஒரு கட்டுரையின் பல பகுதிகளை தொகுக்க வேண்டுமெனில், தனித்தனியாக தான் தொகுக்க வேண்டும். கட்டுரையை முழுமையாக தொகுக்க முடியாது. இதனால் தொகுப்பு எண்ணிக்கை அதிகமாகிறது.
- ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 15:39, 13 பெப்ரவரி 2015 (UTC)

தை பிறந்தால் வழி பிறக்கும்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமையட்டும் :)--இரவி (பேச்சு) 22:25, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 22:35, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 23:09, 14 சனவரி 2015 (UTC)--≈ உழவன் ( கூறுக ) 23:09, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:14, 15 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:24, 15 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் - அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். --சிவகோசரன் (பேச்சு) 13:17, 15 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:58, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Train-the-Trainer Program - 2015 (Announcement)

[தொகு]

Dear Wikimedians,

Apologies for posting this in English. I would request friends to help in translating this messsage in Tamil.

As most of you are aware, the Centre for Internet and Society's Access To Knowledge program (CIS-A2K) conducted the first Wikipedia Train-the-Trainer (TTT) programme in 2013 with an aim to support and groom leadership skills in the community members. We are extremely thankful to all the senior Wikimedians who acted as Resource Persons for the 2013 event. Achal, Arjuna, Hari, Shymal, Tinu and Viswa! Without your help we could not have conducted it so successfully.

This message is to let you all know that we have scheduled to conduct the second iteration of this program at the end of February 2015. We are inviting applications from interested Indian Wikimedians. Please see this page on Meta for more details.

Some important dates: January 27, 2015 - Last date for registration.
January 30, 2015 - Confirmation of selected participants
February 26 to March 1, 2015 - TTT-2015 workshop

We are working on the schedule and other details. You are welcome to leave your suggestions and inputs here. Please write to us at tanveer﹫cis-india.org and vishnu﹫cis-india.org if you have any further queries.

Best,
--Psubhashish (பேச்சு) 03:10, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
Accesss To Knowledge (CIS-A2K),
Centre for Internet and Society

இது குறித்த உரையாடல்கள்(Our Community discussions about this event)

[தொகு]

நம் தமிழ்விக்கிமீடியாவிற்காக, இதற்கு முன் இதில் கலந்து கொண்டவரைப்பற்றி அறிய ஆவல். இங்கு கிடைக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 03:50, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இதற்கு முன் யாரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதில்லை (என்று நினைக்கிறேன்). மற்ற மொழி விக்கிப்பீடியர்களின் அனுபவப் பகர்வின் மூலம் இது பயனுள்ள திட்டம் என்றே அறிய முடிகிறது. குறிப்பாக, புதிய பயனர்களாகத் தொடங்கி ஓரளவாக முனைப்பாக பங்களிக்கத் தொடங்கியுள்ளவர்களுக்குப் பெரிதும் பயன் தரும். வெளியிடங்களில் நேரடிப் பரப்புரை, பிறருக்கு நேரடிப் பயிற்சியளித்தல், தொகுப்பதைத் தாண்டிய பல்வேறு வகையான பங்களிப்பு முறைகள், ஆவணப்படுத்தல் முறைகள், தலைமைத்துவம், சொற்பொழிவு முதலிய திறன்களை வளர்த்தல் ஆகிய புலங்களில் இத்திட்டம் கவனம் செலுத்தும். நீண்ட நாள் பங்களிப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கவும் இந்திய அளவிலான மற்ற பங்களிப்பாளர்களைக் கண்டு நட்பு பாராட்டவும் இத்திட்டம் உதவும்.--இரவி (பேச்சு) 19:47, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
40விண்ணப்பங்களில், 30பங்களிப்பாளர் தேர்ந்தெடுக்கப்ப்ட்டுள்ளனர். அவரில் நானும் ஒருவன்(காண்க:அந்த அட்டவணையில் 39வது பங்களிப்பாளன்). நமது தமிழ் விக்கிமீடியாவின் சார்பாக நான் கலந்து கொள்வதால், பிறரின் எண்ணங்களையும் உள்வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். எனவே, தமிழ் விக்கிமீடியத் திட்டங்களில் செயற்படும் அனைவரும் தங்கள் எண்ணங்களைக் கூறுக. ஏனெனில், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் /என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்? ஆவலுடன்..--≈ உழவன் (உரை) 02:42, 1 பெப்ரவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள் Info-Farmer, ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் அழைக்கவும். :)--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:26, 2 பெப்ரவரி 2015 (UTC)
த. உழவன், நீங்கள் தேர்வானதில் வியப்பேதும் இல்லை. நீங்கள் பயிற்சியாளராகவே செல்லும் அளவு தகுதி உடையவர் :) நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன். மற்றவை நேரில் :)--இரவி (பேச்சு) 10:05, 2 பெப்ரவரி 2015 (UTC)
நன்றி. தினேஷ்! இரவி!! நீங்கள் உடன் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றாக அச்சூழ்நிலையை தமிழ் மொழிக்குப் பயன்படுத்திக் கொள்வேன். சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் (உரை) 11:00, 2 பெப்ரவரி 2015 (UTC)

Tamil Wikisource at Christ University

[தொகு]

Dear Tamil Wikimedianss,,

Sorry for typing in English.

In an Earlier Post, I have given a brief on activities related to Christ University. Again in this semester, the students would be typing in at Wikisource. I would request the community people to suggest a book for typing. Also, Sysops are requested to enable Proofreadpage extension on Ta wikisource. In other assignment, Tamil students would write an article in their sandbox in the subject of their study. Please help students with improving their wikipedia skills. Thank you. --రహ్మానుద్దీన్ (பேச்சு) 11:19, 25 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தில் தமிழ் இணையப் பலகலைக்கழக கலைக்களஞ்சியத் தொகுதிகளை பதிப்பது பற்றி பேசியிருந்தோம். அவற்றை மீண்டும் தட்டச்சு செய்வது பற்றி ஏதும் திட்டங்கள் உள்ளனவா? --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:24, 25 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

[தொகு]

இந்த ஆண்டு விக்கிமேனியா சூலை மாதம் மெக்சிக்கோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 16, 2014.--இரவி (பேச்சு) 06:59, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:27, 2 பெப்ரவரி 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து யாரேனும் விண்ணப்பிக்கிறீர்களா? 2009 முதல் நம் சார்பாக யாராவது தவறாமல் கலந்து கொண்டு வருகிறோம். விண்ணப்பத்தை எழுத, மேம்படுத்த, சரி பார்க்க உதவி தேவை என்றால் இங்கு அணுகலாம்.--இரவி (பேச்சு) 20:08, 11 பெப்ரவரி 2015 (UTC)
நான் இதற்கு விண்ணப்பித்தேன்.--பாஹிம் (பேச்சு) 06:45, 12 பெப்ரவரி 2015 (UTC)
நானும் விண்ணப்பித்திருந்தேன், தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:31, 26 மார்ச் 2015 (UTC)
எனக்கு உதவித் தொகை கிடைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களின் உதவி தேவை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:58, 8 ஏப்ரல் 2015 (UTC)

Dear Dineshkumar Ponnusamy,

Congratulations! On behalf of the 2015 Wikimania Scholarship Committee and the Wikimedia Foundation, we are pleased to inform you that you have been selected for a scholarship to attend Wikimania 2015 in Mexico City. The scholarship will cover your air travel, conference registration fee, and accommodations as outlined below.

You have been selected based on your dedication and participation in the Wikimedia movement, and your potential to add great value to Wikimania and the Wikimedia projects going forward. We hope that you will be engaged by the unique opportunity to attend Wikimania 2015 and convene face-to-face with the global Wikimedia community.

Please read all of the information here, and reply promptly to this email to accept or decline this scholarship according to the instructions in the REPLY & ACCEPTANCE AGREEMENT below. The deadline to accept or decline this offer is April 14, 2015. Information about travel, registration and hotel will be sent to you in the coming weeks.

வாழ்த்துக்கள்...--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:38, 8 ஏப்ரல் 2015 (UTC)

புதிய பகுப்புகள் உருவாக்குபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

[தொகு]

புதிதாகப் பகுப்புகளை உருவாக்குபவர்கள் அவற்றுக்கு இணையாக ஆங்கில விக்கியில் பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், இணைக்கப்படாமல் உள்ள பகுப்புகளை இனங்கண்டு அவற்றையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! இதுவரை இதனை நான் கவனத்திற் கொண்டதேயில்லை; இனி செய்வேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

[தொகு]

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:56, 4 பெப்ரவரி 2015 (UTC)

பங்களிப்பாளர் தத்தம் தொகுப்புகளை உரித்தாக்குதல்

[தொகு]

பயனர்கள் தாங்கள் ஒவ்வொரு மாதமும் செய்யும் தொகுப்புகளை தாங்கள் மதிக்கும், ஊக்குவிக்க நினைக்கும் இன்னொரு பயனருக்கு உரித்தாக்கலாம். விக்கியன்பின் ஒரு பகுதியாகவும் இதனை நோக்கலாம். விக்கித்திட்டம் 100 தொடர்பாக கடந்த மாதம் இதனை முயன்ற போது, இம்முயற்சி பயனுள்ளதாகத் தோன்றியதால் இதற்கென தனிப்பக்கம் தொடங்கியுள்ளோம். பார்க்க - விக்கிப்பீடியா:உரித்தாக்கம்--இரவி (பேச்சு) 19:30, 4 பெப்ரவரி 2015 (UTC)

தொடர் பங்களிப்பாளர் பட்டியல்

[தொகு]

இன்று தொடர் பங்களிப்பாளர் பட்டியலைச் சோதித்துப் பார்த்த போது எனது பெயரைக் காணவில்லை.--பாஹிம் (பேச்சு) 04:38, 11 பெப்ரவரி 2015 (UTC)

முன்னரும் இப்பிரச்சினையை வேறு யாரோ கிளப்பியிருந்தார்கள். இப்பட்டியலை 100% நம்பமுடியாதுள்ளது.--Kanags \உரையாடுக 08:01, 11 பெப்ரவரி 2015 (UTC)

அதிகம் பக்கப் பார்வைகள் பெறும் கட்டுரைகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இன்று, இந்த வாரம், இந்த மாதம் அதிகம் பக்கப் பார்வைகள் பெறும் கட்டுரைகள் பட்டியலைக் காணுங்கள். அவ்வப்போது இவற்றைக் கவனித்து இவற்றின் தரம், பயன் மேம்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 03:16, 12 பெப்ரவரி 2015 (UTC)

மாதிரிக் கட்டுரைகளின் அடிப்படையில் தரநிர்ணயம்

[தொகு]

இங்கு பட்டியலிடப்படும் கட்டுரைகளை மேம்படுத்தினால் தமிழ் விக்கியின் தரவரிசை உயரும். இதற்கு உதவும் வகையில் யெர்போ என்பவர் நமது புள்ளியை உயர்த்திட மாதந்தோறும் பத்துக் கட்டுரைகளை இங்கு பட்டியலிடுகிறார். இதனையும் அவ்வப்போது கவனித்து மேம்படுத்தல் நலம் பயக்கும். இந்தப் பட்டியலில் முதலில் குறிப்பிட்ட கட்டுரையின் விக்கித்தரவு எண்ணும் பின்னர் விரிவுபடுத்த வேண்டிய அளவும் (தமிழ் விக்கி கட்டுரையின் இணைப்புடன்) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு பட்டியல்களும் விக்கிப்பீடியர் வலைவாசலிலும் இணைப்புத் தரப்பட்டுள்ளன.--மணியன் (பேச்சு) 12:28, 24 பெப்ரவரி 2015 (UTC)

நல்ல துப்பு ! தொடர்ந்து இக்கட்டுரைகளில் கவனம் செலுத்தி தரத்தை மேம்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:33, 25 பெப்ரவரி 2015 (UTC)

விக்கியிடை இணைப்பில் வழு

[தொகு]

இப்பக்கத்தை பார்க்கவும். விஜய் மில்டன் (ஆங்கிலத்தில்). இக்கட்டுரையின் இடப்பக்க மொழிகள் பட்டியலில் தமிழ் கட்டுரைக்கான இணைப்பு தவறாக உள்ளது. விஜய் மில்டன் கட்டுரை த.வி.யில் இல்லாததால் முகப்பு பக்கத்திற்கு வழிமாறி செல்கிறது.

விக்கித்தரவிலும் ஆங்கில கட்டுரை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை எவ்வாறு நீக்குவது? நன்றி. - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:26, 12 பெப்ரவரி 2015 (UTC)

யாரோ தவறாக இணைப்புக் கொடுத்துள்ளார்கள். நீச்சல்காரன் அதனைத் திருத்தியுள்ளார். விஜய் மில்டன் பற்றி தமிழில் கட்டுரை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 22:01, 12 பெப்ரவரி 2015 (UTC)
விஜய் மில்டன் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் உரையாடற்பக்கத்தில், பிறரின் எண்ணமறிய ஆவல்--≈ உழவன் (உரை) 05:58, 13 பெப்ரவரி 2015 (UTC)
விரைந்து நடவடிக்கை எடுத்தது ஆச்சரியமாக உள்ளது. இணைப்பு சீர் செய்யப்பட்ட பிறகு இன்று கட்டுரை உருவாக்கலாம் என்றிருந்தேன். நன்றி! -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 15:58, 13 பெப்ரவரி 2015 (UTC)
File:Canon_EOS_5D.jpg (கெனான் இஓஎஸ் 5டி ) என்ற இவ்வகைப்படமியால், வழக்கு எண் 18/9 எடுக்கப்பட்டதென்பது, ஒரு தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும். இச்சாதனையைப் புரிந்த மில்டனுக்கு, அக்கட்டுரையை உருவாக்கி, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் (உரை) 02:59, 14 பெப்ரவரி 2015 (UTC)

துடுப்பாட்ட ஆர்வலர்களுக்கு அழைப்பு...

[தொகு]

நடைபெற்றுவரும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் குறித்த செய்திக் கட்டுரைகளை விக்கிசெய்தியில் எழுதுவதற்கு, துடுப்பாட்டத்தில் ஆர்வமுள்ள பயனர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தேவைப்படும் திருத்தங்களை ஒவ்வொரு 8 மணிநேர இடைவெளியில் செய்திட என்னால் இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:50, 14 பெப்ரவரி 2015 (UTC)

விரைவுப்பகுப்பி:பேச்சு

[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:விரைவுப்பகுப்பி கருவியின் பேச்சு பக்கத்தில் கருத்தை இட்டுள்ளேன். இக்கருவி தொடர்புடையவர்கள் பார்வைக்கு. நன்றி. - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:18, 18 பெப்ரவரி 2015 (UTC)

மேற்கண்டவாறு இணைப்பு தருக.----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 07:28, 18 பெப்ரவரி 2015 (UTC)
சரி. -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:36, 19 பெப்ரவரி 2015 (UTC)

[Global proposal] m.விக்கிப்பீடியா.org: (அனைத்து) பக்கங்களைத் தொகு

[தொகு]
MediaWiki mobile

Hi, this message is to let you know that, on domains like ta.m.wikipedia.org, unregistered users cannot edit. At the Wikimedia Forum, where global configuration changes are normally discussed, a few dozens users propose to restore normal editing permissions on all mobile sites. Please read and comment!

Thanks and sorry for writing in English, Nemo 22:32, 1 மார்ச் 2015 (UTC)

பெயரிடல் மரபு

[தொகு]

ஈ. வெ. இராமசாமி (பேச்சு:ஈ. வெ. இராமசாமி#தலைப்பு மாற்றம்) என்ற கட்டுரையின் பெயர் மாற்றக் கோரிக்கை ஏனைய கட்டுரைகளான விவேகானந்தர், அன்னை தெரேசா ஆகிய கட்டுரைகளிலும் பரவி இருப்பதைக் காணலாம். இங்கு சிலர் என்ன சாதிக்க முயல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இங்கு குறித்த கட்டுரையின் பெயர் மாற்றம் குறித்து முடிவெடுக்க விருப்புகிறீர்களா அல்லது பெயர் மாற்றக் கொள்கை குறித்து முடிவெடுக்க விருப்புகிறீர்களா? தக்க பகுதியில் இதுபற்றி உரையாடுங்கள். எல்லாக் கட்டுரைகளிலும் தலைப்பு மாற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தால், உரையாடல் மட்டுமே மிஞ்சும். பதிலுக்கு திருவள்ளுவர் என்பதில் திரு என்ற அடைமொழி தேவையா என்ற இப்பெயர் மாற்றத் தொற்றுக்கு உட்படலாம். உதவிக்கு: விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு, விக்கிப்பீடியா:வழிமாற்று --AntonTalk 03:47, 2 மார்ச் 2015 (UTC)

தவறு எனதே. நீக்கி உள்ளேன். உரையாடிய பின்னர் மாற்றம் செய்து இருக்க வேண்டும். எனினும் பெயரிடல் தொடர்பாக தெளிவு வேண்டும். சமயக் கட்டுரைகளுக்கு ஒரு மரபையும், பிற கட்டுரைகளுக்கு வேறு மரபையும் பின்பற்றுதல் சீர் அல்ல. --Natkeeran (பேச்சு) 14:10, 3 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--AntonTalk 15:38, 3 மார்ச் 2015 (UTC)

New Wikipedia Library Accounts Available Now (March 2015)

[தொகு]

Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians!

The TWL OWL says sign up today!

The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:

Many other partnerships with accounts available are listed on our partners page. Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team 21:14, 2 மார்ச் 2015 (UTC)

Help us coordinate Wikipedia Library's distribution of accounts, communication of access opportunities and more! Please join our team at our new coordinator page.
This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.

சனவரி 2015 புள்ளிவிவரம்

[தொகு]

சனவரி 2015 புள்ளிவிவரம் வந்து விட்டது. தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் ஆகக் கூடுதலாக 44 மிக முனைப்பான பங்களிப்பாளர்களைப் பதிந்துள்ளோம். சொல்லி அடித்த அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 06:54, 3 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:07, 3 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 11:20, 3 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம் மீண்டும் ஒரு முறை முடிந்தால் கலக்குவோம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:39, 3 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:50, 3 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:32, 9 மார்ச் 2015 (UTC)

Inspire Campaign: Improving diversity, improving content

[தொகு]

This March, we’re organizing an Inspire Campaign to encourage and support new ideas for improving gender diversity on Wikimedia projects. Less than 20% of Wikimedia contributors are women, and many important topics are still missing in our content. We invite all Wikimedians to participate. If you have an idea that could help address this problem, please get involved today! The campaign runs until March 31.

All proposals are welcome - research projects, technical solutions, community organizing and outreach initiatives, or something completely new! Funding is available from the Wikimedia Foundation for projects that need financial support. Constructive, positive feedback on ideas is appreciated, and collaboration is encouraged - your skills and experience may help bring someone else’s project to life. Join us at the Inspire Campaign and help this project better represent the world’s knowledge!

(Sorry for the English - please translate this message!) MediaWiki message delivery (பேச்சு) 20:01, 4 மார்ச் 2015 (UTC)

வழிமாற்றுக்கள்

[தொகு]

பிழையான பதங்களைச் சரியான பதங்களை நோக்கி வழிமாற்றாமல், சரியான பதங்களைப் பிழையான பதங்களுக்கு வழிமாற்றுவது தமிழைச் சீர் குலைப்பதன்றோ? எனவே, வழிமாற்றுக்கள் எப்போதும் சரியான பதங்களை நோக்கியே இருக்க வேண்டுமென முன் மொழிகிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:00, 9 மார்ச் 2015 (UTC)

பெண்கள் வரலாற்று மாதம்

[தொகு]

இது பெண்கள் வரலாற்று மாதம். இம்மாதத்தில் உலகெங்கும் உள்ள விக்கிப்பீடியர்கள் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேபடுத்தி வருகிறார்கள். இதனை ஒட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்கள் தொடர்பான இக்கட்டுரைகளை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். இவ்வாறு உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் கட்டுரைகளில் 2015 பெண்கள் வரலாற்று மாதத்தில் உருவாக்கிய அல்லது மேம்படுத்திய கட்டுரைகள் பகுப்பின் கீழ் இட வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:19, 10 மார்ச் 2015 (UTC)

கருதப்படும் இறந்த நாட்கள்

[தொகு]

கருதப்படும் இறந்த நாட்கள் என்ற ஒரு புதிய வார்ப்புரு உருவாக்க தேவையுள்ளது. பேச்சு:சுபாஷ் சந்திர போஸ் பார்க்கவும். இதைப் போல் சிக்குலுள்ள கட்டுரைகள் 1000 தாண்டும் போது ஒரு வார்ப்புரு தமிழில் இருப்பது சிறப்பு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 10 மார்ச் 2015 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவகத்தின் சிறந்த படங்களைச் சேர்த்தல்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவகத்தின் சிறந்த படங்களைச் சேர்ப்பதன் மூலம் நமது தரம், பயனைக் கூட்டலாம். இதற்கு உதவும் பட்டியலை இங்கு காணலாம். கவனிக்க: அன்டன், சிறீகர்சன், சூரிய பிரகாசு. படிமங்கள் தொடர்பாக ஆர்வமுள்ள மற்றவர்களின் கவனத்துக்கும் இதனை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். இப்பணியில் ஈடுபவர்கள் மேல் விக்கி பக்கத்தில் ஆயிற்று என்பதைக் குறிக்கும் குறியை இட்டு வந்தால் இப்பணியைப் பின்தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும்--இரவி (பேச்சு) 16:28, 10 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--AntonTalk 18:44, 10 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:56, 11 மார்ச் 2015 (UTC)


இரவியின் பத்தாண்டுகாலப் பங்களிப்பு

[தொகு]

இரவியின் பத்தாண்டுகாலப் பங்களிப்பு பதக்கம் அவருடைய பயனர் பேச்சுப்பக்கம் சென்றுவிட்டது. --AntonTalk 09:35, 22 மார்ச் 2015 (UTC)

தமிழ் வழக்கு

[தொகு]

கட்டுரைகளில் உலகக் கிண்ணம், உலகக் கோப்பை ஆகிய பதங்களில் உலகக் கிண்ணம் என்பதை முதன்மைப்படுத்துவது நல்லது. ஏனெனில், கோப்பை என்பது வேற்றுமொழிச் சொல்.--பாஹிம் (பேச்சு) 02:41, 14 மார்ச் 2015 (UTC)

தொடர்புடைய முகநூல் உரையாடல்.--இரவி (பேச்சு) 12:54, 15 மார்ச் 2015 (UTC)
மூடிய வலைத்தளங்களுக்கு இணைப்புத் தருவதைத் தவிர்க்கவும். அனைவரும் பார்க்க முடியாது உள்ளது. --Natkeeran (பேச்சு) 13:53, 17 மார்ச் 2015 (UTC)

SUL finalization update

[தொகு]

Hi all,apologies for writing in English, please read this page for important information and an update involving SUL finalization, scheduled to take place in one month. Thanks. Keegan (WMF) (talk) 19:46, 13 மார்ச் 2015 (UTC)

100wikidays

[தொகு]

உலக விக்கிப்பீடியர்கள் சிலர் 100wikidays என்ற மாரத்தான் விக்கித் தொகுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, 100 நாட்களுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கட்டுரை. அன்றன்றே எழுத வேண்டும். முன்பே எழுதி வைப்பதோ விட்டுப் போன நாட்களுக்கும் பிறகு சேர்த்து எழுதுவதோ கூடாது. தமிழ் விக்கிப்பீடியர் பலர் இது அன்றாடம் செய்து கொண்டிருக்கும் பணி :) ஆர்வமுடையோர் இணைந்து கலக்கலாம்.--இரவி (பேச்சு) 13:00, 15 மார்ச் 2015 (UTC) 👍 விருப்பம் --அஸ்வின் (பேச்சு) 13:46, 15 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:38, 15 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாக அணுக்கங்கள்

[தொகு]

வழமையாக நாம் ஒவ்வொரு ஆண்டும் 4 புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்து வந்தோம். அக்டோபர் 2013க்குப் பிறகு புதிதாக யாரையும் தேர்வு செய்யாமல் இருக்கிறோம். அடுத்து இதில் கவனம் செலுத்தினால் தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறையை துடிப்புடன் வளர்த்தெடுக்க முடியும். கடந்த முறை நடந்த தேர்தல், பிறகு நிருவாக அணுக்கம் நீக்குதல் தொடர்பான உரையாடல்களை அடுத்து தற்போது உள்ள நடைமுறைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகளை முடுக்குவோம். அதுவரை, புதிதாக நிருவாக அணுக்கம் பெறக்கூடியவர்களை இனங்கண்டு இங்கு பரிந்துரைத்தால் உரியவர்கள் தங்கள் பங்களிப்புகளை இன்னும் சிறப்பாக நல்க முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 15:57, 19 மார்ச் 2015 (UTC)

பரிந்துரைக்கு முன், நிர்வாகி தரத்துக்கான விதிமுறைகளை மீளாய்வு செய்தல் அவசியம். (இதைப் பற்றிய முன்னர் பேசியதாக நினைவு. எங்கு என்று நினைவில் இல்லை) விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள், விக்கிப்பீடியா:நிர்வாகிகள் ஆகியன மேம்படுத்தலுக்கு உள்ளாவது சிறப்பு. கடந்த காலங்களில் புதிதாக நிர்வாகிகளாக்கப்பட்டவர்களில் இன்று எத்தனை பேர் நிர்வாக அணுக்கத்தினை பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிடைக்கும் பதிலானது (குறைவான நிர்வாகப் பங்களிப்பு) இனி வருங்காலங்களில் நிர்வாக அணுக்கம் பெறப்போகிறவர்கள் மட்டில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. புதிய நிர்வாக அணுக்கங்கள் வருடா வருடம் வேண்டும் என்பதைவிட, நிர்வாக அணுக்கங்கள் பயன்படுத்துபவர்களுக்கு உடன் கிடைக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அதிலும் குறிப்பாக விக்கிப்பீடியாவில் கொள்கையிலில் மிகுந்த தெளிவும், தமிழ் மொழியில் குறிப்பிடத்தக்க அறிவும் வேண்டும். எ.கா: பிரியா என்பதை ப்ரியா என்றும் பெயர் மாற்றலாம் என்று தன்னிலை விளக்கம் கொடுப்பவர்கள் வேண்டாம். ஜிம்மி வேல்ஸ் கூறுவதுபோல் "இது (நிர்வாக அணுக்கம்) ஒரு பெரிய விடயமே அல்ல". ஆகவே, நான் ஒரு நிர்வாகி என்பதற்கான வார்ப்புருவோ, இரு வருடத்தில் எப்போவாவது நிர்வாக அணுக்கத்தைப் பயன்படுத்திவிட்டு, நிர்வாக அணுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தந்திரோபாயமோ இன்றி முனைப்புடன் செயற்பட்டால் நன்று என்பதே என் கருத்து. ஆரம்ப காலங்களில் நிர்வாகிகளாகியோர் விடயத்தில் குறை காண முற்படுவது என் நோக்கமல்ல. கடந்த 2-3 ஆண்டுகளில் நிர்வாக அணுக்கம் பெற்று இன்று அதனை முழுமையாகச் செய்யாதிருப்பவர்கள் நிமித்தமே என் ஆதங்கம். எனவே, சிலவேளை நாம் வலுக்கட்டயமாக நிர்வாகிகளாக்கிவிடுகிறோமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. எ.கா: இன்று இப்பக்கத்தை ரோந்திட்டதாகக் குறி என்பதை எத்தனை நிர்வாகிகள் செய்கிறோம்? இந்த நிர்வாகிகள் புள்ளிவிபரம் கடந்த 365 நாட்களில் நிர்வாகிகளின் பங்களிப்பைக் (பங்களிப்பின்மையைக்) காட்டுகிறது. புதிய நிர்வாகிகள் தேவை. அதற்கு முன் தேர்ந்தெடுக்க முறையான பொறி முறை அவசியம். --AntonTalk 17:00, 19 மார்ச் 2015 (UTC)
தற்போதுள்ள உயர்அணுக்கம் (sysop<--system operator=நிருவாக அணுக்கம்?) பெற்றவர்களுக்கு மட்டும் தனி அறிவிப்புப் பகுதி இருப்பின் சிறப்பு. அதில் செய்யவேண்டியன குறித்த பட்டியலை உருவாக்கலாம். அதில் விருப்பமானவற்றை தெரிவு செய்யும் வசதியும், அதனை பிறர் தேர்ந்தெடுக்காமல் இருப்பின், நமது கட்டகம் நன்கு வளரும். குறைவான எண்ணிகையில் இருக்கும் நம் சமூகம் வளர, நமக்குள் இந்த பகிர்வு அவசியம். அப்பொழுதே முழுமையான வளர்ச்சி எப்பொழுதும் இருக்கும். நான், இ்ப்பொழுது பகுப்புகளில், விக்கிதரவினை இணைக்கிறேன்; மேம்படுத்துகிறேன். மேலும், திறநிலை மென்பொருள் குறித்த கட்டுரைகளையும், தாவரவியல் கட்டுரைகளை வளர்க்கத் தேவையான உட்கட்டமைப்புகளையும், நூல்கள் குறித்தவற்றிலும் கவனம் செலுத்துகிறேன். ----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 04:07, 20 மார்ச் 2015 (UTC)
உரையாடலை இங்கு தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:02, 20 மார்ச் 2015 (UTC)

விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்க்க உதவி தேவை

[தொகு]

தமிழ் விக்கிமூலத்தில் நாம் கொடையாக பெற்ற கலைக்களஞ்சியங்களை மின்னாக்கும் பணி சிறு அளவில் நடைபெற்று வருகின்றது. இவற்றை மெய்ப்பு பார்க்க உதவி தேவை. தமிழ் மீது ஆர்வம் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க இயலாத தங்கள் நண்பர்கள், உறவுகளிடம் இவ்வுதவியைக் கோரிப் பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 07:37, 20 மார்ச் 2015 (UTC)

கலைக்களஞ்சியங்கள் அச்சுப் படி தேவை

[தொகு]

தமிழ் வளர்ச்சிக் கழகம் நமக்கு கொடையளித்த கலைக்களஞ்சியங்களையும் குழந்தைகள் கலைக்களஞ்சியங்களையும் ஒளிவழி எழுத்துணரி மூலம் மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதன் பொருட்டு இந்நூல்களின் நல்ல நிலையில் உள்ள அச்சுப் படி தேவை. நைந்து போன நிலையில் உள்ள படிகள் இப்பணிக்கு உதவா. இவ்வரிய நூல்கள் இப்போது அச்சிலும் இல்லை. விற்பனையிலும் இல்லை. சில நூலங்களில் உசாத்துணைப் பகுதியில் இருக்கும் இந்நூல்களை வெளியே எடுத்து வரவும் முடியாது. யாராவது மின்வடிவில் மீண்டும் உரையாக கொண்டு வராவிட்டால் மீண்டும் அச்சில் ஏறுவதும் சிரமம். இரு களஞ்சியங்களிலும் ஒரு தொகுதி கிடைத்தாலும் பரவாயில்லை. விலைக்குத் தர விருப்பம் இல்லை என்றால் திரும்பத் தரவும் இயலும். ஆனால், இச்சோதனையில் காரணமாக நூலின் கட்டைப் பிரித்து மீண்டும் கட்ட வேண்டி இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 08:10, 20 மார்ச் 2015 (UTC)

[தொகு]

அனைத்து பிற மொழி இணைப்புகளும் விக்கிதரவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது இவ்வார்ப்புருகளை பல்வேறு மொழிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் நாம் இவ்வார்ப்புருக்களை பயன்படுத்தியுள்ளோம். இவற்றை நீக்குவதற்கான தானியங்கி Ladsgroup என்பவரிடமுள்ளது, தமிழ் விக்கியிலும் அவற்றை பயன்படுத்த ஆர்வமாக உள்ளார். பிற உறுப்பினர்களின் கருத்துகள் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 24 மார்ச் 2015 (UTC)

இத்தானியங்கி இவ்விணைப்புகளை நீக்க மட்டும் செய்யுமா அல்லது உரியவிடங்களில் விக்கித்தரவிலும் இந்த சிறந்த கட்டுரை/நல்ல கட்டுரை இணைப்புக்களை இடுமா ?--மணியன் (பேச்சு) 11:22, 24 மார்ச் 2015 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் ஏற்கனவே இனங்காணப்பட்டு விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது. எனவே இவற்றை இங்கிருந்து நீக்கலாம்.--Kanags \உரையாடுக 11:45, 24 மார்ச் 2015 (UTC)
ஆம், சிறப்புக் கட்டுரைகள் அனைத்தும் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளன. வேண்டுமானால் இதற்கு என்னுடைய தானியங்கியைகூட பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:15, 24 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 19:52, 24 மார்ச் 2015 (UTC) :::👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:31, 25 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:29, 25 மார்ச் 2015 (UTC)

எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லாததால், சண்முகம் உங்களுடைய தானியங்கியை செயல்படுத்துங்கள். சோதனை தேவைப்படுமாயின் செய்துவிட்டு அனைத்துப் பக்கத்திலும் மாற்றம் செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:06, 25 மார்ச் 2015 (UTC)

நூறு தொகுப்புகள் செய்துள்ளேன். சோதித்து ஏதாவது மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கவும். இந்த சோதனை ஓட்டத்தில் {{Link FA|**}} மட்டுமே நீக்கப்படுள்ளது. எதுவும் மாற்றுக் கருத்து இல்லையெனில் FA|***, GA, FL உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி விடலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 18:01, 25 மார்ச் 2015 (UTC)
மாற்றுக் கருத்து இல்லை. --AntonTalk 17:58, 25 மார்ச் 2015 (UTC)
Y ஆயிற்று --சண்முகம்ப7 (பேச்சு) 18:08, 28 மார்ச் 2015 (UTC)

தன்வரலாற்றுக் கட்டுரைகள்

[தொகு]

ஏற்கனவே சிலமுறை இதுகுறித்து விவாதித்திருந்தபொழுதும் எனக்கு சில விக்கிப்பீடியாவின் கொள்கைகளின் விளக்கம் தேவை.

  1. தன்வரலாற்றுக் கட்டுரை என வரையருப்பது எவ்விதம்?
  2. தன்னை பற்றிய கட்டுரையில் அந்நபரே பங்களிப்பு செய்ய முடியுமா?
  3. விக்கிப்பீடியாவின் கொள்கையின் படி எவ்வகையான தகவல்களை சேர்க்க முடியும்?
  4. நபர் பற்றிய கட்டுரைகளில் அடையாளம் காட்டாமல் தகவல்கள் சேர்க்கப்பட்டால் ஏற்க முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றது. இக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்தபின் எனது கேள்விக்களை அடுக்குகிறேன். கேள்விகளின் நோக்கம் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ள மட்டுமே. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:38, 25 மார்ச் 2015 (UTC)

பார்க்க: விக்கிப்பீடியா:தன்வரலாறு. ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டலுக்கு ஏற்ப இற்றைப்படுத்தி தேவைப்படும் மாற்றங்களை உரையாடலாம். பொதுவாக, மாபெரும் ஆளுமைகளைத் தவிர மற்றவர்களுக்கு, முதன்மையான கலைக்களஞ்சியக் குறிப்பிடத்தக்கமையைக் குறித்த சுருக்கமான தகவலை மட்டும் தருவது நலம். வேலைக்கு விண்ணப்பிப்பது போல, படித்த பள்ளி முதல் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தத் தேவையில்லை. இது வரை கட்டுரைத் தலைப்புக்கு உரியவர்கள் நேரடியாக கட்டுரைகளைத் திருத்தி வந்ததை நாம் தடுக்கவில்லை. ஆனால், இனி, அவ்வாறு தொகுப்பவர்கள் பேச்சுப் பக்கத்தில் தகவலைத் தரச் சொல்லி மற்ற விக்கிப்பீடியர்கள் சரி பார்த்து கலைக்களஞ்சியத்துக்குத் தேவையான தகவலை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 14:09, 25 மார்ச் 2015 (UTC)
தமிழ் விக்கியில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல் பக்கங்கள் சரவர மொழிமாற்றம் செய்யப்படாமல் இருக்கின்றன. தொடக்க நிலையில் வரையரை செய்யப் பட்ட பக்கங்களைத் தவிற மற்றவற்றை விரைந்து இயற்றை செய்தல் வேண்டும். சக பயனர்களும், நிர்வாகிகளும் தங்களுடையப் பங்களிப்புகளை கொள்கை மற்றும் வழிகாட்டல் பக்கங்களுக்குத் தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:02, 25 மார்ச் 2015 (UTC)

en:Wikipedia:Biographies of living persons --AntonTalk 16:14, 25 மார்ச் 2015 (UTC)

ஒருவர், தன்னைப் பற்றித் தானே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதையோ அல்லது பிறர் அவரைப்பற்றி எழுதிய கட்டுரையில் திருத்தம் செய்வதையோ தவிர்க்கவேண்டும். தமிழ் விக்கியில், கடந்த காலங்களில் இவ்வாறு நடந்துள்ளது. ஆனாலும் இது முறையானது அல்ல. ஒரு பயனரைப் பற்றி இன்னொரு பயனர் கட்டுரை எழுதுவதில் தவறில்லை. ஆனாலும், குறிப்பிடத்தக்கதன்மை தொடர்பான விதிகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். இலங்கையில் பிரபலமாக இருந்த வானொலி நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன் தமிழ் விக்கியில் பயனராக இருந்து பல கட்டுரைகளை எழுதியவர். அவர் பயனராக இருக்கும்போதே இன்னொரு பயனர் அவரைப்பற்றித் தமிழ் விக்கியில் கட்டுரை எழுதினார். இது முறையானது. இது, தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒருவரைப்பற்றித் தமிழ் விக்கியில் ஆவணப்படுத்த முடிந்ததுடன், அவரும் பயனராக இருந்து தனது ஆர்வத்துறையில் பல கட்டுரைகளைத் தரவும் இடமளித்தது. ஆனால், இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு நான் உன்னைப்பற்றி எழுதுகிறேன், நீ என்னைப்பற்றி எழுது என்ற முறையில் கட்டுரைகள் எழுதக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவர் இத்தாலியில் இருந்து தன்னுடைய புகழ் பாடிக் கட்டுரைகளை எழுத முயன்றார். இதை அவருக்குச் சுட்டிக்காட்டியபோது வேறொருவர் மூலமோ அல்லது தானே வேறு பெயரிலோ அக்கட்டுரைகளை எழுத முயன்றார். இதை நாம் நிறுத்தினோம். எனவே ஒரு பயனரைப்பற்றி இன்னொரு பயனர் கட்டுரை எழுதுவதானாலும், அதன் நோக்கம், சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பயன் என்பவற்றை முன்னிறுத்த வேண்டும். விளம்பர நோக்கத்துக்காக மட்டும் இவ்வாறான கட்டுரைகள் எழக்கூடாது. ஒரு முறை விக்கிமீடியாவின் தலைமை நிறைவேற்று அலுவலரான இருந்த சூ கார்டினரைச் சந்தித்தபோது, தன்னைப்பற்றி ஒரு கட்டுரை ஆங்கில விக்கியில் இருப்பதாகவும், அதில் பல பிழைகள் இருப்பதாகவும் ஆனால், அதைத் தான் திருத்துவதோ பிறரைக் கொண்டு திருத்துவிப்பதோ பிழையான செய்தியை மற்றவர்களுக்கு வழங்கக்கூடும் ஆதலால் தான் அதை அப்படியே விட்டுவிட வேண்டியிருப்பதாகக் கூறியது ஞாபகம் இருக்கிறது. பிற பயனர்களைப்பற்றிக் கட்டுரை எழுதுவதைக் கட்டுப்பாட்டோடு செய்யமுடியும். தன்வரலாறு எழுதுவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். -மயூரநாதன் (பேச்சு) 03:34, 26 மார்ச் 2015 (UTC)

மயூரநாதனின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். இவ்வாறான தொகுப்புகளைக் காணும் போது அவற்றை உடனடியாகவே நீக்க வேண்டும். இது பற்றிக் கடினப் போக்கையே நாம் கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பான்மையானோர் வேண்டுமென்றே எழுதுவதில்லை. பலருக்கு இது பற்றிய போதிய தெளிவில்லாததே காரணம். கட்டுரைகளையோ அல்லது தொகுப்புகளையோ நீக்கும் போது அவர்களுக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டும். விக்கியில் பல கட்டுரைகள் ஐபி முகவரியில் இருந்தும் எழுதுகிறார்கள். இவர்களை இனம் காணுவதும் கடினம். ஆனாலும், கட்டுரை வடிவில் இருந்து ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 07:54, 26 மார்ச் 2015 (UTC)

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:32, 30 மார்ச் 2015 (UTC)

இன்றைய புள்ளி விபரம்

[தொகு]

இன்றைய புள்ளிவிபர அட்டவணையில், 29 மார்ச் அன்று 1454 கட்டுரைகள் குறைந்துள்ளன. ஆனால் இவ்வளவு தொகையான நீக்கல்கள் அட்டவணையில் காட்டப்படவில்லை. கட்டுரைகள் குறைந்ததற்கு என்ன காரணம்? -- மயூரநாதன் (பேச்சு) 04:45, 30 மார்ச் 2015 (UTC)

பயனர்:Shanmugamp7, உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரியுமா?--Kanags \உரையாடுக 06:21, 30 மார்ச் 2015 (UTC)
மற்ற பல விக்கிப்பீடியாக்களிலும் இவ்வாறு குறைந்துள்ளது. ஒன்று, தரவுத்தள கோளாறாக இருக்கலாம். அல்லது, கட்டுரைகள் கணக்கிடப்படும் முறையை மாற்றி இருக்கலாம். கேட்டுப் பார்த்துச் சொல்கிறேன்.--இரவி (பேச்சு) 07:49, 30 மார்ச் 2015 (UTC)
Special:Statistics கணக்கிடும் விதத்தை மாற்றியுள்ளதாக சொல்கிறார்கள். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம். இது எல்லா விக்கிப்பீடியாக்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. --இரவி (பேச்சு) 08:36, 30 மார்ச் 2015 (UTC)

முதற் பக்கம்

[தொகு]

முதற்பக்கத்தில் உள்ள சிறப்புப் படத்தில், தலைவர் என்பதற்கு தலவர் என்று உள்ளது.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:27, 1 ஏப்ரல் 2015 (UTC)

Y ஆயிற்று--AntonTalk 06:30, 1 ஏப்ரல் 2015 (UTC)

ஒரே தலைப்பு , இரண்டு கட்டுரைகள்

[தொகு]

கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம் என்ற தலைப்பில் ஒன்றும் தொல்லியல் அருங்காட்சியகம் கோயம்பத்தூர் என்ற் தலைப்பில் ஒரு கட்டுரையும் உள்ளன.எவ்வாறு இணைப்பது? இணையுங்கள்!--கி.மூர்த்தி 17:37, 8 ஏப்ரல் 2015 (UTC)