விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 3
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
- 1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- 1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
- 1966 – சோவியத் விண்கலம் லூனா 9 (படம்) சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
- 1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்றி கிருஷ்ணபிள்ளை (இ. 1900) · மணி கிருஷ்ணசுவாமி (பி. 1930) · கா. ந. அண்ணாதுரை (இ. 1969)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 2 – பெப்பிரவரி 4 – பெப்பிரவரி 5