விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 12
Appearance
- 1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
- 1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய மறைப்பு (படம்) அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
- 1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் "S" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.
- 1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
- 1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.
- 1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
- 1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
ராஜா செல்லையா (பி. 1922) · ஆலங்குடி சோமு (பி. 1932)
அண்மைய நாட்கள்: திசம்பர் 11 – திசம்பர் 13 – திசம்பர் 14