விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 6
Appearance
செப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)
- 1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
- 1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் (படம்) வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.
- 1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது.
- 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
- 1965 – இந்தியா லாகூர் நகரைத் தாக்கியது. இந்திய-பாக்கித்தான் போர் முழு அளவில் ஆரம்பமானது.
- 1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இலங்கையர்கோன் (பி. 1915) · சாலை இளந்திரையன் (பி. 1930) · பாரூக் மரைக்காயர் (பி. 1937)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 5 – செப்டெம்பர் 7 – செப்டெம்பர் 8