விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 12
Appearance
- கிமு 490 – மாரத்தான் போர் (படம்): கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் இந்நாளில் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
- 1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1857 – மத்திய அமெரிக்கா என்ற கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
- 1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாக்கித்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
- 1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
சி. வை. தாமோதரம்பிள்ளை (பி. 1832) · ரஞ்சன் (இ. 1983) · சுவர்ணலதா (இ. 2010)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 11 – செப்டெம்பர் 13 – செப்டெம்பர் 14