விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 13
Jump to navigation
Jump to search
- 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
- 1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார் (படம்).
- 1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
- 1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
- 2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: சனவரி 12 – சனவரி 14 – சனவரி 15